காலங்களில் அவள் வசந்தம்

காலங்களில் அவள் வசந்தம், காஞ்சி பாலச்சந்திரன், பானு பாலா பதிப்பகம், விலைரூ.250. இரு நாவல்களை உள்ளடக்கிய நுால். படிப்பவர்களின் மனதில் தத்ரூபமாக காட்சிகளை கொண்டு சேர்க்கின்றன. முழுதும் படித்து விட வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் அளவிற்கு கதைகள் அமைந்துள்ளன. கேசவன், கமலா, மஞ்சரி என்னும் கதாபாத்திரங்கள், காலங்களில் அவள் வசந்தம் என்னும் நாவலின் உயிரோட்டமாக அமைந்துள்ளன. இரண்டாம் நாவலான, ‘பூர்ணிமா’வில் பெண்ணின் வாழ்க்கை கதையும், ஏன் சிறைக்கு சென்றாள் என்பதையும் எடுத்துரைக்கிறது. – வி.விஷ்வா நன்றி: தினமலர்.24/10/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

உலகப் புகழ் பெற்ற நாவல்கள்

உலகப் புகழ் பெற்ற நாவல்கள், முல்லை பி.எல். முத்தையா, முல்லை பதிப்பகம், விலைரூ.700 உலகப் புகழ் பெற்ற ஆறு நாவல்களின் தொகுப்பு நுால். ரஷ்ய எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி எழுதிய அம்மா, லியோ டால்ஸ்டாய் எழுதிய அன்னா கரீனினா, தாஸ்தாவ்ஸ்கி எழுதிய குற்றமும் தண்டனையும், அலெக்சாண்டர் டூமாஸ் எழுதிய ஜூனியர் வாடாமல்லிகை, எமிலி ஜோலா எழுதிய நானா, ஜேம்ஸ் ஆஸ்டின் எழுதிய ஐந்து சகோதரிகள் ஆகிய நாவல்கள் ஒரே தொகுப்பில் அடக்கப்பட்டுள்ளன. எளிய நடையில் நாவல்கள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இல்லத்திலும் இருக்க வேண்டிய மிகச் […]

Read more

வாழ்வரசி

வாழ்வரசி, அப்துற் – றஹீம், யூனிவர்சல் பப்ளிஷர்ஸ், விலைரூ.140 சீன எழுத்தாளர் படைத்த நாவலின் தமிழாக்கம் தான் வாழ்வரசி. மூன்று தலைமுறைக்கு உட்பட்ட சீன மருத்துவத்தையும், மக்கள் வாழ்வியலையும் உள்ளது உள்ளபடி எடுத்துரைக்கிறது. வாங் – குங் என்னும் மூன்று தலைமுறைக்கு முன்னால் வாழ்ந்த சீன மருத்துவருக்கும், அவரது பேத்தியான சியோ – சென் என்னும் மருத்துவருக்கும் இடையே உள்ள இடைவெளியை எடுத்துக்காட்டுகிறது. பழைமையும், புதுமையும் கைகோர்த்து நிற்பதாக நாவல் நிறைவடைகிறது. சீனாவில் படைப்பிலக்கியம் எவ்வாறு இருக்கிறது என்பதை உணர்த்துகிறது. எளிய தமிழ் நடையில் […]

Read more

காந்தியின் பொம்மை

காந்தியின் பொம்மை, குறிஞ்சி ஞான.வைத்தியநாதன், நிவேதிதா பதிப்பகம், விலைரூ.150. சிறுவர்கள் உள்ளத்தில் நல்ல பண்புகளை வளர்த்து, தீயவற்றை விலக்கி, எதிர்த்து போராட துாண்டும் நாவல். பள்ளி நண்பர்கள் கோடை விடுமுறை முடிந்து பள்ளி செல்லும்போது, வழியில் ஒரு கிளியை பாம்பு சாப்பிட முயல்வதை பார்க்கின்றனர். பாம்பிடம் இருந்து கிளியை காப்பாற்றி, பள்ளி நோக்கி புறப்பட்டால் நேரம் கடந்து விடுகிறது. தலைமையாசிரியரின் அன்பை பெறுகின்றனர். ஒரு கொலையை பார்த்தால் சிறுவர்களுக்கும் ஏற்படும் அச்சம், விசாரணை, போராட்ட குணம் என பரபரப்பாக செல்கிறது. – ராயன் நன்றி: […]

Read more

அபிதா

அபிதா, லா.ச. ராமாமிருதம், அர்ஜித் பதிப்பகம், விலைரூ.60. காட்சிகளையும், மன உருக்கத்தையும் முன்னிலைப் படுத்தி எழுதப்பட்டுள்ள நாவல். அம்பிகையை பல நாமங்களில் வியந்து, அடைந்துவிடத் துடிக்கும் வர்ணனையுடன் கூடியது. சம்பவங்களை அல்ல, காட்சிகளையே நாவல் கண்முன் விரிக்கிறது. வழக்கமான கதை படிப்பது போல் அல்லாமல், நுட்மான ஆன்மிக அனுபவத்தை தரவல்லது. இயற்கையோடான பயணத்தை வண்ணமயமாக காட்சிப்படுத்துகிறது. நெகிழ்வுகளுடன் வாசித்து உருக ஏற்ற வகையில் எழுதப்பட்டுள்ள வித்தியாசமான நுால். – மலர் நன்றி: தினமலர், 30/1/22. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more

