நானா போனதும் தானா வந்ததும்

நானா போனதும் தானா வந்ததும், பாக்கியம் ராமசாமி, வானதி பதிப்பகம், விலை 100ரூ. ஜாம்பஜார் ஜக்கு சிரிப்பு மருந்து, தினமும் இரண்டு வேளைகள் என்னும் குறிப்போடு முப்பத்தெட்டுவிதமான வைத்தியங்கள். போதாக்குறைக்கு தொழில்முறை டாக்டர் ஒருவரே (டாக்டர் என். சுந்தர்) அணிந்துரை தந்திருக்கிறார். சிரிப்பு வைத்திய நிபுணர் பாக்கியம் ராமசாமியின் நானா போனதும் தானா வந்ததும், நூலுக்குத்தான். பாக்கியம் ராமசாமியிடம் உம்மணா மூஞ்சிகூடத் தோற்றுப் போய்விடுவான் என்று கல்கி. ராஜேந்திரன் முன்னுரைப்பதை கிராப்பைக் கலைக்க இருநூரு ரூபாயா? கட்டுரை ஒன்றே நிரூபித்து விடுகிறது. தாத்தா தம்முடைய […]

Read more

திராவிடமா? தீரா விடமா?

திராவிடமா? தீரா விடமா?, ஓவியப்பாவலர் மு.வலவன், முத்தையன் பதிப்பகம், பக். 296, விலை 180ரூ. தமிழ்நாடு, கேரளம், ஆந்திரப்பிரதேசம், கர்நாடகம் என்னும் நான்கு மாநிலங்களையும் புதுச்சேரி என்னும் யூனியன் பிரதேசத்தையும் உள்ளடக்கியது திராவிட நாடு. இந்தத் திராவிட நாட்டில் பெரும்பான்மை மக்களால் நான்கு மொழிகள் பேசப்படுகின்றன. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் இன்னும், இந்த நான்கு மொழிகளில் எந்த மொழியைத் திராவிட நாட்டின் தேசிய மொழியாக ஏற்றுக் கொள்வது? என்னும் கேள்விக்குத் திராவிட நாட்டுக்காரர்களால், எந்தப் பதிலையும் தரமுடியவில்லை. ஆட்சி அமைப்பு வசதிக்கு, ஒரு […]

Read more

பாச்சா

பாச்சா, கலைமாமணி விக்ரமன், யாழினி பதிப்பகம், சென்னை 108, பக்.112, விலை 50ரூ. ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்தைப் பண்ணு என்பர். ஆனால் தினம் ஆயிரம் பொய் சொல்லி தினசரி தனது குடும்ப காலட்சேபத்தை நடத்தி வரும் பாச்சா என்பவரின் டகல் பாச்சா வேலைகளை வேடிக்கையாக விவரித்து, ஒரு சமூக நாவல் எழுதியிருக்கிறார் சரித்திர நாவல்களுக்குப் பெயர் பெற்ற இந்நூலாசிரியர், இறுதியில் பாச்சாவின் மனமாற்றம், செயற்கையாக இல்லாமல் மிக இயல்பாக இருப்பது, நாவலின் தனிச்சிறப்பு. -சிவா   —-   நெல், காசி […]

Read more

வட்டியும் முதலும்

வட்டியும் முதலும், ராஜுமுருகன், விகடன் பதிப்பகம், சென்னை, பக். 504, விலை 215ரூ. விகடனில் தொடராக வந்தது. அதில் 70 வாரத் தொடர்கள் மட்டும் புத்தக வடிவம் பெற்றுள்ளது. ஒரு திரைப்பட இயக்குநரின் நட்பும், வாழ்க்கையை அவதானிப்பதுதான். அதை எழுத்திலும் காட்டுகிறார் ராஜுமுருகன். வண்ணதாசன் எப்படி அவரது ரத்த உறவுகளுடன் நம்மையும் சேர்த்துக் கொண்டு நடத்திச் செல்வாரோ, அத்தகைய ஈரத் தமிழ்நடை ராஜுமுருகன் எழுதில் எல்லாப் பக்கங்களிலும். புத்தகத்தை எங்கிருந்து வேண்டுமானாலும் படிக்கலாம். வாழ்க்கையை அவரது ஜன்னலில் அவரோடு நாமும் பார்த்துக் கொண்டிருப்போம். கட்டித் […]

