சீனப் பெண்கள் சொல்லப்படாத கதை

சீனப் பெண்கள் சொல்லப்படாத கதை, சின்ரன், தமிழில் ஜி.விஜயபத்மா, எதிர் வெளியீடு, விலை 280ரூ. பாலியல் வன்புணர்வு, காதல் என சீனாவில் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறைகளை குறித்து வானொலி தொகுப்பாளினியான சின்ரன் தன் நிகழ்ச்சியின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார். ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகும் சீனப் பெண்களின் நிலை குறித்து விரிவாக எழுதப்பட்ட நூல் இது. நன்றி: தி இந்து, 7/1/2018.

Read more

பெண்மை ஒரு வரம்

பெண்மை ஒரு வரம், பா.ஜோதி நிர்மலாசாமி, விஜயா பதிப்பகம், பக். 184, விலை 120ரூ. பெண்கள் பற்றிய, 30 தலைப்புகளில் தம் வாழ்வியல் அனுபவங்களை இந்நுாலில் ஆழமாகப் பதிவு செய்துள்ளார் நுாலாசிரியர். பெண்கள் சமூகத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பல கோணங்களில் தம் வாழ்க்கைக்கு அனுபவங்களூடே விளக்கிச் சொல்கிறார். இன்றைய நடைமுறை வாழ்க்கையில் பெண்கள் தம் இருப்பைக் குடும்பச் சூழ்நிலையிலும், வெளியுலகிலும் எவ்வாறெல்லாம் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற நல்ல படிப்பினையைத் தருவதாக இந்நுால் விளங்குகிறது. பெண் உரிமையை நிலைநாட்ட வேண்டியதன் இன்றியமையாமை, […]

Read more

சொல்லி முடியாதவை

சொல்லி முடியாதவை,  ஜெயமோகன், நற்றிணை பதிப்பகம்,  பக். 160, விலை ரூ.180. நூலாசிரியர் தன் நண்பர்கள், வாசகர்களின் வினாக்களுக்கு எழுதிய விடைகளாக அமைந்த 27 கட்டுரைகளின் தொகுப்பு. ஆசாரங்கள் தேவையா? பண்டிகைகளைக் கொண்டாடத்தான் வேண்டுமா? குடும்ப உறவில் ஏன் இத்தனை வன்முறை? தற்கொலை தியாகமாக ஆகுமா? நம் பண்பாட்டுக்கென உடை உண்டா? கற்பு என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது? காதலர் தினக் கொண்டாட்டம் தேவையா? தீபாவளி யாருடையது? உள்ளிட்ட பல கேள்விகள் இடம் பெற்றுள்ளன. நிலத்தில் யார்க்கும் அஞ்சா நெறி கொண்டு தன் வாழ்க்கையைத் தானே […]

Read more

இந்தியாவின் இலட்சிய மகளிர்

இந்தியாவின் இலட்சிய மகளிர், வசந்தநாயகன், ஸ்ரீகுருஇராகவன் பப்ளிகேஷன்ஸ், விலை 50ரூ. மாலவனுக்குத் தொண்டு செய்த ஆண்டாள் முதல் மக்களுக்கு சேவை செய்த மதர் தெரசா, ஜெயலலிதா வரை இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த மங்கையர்கள், பதினேழுபேரின் சுருக்கமான வரலாறு. ஜான்சிராணியின் இயற்பெயர் மணிகர்ணிகா என்பது போன்ற பலருக்கும் தெரியாத தகவல்களும் உண்டு. -ஆர்.நாகராஜன். நன்றி: குமுதம், 3/1/2018

Read more

சாதனை மலர்கள்

சாதனை மலர்கள், தொகுப்பாசிரியர்: மக்கள் குரல் வீ.ராம்ஜீ, மணிவாசகர் பதிப்பகம், பக்.224, விலை ரூ175. மக்கள் குரல் நாளிதழில் வாரம்தோறும் வெளியான விருந்தினர் குரல் என்ற சிறப்புப் பகுதியில் இடம்பெற்ற 32 பல்துறை வித்தகர்களின் பேட்டி நூலாக்கம் பெற்றிருக்கிறது. இயல், இசை, நாடகம், நாட்டியம், நடிப்பு, கதை, கவிதை, இலக்கியம், பதிப்பு, தயாரிப்பு, மென்திறன், குழந்தை இலக்கியம், பாடலாசிரியர், கதாசிரியர், நாடகாசிரியர், எழுத்தாளர், மனநல ஆலோசகர், அறிவியல் ஆய்வாளர், நூலகர், சமூக ஆர்வலர், பொதுப்பணி ஆகிய துறைகளில் சாதனை புரிந்தவர்களின் வாழ்க்கை வழித்தடத்தை சுருக்கமாக தொகுப்பாசிரியர் […]

