கடவுள் கனவில் வந்தாரா?

கடவுள் கனவில் வந்தாரா?, பட்டுக்கோட்டை பிரபாகர், டிஸ்கவரி புக் பேலஸ், பக். 192, விலை 170ரூ. வெகுஜன எழுத்துலகத்துக்கு நன்கு பிரபலமானவர் பட்டுக்கோட்டை பிரபாகர். துப்பறியும் நாவல்கள் எழுதுவது அவருக்கு கைவந்த கலையாக இருந்தாலும், சிறுகதையிலும் அதே தரத்தையும், தனித்துவத்தையும் வெளிப்படுத்துகிறார். அந்த வகையில் ‘கடவுள் கனவில் வந்தாரா?’ சிறுகதை தொகுப்பிலும் வாசகனை கதைக்கு நெருக்கமாக அழைத்துச் செல்கிறார். ஒவ்வொன்றும் குடும்ப உறவுகள், காதல், சமூகம் பற்றிய கதையாக இருப்பினும், இன்றைய நடைமுறை மற்றும் இளைய தலைமுறையினரின் உலகத்தை அப்படியே படம் பிடித்து யதார்த்தத்தின் […]

Read more

தினம் ஒரு சிந்தனை

தினம் ஒரு சிந்தனை, கவிஞர் அரிமழம் ப.செல்லப்பா, ஜீவா பதிப்பகம், விலை 200ரூ. வருடம் 365 நாட்களும் வாசகர்களை சிந்திக்க வைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் இந்தப் புத்தகத்தை கவிஞர் அரிமழம் ப.செல்லப்பா எழுதியுள்ளார். சிந்தனைக்கு விருந்தளிக்கக்கூடிய 365 குட்டிக்கதைகள் இப்புத்தகத்தில் உள்ளன. ஒவ்வொரு நாளும் ஒரு கதையைப் படித்தால் போதும். ஒரு வருடம் ஓடிவிடும். கதைகள் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளன. இளைய தலைமுறையினர் படிக்க வேண்டிய நூல். நன்றி: தினத்தந்தி,8/11/2017.

Read more

நாயகிகளின் நாயகன்

நாயகிகளின் நாயகன், சுரேஷ் பிரதீப், கிழக்கு பதிப்பகம், விலை 125ரூ. மாசிலன் என்ற தாத்தாவின் சாவுக்குச் செல்லும் பேரனின் மனநிலையை விவரிக்கும் கதையில் தொடங்கும் இத்தொகுப்பு ஊருக்கு அம்மாவுடன் செல்லும் பேரன் தாத்தா வெட்டிய குளத்தை ரசிக்கும் ஆலரசு குளம் என்ற சிறுகதையில் முடிவடைகிறது. இந்த இரண்டு ஊர்திரும்புதல்களுக்கு இடையே சுரேஷ் பிரதீப்பின் சிறுகதை உலகம் நம்மை நோக்கி விரிந்துகிடக்கிறது. தஞ்சைப் பகுதிக்கு உரிய வசைச்சொற்களும், உரையாடல்களும் நிறைந்த கதைகள். எல்லா கதைகளிலும் ஊரும் அங்கிருக்கும் உறவுகளின் ஏதோவொரு வகைப்பட்ட உணர்வுகளும்தான். அம்மாவிடம் இருந்து […]

Read more

புனைவு வெளி

புனைவு வெளி, நா. விச்வநாதன், பேசும் புதிய சக்தி பதிப்பகம், விலை 150ரூ. சி.சு.செல்லப்பா தொடங்கி தஞ்சை ப்ரகாஷ் வரை 18 இலக்கிய பிதாமகர்களைப் பற்றிய எழுத்துக் கோலம்தான் இந்தப் புத்தகம். எளிய வாசகர்களுக்கும் எழுத்து ஆளுமைகளை அடையாளம் காட்டும் விதமாக எளிமையான தமிழில் எழுதப்பட்ட இந்தப் புத்தகம். தமிழுக்கு நல்வரவு. ஒரு ஆரம்பப் பள்ளி வாத்தியார் தோற்றம், ஒரு மாத தாடி’ என்று சி.சு.செல்லப்பாவை இவர் உருவகிக்கும் சித்திரம் வாசகரை 60-களின் செல்லப்பாவைத் தேட வைக்கிறது. ஒவ்வொரு தனிநபரும் ஒரு தத்துவம்தான். தரிசனம்தான். […]

Read more

மல்லிகைபூ

மல்லிகைபூ, ஞா.சிவகாமி, பூம்புகார் பதிப்பகம், விலை 50ரூ. தலைமைச் செயலகத்தில் அதிகாரியாகப் பணியாற்றிய ஞா.சிவகாமி எழுத்துறையிலும் முத்திரை பதித்தவர். அவர் எழுதியுள்ள மல்லிகைப்பூ என்ற இந்தப் புத்தகத்தில், 25 சிறுகதைகள் அடங்கியுள்ளன. எல்லாமே மனதைத் தொடும் கதைகள். நன்றி: தினத்தந்தி, 1/11/2017.

