கண்சிமிட்டும் நேரத்தில்

கண்சிமிட்டும் நேரத்தில், ஆர். மணிமாலா, கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு, தியாகராயநகர், சென்னை 17, விலை 60ரூ. தொலைக்காட்சியில் பணியாற்றும் நிவேதிதா மற்றும் சசிதரன் என்ற 2 கதாபாத்திரங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவல் கண்சிமிட்டும் நேரத்தில். இதில் நல்ல நட்போ, கெட்ட நட்போ, நம்மை சரிபாதின்னு சொல்கிற ஆத்மாவிடம் எதையும் மறைக்கக்கூடாது என்ற உயர்ந்த தத்துவமும் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. சொல் நயத்துடன் அன்றாட நிகழ்வுகளை அருமையாக நூல் ஆசிரியர் தொகுத்துள்ளார்.   —-   பால்பண்ணைத் தொழில்கள் வங்கிக் கடனுதவி, அரசு […]

Read more

தொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள்

தொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள், இரா. பஞ்சவர்ணம், பஞ்சவர்ணம் பதிப்பகம், காமராஜர் தெரு, பண்ருட்டி, கடலூர் மாவட்டம், விலை 360ரூ. பண்டைய தமிழ் நூல்களில் கொட்டிக்கிடக்கின்ற தாவரத் தொடர்புடையத் தகவல்களைத் தொகுத்து வழங்க வேண்டும் என்ற குறிக்கோளை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்ட நூல். நிலத்திணைகளின் பெயராக இடம் பெற்ற தாவரங்கள் (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை) போர் முறை, போர் நிகழ்வு மற்றம் போர் வீரர்களுக்கு அடையாளமாக பயன்படுத்தும் தாவரங்கள் (வாகை, வெட்சி, தும்பை, கரந்தை, உழிஞை, வஞ்சி, காஞ்சி) மருந்தாக பயன்படுத்தும் வேம்பு, […]

Read more

தரிசனம்

தரிசனம், குமுதம் பு(து)த்தகம், 308, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, விலை 75ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-143-1.html தரிசனம் என்ற பெயரை கேட்டவுடனேயே, ஏதோ இந்த நூலாசிரியரான மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ. இறையன்பு இறைபக்தி தொடர்பாக எழுதியிருப்பாரோ? என்ற எண்ணத்துடன் இந்த புத்தகத்தை திறக்கக்கூடாது. முழுமையாக கவிதை நடையில் இல்லாமல், அதே நேரத்தில், கவிதையின் சுவையை ஒரு உரைநடையில் ருசிக்கும்வகையில், கடவுளை காண்பது மட்டும் தரிசனம் அல்ல, உன்னையே நீ ஆழ்ந்து உணர்வதுதான் உண்மையான தரிசனம் […]

Read more

கல்வெட்டுக்கலை

கல்வெட்டுக்கலை, பொ. ராசேந்திரன், சொ. சாந்தலிங்கம், பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம், மதுரை, பக். 240, விலை 250ரூ. தமிழ் மன்னர்கள் பற்றியும், தமிழ்நாட்டு வரலாறு பற்றியும் அரிய கல்வெட்டுகளும், ஓலைச்சுவடிகளும், செப்பேடுகளும் பெரிதும் உதவுகின்றன. நாம் அச்சில் படிக்கும் தமிழ் எழுத்துக்களும், கல்வெட்டு எழுத்துக்களுக்கும் பெரிய மாறுதல் காணப்படும். கல்வெட்டைப் படிக்க மிகுந்த திறமையும், பயிற்சியும் வேண்டும். பொ. இராசேந்திரன், சொ. சாந்தலிங்கம் ஆகிய இருவரும் இணைந்து எழுதிய இப்புத்தகத்தில், தமிழ்நாட்டின் முக்கிய கல்வெட்டுகள், பற்றி அபூர்வமான தகவல்கள் நிறைந்துள்ளன. இப்புத்தகத்தை […]

Read more

கற்றது கடலளவு

கற்றது கடலளவு, து. கணேசன், விகடன் பிரசுரம், சென்னை 2, பக். 396, விலை 115ரூ. சாண்டில்யனின் கடல்புறா நாவல், அந்தக் கால கடற்பயணத்தை விவரித்தால், அதற்கு சற்றும் சுவை குன்றாமல், நவீன கால கடற்பயணத்தை தொழில் அனுபவமாகவும், வாழ்க்கை அனுபவமாகவும் விவரிக்கிறது இந்தப் புத்தகம். கப்பல்களில் வேலை செய்வோர் நிறைய சம்பளம் வாங்குவதாக நினைப்போம். இதைப் படித்தால் தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும். அவர்கள் இழக்கும் வாழ்க்கை எது? கடல் விபத்து, மனைவி மக்களைப் பிரிந்திருந்தால், விலை மாதர்களிடம் உடல் நலத்தை […]

