தமிழ்மகள் சிறுகதைகள்

தமிழ்மகள் சிறுகதைகள், தமிழ்மகள், உயிர்மை பதிப்பகம், விலை 550ரூ. பல நாவல்களும் ஏராளமான சிறுகதைகளும் எழுதியுள்ள தமிழ்மகன் என்கிற பா.வெங்கடேசன், ஜுனியர் விகடனில் பணியாற்றுகிறார். அவருடைய பல நாவல்கள், பரிசுகளும், விருதுகளும் பெற்றவை. இவர் எழுதிய சிறுகதைகள் காலவரிசைப்படி தொகுக்கப்பட்டு ஒரே புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 80 சிறுகதைகள் இதில் அடங்கியுள்ளன. 3 பக்கக் கதைகளும் உண்டு. 10 பக்க கதைகளும் உண்டு. கதைகளை வீணாக வளர்க்காமல், வார்த்தைகளை சிக்கனமாகக் கையாண்டு, விறுவிறுப்பாக எழுதியுள்ளார். பரிசு பெற்ற கதைகளும் பாராட்டுப் பெற்ற கதைகளும் நிறைய […]

Read more

பேரா.நா.வா.வின் நான்கு கதைப் பாடல்கள்

பேரா.நா.வா.வின் நான்கு கதைப் பாடல்கள், பதிப்பாசிரியர்: சு.சண்முகசுந்தரம், காவ்யா, பக்.545, விலை ரூ.500. பேராசிரியர் நா.வானமாமலை தொகுத்து, ஆய்வுரை எழுதி வெளியிட்ட காத்தவராயன் கதைப் பாடல், வள்ளியூர் வரலாறு (ஐவர் ராஜாக்கள் கதை), முத்துப்பட்டன் கதை, கான்சாகிபு சண்டை ஆகிய நான்கு கதைப் பாடல்கள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு கதைப் பாடல் குறித்தும் நா.வானமாமலை எழுதிய முன்னுரை(ஆய்வு)ரைகளும் இடம் பெற்றுள்ளன. 15 ஆம் நூற்றாண்டின் நடுவிலிருந்து 18 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை தமிழகத்தில் நடந்த நிகழ்வுகளின் அடிப்படையில் இந்த கதைப் பாடல்கள் […]

Read more

ஹிதோபதேசத்தில் நிர்வாகம்

ஹிதோபதேசத்தில் நிர்வாகம், நல்லி குப்புசாமி செட்டியார், ப்ரெய்ன் பேங்க், பக்.160, விலை ரூ.100.  16/2, ஹிதோபதேசக் கதைகளுக்கு என்றுமே முதுமையில்லை. குழந்தைகளுக்கான புத்தகம் என்ற நிலையில் உள்ள அதனை நூலாசிரியர் நிர்வாகக் களத்துக்கு எடுத்துச் சென்றுள்ளார். மூலத்தில் உள்ளபடியே கதைகளைத் தருவதென்றால் வர்ணனை, உரையாடலுக்கு அதிகப் பக்கங்களாகும். நீதிகள், நியதிகள், சுலோகங்கள் கதைகளை விட நீளமானவை. எனவே கதைகளைச் சுருக்கி தாத்பர்யங்களை விரிவாகவும் நிர்வாகவியலோடு சம்பந்தப்படுத்தியும் இந்தப் படைப்பை நூலாசிரியர் தந்துள்ளார். 49 கதைச் சுருக்கங்கள் கொண்ட இந்த நூலில், துணிவில் இருக்கிறது வெற்றி; […]

Read more

பாலர்களுக்கான பாகவதக் கதைகள்,

பாலர்களுக்கான பாகவதக் கதைகள், ஆர்.சி.சம்பத், அருணா பப்பிளகேஷன்ஸ், விலை 35ரூ. மஹாவிஷ்ணுவின் பெருமைகளை விளக்கும் நுால் ஸ்ரீமத் பாகவதம். இதை, எளிதில் ஒருவரால் முழுமையாக படித்துவிட முடியாது. படிக்க படிக்க சுவை கூட்டக் கூடிய பாகவதத்தை, குழந்தைகளுக்கு புரியும் வகையில், சிறு சிறு கதைகளாக ஆசிரியர் தந்துள்ளார். இதை, குழந்தைகள் கண்டிப்பாக படிக்க வேண்டும். அதனால், அவர்கள் மனதில் புத்தகம் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும்; நம் கலாசாரம், புராணங்கள் மீதும் பற்று ஏற்படும். இதனால், அவர்கள் மனதில் ஒழுக்க நெறி மேம்படும். ஆண்டவன் மீது […]

Read more

சூபி கதைகள்

சூபி கதைகள், யூமா வாசுகி, என்.சி.பி.எச்., பக்.101, விலை 90ரூ. சூபி ஞானிகள் ஜென் ஞானிகளைப் போல எதையும் அனுபவத்தின் வழியேயும், வாழ்க்கை முறைக்கு உணர்த்த வேண்டிய கருத்துக்களை எளிமையாகச் சொல்வதன் வழியேயும் பலவற்றைச் சொல்லி இருக்கின்றனர். சின்னஞ் சிறுகதைகளாக, ஒரு பக்கத்திற்கும் குறைவாகவே உள்ள பல சிறுகதைகள் இதில் உள்ளன. பல கதைகள் வேடிக்கையான நிகழ்ச்சிகளை கொண்டுள்ளன. ஆட்டுக்கு ஆளைத் தெரியும். அடிமை, மூவர், மரணம் முதலிய கதைகள் இத்தகையன. அறவுரையும், அறிவார்ந்த எண்ணங்களை வெளிக் கொணரும்படியான கருத்துக்களும் அடங்கிய கதைகளும் இதில் […]

