இனியெல்லாம் பிஸினஸே

இனியெல்லாம் பிஸினஸே, எஸ்.பி. அண்ணாமலை, யா பப்ளிகேஷன், விலை 500ரூ. பலம் செய்வோம் தொழில் முனைவருக்கே!’ என்ற தாரக மந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு, இளைஞர்களுக்கு வழிகாட்டும் வகையில் வண்ணப் படங்களுடன் கட்டுரைகள் அமைந்துள்ளன. எங்கெங்கு வாய்ப்புகள் உள்ளன; தொழில் செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள்; முதலீட்டைப் புரட்டும் முறை; பணம் இல்லாவிட்டாலும் வியாபாரம் செய்யும் வாய்ப்பு உள்ளிட்ட அரிய கருத்துகள் இந்நுாலில் இடம்பெற்றுள்ளன. நன்றி: தினமலர், 12/8/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]

Read more

கட்டுமான தொழில் களஞ்சியம்

கட்டுமான தொழில் களஞ்சியம், பேரா.ஏ.ஆர்.சாந்தகுமார், கட்டுமானத் தொழில் பதிப்பகம், பக்.132, விலை 175ரூ. இயற்கை பேரழிவைத் தாங்கும் கட்டுமான வடிவமைப்பு பற்றியும், கட்டடங்களை கரையான்கள் அரிக்காமல் தடுக்கும் வழிமுறைகள் பற்றியும், தீ விபத்து ஏற்பட்டால் அதிலிருந்து தப்பிக்க ஏதுவாக கட்டடங்கள் வடிவமைக்க வேண்டிய முறைகள் பற்றியும் கூறுகிறது. கான்கிரீட் விரிசல்களை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து படங்களுடன் மிக எளிமையாக, அழகாக எடுத்துரைக்கும் இந்நுால், கட்டுமானத் துறை சார்ந்தவர்களுக்கும், பொது மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நன்றி: தினமலர், 12/8/2018. இந்தப் […]

Read more

தென்னிந்தியப் பயிர்கள்

தென்னிந்தியப் பயிர்கள்,  வி.டி.சுப்பையா முதலியார், வேலா வெளியீட்டகம், பக்.576, விலை ரூ.450. தமிழகத்தில் விவசாயத்துக்கு போதுமான நீரின்றி, குறைந்த நீரைப் பயன்படுத்தி இப்போது விவசாயம் செய்து வருகின்றனர். இந்நூல் 1956-க்கு முன்பு வரை தென்னிந்தியாவில் நீண்டகாலமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த அந்தந்த மண்ணுக்குரிய விவசாய முறைகளை மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது. இதன் நூலாசிரியர் கோவை விவசாய கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பிறகு தென்னிந்திய அளவிலான பயிர்கள் குறித்த நீண்ட ஆய்வை மேற்கொண்டு இந்நூலைப் படைத்திருக்கிறார். அன்றைய காலகட்டத்தில் செய்யப்பட்ட சாகுபடி முறைகள், நெல், கரும்பு, […]

Read more

தென்னிந்தியப் பயிர்கள்

தென்னிந்தியப் பயிர்கள், வி.டி.சுப்பையா, வேலா வெளியீட்டகம், விலை 450ரூ. உணவு உற்பத்தி முறைகள் மற்றும் அவைகளின் வரலாற்று பின்னணி குறித்து அறிந்துகொள்ள உதவும் இந்த நூலில் வேளாண்மை பற்றிய அரிய தகவல்கள் விளக்கமாகவும், படிப்பதற்கு எளிமையாகவும் உள்ளன. இன்றைய இளைஞர்கள் மரபு விவசாயத்தைப் புரிந்து கொள்ள இந்நூல் பெரிதும் உதவும். நன்றி: தினத்தந்தி,11/7/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

தொழில் முனைவோர்

தொழில் முனைவோர், இரத்தின நடராசன், ஏகம் பதிப்பகம், பக்.120, விலை 90ரூ. பண்டைய காலந்தொட்டு உழவு மற்றும் நெசவு தொழில்கள் மிக முக்கியமாகக் கருதப்பட்டு வந்தன. திரைகடலோடியும் திரவியம் திரட்டு என்பர். நாம் மாறிவரும் சூழ்நிலைக்கேற்ப நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்; மாற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதன் அடிப்படையில் இந்நுால் வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு தொழில் செய்பவர்கள், அறிஞர்கள், ஆய்வாளர்கள் ஆகியோரின் சிந்தனைகளையும், அனுபவங்களையும், ஆலோசனைகளையும் உள்ளடக்கிய அறிவுப் பெட்டகம் இந்நுால் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நன்றி:தினமலர், 20/5/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more