Read more

குருசமர்ப்பணம்

குருசமர்ப்பணம், ஸ்ரீ ஐயப்ப பஜனை சங்கம், வில்லிவாக்கம் ஸ்ரீ விஸ்வநாத சர்மா சாஸ்தா அறக்கட்டளை, சென்னை, பக். 240, விலை 250ரூ. காஞ்சி பரமாச்சாரியார் மகா பெரியவரின், அருள்மொழிகளான பொன்மொழிகளைத் தொகுத்து, அற்புதமான நூலாக வெளியிட்டுள்ளனர். நூலின் தொடக்கத்தில் ஆதிசங்கரர் முதல், விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் வரை சங்கராச்சாரியார்கள் எழுபதின்மர் படங்களும், குறிப்புகளும் அழகாக அச்சிடப் பெற்றுள்ளன. மகா பெரியவர் படங்களை இடப்பக்கத்தில் அச்சிட்டு வலப் பக்கத்தில் அவர்கள் அருளிய ஞான மொழிகளை முத்துக் கருத்துகளை தந்த முறை மிக நன்று. புண்ணியங்களால் நன்மை […]

Read more

தமிழின் தனிச்சிறப்பு

தமிழின் தனிச்சிறப்பு, முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணாநகர், மேற்கு, சென்னை 40, விலை 15ரூ. 10-4-1949ஆம் ஆண்டு மறைமலையடிகளார் ஆற்றிய சொற்பொழிவு அடங்கிய மிகச்சிறிய நூல்.   —-   மனதெனும் குரங்கை வெல்லுங்கள், தமிழாக்கம்-வெ. ராஜகோபால், ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ், 48, ஆர்ய கவுடர் ரோடு, மேற்கு மாம்பலம், தி.நகர், சென்னை 33. போதை ஏறிய குரங்கை தேளொன்று கொட்டி, பிசாகம் பிடித்தால் எப்படி இருக்குமோ அதுபோலவே நம் மணமும். அதிலிருந்து பயன் தராத சிந்தனைகளை செதுக்கி எடுத்து உள்ளே […]

Read more

இந்திய விவசாயிகளின் பேரெழுச்சி

இந்திய விவசாயிகளின் பேரெழுச்சி, எல். நடராஜன், தமிழாக்கம்-ஆர். நல்லக்கண்ணு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட், 41 பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, விலை 60ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-864-1.html இந்தியா ஒரு விவசாய நாடு என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை அது விவசாயப் புரட்சிகளின் நாடு என்பதும், அதனால்தான் காந்தி ஒரு இந்திய விவசாயியின் புறத்தோற்றத்தைப் பூண்டு இந்திய விடுதலையை வென்றெடுக்க வேண்டி வந்தது. விவசாயிகள் தங்கள் உரிமைகளுக்காகவும் தங்கள் […]

Read more

நிம்மதி எங்கே?

நிம்மதி எங்கே?, மா. பொன்னுசாமி, பண்மா பதிப்பகம், 21ஜி/3, அப்பாவு நகர், சூரமங்கலம், சேலம் 636005, பக். 230, விலை 200ரூ. மண்ணில் பிறந்த அனைவருக்கும், நிம்மதி என்பது தேவை. நிம்மதியை விலை கொடுத்து வாங்க முடியுமா? முடியாது. நிம்மதியை இரண்டு வழிகளில் பெற முடியும். முதலாவதாக, நல்லதைச் செய்ய வேண்டும் என்ற கட்டுக்கோப்பாய் நிம்மதி பெற முடியும். நிம்மதி என்பது, நம் உள்ளத்திலேயே இருந்தாலும், அதை வெளிக்கொணர்ந்து, அனுபவக்க முடியாத நிலையில்தான், இன்றைய மனித வாழ்க்கை இருக்கிறது. மிகவும் ஆழத்தில் நமது உள்ளத்தில் […]

Read more

தொழிலாளி டு முதலாளி

தொழிலாளி டு முதலாளி, இராம்குமார் சிங்காரம், பெரிகாம், 37, அசீஸ்மல்க் இரண்டாம் தெரு, ஆயிரம் விளக்கு, சென்னை 6, பக், 112, விலை 80ரூ. காய்கறிக் கடைக்காரர் முதல் கம்ப்யூட்டர் இன்ஜினீயர் வரை தமக்கென ஒரு தொழில் பாதையைக் கண்டு முன்னேறியவர்களின் நேர்காணல்களே இந்நூல். சொந்தத் தொழில், நாமே அதற்கு முதலாளி என்று களம் இறங்கியவர்கள் சந்திக்கும் பிரச்னைகள், அதற்கான தீர்வுகள், பிரச்னைகளைக் கண்டு துவண்டு போகாமல் முன்னேறும் வழிகள் என்று தொழில் முனைவோருக்கு எழும் சந்தேகங்களுக்கு நேர்காணலில் இடம்பெற்ற 23 தொழிலதிபர்களும் எளிய […]

Read more
1 8 9 10 11 12