Read more

மனதைத் தொட்ட சில நிகழ்வுகள்

மனதைத் தொட்ட சில நிகழ்வுகள், சி.இரத்தினசாமி, வசந்தா பிரசுரம், பக். 136, விலை 100ரூ. ஒரு விஷயத்தை ஒருவர் மனதில் தாக்கத்தை ஏற்படுத்த, கதை மூலம் ஒரு விஷயத்தை சொல்வது மிக சிறந்த வழி. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, கதை கேட்பதிலும், படிப்பதிலும் ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில், வாழ்வியல் தத்துவங்கள், வாழ்க்கையின் செயல்பாடுகள் ஆகியவற்றை தமிழ் மணத்துடன், அழகுற, எளிய நடையில், சிறு சிறு கதைகளாக தொகுத்து, ஆசிரியர் தந்துள்ளார். இந்த கதைகளை படித்த போது, அந்த கதாபாத்திரங்கள், நம் மனதில் […]

Read more

மகாபாரதக் கதைகள்

மகாபாரதக் கதைகள், எஸ்.தமயந்தி, குமரன் பதிப்பகம், பக்.112, விலை 40ரூ. உலகில் பல குணங்களை கொண்ட மனிதர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரையும், ஒரு காவியத்தில் காண முடியும் என்றால், அது மகாபாரதம் தான். மகாபாரதத்தை ஒரு கதை களஞ்சியம் என்றே கூற வேண்டும்; கதைக்குள் கதை என பல்லாயிரம் கதைகள் உள்ளன. கடல் போன்ற மகாபாரதத்தை, ஏழு கதைகள் மூலம், ஆசிரியர் மிகச் சுருக்கமாக தந்துள்ளார். இதை படித்தால், மகாபாரதத்தை படித்த திருப்தி ஏற்படுகிறது. குழந்தைகளிடம் இந்த புத்தகத்தை கொடுத்து படிக்கச் சொன்னால், அவர்கள் […]

Read more

அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை

அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை(சிறுவர் கதைகள்), மு.முருகேஷ், அகநி வெளியீடு, விலை 100ரூ. குழந்தைகளின் இலக்யி உலகின் கதவு, கதை கேட்பதில்தான் திறக்கிறது. பாட்டிகள் கதை சொல்வது அபூர்வமாகிவிட்ட இக்காலத்தில் குழந்தைகளுக்காக குட்டிக் குட்டி கதைகளை சுவாரஸ்யம், நகைச்சுவை, புத்திசாலித்தனம் கலந்து சொல்லி அவர்களின் இலக்கியக் கதவைத் திறந்திட முயற்சித்திருக்கிறார் ஆசிரியர். படிக்கும் குழந்தைகள் ரசிப்பார்கள். சிரிப்பார்கள். சிந்திப்பார்கள். நன்றி: குமுதம், 6/12/2017.

Read more

நண்டுமரம்

நண்டுமரம், இரா.முருகன், கிழக்கு பதிப்பகம், விலை 250ரூ. பல்வேறு பத்திரிகைகளில் எழுத்தாளர் இரா.முருகன் எழுதிய 30 சிறுகதைகளின் தொகுப்பு. ஒவ்வொரு சிறுகதையிலும் கதாபாத்திரங்களுக்கிடையே நிகழும் உரையாடல்கள் தனித்துவமானவை. அவர் கையாளும் நடை தேர்ந்த எழுத்தாளருக்குரிய நடை. படிக்கத் தூண்டுகிறது. நன்றி: தினத்தந்தி, 6/12/2017.

Read more

சிரிக்கவும் சிந்திக்கவும்

சிரிக்கவும் சிந்திக்கவும், இலங்கை ஆ.ரகுபதி பாலஸ்ரீதரன், சுமதி பதிப்பகம், விலை 250ரூ. இலங்கையைச் சேர்ந்த ஆ.ரகுபதி பாலஸ்ரீதரன், நகைச்சுவையாக எழுதுவதில் புகழ் பெற்றவர். அவர் எழுதிய நகைச்சுவை கதைகள் அடங்கிய புத்தகம் இது. சிறுவர் நகைச்சுவைக் கதைகள், கணவன் – மனைவி கதைகள், மிருகங்களின் கதைகள், பைத்தியக்காரக் கதைகள், ஒரு பக்கக் கதைகள்.. இப்படி பல வகையான கதைகள் இதில் அடங்கியுள்ளன. சிரிக்க வைப்பதுடன் சிந்திக்க வைக்கவும் வேண்டும் என்ற நோக்கத்தில், ஆசிரியர் வெற்றி பெற்றுவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். நன்றி: தினத்தந்தி, 6/12/2017.

Read more
1 24 25 26 27 28 80