எனது வாய்மொழி பதிவுகள்

எனது வாய்மொழி பதிவுகள், கி. ராஜநாராயணன், அன்னம், பக்.316, விலை  ரூ. 300. எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் மறைவுக்குப் பிறகு அவருடைய பெயரில், முதல் பதிப்பாக வெளிவரும் கி.ரா.வின் புத்தம் புதிய நூல் என்ற அறிமுகத்துடன், வெளிவந்துள்ள புத்தகம் இது. எனது வாய்மொழி பதிவுகள் என்பதாகத் தலைப்பிடப்பட்டாலும் வெவ்வேறு காலகட்டங்களில் கி.ரா. அளித்த நேர்காணல்களின் தொகுப்புதான் இந்த நூல், எழுத்தாளர் கழனியூரன் தொகுத்தவை (கழனியூரனும் காலமாகிவிட்டார்). விலாவாரியாகச் சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பில் கேட்கப்படுகிற கேள்விகளுக்குக் கூட மிகக் கூராக, ஒற்றை வரியில் பதிலளிப்பதில் […]

Read more

சாளரம் 2018

சாளரம் 2018, வைகறைவாணன், சாளரம், விலை 190ரூ. க.திருநாவுக்கரசுவின் ஆய்வுப் பயணம் கட்டுரைகள், நேர்காணல்கள், படைப்பிலக்கியங்கள் உள்ளடக்கிய பெருந்தொகுப்பை ஆண்டுதோறும் வெளியிடுகிறார் ‘சாளரம்’ வைகறைவாணன். 2018 தொகுப்பின் முக்கிய அம்சம், திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசுவின் வாழ்க்கைப் பயணத்தையும் அரசியல் பயணத்தையும் ஆவணப்படுத்தியிருக்கும் அவரது விரிவான நேர்காணல். நக்சல்பாரி இயக்கத்தின் 50-ம் ஆண்டையொட்டி தியாகு எழுதியுள்ள கட்டுரையும், சாரு மஜும்தாரின் மகன் அபிஜித் நேர்காணலும் இடம்பெற்றுள்ளன. தமிழ்த் தேசியம், யாழ்ப்பாண புலமைத்துவ மரபு குறித்த கா.சிவத்தம்பியின் கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை. நன்றி: தி இந்து,8/9/2018. இந்தப் […]

Read more

சுபமங்களா நேர்காணல்கள் – கலைஞர் முதல் கலாப்ரியா வரை

சுபமங்களா நேர்காணல்கள் – கலைஞர் முதல் கலாப்ரியா வரை, தொகுப்பாசிரியர்: இளையபாரதி, வ.உ.சி. நூலகம், பக்.624, விலை ரூ.600. ‘சுபமங்களா‘ இதழில் வெளியான நேர்காணல்களின் தொகுப்பான இந்நூலில் எழுத்தாளர்கள், ஓவியக் கலைஞர்கள், திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் ஆகியோரின் நேர்காணல்கள் இடம் பெற்றுள்ளன. கலைஞர் மு.கருணாநிதி நேர்காணல் தொடங்கி, மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர், லா.ச.ராமாமிர்தம், சுந்தர ராமசாமி, தொ.மு.சி.ரகுநாதன், கி.ராஜநாராயணன், சா.கந்தசாமி, கன்னட எழுத்தாளர் யூ.ஆர்.அனந்தமூர்த்தி, வண்ணநிலவன், செ.யோகநாதன், கலாப்ரியா உள்ளிட்ட 38 பிரபலங்களின் நேர்காணல்கள் இடம் பெற்றுள்ளன. கலைஞரின் தந்தை முத்துவேலரே சிறந்த […]

Read more

என் பெயர் கதை சொல்லி 1

என் பெயர் கதை சொல்லி 1, ரா.அருள் வளன் அரசு, வசந்தா பதிப்பகம், விலை 120ரூ. உரையாடல் தொகுப்பு காவேரி தொலைக்காட்சியில் ஊடகவியலாளர் ரா.அருள் வளன் அரசு நிகழ்த்திய பதினைந்து ஆளுமைகளுடனான சந்திப்பின் எழுத்து வடிவ தொகுப்பு நூல் இது. கவிஞர் மனுஷ்யபுத்திரன், சல்மா, மனுஷி, நெல்லை ஜெயந்தா, பத்திரிகையாளர் ரவி பிரகாஷ், எழுத்தாளர்கள், ஜோ.டி.குரூஸ், பாஸ்கர் சக்தி, ரமேஷ் வைத்தியா, நா.முத்துக்குமார், பேச்சாளர் சுந்தரவல்லி எனப் பல்வேறுபட்ட ஆளுமைகளின் உரையாடல்கள் சுருக்கமாகவும் சுவாரஸ்யமாகவும் தொகுக்கப்பட்டுள்ளன. கவிஞர் நெல்லை ஜெயந்தாவின் நேர்காணலில் கலைஞர் கருணாநிதியுடன் […]