வேளாண்மையில் மேலாண்மை

வேளாண்மையில் மேலாண்மை, நா. ரங்கராமானுஜம், தமிழ்நாடு மத்த வேளாண் வல்லுனர் பேரவை, பக். 448, விலை 350ரூ. வேளாண்மையில் முதல் பணியான, நில சீர்திருத்தம் முதல், விதை நுட்பம், அறுவடைக்கு பிந்தைய நுட்பம் வரை, அனைத்து தொழில் நுட்பங்களும், இந்நுாலில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. தானிய பயிர்கள், நறுமணப்பயிர்கள், தீவனப்பயிர்கள் என, 78 பயிர்களின் சாகுபடி முறைகள், இந்நுாலில் விளக்கப்பட்டுள்ளன. இயற்கை வேளாண்மை மற்றும் மூலிகை வேளாண்மை குறித்தும், பல்வேறு செய்திகள் உள்ளன. நன்றி: தினமலர், 10/1/2018

Read more

சாதனை மலர்கள்

சாதனை மலர்கள், தொகுப்பாசிரியர்: மக்கள் குரல் வீ.ராம்ஜீ, மணிவாசகர் பதிப்பகம், பக்.224, விலை ரூ175. மக்கள் குரல் நாளிதழில் வாரம்தோறும் வெளியான விருந்தினர் குரல் என்ற சிறப்புப் பகுதியில் இடம்பெற்ற 32 பல்துறை வித்தகர்களின் பேட்டி நூலாக்கம் பெற்றிருக்கிறது. இயல், இசை, நாடகம், நாட்டியம், நடிப்பு, கதை, கவிதை, இலக்கியம், பதிப்பு, தயாரிப்பு, மென்திறன், குழந்தை இலக்கியம், பாடலாசிரியர், கதாசிரியர், நாடகாசிரியர், எழுத்தாளர், மனநல ஆலோசகர், அறிவியல் ஆய்வாளர், நூலகர், சமூக ஆர்வலர், பொதுப்பணி ஆகிய துறைகளில் சாதனை புரிந்தவர்களின் வாழ்க்கை வழித்தடத்தை சுருக்கமாக தொகுப்பாசிரியர் […]

Read more

பாயும் தமிழகம்

பாயும் தமிழகம், சுசீலா ரவிந்திரநாத், தமிழில் எஸ்.கிருஷ்ணன், கிழக்கு பதிப்பகம், விலை 400ரூ. தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள தொழில் வளர்ச்சி பற்றி நுட்பமாகவும், ஆழமாகவும் விவரிக்கும் புத்தகம். டி.வி.எஸ். குழுமம், முருகப்பா குழுமம், இந்தியா சிமெண்ட், ஸ்ரீராம் குழுமம், சன்டிவி, அப்பல்லோ மருத்துவமனை முதலியவற்றின் வரலாற்றையும், சாதனைகளையும் சுசீலா ரவிந்திரநாத் ஆங்கிலத்தில் எழுதியதை, எஸ்.கிருஷ்ணன் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை அறிந்துகொள்ள விரும்புவோருக்கு மட்டும் அல்ல, புதிதாக தொழில் தொடங்கி சாதனை படைக்க விரும்புவோருக்கும் இது பயனுள்ள கையேடு. நன்றி: தினத்தந்தி, 27/9/2017.

Read more

பாயும் தமிழகம் – தமிழகத் தொழில்துறை வளர்ச்சியின் வரலாறு

பாயும் தமிழகம் – தமிழகத் தொழில்துறை வளர்ச்சியின் வரலாறு, சுசிலா ரவீந்திரநாத், தமிழில்: எஸ்.கிருஷ்ணன், கிழக்கு பதிப்பகம், பக்.408, விலை ரூ.400. தமிழகத் தொழில்துறை வளர்ச்சியை விவரிக்கும் ஆவணமாக இந்நூல் மலர்ந்திருக்கிறது. தமிழகத்தின் ஆரம்பகாலத் தொழில்நிறுவனங்களான முருகப்பா குழுமம், டிவிஎஸ் குழுமம், அமால்கமேஷன்ஸ் குழுமம், எம்ஆர்ஃஎப், இந்தியா சிமெண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் தொடக்கம், வளர்ச்சி, அவற்றின் இன்றைய நிலை வரை இந்நூல் விவரிக்கிறது. தொழிலைத் தொடங்கியவர்களின் பின்புலம், அதற்காக தொழில்முனைவோர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் கூறப்பட்டுள்ளன. அதற்குப் பின்பு ஸ்ரீராம் குழுமம், அப்பல்லோ மருத்துவமனை, […]

Read more

கரன்சிகாலனி

கரன்சிகாலனி, ந. இளங்கோவன், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், விலை 70ரூ. எந்தத் தொழிலிலும் வெற்றி பெறுவதற்கு அறிவு அவசியமா? புத்திசாலித்தனமா? என்றால் அறிவை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவதில்தான் வெற்றி இருக்கிறது என்பார்கள். அறிவை புத்திசாலித்தனமாக எப்படி பயன்படுத்திக் கொள்வது, அதன் மூலம் எப்படி வெற்றி பெறுவது என்பதற்கான வழிமுறைகள் அனுபவரீதியாக கதைபோல் சொல்லப்பட்டிருக்கின்றன. நன்றி: குமுதம், 26/7/2017

Read more
1 2 3 4 5 12