மகாத்மாவின் வாழ்வில் மணியான நிகழ்ச்சிகள்

மகாத்மாவின் வாழ்வில் மணியான நிகழ்ச்சிகள், வடுவூர் சிவ. முரளி, மீனாட்சி பிரசுரம், பக். 200, விலை 150ரூ. இந்நூலாசிரியர் பல்வேறு இதழ்களில் சிறுகதைகள் மற்றும் கவிதைகள் எழுதி வருபவர். இவரது ‘குறளமுதக் கதைகள்’ என்ற நூலை ஆய்வு செய்த ஒருவர், எம்.ஃ.பில். பட்டமும் பெற்றுள்ளார். இந்நூலில் காந்திஜியின் வாழ்க்கையில் நடந்த சுவையான நிகழ்ச்சிகளை அவரது ‘சத்திய சோதனை’ உள்பட பல நூல்களில் இருந்து திரட்டி தொகுத்துள்ளார். இந்நூலைப் படிக்கும்போது சிறுவயதில் காந்திஜி செய்த சேட்டைகள், குற்றங்கள், குறைகளையெல்லாம் படிக்கும் நமக்கு, இவரா பிறகு உலகம் […]

Read more

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா, டாக்டர் எஸ். சுப்புலட்சுமி, மகம் பதிப்பகம், விலை 60ரூ. மகாகவி பாரதியாரின் பாடல் வரிகளை தலைப்பாக வைத்து டாக்டர் எஸ். சுப்புலட்சுமி எழுதிய சிறுகதைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. இவர், கவிஞர் சுப்பு ஆறுமுகத்தின் மகளாவார். கதைகளில் கருத்தும், கவித்துவமும் நிறைந்துள்ளன. நன்றி: தினத்தந்தி, 31/5/2017.

Read more

கடல் மரங்கள்

கடல் மரங்கள், மலையாளத்தில் வெள்ளியோடன், தமிழில்: ஆர்.முத்துமணி, முதற்சங்கு பதிப்பகம், பக்.88, விலை ரூ.70. ஈழவிடுதலைப் போராட்டத்தில் சிங்களர்களையும், மலாய்க்காரர்களையும் நம்பியிருக்கலாமே? எல்லாரையும் இணைத்துக் கொண்டு போராடியிருக்கலாமே? வியட்நாம் எல்லைப்புறப் பகுதியில் உள்ள கு ஆங் ஷி பகுதியைச் சீனா வலுக்கட்டாயமாகத் தன்னுடன் இணைத்துக் கொண்டது. தற்போது சிக்கிமையும், அருணாசல் பிரதேசத்தையும் இணைக்க வேண்டும் என்று கேட்பதைப் போல. இஸ்ரேலியர்கள் இஸ்லாமியர்களைக் கொன்று குவிக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். இஸ்லாமியர்களை அதிக அளவில் கொன்று குவித்தவர்கள் இஸ்லாமியர்கள்தான். இன்னும் இவற்றைப் போல நிறைய அரசியல் விஷயங்கள் […]

Read more

ஆடி காத்து

ஆடி காத்து, ரா. லட்சுமணன், விலை 100ரூ. மனதைத் தொடும் சிறுகதைகள் கொண்ட புத்தகம். நூலாசிரியர் ரா.லட்சுமணன் பாராட்டுக்குரியவர். இந்த நூல் 2014-2015-ம் ஆண்டுக்கான சிறந்த படைப்பாக தமிழக அரசின் ஆதி திராவிடர் நலத்துறை கலைப்பண்பாட்டுத் துறையால் தேர்வு செய்யப்பட்டு பரிசு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி: தினத்தந்தி, 19/4/2017.

Read more

புகழ்பெற்ற விக்கிரமாதித்தன் கதைகள்

புகழ்பெற்ற விக்கிரமாதித்தன் கதைகள், பட்டத்தி மைந்தன், வசந்தா பிரசுரம், விலை 240ரூ. காலத்தால் அழியாத கதைகளில் விக்கிரமாதித்தன் கதைகளும் ஒன்று. சிறுவர் முதல் வயோதிகர் வரை அனைவரும் ஆர்வத்துடன் படிக்கும் 55க்கும் மேற்பட்ட விக்கிரமாதித்தன் கதைகள் விறு விறுப்பாக தொகுத்துத் தரப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 19/4/2017.

