வரலாறு படைத்த வைர மங்கையர் (தொகுதி 4)

வரலாறு படைத்த வைர மங்கையர் (தொகுதி 4), பேராசிரியர் பானுமதி தருமராசன், புதுகைத் தென்றல், விலை 150ரூ. ஆண்களுக்கு தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதுபோல் இன்றைய உலகில் பெண்கள் கால்பதிக்காத துறைகளே இல்லை எனலாம். சமுதாயத்தில் முன்னேற துடிக்கும் இளம் பெண்களிடையே ஒரு உத்வேகத்தை தூண்டும் வகையில், சாதனை புரிந்த வைர மங்கையர்களின் வரலாற்று தரவுகளை சுவைபட படைத்துள்ளார் ஆசிரியர். நாம் இதுவரை அறியாத, விடுதலை போராட்டத்தில் பங்கேற்ற சில சாதனை பெண்மணிகளின் தகவல்களையும் இந்நூல் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது. தங்களது இலக்கை […]

Read more

வேத வாழ்வில் பெண் குரல்

வேத வாழ்வில் பெண் குரல், ஜி.ஏ.பிரபா, சந்தியா பதிப்பகம்,பக்.120, விலை ரூ.115. வேதகாலப் பெண்களான மைத்ரேயி, லோபமுத்ரா, காத்யாயினி, ஸ்ரீமதி, ஜபாலா, மானஸ புத்ரா, கார்கி, ஷ்ரத்தாவதி முதலிய 20 பேர் பற்றிய கதைகள் இந்நூலில் உள்ளன. வேத காலத்தில் மக்கள் நியாயம், சத்தியம், உண்மை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர்; பொறாமை, கோபம், அடுத்துக் கெடுக்கும் எண்ணமில்லாமல் வாழ்ந்தனர்; ஆணுக்கு சரிநிகராகப் பெண்கள் அனைத்துரிமைகளையும் பெற்றிருந்தனர்; அறிஞர்கள் சபையில் எதிர்த்து வாதாடவும், புரோகிதமும் செய்யவும் அனுமதிக்கப்பட்டிருந்தனர் என்பன போன்ற தகவல்களோடு அன்றைய பெண்களின் புத்திசாலித்தனம் […]

Read more

இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களில் பெண்ணியச் சிந்தனைகள்

இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களில் பெண்ணியச் சிந்தனைகள், தொகுப்பாசிரியர்: மு.சாயபு மரைக்காயர்,வானதி பதிப்பகம், பக்.504, விலைரூ.400. குறிப்பிடத்தக்க இஸ்லாமிய படைப்பாளிகளான ஜெய்புன்னிசா, தாழை மதியவன், குணங்குடி மஸ்தான் சாகிபு, கா.மு.ஷெரீப், மு.சாயபுமரைக்காயர், நசீமா பானு, மீரான் மைதீன், சல்மா, அப்துல்ரகுமான் உள்ளிட்ட பலருடைய படைப்புகளில் காணக் கிடைக்கும் பெண்ணியச் சிந்தனைகளைப் பற்றி பேசும் நூல். 77 கட்டுரைகளின் தொகுப்பான இந்நூலில் பெண்ணுரிமை தொடர்பான இஸ்லாமிய நெறி என்ன என்பதைப் பல கட்டுரைகள் விளக்குகின்றன. 1400 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த போர்களில் நிறைய ஆண்கள் கொல்லப்பட்டதால், பெண்கள் […]

Read more

அவள் பெண்ணியப் பார்வையில்

அவள் பெண்ணியப் பார்வையில், டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முகம்மத், இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், விலை 90ரூ. பெண்ணியம் குறித்த விவாதங்களும், கருத்துகளும் உலக அளவில் இன்று ஒரு பேசு பொருள் ஆகிவிட்டது. இந்த நூலில் பெண்கள் தொடர்பான எல்லாப் பிரச்சினைகளையும் சிக்கல்களையும் இஸ்லாமிய பேச்சாளரும், எழுத்தாளருமான டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முகம்மத் அலசி ஆராய்ந்துள்ளார். பெண்கள் இன்று எதிர் கொள்ளும் பிரச்சினைகளுக்கு இஸ்லாம் கூறும் தீர்வுகளை அழகிய தமிழில் எளிய முறையில் எடுத்துக்கூறுகிறார். நன்றி: தினத்தந்தி. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more