Read more

மனித வசியம் அல்லது மனக் கவர்ச்சி

மனித வசியம் அல்லது மனக் கவர்ச்சி, மறைமலை அடிகள், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை – 600 017, பக்கம்: 216, விலை: ரூ.105. மறைமலையைடிகல் எழுதிய மிகச் சிறந்த நூல்களில் ஒன்று. இது மனித வசியம் என்றால் மெஸ்மரிசம், ஜிப்னாடிசம் போன்றவற்றை, இந்நூலில் அடிகளார் விவரிக்கவில்லை. மனிதவசியம் என்பது, மக்களின் உள்ளத்தை கவர்வதாகிய ஒர் ஆற்றலை குறிக்கும். இந்த ஆற்றல், இயற்கையாக எல்லாரிடத்தும் காணப்படுவதில்லை. இது, சிலரிடமே காணப்படும். மனித வசியம் போன்ற துறை தொடர்புடைய நூல், தமிழில் இதுவே முதல் நூல் […]

Read more

மருத்துவக் கையேடு

மருத்துவக் கையேடு, மணிமேகலை பிரசுரம், 7 தணிகாசலம் சாலை, தி.நகர், சென்னை 17. விலை 100ரூ. சர்க்கரை நோய், காசநோய், பெண்களின் கர்ப்பகாலம், ஜீரணகோளாறுகள், நரம்புக்கோளாறு, இப்படி பலதரப்பட்ட நோய்கள் பற்றியும், சிகிச்சை முறைகள் பற்றியும் கேள்வி பதில் வடிவத்தில் எழுதியுள்ளார் டாக்டர் எஸ். ஜீவராஜன். மொத்தம் 503 கேள்வி பதில்கள். அனைவருக்கும் பயன்தரக்கூடிய மருத்துவ நூல் விலை 100ரூ. இதே நூலாசிரியர் எய்ட்ஸ் இல்லா இனிமையான உலகம் என்ற நூலையும் எழுதியுள்ளார். விலை 75ரூ. —-   வின்ஸ்டன் சர்ச்சில் 100, ராம்பிரசாந்த், […]

Read more

பாண்டியர் காலச் செப்பேடுகள்

பாண்டியர் காலச் செப்பேடுகள், டாக்டர் மு. ராஜேந்திரன் இ.ஆ.ப., அகநி, 3, பாடசாலை வீதி, அம்மையப்பட்டு, வந்தவாசி 604408. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-811-3.html திராவிடர்களின் வரலாற்றுச் செய்திகளை எளிய தமிழில் ஓரிரண்டு வருஷத்து நுற்பழக்கமும் உள்ளவர்களும் கூட படித்துப் புரியும்வண்ணம் தந்திருக்கிறார் நூலாசிரியர். ஆழிப் பேரலைகள் தாக்குதலை நம் காலத்தில் 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் நாளில் கண்டோம். ஆனால் பாண்டியர் செப்பேடுகளில் ஒன்றான வேள்விக்குடிச் செப்பேடில் கருமைநிற கடல்நீர் நிலத்தைத் தாக்கியபோது பாண்டிய அரசன் தனது வேலால் தடுத்து […]

Read more

திருக்குறள் உவமைகள்

திருக்குறள் உவமைகள், முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணாநகர் மேற்கு, சென்னை – 40. விலை: ரூ. 50. கடலில் மூழ்கி முத்தெடுப்பது போல, 1330 திருக்குறள் பாக்களையும் ஆராய்ந்து, 150 – க்கு மேற்பட்ட உவமைகளைத் தொகுத்துத் தந்துள்ளார், முல்லை பி.எல்.முத்தையா. பாராட்ட வேண்டிய படைப்பு. விலை: ரூ.50. மாணவர்களுக்கு ஷேக்ஸ்பியர் எழுதிய ஐந்து நீதிக்கதைகளை, மாணவர்களுக்கு ஷேக்ஸ்பியர் நீதிக்கதைகள் என்ற பெயரில் எளிய நடையில் நூலாக வெளியிட்டுள்ளார், முல்லை முத்தையா. விலை: ரூ.35. —– சிறு தொழில் தொடங்கும் வழிமுறைகள், தி. ஜனநாயகம், […]

Read more

சிறந்த நிர்வாகி ஆவது எப்படி

சிறந்த நிர்வாகி ஆவது எப்படி, சோம. வள்ளியப்பன், கிழக்கு பதிப்பகம், ராயப்பேட்டை, சென்னை 14, விலை 140ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-065-8.html சிறந்த தொழில்முறை மேலாளர் ஆவது எப்படி என்பதை எளிய நடையில் கற்றுக் கொடுக்கும் நூல். நூலாசிரியர் தனது பணி அனுபவத்திலிருந்து பல்வேறு மேற்கோள்களைக் காட்டியிருப்பது வாசிப்பு அனுபவத்தை இனிதாக்குகிறது. மேலாளர் தனது நினைப்பிலும் மேலாளராக இருக்க வேண்டும் என்பது போன்ற டிப்ஸ்கள் ஏராளம். _____ உள்ளிருந்து…, துரை. நந்தகுமார், திருமகள் நிலையம், 13, சிவபிரகாசம் […]

Read more
1 10 11 12