Read more

சொந்தச் சகோதரிகள்

சொந்தச் சகோதரிகள், கே. பாரதி, கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 160ரூ. வலியின் கதைகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்த தனது கதைகளை ‘சொந்தச் சகோதரிகள்’ என்ற தலைப்பில் தொகுத்தளித்திருக்கிறார் கே. பாரதி. எட்டு வயதில் திருமணம், 12 வயதில் கணவன் மரணம் என தன்னுடைய வாழ்வில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் தன்னுடைய நீண்ட கூந்தலை மழிப்பதற்காக உட்கார்ந்திருக்கும் பாகீரதியின் கதை ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. பிராமணக் குடும்பங்களில் விதவைப் பெண்கள் நடத்தப்பட்ட விதத்தை இந்தக் கதை கூர்மையாக விளக்குகிறது. ‘சுயம்’ எனும் […]

Read more

பட்டி வேதாளம் விக்கிரமாதித்தன் கதைகள்

பட்டி வேதாளம் விக்கிரமாதித்தன் கதைகள், பி.எஸ்.ஆச்சார்யா, நர்மதா பதிப்பகம், விலை 400ரூ. விக்கிரமாதித்தனுக்கு பதுமைகள் சொன்ன கதைகள் புகழ் பெற்றவை. விக்கிரமாதித்தனின் வீரதீரச் செயல்களும், கதையில் வரும் எதிர்பாராத திருப்பங்களும் எத்தனை முறை படித்தாலும் சலிப்பு தட்டாதவை. இதுவரை விக்கிரமாதித்தன் கதைகள் பல்வேறு பதிப்பகங்களால், பல்வேறு பதிப்பகங்களால், பல்வேறு வடிவமைப்புகளில் வெளியிடப்பட்டுள்ளன. இப்போது நர்மதா வெளியிட்டுள்ள புத்தகம், பெரிய அளவில் 532 பக்கங்களில் அமைந்துள்ளது. சிறந்த கட்டமைப்பு. நன்றி: தினத்தந்தி, 15/11/2017

Read more

ஆதிவாசிகள் இனி நடனம் ஆடமாட்டார்கள்

ஆதிவாசிகள் இனி நடனம் ஆடமாட்டார்கள், லியோ ஜோசப், எதிர் வெளியீடு, விலை 190ரூ. மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் எதை உணர்த்துகின்றன? பிற இனத்தவரின், பிற நாட்டவரின் பண்பாட்டுக் கலாசாரங்களை வெளிப்படுத்துவதோடு, புதுப் புதுப்பாடு பொருள்களில் சிறுகதைகள் படைக்கப்படுவதையும் உணர்த்துகின்றன. அந்த வகையில் சாந்தால் இன மக்களின் பல்வேறு உணர்வுகளை, இதில் உள்ள எட்டுக் கதைகளும் காட்டுகின்றன. ஜார்க்கண்ட் மாநில மக்களின் வாழ்க்கை முறைகள், அவர் தம் அன்றாட நிகழ்வுகள் ஆகியவற்றை இந்நூலில் காண முடிகிறது. மொழிபெயர்ப்பு என்று தோன்றா வகையில் இந்நூல் அமைந்துள்ளது. அசைவம் சாப்பிடக் […]

Read more

சிறுவர் கதைக் களஞ்சியம்

சிறுவர் கதைக் களஞ்சியம், இரா. காமராசு, சாகித்திய அகாடமி, பக். 240, விலை 160ரூ. கதை இலக்கியம் தமிழகத்திற்கு புதியதன்று. கதையும், கற்பனையும் மனித சமுதாயத்துடன் ஒன்றி வளர்ந்து வருவதாகும். பிள்ளைக்குச் சோறுாட்டும் தாய்மார்கள் தம் கட்டவிழ்ந்த கற்பனையால் புனைந்துரைக்கும் கதைகள் கணக்கற்றவை. பழந்தமிழகத்திலும் கதைகள் நிலவி வந்தன. தொல்காப்பியத்திலேயே உரைநடை வகைகள் பற்றி கூறும் தொல்காப்பியர், ‘பொருளோடு புணராப் பொய்ம் மொழி’ என்று குறிப்பிடுவது கற்பனைச் செறிவுடனான கதைகளையே ஆகும். சிறுகதைக்குரிய இலக்கணம் பற்றித் திறனாய்வாளர்கள் பலரும் விளக்கம் கூறியுள்ள போதும், இதுதான் […]

Read more

தேவதையின் பிள்ளைகள்

தேவதையின் பிள்ளைகள், அல்லிநகரம் தாமோதரன், மேன்மை வெளியீடு, விலை 120ரூ. உணர்ச்சிவசத்தால் மட்டும் கதைகள் தோன்றிவிடாது. சிறு சிறு உணர்வுகளைக் கோர்த்து அதற்கிடையில் ஒருமுறை வாழ்ந்து பார்த்த பிறகு தான் முழுக் கதையும் மனதுக்குள் வந்து தவழும். அதுவரை அந்தக் கதையின் கண்ணி அகப்படாமலே இருக்கும். தேவதையின் பிள்ளைகள் என்கிற இந்த சிறுகதைத் தொகுப்பும் உணர்வுகளை உரசியே எழுதப்பட்டிருக்கிறது. எளிய மக்களின் துயரங்களை வைத்தே மனிதர்களின் உயர்ந்த பண்புகளையும், அவர்களது உள்ளத்தையும் வடிவமைத்திருக்கிறார். இதனால்தான் தொகுப்பு முழுக்க பணக்காரர்களைப் பார்க்க முடியவில்லை. ஆசிரியரின் சொந்த […]

Read more
1 25 26 27 28 29 80