ஆடி காத்து

ஆடி காத்து, ரா. லட்சுமணன், விலை 100ரூ. மனதைத் தொடும் சிறுகதைகள் கொண்ட புத்தகம். நூலாசிரியர் ரா.லட்சுமணன் பாராட்டுக்கு உரியவர். இந்த நூல் 2014-2015-ம் ஆண்டுக்கான சிறந்த படைப்பாக தமிழக அரசின் ஆதி திராவிடர் நலத்துறை கலைப்பண்பாட்டுத் துறையால் தேர்வு செய்யப்பட்டு பரிசு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி: தினத்தந்தி, 19/4/2017.

Read more

மாஸ்தி சிறுகதைகள்

மாஸ்தி சிறுகதைகள், சாகித்திய அகாடமி, விலை 120ரூ. ஒவ்வொரு மொழியிலும் சிறந்து விளங்கும் எழுத்தாளர்களின் கதைகளை, மற்ற மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிடும் பணியை சாகித்திய அகாடமி செய்து வருகிறது. கன்னடத்தில் சிறந்த எழுததாளராக விளங்கும் மாஸ்தி வெங்கடேச அய்யங்கார் எழுதிய சிறந்த சிறுகதைகள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு, “மாஸ்தி சிறுகதைகள்” என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. சேஷநாராயணா சிறப்பாக மொழிபெயர்த்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 29/3/2017.

Read more

மகாபாரதக் கதைகள்

மகாபாரதக் கதைகள், ஆர். கல்யாண மல்லி, அழகு பதிப்பகம், பக். 200, விலை 165ரூ. மனித வாழ்க்கையில் தோன்றும் பல்வேறு பிரச்னைகளையும் எப்படி எதிர்கொண்டு வாழ வேண்டும் என்ற வழிமுறைகளைக் கூறுபவைதான் ராமாயணம், மஹாபாரதம் போன்ற இதிகாசங்கள். குறிப்பாக பெண்ணாசையும், மண்ணாசையும் இல்லாத மனிதர்களைக் காண்பது அரிது. அவை முறையற்றதாக இருந்தால், என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை, பல்வேறு கதாபாத்திரங்களைக் கொண்டு விளக்கி, மனித வாழ்க்கைக்குரிய அறத்தைப் போதிப்பதால், இவை இன்றும் போற்றப்படுகின்றன. மஹாபாரதம் முடிந்த சமயத்தில்தான் கலியுகம் பிறந்ததாகக் கூறப்படுகிறது. பாண்டவர்கள், கௌரவர்கள், […]

Read more

புகழ்பெற்ற பஞ்ச தந்திரக் கதைகள்

புகழ்பெற்ற பஞ்ச தந்திரக் கதைகள், எஸ். தமயந்தி, சுவாமிமலை பதிப்பகம், பக். 176, விலை 60ரூ. நீதியை கதைகள் வாயிலாகக் கூறி, இளம் உள்ளங்களை ஒழுக்க நெறிக்கு இட்டுச் செல்வதால் பஞ்ச தந்திரக் கதைகள் உலகம் முழுவதும் புகழ்பெற்று விளங்குகின்றன. கதைகளை விலங்குகள் மூலம் சொல்லுவதால் சொல்ல வந்த கருத்துக்கள் இன்னும் ஆழமாகப் பதிகிறது. மாணவர்கள் எளிதில் படித்துப் புரிந்துகொள்ளும் எளிய இனிய நடையில் நூல் அமைந்திருப்பது சிறப்பு. நன்றி: குமுதம், 26/4/2017.

Read more

சுமையா

சுமையா, கனவுப் பிரியன், நூல்வனம் வெளியீடு, பக். 216, விலை 160ரூ. சர்வதேச அளவிலான மனிதர்களை தமிழ்க் கதைப் பரப்பிற்குள் கொண்டு வந்திருக்கிறார் நூலாசிரியர். சிறுகதைகள் வாயிலாக புதிய கதைக்களன்களை தமிழுக்கு அறிமுகப்படுத்தும் பணியைச் செய்துள்ளார். வாழ்வின் விசித்திரங்கள் கதைகளின் வழி காட்சிப்படுத்தும் விதம் சுவாரஸ்யம். சமூகம், அறிவியல் புனைவுகளும் கலந்து உற்சாகப்படுத்துகிறது. நன்றி: குமுதம், 29/3/2017.

