இயற்கை விவசாயமும் பெண்களின் பங்கும்

இயற்கை விவசாயமும் பெண்களின் பங்கும், காந்தலட்சுமி சந்திரமவுலி, செங்கை பதிப்பகம், பக். 248, விலை 150ரூ. ‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர்…’ என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கு ஏற்ப, உழவுத் தொழிலின் மேன்மை குறித்தும், இயற்கை விவசாயம் குறித்தும் இந்நூல் பல புதிய செய்திகளை தருகிறது. நாம் உண்ணும் உணவிற்குப் பின்னால் பெயர் தெரியாத பலரின் அரிய சக்தியும், உழைப்பும் இருப்பதை இந்நூல் விளக்குகிறது. 18ம் நூற்றாண்டில் செயற்கை உரம் தயாரிக்கப்பட்டதன் சூழ்நிலை குறித்தும் (பக். 27), விவசாயம் செய்வதில் பெண்களின் பங்கு இன்றியமையாதது என்றும், ‘விவசாயம் […]

Read more

மறக்கப்பட்ட பெண் விஞ்ஞானிகள்

மறக்கப்பட்ட பெண் விஞ்ஞானிகள், பேரா.சோ.மோகனா, அறிவியல் வெளியீடு, விலை 40ரூ. பெண்களின் பங்களிப்பு வரலாற்றில் காலங்காலமாக இருட்டடிப்பு செய்யப்பட்டே வந்திருக்கிறது. ஆனால், இன்றைக்குப் பல துறைகளிலும் பெண்களின் குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்தச் சூழலில், புற்றுநோய் தாக்குதலிலிருந்து உத்வேகத்துடன் மீண்டெழுந்த பேராசிரியர் மோகனா, இதுவரை பரவலான கவனிப்பைப் பெறாமல் போன 10 பெண் விஞ்ஞானிகளைப் பற்றி இந்நூலின் வழியே அறியத்தருகிறார். பழங்காலப் பெண் கணிதவியலாளர்கள் தொடங்கி, மேரி ஆன்னிங், சாவித்திரிபாய் புலே, கமலா சோகோனி உள்ளிட்ட ஆளுமைகளின் செயலூக்கம், வாசிக்கையில் நமக்கும் தொற்றிக்கொள்கிறது. […]

Read more

ஆண்கள் படைப்பில் பெண்கள்

ஆண்கள் படைப்பில் பெண்கள், சு. ஜெயசீலா, காவ்யா, பக். 134, விலை 130ரூ. நாவல்களில் பெண்கள் ஆண் எழுத்தாளர்களால் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை ஆராயும் நூல். கு. அழகிரிசாமி, ஐசக் அருமை ராஜன், சு. சமுத்திரம், பொன்னீலன், மேலாண்மை பொன்னுச்சாமி உள்ளிட்ட 16 புதினங்களில் பெண்கள் பழமைக்கும் புதுமைக்கும் இடையே போராடுவதை இந்நூல் வெளிக்காட்டுகிறது. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 21/6/2017.

Read more

கர்ப்ப வித்யா

கர்ப்ப வித்யா, ஆண்டாள் பாஸ்கர், ஆண்டாள்ஸ் லக்ஷ்மி ஃபெர்டிலிட்டி ரிசர்ச், பக்.192, விலை ரூ.250. குழந்தைகள் பிறந்தவுடன்தான் அவர்களுக்கு அறிவு, மனவளர்ச்சி ஏற்படும் என்பதில்லை, அவர்கள் கருவிலிருக்கும்போதே அவற்றைப் பெறுகிறார்கள் என்ற அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. வயிற்றில் உள்ள குழந்தையுடன் தாய் பேசுவதால், அது குழந்தையின் சீரான வளர்ச்சிக்கு உதவுகிறது. அதுமட்டுமல்ல, கர்ப்பிணி பெண்ணின் உடல், மனம், புலன்கள், உணர்வுகள் ஆகிய நான்கையும் சமநிலையில் வைக்க முடியும் என்று கூறும் நூலாசிரியர், கருவிலிருக்கும் குழந்தையுடன் தாய் எவ்வாறு பேச வேண்டும் என்பதையும் விளக்கியுள்ளார். கருவிலிருக்கும் […]

Read more

பெண்ணாகப் பிறந்தாலே

பெண்ணாகப் பிறந்தாலே, ச.அமுதா, இராசகுணா பதிப்பகம், பக்.168, விலை ரூ.130. இன்றைய நவீன யுகத்திலும் ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் வாழ முடியாமல் இருப்பதைக் கண்டு மனம் வெதும்பி , இந்நிலையை எவ்வாறு மாற்றுவது என்ற நோக்கில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பிறப்பதற்கு உரிமை வேண்டும்#39; என்ற முதல் கட்டுரை ‘பெண் சிசுக்கொலை‘39; நீண்டகாலமாக இருப்பதையும், இன்றும் அது தொடர்வதையும் விவரிக்கிறது. வளர் இளம் பருவத்தில் பெண்கள் சந்திக்க நேரும் பிரச்னைகள், அவர்கள் மீதான வன்கொடுமைகள், சமுதாயத்தில் பெண்களைக் கீழாக நினைக்கும் மதிப்பீடுகள், மதக் கோட்பாடுகளின் அடிப்படையில் பெண்கள் […]