Read more

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம், கருப்பேரி கே.வி.ஆர். கிருஷ்ணசாஸ்திரி, தென்றல் நிலையம், விலை 60ரூ. ஜாதகங்களில் திருமணப் பொருத்தம் பார்ப்பது பற்றிய நுட்பமான விஷயங்களையும் இந்நூல் விளக்குகிறது. நன்றி: தினத்தந்தி, 26/4/2017.   —-   காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல, மணிமேகலைப் பிரசுரம், விலை 75ரூ. உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து டாக்டர் எஸ். ஜீவராஜன் எழுதிய சிறுகதைகள் கொண்ட புத்தகம். சில கதைகள் வியப்படைய வைக்கின்றன. சில கதைகள் அதிர்ச்சி அடையச் செய்கின்றன. பொதுவாகச் சொன்னால், எல்லா கதைகளும் சிந்திக்க வைக்கின்றன. நன்றி: […]

Read more

அவலங்கள்

அவலங்கள், சாவித்ரி, எதிர் வெளியீடு, விலை 180ரூ. அவலங்களின் வாழ்வு கதாசிரியர் பிரான்ஸில் வசிக்கும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர். ஒரே நாவலின் அத்தியாயங்கள் என்று கருதும் அளவுக்கு இந்தத் தொகுப்பின் கதைகள் தொடர்கின்றன. காதல், வீரம், சோகம், நகைச்சுவை அத்தனை உணர்வுகளும் விரவிக்கிடக்கின்றன. இந்திய அமைதிப் படைப்புக்கு இரையான ராணியக்கா, சாதிக்கொடுமைக்கு ஆளான மல்லிகா, மனைவியின் காதில் ஈர்க்குச்சி சொருகியதைக் காணச் சகியாமல் கடையில் வேலை செய்து சிமிக்கி வாங்கிக்கொடுத்த நாதன் நாடு திரும்புகையில் விமானத்திலேயே மனைவியுடன் மரணிப்பது, கடல் புலிப் பிரிவில் சேர்ந்து கண்ணிழந்த […]

Read more

ஜென் தத்துவ விளக்கக் கதைகள்

ஜென் தத்துவ விளக்கக் கதைகள், சி.எஸ்.தேவ்நாத், நர்மதா பதிப்பகம், பக். 192, விலை 100ரூ. இந்தியாவில் வேரூன்றி உலகு எங்கும் கிளை பரப்பி, மணம் வீசுவது புத்த மதம். ஜப்பான் மக்களின் வளர்ச்சிக்கும், உயர்ச்சிக்கும் புத்த தத்துவங்கள் வழி காட்டியுள்ளன. காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ற ஜென் தத்துவக் கதைகள், கைபேசி ‘சிப்’ அளவு சிறிதாக இருந்தாலும், கதையின் வீச்சு மனதைப் பெரிதா ஆக்கிரமித்துக் கொள்கிறது. ஒவ்வொரு கதையும் தர்க்க வாதங்களுடன் தொடங்குகிறது. தன்னைத் தான் ஆராய்கிறது. திருப்பமாக ஒரு தீர்ப்பைத் தருகிறது இந்தக் கதைகளில். […]

Read more

கனவுகளின் கையெழுத்து

கனவுகளின் கையெழுத்து, மு.மேத்தா, கவிதா, பக்.112, விலை 75ரூ. தேசப்பற்றுக்குப் புதுமையும், புனிதமும் குழைத்து, புது இலக்கணம் வகுத்து, வாசலைத் திறக்கிறது இந்நூல். நன்றி: தினமலர், 30/4/2017.   —-   சிறுவர்களுக்கான சிறந்த கதைகள், வைரவமணி, மெர்குரிசன் பப்ளிகேஷன்ஸ், பக். 128, விலை 70ரூ. இளம் மாணவர்களை சிரிக்க வைத்து சிந்தனையை தூண்டும் வகையில், 84 சிறுகதைகள் இடம் பெற்று சிறப்பு சேர்க்கிறது இந்நூல். நன்றி: தினமலர், 30/4/2017.

Read more

வாழ்வியல் தடங்கள் 108

வாழ்வியல் தடங்கள் 108, ஆவியூர் லட்சுமி நாராயணதாசன், அல்லயன்ஸ் கம்பெனி, விலை 400ரூ. மொத்தம் 108 சிறுகதைகள் கொண்ட புத்தகம். எல்லாக் கதைகளும் நீதியைப் போதிக்கும் கதைகள். இதை எழுதிய ஆவியூல் லட்சுமி நாராயண தாசன், அழகிய தமிழில், நெஞ்சைத் தொடும் விதத்தில் கதைகளை எழுதியுள்ளார். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, அனைவரும் விரும்பும் விதத்தில் கதைகளை வடிவமைத்திருப்பது ஆசிரியரின் திறமையை எடுத்துக்காட்டுகிறது. நன்றி: தினத்தந்தி, 29/3/2017.

Read more
1 28 29 30 31 32 80