Read more

இலை உதிர்வதைப் போல

இலை உதிர்வதைப் போல, இரா.நாறும்பூநாதன், நூல் வனம், பக்.192, விலை ரூ.150. வாழ்க்கை முழுக்க மனிதன், சக மனிதர்களுடன், இடங்கள், மரங்கள், செடி, கொடிகளுடன், வளர்ப்பு பிராணிகளுடன் எல்லாம் தொடர்புடையவனாக இருக்கிறான். வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு நெருக்கடிகளினால் சில தொடர்புகளை மனிதர்கள் விட்டுப் பிரிகிறார்கள். புதிய தொடர்புகள் வாழ்க்கையில் ஏற்படுகின்றன. இந்தத் தொகுப்பிலுள்ள 26 சிறுகதைகளில் வரும் மனிதர்கள் எல்லாரும் இந்தத் தொடர்புகளின் அருமையை உணர்ந்தவர்கள். தொடர்புகளைவிட்டுப் பிரிய மனமில்லாதவர்கள். சக மனிதர்களை மட்டுமல்ல, செடியை, மரத்தை, ஆடு, மாடுகளை, இடங்களைப் பிரிய நேர்ந்தால், […]

Read more

ஆர். சூடாமணி

ஆர். சூடாமணி, கே. பாரதி,  சாகித்திய அகாதெமி, பக்.128, விலை ரூ.50. கருத்து வேறுபாட்டால் தனித்தனியே பிரிந்து வாழ நினைக்கும் ஓர் இளம் தம்பதி, ஆதரவற்ற ஓர் இளைஞனின் உயிரைக் காப்பாற்றும் நற்செயலில் ஈடுபடும்போது தங்களின் பிரிவும் கோபமும் பொருளற்றவை என்பதை உணர்ந்து மனம் மாறுகின்றனர் (பூமியினும் பெரிது), தன் வயதே உடைய சின்னப்பொண்ணு கழிவறை சுத்தம் செய்வதைப் பார்த்து மனம் கசியும் விஜயா அவளின் உண்மையான பெயரைக் கேட்க அவள் விஜயா என்று கூறுகிறாள். விஜயாவின் மனதில் ஒரு நிம்மதி (விஜயா), காரில் தனியே […]

Read more

சிறிய தூண்டில் பெரிய மீன்

சிறிய தூண்டில் பெரிய மீன், மூ.இராசாராம், பழனியப்பா பிரதர்ஸ், பக்.174, விலை ரூ.155. சிறு சிறு முயற்சிகள் மூலம் பெரிய வெற்றிகளை எப்படிப் பெறுவது என்பதற்கான வழிமுறைகளைக் கூறும் நூல். நம்மிடம் அளவாக இருக்கும் சக்தியைப் பயன்படுத்தி அதிகமான பலன் பெறலாம் என்பதை சில முக்கிய மேற்கோள்கள் மூலம் சுவைபடக் கூறியுள்ளார். குறிப்பாக ரூ.1-க்கு விற்கப்படுகிறது என்ற பிரபல செய்தித்தாளின் விளம்பர உத்தி, ‘இந்த;டிசைன்&#39‘ சேலைகள் இன்னும் மூன்று மட்டுமே எஞ்சியுள்ளன' என்ற ஜவுளிக் கடைக்காரரின் விளம்பரத் தந்திரம் போன்றவை வாடிக்கையாளர்கள் என்ற பெரிய […]

Read more

பட்டாம்பூச்சி விளைவு

பட்டாம்பூச்சி விளைவு (அறிவியல் சிறு கதைகள்), க.மண, அபயம் பதிப்பகம், பக்.177, விலை ரூ.120. “மனித உணர்ச்சிகளுக்கு இடமில்லாத அறிவியல் தொழில்நுட்பத் தகவல்கள், காய்ந்த ரொட்டிகள் 39” என்று நூலின் முன்னுரையில் கூறும் நூலாசிரியர், இந்நூலில் உள்ள சிறுகதைகளை காய்ந்த ரொட்டித் தகவல்களாக உருவாக்காமல், சுவை மிக்கதாக உருவாக்கியிருக்கிறார். கடந்தகாலத்துக்குச் சென்று, விருப்பப்பட்ட மிருகத்தை வேட்டையாடலாம் என்று சென்ற ஏகாம்பரம், கடந்த காலத்துக்குச் சென்ற பின்பு, “அதில் எந்த மாற்றத்தையும் செய்யக் கூடாது; அப்படிச் செய்தால் அந்தக் கடந்த காலத்துக்குப் பின்பு, பலதலைமுறைகளில் ஏற்கெனவே […]

Read more

கிழக்கு மேற்கு கோவாவில் மதமாற்றம் துயரக்கதை

கிழக்கு மேற்கு கோவாவில் மதமாற்றம் துயரக்கதை, மலையாள மொழியில் ரங்க ஹரி, தமிழில் அலமேலு கிருஷ்ணன், விஜயபாரதம், விலை 120ரூ. போர்ச்சுக்கீசிய ஆட்சியில் கோவாவில் நடந்த மதமாற்றத்தால் ஏற்படும் கொடுஞ்செயல்களை நூலாசிரியர் அனைவருக்கும் புரியும் வகையில் நேரடி காட்சியாக காண்பித்து உள்ளார். கொங்கன் பகுதியில் இருந்து ஓடிச்செல்ல வேண்டிய ஒரு பகுதி மக்களின் சோகக் கதையை நூலாக, நூலாசிரியர் வடித்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 1/3/2017.

Read more
1 29 30 31 32 33 80