எனது வாய்மொழி பதிவுகள்

எனது வாய்மொழி பதிவுகள், கி. ராஜநாராயணன், அன்னம், பக்.316, விலை  ரூ. 300. எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் மறைவுக்குப் பிறகு அவருடைய பெயரில், முதல் பதிப்பாக வெளிவரும் கி.ரா.வின் புத்தம் புதிய நூல் என்ற அறிமுகத்துடன், வெளிவந்துள்ள புத்தகம் இது. எனது வாய்மொழி பதிவுகள் என்பதாகத் தலைப்பிடப்பட்டாலும் வெவ்வேறு காலகட்டங்களில் கி.ரா. அளித்த நேர்காணல்களின் தொகுப்புதான் இந்த நூல், எழுத்தாளர் கழனியூரன் தொகுத்தவை (கழனியூரனும் காலமாகிவிட்டார்). விலாவாரியாகச் சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பில் கேட்கப்படுகிற கேள்விகளுக்குக் கூட மிகக் கூராக, ஒற்றை வரியில் பதிலளிப்பதில் […]

Read more

சுதந்திர இந்தியாவின் பொறியியல் புரட்சிகள்

சுதந்திர இந்தியாவின் பொறியியல் புரட்சிகள், வி.டில்லிபாபு, திசையெட்டு, பக்.88, விலை ரூ.120. சுதந்திர இந்தியாவின் தொழில்நுட்பத் தலைமகன்களால் முன்னெடுக்கப்பட்டசில முக்கிய அறிவியல் தொழில்நுட்பப் பொறியியல் புரட்சிகளைப் பற்றி பதிவு செய்யும் முயற்சியே இந்த நூல். வேளாண் துறை, பாதுகாப்புத்துறை, போக்குவரத்துத் துறை என பல்வேறு துறைகளில் நமது நாட்டின் பெருமிதம் கொள்ளும் சாதனைகளையும், சாதனையாளர்களையும் ஒருசேரக் கொணர்ந்துள்ள இந்த நூல், இளைய தலைமுறையினருக்கு ஒரு வழிகாட்டியாக விளங்கும். அறிவியல்துறையை சாராதவர்களும், பொதுமக்களும் நமது நாட்டின் தொழில்நுட்பச் சாதனைகளை எளிதாக அறிந்து கொள்ள முடியும். விளக்கில்லாத் […]

Read more

தொடுவானம் தேடி

தொடுவானம் தேடி, அ.தில்லைராஜன், கோ. அருண்குமார், சஜிமேத்யூ, வானவில் புத்தகாலயம், விலை 299ரூ. இளைய சமுதாயத்தினர் பலர், சுயசார்புடன் தொழில் முனைவர்களாக வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்குப் பயன் உள்ளதாக இருக்கும் வகையில் இந்த நூல் திகழ்கிறது. சிறு, குறு தொழில்களை எவ்வாறு முன்னெடுப்பது, அவற்றை வெற்றிகரமாக நடத்த உதவும் வணிக உத்திகள் என்ன, நிதி உதவி திரட்டுவது எவ்வாறு, தொழில் நடத்தும் போது ஏற்படும் பிரச்சனைகள் என்ன, அவற்றுக்கு எவ்வாறு தீர்வு காண்பது போன்ற அனைத்து அம்சங்களும் இந்த நூலில் எளிய […]

Read more

தமிழ்நாடு தொழில் முனைவோர்களின் முழுமையான கையேடு

தமிழ்நாடு தொழில் முனைவோர்களின் முழுமையான கையேடு,  ஏ.ஜாண் மோரீஸ்,  ஏ.ஜே.எம்.பவுண்டேஷன், விலை ரூ.200. இந்நுாலில், வேலை வேண்டும் என்போர் எப்படி வேலை பெறலாம்? எந்த வலைதளங்களை பார்க்க வேண்டும், எந்த மாதிரி போட்டித் தேர்வுகளை எழுத வேண்டும், வெளிநாடு சென்று பணிபுரிய உதவும் நிறுவனங்கள் வரை தகவல்கள் தரப்பட்டுள்ளன. மாவட்ட தொழில் மையங்களின் விலாசங்கள், விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன் வளம் மற்றும் உணவு பதப்படுத்துதல் துறைகளில் உள்ள தொழில் வாய்ப்புகள், இருதயவியல், பயிற்சி மையங்கள், கடனுதவிகள் மற்றும் வங்கிகளின் வலைதளங்கள், கணக்கு எழுத […]

Read more

தேனீ வளர்ப்பு

தேனீ வளர்ப்பு,  பி.மாரியப்பன், இயல் வெளியீடு, பக் – 134, விலை ரூ.100. இந்தியா மற்றும் பிற நாடுகளில் தேனீ வளர்ப்பு முறைகளைப் பற்றிச் சொல்லத் தொடங்கும் இந்நூல், தேனீக்களின் வகைகளை அவற்றில் இருக்கும் சுவாரஸ்யங்களை அழகாக விவரிக்கிறது. மனிதர்களின் உறுப்பு மண்டலம் போல் தேனீக்களின் உறுப்புகளை, அவற்றின் செயல்பாடுகளைத் தெளிவாக விளக்கிக் கூறுகிறது. மேலும் மனிதர்கள் குடும்பமாக வசிப்பது போல் தேனீக்களும் இராணி தேனீ, ஆண் தேனீ, வேலைக்கார தேனீ என்று கூட்டமைப்புடன் செயல்படுகின்றன என்பதை அழகாக விவரிக்கிறது. நூலின் முதல் பாதி […]