பெண்ணியம் வரலாறும் கோட்பாடுகளும்

பெண்ணியம் வரலாறும் கோட்பாடுகளும், சாரா காம்பிள், டோரில் மோய்; தமிழில்: ராஜ் கெளதமன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்.108, விலை ரூ.90. பெண்ணியம் பற்றி வெளிவந்த இரண்டு நூல்களின் தொகுப்பே இந்நூல். சாரா காம்பிள் பதிப்பாசிரியராக இருந்து உருவாக்கிய பெண்ணியமும் பின்னையப் பெண்ணியமும் என்ற நூலும், டோரில் மோய் எழுதிய பாலியல்/ பிரதியியல் அரசியல்: பெண்ணிய இலக்கிய கோட்பாடு என்ற நூலும் பெண்ணியம் சார்ந்த சிந்தனைகளை நம் முன் வைக்கிறது. ஐரோப்பியச் சூழலில் தோன்றிய பெண்ணியம் பற்றிய சிந்தனைகளாக இவை இருந்தாலும், […]

Read more

நகரத்தார் மரபு காக்கும் மங்கையர்கள்

நகரத்தார் மரபு காக்கும் மங்கையர்கள், எம்.வள்ளிக்கண்ணு, குமரன் பதிப்பகம், விலை 100ரூ. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு – நகரத்தார் கோவில் – ஆண்களின் பெருமை – பெண்களின் சிறப்பு – நகரத்தார் வீட்டின் அமைப்பு – நகரத்தார் உறவு முறைகள் – நகரத்தார் திருமண முறைகள் – மருந்து அல்லது தீர்த்தம் குடித்தல் – நகரத்தார் பெயர் சூட்டும் முறைகள் – நகரத்தார் உணவு முறைகள் போன்ற தலைப்புகளில் நகரத்தார் பெண்களின் சிறப்பைப் பேசுகிறார் ஆசிரியை. நகரத்தார் மரபைச் சேர்ந்த பெண்கள், சம்பிரதாய முறைகளை […]

Read more

அவள்

அவள் – பெண்ணியப் பார்வையில், டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத், இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட், விலை 90ரூ. பெண்ணியப் பார்வை இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் அமைப்பின் தலைவர் டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத் எழுதியுள்ள இந்நூல் உரையாடலுக்கான நூலாகும். பல்வேறு சமயங்களில் உள்ள பெண்களைச் சிறுமைப்படுத்தும் போதனைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. நபிகள் காலத்தில் பெண்களுக்கு அரசியல் முதல் ஆன்மீகம் வரையில் சமத்துவ உரிமைகள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல நாடுகளில் நிகழ்ந்துள்ள மாற்றம் இந்தியாவில் இன்னும் வரவில்லை என்று ஒப்புக்கொள்கிறார் நூலாசிரியர். பெண்களின் பாதுகாப்புக்காகத்தான் கட்டுப்பாடுகள் என்ற வாதத்தை எதிரொலிக்கும் […]

Read more

பெண்களும் சோஷலிஸமும்

பெண்களும் சோஷலிஸமும், ஆகஸ்டு பேபல், தமிழில் பேரா.ஹேமா, பாரதி புத்தகாலயம், விலை 380ரூ. நம் சமுதாயத்தில் பல்வேறு பிரச்சினைகள் நடந்தபடி இருக்கின்றன. இத்தகைய பிரச்சினைகளில் மிக முக்கியமாகப் பார்க்கப்படுவது, பெண்கள் குறித்த விவாதம். பாலினச் சமத்துவம் இல்லாமல் மனித குலத்துககான விடுதலை சாத்தியமில்லை என இந்தப் புத்தகம் உரக்கச் சொல்கிறது. நன்றி: தி இந்து, 7/1/2018.

Read more

வலி

வலி, அமரந்த்தா, சந்தியா பதிப்பகம், விலை 110ரூ. பல்வேறு பெண்களின் வாழ்க்கையைச் சொல்கிறது இந்நூல். இப்புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் கதைகள், நம்முடன் சக பயணியாக வரும் வெவ்வேறு தளங்களில் உள்ள பெண்களின் வாழ்க்கையை மிக நுட்பமாகச் சொல்கின்றன. நன்றி: தி இந்து, 7/1/2018.

Read more

தடைகள் தாண்டிப் பாயும் நதி

தடைகள் தாண்டிப் பாயும் நதி, பிருந்தா சீனிவாசன், தி இந்து, விலை 120ரூ. இந்தச் சமூகம் பெண்கள் மீது விதித்துள்ள கட்டுப்பாடுகளைத் தகர்த்து வெளியேறும் பெண்கள் குறித்தும் இந்தக் கட்டுப்பாடுகளுக்குள் வாழும் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்தும் விவாதித்து, அதற்கான தீர்வுகளையும் முன்வைக்கிறது இந்தப் புத்தகம். நன்றி: தி இந்து, 7/1/2018.

Read more
1 2 3 4 5 6 14