என்னை அடைத்(ந்)த அதிர்ஷ்டம்

என்னை அடைத்(ந்)த அதிர்ஷ்டம்,  எழுத்திலிருந்து எழுத்தாளரானது – ஆங்கிலத்தில்: ஆங்கிலத்தில் விஜய் சந்தானம், தமிழில் வாஷிங்டன் ஸ்ரீதர், கலைமகள் பப்ளிகேஷன்ஸ், பக்.144, விலை ரூ.120. நூலாசிரியர் தமிழின் புகழ்பெற்ற எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் கா.ஸ்ரீ.ஸ்ரீ – இன் பேரன். 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதி, நூலாசிரியருக்கு மூளைவாதத் தாக்குதல் ஏற்பட்டது. அதனால் மூளையின் இடது பக்கம் பாதிக்கப்பட்டு, வலது கை, கால் செயலற்றுப் போய்விடுகிறது. பேச முடியவில்லை. எண், எழுத்து எதுவும் நினைவிலில்லை. பிறந்த குழந்தையைப் போல புதிதாக எல்லாவற்றையும் […]

Read more

இமயத்தில் புலி

இமயத்தில் புலி, தமிழில் சக்திதாசன் சுப்பிரமணியன், வேலா வெளியீட்டகம், விலை 100 ரூ. 1953ஆம் ஆண்டு மே மாதம் 29ஆம் தேதி வரலாற்றில் இடம்பெறத்தக்க முக்கிய நிகழ்ச்சி நடந்தது. அது வரை எவரும் அடைந்திராத உலகத்திலேயே மிக உயரமான இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை 29 ஆயிரத்து 28 அடி டென்சிங் ஹில்லரி ஆகிய இருவரும் அடைந்தனர், டென்சிங் நேபாளத்தையும், ஹில்லரி நியூசிலாந்து நாட்டையும் சேர்ந்தவர்கள், டென்சிங் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை இப்போது எழுதியுள்ளார். அதை சக்திதாசன் சுப்பிரமணியன் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். புத்தகத்தை படிக்கும்போது […]

Read more

இவனன்றோ என் நண்பன்

இவனன்றோ என் நண்பன், சூ.குழந்தைசாமி, காந்தி அமைதி நிறுவனம், பக்.72, விலை ரூ.20. காந்திய நெறி பரப்பும் பணியில் தனது இளமைக்காலம் முதல் ஈடுபட்டு வரும் நூலாசிரியர், தனது வாழ்வில் நடந்த பல சுவையான நிகழ்ச்சிகளை இந்நூலில் தொகுத்து வழங்கியிருக்கிறார். சிறுவயதில் ஒன்றுக்கும் உதவாதவராக இருந்த அவர் 21 வயதில் ஒரு 52 வயது நண்பரைச் சந்திக்கிறார். அவர் டி.டி.திருமலை. அவரைச் சந்தித்த நாள் முதல் அவரின் வழிகாட்டலில் தனது வாழ்க்கை எவ்வாறு நல்லவிதமாக மலர்ந்தது என்பதை பல நிகழ்வுகள் மூலம் மிகவும் சுவையாக […]

Read more

ஒரு துணை வேந்தரின் கதை

ஒரு துணை வேந்தரின் கதை, டாக்டர் சே. சாதிக், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், பாகம் 1, விலை 400ரூ, பாகம் 2, விலை 350ரூ. நிறைய வேலை – குறைய வேலை என்பது என் ஏட்டில் இருந்ததில்லை – இப்போதும் இல்லை. என்னிடம் இருப்பதெல்லாம், ‘வேலை’ என்பது தான். வேலையை வேலை என்று பார்த்தால் அது ஒரு பாரம், பளு. வேலையையும் விளையாட்டாக எடுத்துக் கொண்டால் அங்கே வேதனை இருப்பதில்லை. வேகம் வரும். அது மகிழ்ச்சி தரும். ஒரு ஆத்ம திருப்தி மலரும். இதுவே என் […]

Read more

நானும் சினிமாவும்

நானும் சினிமாவும், ஏவி.எம். சரவணன், தினத்தந்தி பதிப்பகம், பக்.416, விலை ரூ.250. திரைப்படத் தயாரிப்பாளர் ஏவி.எம். சரவணனின் 60 ஆண்டு கால திரையுலக அனுபவங்களுடன் அவருடைய வாழ்க்கை வரலாறும் பின்னிப் பிணைந்திருக்கிறது. ஒரு மகா விருட்சம் அதன் ஆணிவேரிலிருந்து தொடங்குவதைப் போல், தன் தந்தையார் ஏவி.மெய்யப்பனின் குழந்தைப் பருவத்திலிருந்து இந்த நூலைத் தொடங்கியிருப்பது சிறப்பு. திரையுலகில் சகாப்தம் படைத்த ஏவி.எம். நிறுவனம் உதயமானது முதல், அந்நிறுவனத்தின் தயாரிப்பில் ஒவ்வொரு படத்திலும் கிடைத்த விதவிதமான அனுபவங்களின் தொகுப்பு, விறுவிறுப்பானதொரு நாவலைப் படிக்கும் உணர்வை ஏற்படுத்துகிறது. முதல் […]