Read more

பெண்ணுக்கென்ன கொடுமை

பெண்ணுக்கென்ன கொடுமை, இதழாளர் அய்கோ, தனு பதிப்பகம், பக்.112, விலை 90ரூ. மத்திய வர்க்கத்தைச் சேர்ந்த நவீன காலப் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் பற்றியு புதிய கண்ணோட்டத்தை இந்நூல் தருகிறது. அதாவது ஒரு மடங்கு பெண்ணுரிமை கிடைத்தால், இருமடங்கு பெண் கொடுமை நடக்கிறது என்பதை துணிவுடன் வெளிக்காட்டும் நூல். பெண்ணுரிமைத் தளத்தில் இயங்கும் இருபாலருக்கும் இந்நூல் தேவை. நன்றி: குமுதம், 24/5/2017.

Read more

சீனப்பெண்கள்

சீனப்பெண்கள், ஜி.வித்யபாமா, எதிர், விலை 280ரூ. பதினைந்து நீண்ட கட்டுரைகளைக் கொண்டது இந்நூல். அனைத்து தரப்பு பெண்களையும் நேரடியாக சந்தித்து பேட்டி கண்டு, உண்மைச் சம்பவங்களின் தொகுப்பாக வெளியிடப்பட்டு உள்ளது. சீனாவின் அரசியல் மாற்றமும் அதனால், பெண்கள் மீது ஏவப்பட்ட பாலியல் வன்முறைகளையும், பெண் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பாலியல் வன்முறைகள், ஆண் குழந்தைகளுக்கு சீனாவில் கொடுக்கப்படும் முன்னுரிமைகள், சீனாவில் பேசவே தடை செய்யப்பட்ட ஓரினச் சேர்க்கை, சீன சமுகத்திலும், கலாசாரத்திலும் பாலியலின் பங்கு குறித்தும் இந்நூலில் மிக ஆழமாக கூறப்பட்டுள்ளது. கடந்த, 1989 முதல், […]

Read more

ஆடவும் பள்ளுப் பாடவும்

ஆடவும் பள்ளுப் பாடவும், நர்மதா, பாப்லோ பதிப்பகம், பக். 96, விலை 150ரூ. ‘நீயுமா பாரதி… விடுதலையைப் பாட நாங்கள்தான் குனிந்து கும்மியடிக்க வேண்டுமா? என்ற கவிதைகளின் வரிகளிலேயே இக்கவிதைத் தொகுப்பு எதைப் பற்றியது என்பதை உணர்த்திவிடுகிறது. பெண், பெண்ணியம், பெண் விடுதலை, பெண் உரிமை இவற்றின் தேவைகளும், கட்டாயமும் என்பது போன்ற உணர்வை ஊட்டும் கவிதைகள் இவை. நன்றி: குமுதம், 3/5/2017

Read more

பெண்களுக்காக

பெண்களுக்காக, அர்ச்சனா நடராஜன், கண்ணப்பன் பதிப்பகம், பக். 336, விலை 200ரூ. டீன் – ஏஜ் பெண்கள் முதல் வயதான பெண்கள் வரை, அவர்களுக்கு உதவும் வகையில் மருத்துவம், மாதவிடாய், உள்ளிட்டப பெண்கள் பிரச்னைகள், கர்ப்பகால டிப்ஸ்கள், குழந்தைப் பராமரிப்பு, குடும்ப பராமரிப்பு, தொடர்ந்து வீட்டுத்தோட்டம் அமைப்பது வரையான பல அரிய தகவல்களைத் தாங்கி வரும் நூல். நன்றி: குமுதம், 3/5/2017.

Read more

இல்லத்தரசி கையில் உலகம்

இல்லத்தரசி கையில் உலகம், மல்லிகா பலராமன், மணிமேகலைப் பிரசுரம், விலை 110ரூ. ஒரு இல்லத்தரசி எப்படி இருக்க வேண்டும் என்று இலக்கணம் வகுக்கும் நூல். பெண்கள் படிக்க வேண்டிய புத்தகம். திருமணத்தில் மணமக்களுக்கு பரிசளிக்கத் தகுந்த புத்தகம். நன்றி: தினத்தந்தி, 3/5/2017.   —-   மூலிகைகளின் பெயர்கள் பற்றிய அகராதி, டாக்டர் ஜே. ராஜகோபால், கஸ்தூரி பப்ளிகேஷன்ஸ், விலை 1200ரூ. மூலிகைகளுக்கு மொழிவாரியாகப் பல பெயர்கள் உள்ளன. இதனால் ஏற்படும் குழப்பங்களைப் போக்க, மூலிகைகளில் தாவர இனப்பெயர், ஆங்கிலப் பெயர், தமிழ்ப்பெயர், மலையாளப் […]

Read more
1 4 5 6 7 8 14