Read more

பெண்மை ஒரு வரம்

பெண்மை ஒரு வரம், பா. ஜோதி, நிர்மலாசாமி, விஜயா பதிப்பகம்,  பக்.184, விலை ரூ.120. ‘தினமணி மகளிர்மணி’யில் ஐஏஎஸ் அதிகாரி பா.ஜோதி நிர்மலாசாமி எழுதி வெளிவந்த 30 தொடர்கள் தொகுக்கப்பட்டு நூலாக வெளியிடப்பட்டுள்ளது. பெண் என்பவள் தன் தாய், தந்தையிடம் கற்ற கலாசாரத்தை, பண்புகளை தன் மகளுக்கு சொல்லித் தருவாள். ஒரு தலைமுறையிலிருந்து உள்வாங்கி அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் ‘கலாசார காவலர்கள்’ என்று பெண்களை அறிமுகப்படுத்துகிறார் நூலின் ஆசிரியர். குழந்தைப் பருவம், பதின் பருவம், இளமைக் காலம், கல்வி, காதல், திருமண பந்தம் என வாழ்க்கையின் […]

Read more

பெண்மை ஒரு வரம்

பெண்மை ஒரு வரம்,  பா. ஜோதி நிர்மலாசாமி, விஜயா பதிப்பகம், பக்.184, விலை ரூ.120. ‘தினமணி மகளிர்மணி’யில் ஐஏஎஸ் அதிகாரி பா.ஜோதி நிர்மலாசாமி எழுதி வெளிவந்த 30 தொடர்கள் தொகுக்கப்பட்டு நூலாக வெளியிடப்பட்டுள்ளது. பெண் என்பவள் தன் தாய், தந்தையிடம் கற்ற கலாசாரத்தை, பண்புகளை தன் மகளுக்கு சொல்லித் தருவாள். ஒரு தலைமுறையிலிருந்து உள்வாங்கி அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் கலாசார காவலர்கள் என்று பெண்களை அறிமுகப்படுத்துகிறார் நூலின் ஆசிரியர். குழந்தைப் பருவம், பதின் பருவம், இளமைக் காலம், கல்வி, காதல், திருமண பந்தம் என […]

Read more

எங்கேயும் பெண்மை

எங்கேயும் பெண்மை, மு.வேல்முருகன், பாவை பப்ளிகேஷன்ஸ், பக். 80, விலை 55ரூ. ‘காப்பியப் பொருளாய் பெண்ணிருந்தாள் கவிதைப் பொருளும் அவளானாள் – இன்று கோப்பியப் பொருளாய் ஆகிவிட்ட பெண்ணின் அவலம் அறிவீரோ? அழகுச் சிலையைப் பின்தொடர்ந்து காதல் மொழிகள் கூறுகிறார்; அவள் அதை ஏற்க மறுத்தாலோ அமிலத்தை முகத்தில் வீசுகிறார்’ என்ற கவிதை வரிகள், பெண்ணின் அவலத்தைக் கூறுவதாக உள்ளது. நன்றி: தினமலர்17/9/2017.

Read more

பெண்மை ஒரு வரம்

பெண்மை ஒரு வரம், ஐ.ஏ.எஸ். அதிகாரி பா. ஜோதி நிர்மலாசாமி,விஜயா பதிப்பகம், விலை 145ரூ. “பெண்மை வாழ்கென்று கூத்திடுவோமடா! பெண்மை வெல்கென்று கூத்திடுவோமடா” என்று பாடினார், மகாகவி பாரதியார் அன்று. அத்தகைய பெண்ணின் பெருமையைப் பற்றி நேர்மையும், எளிமையும், எளியவர்பால் அன்பும்கொண்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி பா.ஜோதி நிர்மலாசாமி எழுதிய புத்தகம்தான் “பெண்மை ஒரு வரம்”. பெண்ணின் குணநலன்கள், இந்த சமுதாயத்தில் அவள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் போன்ற அனைத்தையும் தன்னையும், தன் குடும்பத்தையும் மையமாக வைத்தே எழுதியிருக்கிறார். பணி காலத்திலும், தனது சொந்த வாழ்க்கையிலும் ஒரு […]

Read more

பெண்களும் அவர்களின் குணங்களும்

பெண்களும் அவர்களின் குணங்களும், அமராவதிபுதூர் அ.மோகன், மணிமேகலை பிரசுரம், பக். 328, விலை 160ரூ. எது ஒன்று இல்லாவிட்டால் நம்மால் வாழ முடியாதோ அதைப் போற்றி வாழ்வதே அறிவுடைமை என்று படித்ததுண்டு. ஆணும், பெண்ணும் சமூகக் கட்டமைப்பின் தவிர்க்க முடியாத அங்கங்கள். ஆனால், இன்பமாய் செல்லும் இல்லறம் பலருக்குக் காலப்போக்கில் கசப்பதற்குப் பெண்களையே காரணமாகக் காட்டுகிறது இந்நூல். கூர்மையான பார்வைகளுக்குத் தெரியும் பெண்கள் பலவீனர்களோ, துணிச்சலற்றவர்களோ அல்ல என்பது. உலக வளர்ச்சிக்கு ஏற்ப உள்ளத்தின் வலிமையையும், உடை நாகரிகங்களையும் துணிச்சலோடு மாற்றிக் கொண்டு வருபவர்கள் […]

Read more
1 3 4 5 6 7 14