தேர்ந்தெடுக்கப்பட்ட இறையன்பு சிறுகதைகள்

தேர்ந்தெடுக்கப்பட்ட இறையன்பு சிறுகதைகள், தொகுப்பு ந.முருகேசபாண்டியன், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், விலை 110ரூ. 25 ஆண்டுகளாக சிறுகதைகள் எழுதி வருகிறார், இறையன்பு ஐ.ஏ.எஸ். விமர்சகர்களாலும், வாசகர்களாலும் பாராட்டப்பட்ட கதைகள் ஏராளம். அந்தக் கதைகளில் மிக மிகச் சிறப்பான கதைகளை தேர்வு செய்து இந்தப் புத்தகத்தில் இடம் பெறச் செய்திருப்பவர் ந.முருகேசபாண்டியன். கதைகளைத் தரம் அறிந்து தேர்வு செய்வதில் அவருக்குள்ள இந்தத் தொகுப்பை தரம் உயர்ந்ததாகச் செய்திருக்கின்றன. இதில் உள்ள 14 கதைகளும் நன்முத்துக்கள். ஒரு பூனையை மையமாக வைத்து எழுதப்பட்ட பூனாத்தி என்ற கதை, […]

Read more

நதி வெள்ளத்தின் துளி

நதி வெள்ளத்தின் துளி, குழல்வேந்தன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 90ரூ. ஒரு கவிஞரோடு ஒரு வாசகன் பழகுதல். அந்த கவிஞன் எழுதிய கவிதைகளை அலைபேசி வழியே வாசிக்கக் கேட்டு இன்புறுதல். கவிஞரை நேரில் சந்திக்க வாசகன் ஆவல். படைப்புப் பாலம் இணைத்த இருவருக்குமான உறவுப் பாலம், கவிஞரின் மரணத்தால் தகர்ந்து போதலை, ‘தொலை குரல் தோழமை’ கதையால் உணர முடிகிறது. நன்றி: தினமலர்..

Read more

நான் ஜிபு மற்றும் புற்றுநோய்

நான் ஜிபு மற்றும் புற்றுநோய், ம. அஹமது நவ்ரோஸ் பேகம், என்.ஜே.பதிப்பகம், விலை 30ரூ. தன்னுடைய 11 வயது மூத்த மகனுக்கு ரத்தப் புற்று நோய் என்றதும் துடித்துபோன தாயின் துயரத்தையும் வேதனையையும் ம.அஹமது நவ்ரோஸ் பேகம் இந்த நூலில் பதிவுசெய்துள்ளார். தொடக்கம் முதல் இறுதி வரை விழித்திரைகளில் கண்ணீர் திரையிடுகிறது. துயரம் நெஞ்சை அடைக்கிறது. நன்றி: தினத்தந்தி, 26/7/2017.

Read more

கதைகள் சொல்லும் கருத்துகள்

கதைகள் சொல்லும் கருத்துகள், ஆர். பத்மபிரியா, அருணா பப்ளிகேஷன்ஸ், விலை 40ரூ. நீதிக்கதைகள் பள்ளி, மாணவ-மாணவிகள் மற்றும் சிறுவர்கள் நீதிகளைப் பின்பற்றி சிறப்பாக வாழ வேண்டும் என்பதற்காக பல அரிய பழைய நூல்களில் இருந்து எடுக்கப்பட்ட நீதிகதைகள் அடங்கிய நூல். நன்றி: தினத்தந்தி, 26/7/2017.

Read more

மங்கையர்க்கரசியின் காதல்

மங்கையர்க்கரசியின் காதல், வ.வே.சு.ஐயர், முல்லை நிலையம், விலை 55ரூ. கமல விஜயம், மங்கையர்க்கரசியின் காதல், அனார்க்கலி உள்ளிட்ட 8 தலைப்புகளில் எழுதப்பட்ட கதைகள் அடங்கிய நூல். இதில் இடம் பெற்றுள்ள கதைகளை படிப்பவர்களின் உள்ளத்தை உருக்குவதுடன், உயர்ந்த கருத்துக்களை படிப்பவர்களுக்கு கற்றுதரும் பாடமாகவும் அமைந்துள்ளது. தமிழில் கதை எழுதுபவர்களுக்கு இந்த நூல் ஒரு நல்வழியை காட்டுகிறது. நன்றி: தினத்தந்தி, 16/8/2017.