வானத்தில் கோலமிட்டு

வானத்தில் கோலமிட்டு, ராஜேஷ்குமார், வெளியீடு: அமராவதி, விலை – ரூ.120. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமார் எழுதிய ‘வானத்தில் கோலமிட்டு’, ‘உன் கண்னில் நூறு நிலா’ ஆகிய இரண்டு நாவல்களும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. இரண்டு நாவல்களும் அவை வெளியான காலத்தில் அதிக வாசகர்களைச் சென்றடைந்தவை. நன்றி: தமிழ் இந்து, 12/2/21. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b2%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

பனையடி

பனையடி, இரா.செல்வம், என்.சி.பி.எச். வெளியீடு, விலை: ரூ.200. அபுனைவில் தொடங்கிய நாவலாசிரியர் இரா. செல்வத்தின் எழுத்து வாழ்க்கை புனைவில் பூரணம் பெற்றுள்ளது. ஆனால், இந்த நாவல் முழுவதுமே புனைவு என்றும் கொண்டுவிடலாகாது. பெயர்களும் இடங்களும் சம்பவங்களும் கருத்துகளும் மாற்றிவைக்கப் பட்டிருக்கலாம். ஒரு நாவலில் தன்வரலாற்றுத் தன்மைகள் இடம்பெறுவது குற்றம் அல்ல. வாசிப்பு ஈர்ப்பைக் கருத்தில் கொண்டு ஆடம்பரமும் அலங்காரமும் இல்லாத எளிய சொற்றொடர்களால் முழு நாவலுமே கட்டமைக்கப்பெற்றுள்ளது. சொந்த அனுபவங்களின் வலுவில் தனது இளம் பருவத்து வாழ்க்கையை புனைவாக்க முயன்றிருக்கிறார் நாவலாசிரியர். அந்த அனுபவப் […]

Read more

வாழ்வியல் மாற்றம்

வாழ்வியல் மாற்றம், சி.வீரரகு, சத்தியா பதிப்பகம், விலைரூ.100. மாற்றங்களை எதிர்கொள்ள தயாராக இருக்க மனதைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற முன்னுரையுடன் துவங்கும் புதின நுால். வாழ்வியல் மாற்றம், பாரதவிலாஸ், தயாளன் கமலா, கமலாவின் தவிப்பு, பால் விற்பனை செய்பவள், கணவனால் கைவிடப்பட்ட குடும்பம், குருக்கள் குடும்பம், சென்னையில் கமலத்திற்கு வேலை, தயாளன் வேலை, சொந்தவேலையில் தயாளன் கமலம், தயாளன் மஞ்சுளா பஞ்சாயத்துத் தலைவி கமலாவின் பிரமிப்பு, மீண்டும் தயாளனும் கமலாவும் என்ற தலைப்புகளில் மிக எளிமையாக எடுத்துச் செல்கிறது. – ராமலிங்கம் நன்றி: […]

Read more

ஆறங்கம்

ஆறங்கம் (அரசியல் நாவல்), ஆர். நடராஜன், ஆதாரம்வெளியீடு, பக்.208, விலை குறிப்பிடப்படவில்லை; அரசியல் உலகில் ஜாம்பவான்களாக வலம் வந்த ஒவ்வொருவரும், அரசியல் – அரசியல்வாதிகள் குறித்த அவர்களின் பார்வையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அதேபோல சாமானியர்களும் நகைச்சுவையாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அவையெல்லாம் இந்நூலுக்கு வலு சேர்த்திருக்கின்றன. நாட்டை ஆளும் தலைவனுக்கு (அரசர்) தேவையான ஆறு உறுப்புகள் என்று சொல்லக்கூடிய படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் ஆகியவற்றையும், ஆறு வேதாங்கங்களையும் சுற்றி நூல் அமைக்கப்பட்டிருக்கிறது. அதனால் தானோ என்னவோ இந்நூலுக்கு ஆறங்கம் என்று பெயர் சூட்டியிருக்கிறார் […]

Read more

மாறியது நெஞ்சம் மாற்றியது யாரோ!

மாறியது நெஞ்சம் மாற்றியது யாரோ!, ப.பாலசுப்பிரமணியன், அழகு பதிப்பகம், விலைரூ.90 ஆணவக் கொலைகளை கொலை செய்ய, வாளை துாக்குவது போல் வந்துள்ள நாவல். நாவலை நடத்திச் செல்லும் போது, இந்தியாவில் நடந்த ஆணவக் கொலைகளை பட்டியல் இட்டு ரத்தக் கண்ணீர் வர வைக்கிறார். ஆணவக் கொலை செய்ய நினைக்கும் ஒருவரின் மனதை மாற்ற, பத்திரிகையாளர் முயற்சி எடுக்கிறார். ஆணவக் கொலை செய்து, துாக்குத் தண்டனைக்கு காத்திருக்கும் கைதியை சந்திக்க வைக்கிறார். அந்த கைதி ஆணவக் கொலையின் கேடுகளை விளக்க, மனம் மாறி இளம் ஜோடிக்கு […]

Read more
1 2 3 4 66