Read more

நூலகத்தால் உயர்ந்தேன்

நூலகத்தால் உயர்ந்தேன், கோ.மோகனரங்கன், வசந்தா பதிப்பகம், பக்.1096, விலை ரூ.1200. எழுபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி தமிழ் எழுத்துலகில் தனது பெயரை அழுத்தமாகப் பதிவு செய்திருப்பவர் இந்நூலின் ஆசிரியர். அவர் தனது இளமைப் பருவத்திலிருந்தே நூல்களின் மீது அளப்பரிய காதல் கொண்டவராக இருந்திருக்கிறார். பத்தாவது படிக்கும்போது பகல் உணவுக்காக அவருடைய தந்தை தந்த நான்காணாவில் மீதம் பிடித்து, பழைய நூல்களை வாங்கிப் படித்திருக்கிறார். சென்னை பல்லாவரத்தில் இருந்த கார்டன் உட்ராப் தோல் தொழிற்சாலையில் 1959 ஆம் ஆண்டு நாள் கூலி இரண்டு ரூபாய் கிடைத்த வேலையை […]

Read more

நூலகத்தால் உயர்ந்தேன்

நூலகத்தால் உயர்ந்தேன், முனைவர் ஆலந்தூர் கோ.மோகனரங்கம், வசந்தா பதிப்பகம், விலை 1200ரூ. தமிழ்நாட்டில், நூலகத்துறை வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டவர் முனைவர் ஆலந்தூர் கோ.மோகனரங்கம். கவிஞராகவும், எழுத்தாளராகவும் அறியப்பட்டவர் மோகனரங்கம். அவர் தனது வாழ்க்கை வரலாற்றை “நூலகத்தால் உயர்ந்தேன்” என்ற தலைப்பில் எழுதியுள்ளார். காரணம், தனது வாழ்க்கையின் பெரும் பகுதியை நூலகங்களில் கழித்திருக்கிறார். நூலில் ஏராளமான தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் பற்றிய விவரங்களையும் விரிவாக எழுதியுள்ளார். எனவே, இந்த நூல் மூலம் ஒருவருடைய வாழ்க்கையைப் பற்றி மட்டுமல்ல, பலருடைய வாழ்க்கையைப் பற்றி அறிய முடிகிறது. குறிப்பிட்டுச் சொன்னால், […]

Read more

வெற்றியின் ரகசியம்

வெற்றியின் ரகசியம், சிந்தை ஜெயராமன், வினோத் பதிப்பகம், விலை 299ரூ. சாதாரணக் குடும்பத்தில் பிறந்து பல சோதனைகளை வென்று சாதனை படைத்தவரின் அனுபவப் பாடம். குழந்தைகளுக்கான பள்ளிக் கல்வி முறை எப்படியெல்லாம் இருந்தால் அவர்களின் அறிவுத் திறன் வளரும் என்பதற்கான யோசனைகள் வித்தியாசமானவை, வரவேற்கத்தக்கவை. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818 நன்றி: குமுதம் 2/5/2018.

Read more

என்னை நான் சந்தித்தேன்

என்னை நான் சந்தித்தேன், ராஜேஷ்குமார், அமராவதி, விலை 390ரூ. 1500 நாவல்களுக்கும், 2000 சிறுகதைகளும் எழுதி சாதனை படைத்தவர் எழுத்தாளர் ராஜேஷ்குமார். கிரைம் கதைகள் எழுதுவதில் மன்னர். அவர் தன் அனுபவங்களைப் பற்றி எழுதிய புத்தகம்தான் “என்னை நான் சந்தித்தேன்”, பெரும்பாலான வாழ்க்கை வரலாறு நூல்கள் சுவையாக அமைவது இல்லை. இந்தப் புத்தகம் அதற்கு விதிவிலக்கு. அவருடைய நாவல்கள் போல் இதுவும் விறுவிறுப்பாக அமைந்துள்ளது. ஆரம்ப காலத்தில் சினிமாக்காரர்களிடம் மாட்டிக்கொண்டு இவர் பட்ட அவஸ்தையை நகைச்சுவையுடன் எழுதி, நம்மை சிரிக்க வைக்கிறார். எல்லோருக்கும் பிடிக்கக்கூடிய […]

Read more

அவரும் நானும்

அவரும் நானும், துர்கா ஸ்டாலின், உயிர்மை பதிப்பகம், விலை800ரூ. ஒவ்வொரு ஆண் மகனின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்பார்கள். அதேபோன்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெற்றிக்கு பின்னால் அவருடைய மனைவி துர்கா ஸ்டாலின் இருப்பதை இந்த நூல் ஊர்ஜிதப்படுத்துகிறது. மனைவி சிறப்பாக இருந்தால் வீடு சிறப்பு பெறும் என்ற வள்ளுவரின் வாக்கிற்கு இணங்க வாழ்ந்து வரும் நூலாசிரியரின் மறக்க முடியாத மனப்பதிவுகளை அபூர்வ புகைப்படங்களுடன் இந்த நூல் சித்தரிக்கிறது. ஒரு அரசியல் குடும்பம் எதிர்கொள்ளக் கூடிய நெருக்கடிகள், சவால்கள், சோதனையான […]

Read more
1 2 3 4 5 11