Read more

டாக்ஸி டிரைவர்

டாக்ஸி டிரைவர், ஆனந்த் ராகவ், கிழக்கு பதிப்பகம், விலை 120ரூ. எழுத்தாளர் ஆனந்த் ராகவ் எழுதிய 12 சிறுகதைகளின் தொகுப்பு. ஒரு சமூதாயத்தின் நேர்மை, கலாசாரம் எல்லாவற்றுக்கும் அளவுகோலே அந்தர ஊரின் வாடகை வண்டி ஓட்டுகிறவர்கள்தான் என்ற கருத்தில் அமைந்துள்ள ‘டாக்ஸி டிரைவர்’ , 75 வயது தந்தையை ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு, அவர் உயிர் பிழைத்து வரமாட்டாரா என்று ஏங்கும் மகனின் ஏக்கத்தை வெளிப்படும், ‘இரண்டாவது மரணம்’ உள்பட அனைத்துக் கதைகளும் அருமை. நன்றி: தினத்தந்தி, 9/8/2017.

Read more

வலவன்

வலவன், சுதாகர் கஸ்தூரி, கிழக்கு பதிப்பகம், விலை 75ரூ. ஓட்டுநர்களின் வரலாறு வாடகை கார் ஓட்டுநர்களின் உலகமே தனி. அனைவருக்கும் ஒரே பின்புலம் கிடையாது. தாங்கள் செல்லும் ஊர்களையும் வழிகளையும் மட்டும் அல்லாமல் தங்களுடைய வாடிக்கையாளர்களின் குணநலன்களையும் நினைவில் பதிய வைத்துக்கொள்ளும் அலாதியான பண்புள்ளவர்கள். கீதோபதேச பார்த்தசாரதியைப் போலவே நியமம், கருமம் பற்றிப் பேசுகிறார் மஞ்சித் சிங் என்ற ஓட்டுநர். சோட்டானிக்கரை பகவதியின் பெருமையைப் போற்றுகிறார் பஷீர். வளரிளம் பருவப் பெண்ணின் பொய்க் குற்றச்சாட்டில் மனம் ஒடிந்து தற்கொலை செய்துகொள்கிறார் ஆதிமூலம். குடும்ப மரபைக் […]

Read more

உள்ளம் கவர்ந்த உலகச் சிறுகதைகள்

உள்ளம் கவர்ந்த உலகச் சிறுகதைகள், தமிழில் கவுதம் சஞ்சய், சஞ்சீவியார் பதிப்பகம், பக். 178, விலை 110ரூ. பத்திரிகையாளர், எழுத்தாளர், கவிஞர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்டவர் கவுதம் சஞ்சய். மேலை நாட்டு சிறு கதைகள் சிலவற்றை எளிய, இனிய தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். இரக்க குணம் உள்ள ஒரு பெண்ணை சித்தரிக்கும் ஜான்ஸ்டீன் பெக்கின், ‘மலர்ச்செடி’ திகில் உணர்வை எழுப்பும், எட்கர் ஆலன் போவின், ‘மர்ம மாளிகையின் வீழ்ச்சி…’ ஒருவர், ஒரு வீட்டில் தற்கொலை செய்து கொண்டால், அங்கு ஆவிகள் உலவும் என்ற […]

Read more

சிரிக்க சிந்திக்க அறிஞர் அண்ணாவின் சின்னச் சின்ன கதைகள்

சிரிக்க சிந்திக்க அறிஞர் அண்ணாவின் சின்னச் சின்ன கதைகள், மண்னை சம்பத், அருணா பப்ளிகேஷன்ஸ், பக். 152, விலை 50ரூ. அறிஞர் அண்ணாதுரை ஆற்றல் மிகு பேச்சாளர். மேடையில், ‘மைக்’கின் முன்னே வந்து, அண்ணா பேச ஆரம்பித்தால், பண்டிதர் முதல், பாமரர் வரை மயங்குவர். அவரது பேச்சை கேட்க, சில சமயங்களில் கட்டணம் வைத்தனர். அப்படி இருந்தும் மக்கள் பணம் கட்டி, பெருமளவில் பேச்சைக் கேட்க வந்தனர். மேடையில் பேசும் போதும், ஏடுகளில் கட்டுரைகள் எழுதும் போதும், சொல்ல வந்த கருத்தை எளிதில் விளக்குவதற்காக […]

Read more

கொடுமைகள் தாமே அழிவதில்லை

கொடுமைகள் தாமே அழிவதில்லை, செ. கணேசலிங்கம், குமரன் புத்தக இல்லம், விலை 300ரூ. தொண்ணூறு வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் செ. கணேசலிங்கன் தளராத உழைப்புக்குச் சொந்தக்காரர். ஈழத் தமிழ் எழுத்தாளரான அவரின் இந்தச் சிறுகதைத் தொகுப்பின் முதல் பதிப்பு 1974-ல் வெளியானது. 40 ஆண்டுகளுக்குப் பிறகு 2015?ல் இந்தத் தொகுப்பு மீளச்சு கண்டது. ழுபதுகளில் இலங்கையில் நிலவிய சமூக, பொருளாதாரச் சூழல்களைச் சித்தரிக்கும் 17 கதைகள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்றன. இந்தத் தொகுப்பின் பல கதைகள் சிங்கள மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி: தி […]

Read more
1 27 28 29 30 31 80