Read more

பிசினஸ் டிப்ஸ்

பிசினஸ் டிப்ஸ்,  சதீஷ் கிருஷ்ணமூர்த்தி, கிழக்கு பதிப்பகம், பக்.128, விலை140. சொந்தமாகத் தொழில் செய்ய விழைவோருக்கு எளிமையான, கலகலப்பான மொழியில் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார் சதீஷ் கிருஷ்ணமூர்த்தி.குட்டி, குட்டியாக இருபத்து மூன்று அத்தியாயங்களாகப் பிரித்து, புதிதாகத் தொழிலில் முனைவோருக்கு உந்து சக்தியாக இருக்கும் வகையில் நூலை வடிவமைத்திருக்கிறார். புதிதாய் பணியில் சேரும் ஓர் ஊழியரின் முதல் நாள் அனுபவம் அவருக்கு மறக்க முடியாதவண்ணம் அமைவதற்கு என்ன செய்கிறீர்கள்? என்று கேட்கும் சதீஷ், ஓர் அருமையான யோசனையை முன்வைக்கிறார். நீங்கள் பணிக்கு அமர்த்தும் புதிய ஊழியரை வரவேற்க […]

Read more

காவிரி நீரைப் பாதுகாப்போம் டெல்டா விவசாயத்தைக் காப்போம்

காவிரி நீரைப் பாதுகாப்போம் டெல்டா விவசாயத்தைக் காப்போம், சக்தி கதிரேசன், மணிமேகலைப் பிரசுரம், விலை 200ரூ. தமிழகம் கர்நாடகம் இடையேயான காவிரி நீர் பங்கீடு, நமக்குக் கிடைக்கும் காவிரி நீரை எவ்வாறு சேதாரம் இல்லாமல் செலவு செய்து அதிக மகசூல் பெறுவது என்பவற்றை ருசிபடக் கூறுவதற்காக நாவல் வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த நூல், காவிரி நீர் தொடர்பான அத்தனை தகவல்களையும் தருகிறது. இந்த நாவலில் குறிப்பிடப்பட்டுள்ள புதிய காவிரி நீர் மேலாண்மைத் திட்டங்கள் மூலம் அதிக நீரை பாதுகாத்து, நீலகிரி காவிரி திட்டம் மற்றும் […]

Read more

ஒரு விற்பனையாளரின் வெற்றி இரகசியங்கள்

ஒரு விற்பனையாளரின் வெற்றி இரகசியங்கள்,  சி.எஸ்.தேவநாதன், சுரா பதிப்பகம்,  பக்.120, விலை ரூ.60. ஒரு விற்பனையாளர் வெற்றிகரமான விற்பனையாளராக மாற வேண்டுமானால் எந்த எந்தவிதங்களில் எல்லாம் அவர் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்; வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கற்றுக் கொடுக்கும் நூல். வாடிக்கையாளர்களிடம் பேசும்முறை, விற்பனைப் பொருள்களை அவர்களுக்கு காட்டும் முறை, வாடிக்கையாளர்களின் சந்தேகங்களுக்குப் பொறுமையாகப் பதில் கூறுவது, வாடிக்கையாளரைப் பார்த்தவுடனேயே அவரைப் பற்றி எந்த முன் முடிவுக்கும் வராதிருப்பது, பொறுமையாக இருப்பது, வாடிக்கையாளர்களுடனான தொலைபேசி உரையாடல்களை மிகுந்த கவனத்துடன் மேற்கொள்வது என வாடிக்கையாளர்களைக் […]

Read more

அடிப்படை மார்க்கெட்டிங் கோட்பாடுகள்

அடிப்படை மார்க்கெட்டிங் கோட்பாடுகள், எஸ்.ரங்கராஜன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், பக். 172, விலை 150ரூ. விளம்பரம் இல்லாத உலகம் ஏது? நம்மைப் பற்றி மற்றவர்களின் நன்மதிப்பைப் பெறுவதும் ஒரு வகையில் விளம்பரம் தான். பூவுக்கும், நாருக்கும் மட்டுமல்ல… அன்றாடம் பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களுக்கும் விளம்பரம் பிரதானமாக உள்ளது. மார்க்கெட்டில் எத்தனை வகை பொருட்கள் இருக்கிறது என்பதை விட, எத்தனை பொருட்கள் வாடிக்கையாளர்களின் மனதில் இடம் பிடிக்கின்றன என்பது தான் முக்கியம். அந்த வகையில், உற்பத்தியாளர்களின் விளம்பரங்கள் பெற்ற வளர்ச்சி, வீழ்ச்சி, வெற்றி, […]

Read more

தொழில் தொடங்கலாம் வாங்க!

தொழில் தொடங்கலாம் வாங்க!, ஆர்.கார்த்திகேயன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.150 முதலீட்டுக்குப் பணம் இருந்திருந்தால், கைவசம் இருக்கும் ஐடியாவுக்கு முதலீட்டாளர் கிடைத்திருந்தால், திறமையான கூட்டாளி கிடைத்திருந்தால் தொழில் தொடங்கி இருக்கலாம் என ஏக்கப் பெருமூச்சு விடுபவர்களுக்குப் புதிய வெளிச்சம் காட்டும் வகையில் இந்து தமிழின் ‘வெற்றிக்கொடி’ இணைப்பிதழில் தொடராக வெளிவந்த கார்த்திகேயனின் கட்டுரைகளின் புத்தக வடிவம் இது. நன்றி: தமிழ் இந்து, 18/5/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]

Read more
1 2 3 12