Read more

இந்திய சீனப் போர்

இந்திய சீனப் போர், நெவில் மாக்ஸ்வெல், தமிழில்: ஜனனி ரமேஷ், கிழக்கு பதிப்பகம்,  பக்.416, விலை ரூ.350. 1962 அக்டோபர் – நவம்பர் மாதங்களில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் எல்லைப் பிரச்னையின் காரணமாக போர் நடந்தது. போருக்கு முன்பும், போரின்போதும், அதற்குப் பிறகும் நடந்தவை பற்றி, தான் செய்தியாளராக வேலை செய்த ‘தி டைம்ஸ்’ நாளிதழுக்கு நிறைய எழுதி அனுப்பினார் நூலாசிரியர். போர் முடிந்த பிறகு, இந்திய – சீன அரசுகளிடம் இருந்து கிடைத்த, திரட்டிய தகவல்களின் அடிப்படையிலும், இருநாடுகளின் பிரமுகர்களிடம் எடுத்த நேர்காணல்களின் அடிப்படையிலும் […]

Read more

செவ்வி

செவ்வி, பேராசிரியர் தொ. பரமசிவன் நேர்காணல்கள், கலப்பை பதிப்பகம், விலை 130ரூ. ‘தமிழர்களுடைய மரபுவழி அறிவுத்தொகுதியினை உரையாடல் மரபிலும், அதன் உள்ளீடாக விளங்கும் பழமொழிகள், சொல் அடைகள், கதைகள், சடங்குகள் இவற்றின் வழியாகவே மீட்டெடுக்க முடியும்’ என்று சொல்லும் பேராசிரியர் தொ.பரமசிவனின் 11 நேர்காணல்கள் நூலாக்கம் பெற்றுள்ளன. ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது மக்கள் விரோதச் சித்தாந்தம்’, ‘சாதிகள் உண்மையுமல்ல… பொய்யுமல்ல…’, ‘தொல்தமிழர்களின் சுற்றுச்சூழல் அறிவியல்’ என நேர்காணல்களின் தலைப்புகளே தொ.ப.-வின் கருத்துறுதியை நிரூபிக்கும் வகையில் உள்ளன. நன்றி: தி இந்து, 12/8/2017.

Read more

மறுதுறை மூட்டம் (நாகார்ஜுனன் நேர்காணல்)

மறுதுறை மூட்டம், (நாகார்ஜுனன் நேர்காணல்), நேர்காணல் : எஸ். சண்முகம், நெறியாள்கை: முபின் சாதிகா, கலைஞன் பதிப்பகம், விலை 180ரூ. தமிழில் பின்நவீனத்துவம் காட்டிய எழுத்துக்களில், அதை அடையாளப்படுத்தியதில் நாகார்ஜுனனுக்கு பெரும் இடம் உண்டு. அவரது முழு நேர்காணலின் மூலம் துடிப்பும், அக்கறையும், பரந்துபட்ட அறிவும், சொல்லாடலின் செழுமையும் இந்த நூல் முழுமையும் பரவிக்கிடக்கிறது. ஒவ்வொரு பிரச்னையிலும் அவர் கருத்து வைக்கும் இடம் ஆழ்ந்த சிந்தனைக்குரியது. நாகார்ஜுனனின் வற்றாத உழைப்பும், மிகையற்ற மதிப்பீடுகளும், அகந்தையற்ற மனமும், மனிதநேய இழைவும் மிகவும் முக்கியமானவைகளாக இந்த நூலில் […]

Read more

வினாடிக்கு 24 பொய்கள்

வினாடிக்கு 24 பொய்கள், இயக்குனர் மிஷ்கின், எஸ். தினேஷ், பேசாமொழி வெளியீடு, பக். 102, விலை 100ரூ. சினிமா பார்த்து சினிமாவை பற்றி தெரிந்து கொள்ளலாம். ஆனால், அது சார்ந்த புத்தகங்களை படித்து தான், சினிமாவை புரிந்து கொள்ள முடியும். சினிமா என்பது, இயக்குனரின் ஒரு பார்வை மட்டுமே. புத்தகங்கள் தான், சினிமா சார்ந்த இரண்டாயிரம் பார்வைகளை கொடுக்க வல்லது’ என்பது, எஸ்.தினேஷின் ஒரு கேள்விக்கு, மிஷ்கின் அளித்த பதிலின், ஒரு பகுதியாக வருகிறது. இவ்வாறு, சினிமா பற்றிய மிஷ்கினின் பார்வையை வாசகர் முன் […]

Read more

செவ்வி

செவ்வி, பேரா. தொ. பரமசிவன் நேர்காணல்கள், கலப்பை பதிப்பகம், விலை 130ரூ. ஏறக்குறைய நாற்பதாண்டுகளுக்கும் மேலாக தமிழ்ப்பரப்பில் அறிவார்த்தமாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும், சரியாகவும் இயங்கிக் கொண்டிருக்கிறார் பேராசிரியர் தொ. பரமசிவன். மரபின் வேர் பிடித்து நம்மை அழைத்துச் செல்பவர். அவரின் 14 நேர்காணல்கள் இடம்பெற்ற தொகுதி இது. 144 பக்கங்களுக்குற் செறிந்த உலகத்திற்குச் செல்வது சாத்தியமாகிறத, நம்முன்னோர்கள், சாதிகள், திராவிடக் கருத்தியல், தமிழர் பண்பாடு, பகுத்தறிவு, சீர்திருத்தம், தமிழ் தேசியம் என பரந்துபட்ட பரப்பிற்குள் மூழ்கி எழுகிற எத்தனிப்பு. மேலோட்டமாக எதையும் பார்த்துப் பழகிய கண்களுக்கு […]

Read more