செம்பியன் செல்வி

செம்பியன் செல்வி, கோவி. மணிசேகரன், பூம்புகார் பதிப்பகம், பக். 647, விலை 525ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024623.html ஒரு வரலாற்றுப் புதினம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கான ஒரு முன்மாதிரி இந்த நூல். கலிங்கத்துப் பரணி காலம்தான், கதை நிகழும் காலம். குலோத்துங்க சக்கரவர்த்தியும், கருணாகரனும், இன்னும் பல கதை மாந்தர்களும் நாம் அறிந்தவர்களே. இந்த வரலாற்று நாயகர்களை தனது காப்பியத்திலிட்டுக் கதைப்படுத்தி, வாசகரைச் சோழ தேசத்தில் வாழ்வதுபோல் ஓர் மயக்க நிலையை ஏற்படுத்திவிடுகிறார். காலிங்கராயரின் உதிரத்தில் மீண்டும் […]

Read more

மாவீரன் மருதநாயகம்

மாவீரன் மருதநாயகம் (யூசுப்கான்), கொங்கு நூல் பதிப்பகம், சென்னை, விலை 175ரூ. மருதநாயகம் என்ற வீரனை மாவீரனாக உருவகப்படுத்தும் புதினம். இந்துவாகப் பிறந்த மருதநாயகம் ஒரு முஸ்லிமாக வாழந்து ஒரு கிறிஸ்தவப் பெண்ணை மணந்தான். எல்லா மதங்களையும் மதித்தான். யூசுப்கானாக மாறி தன் வீர பராக்கிரமத்தால் ஆங்கிலேயரை மிரள வைத்தான். தன்னை மதுரைக்கு கவர்னராக்கிய பிரிட்டிஷாருக்கு விசுவாசத்தையும் விவேகத்தையும் காட்டி ஏமாந்து போனான். தமிழ்நாட்டையே பிரிட்டிஷாருக்கு தாரைவார்த்துக் கொடுத்ததுன் அவன் செய்த மாபெரும் தவறு. பிராய்ச்சித்தம் தேடிக்கொண்டபோது, பக்கத்தில் இருந்தவர்கள் காட்டிக்கொடுத்தார்கள். பயத்தில் இருந்த […]

Read more

மாண்புமிகு முதலமைச்சர்

மாண்புமிகு முதலமைச்சர், கோவி. மணிசேகரன், பூம்புகார் பதிப்பகம், சென்னை, விலை 225ரூ. இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் முதலமைச்சராக இருந்தவர் பெரியபுராணத்தை கதையாக பாடிய சேக்கிழார். அவரது வரலாற்றை எடுத்துக்காட்டும் வகையில் படைக்கப்பட்ட புதினம் இது. சரித்திரப் புதினங்களைப் படைக்க விரும்புவோருக்கு வரலாற்று அறிவும், ஆராய்ச்சித் திறனும், இலக்கியப் புலமையும் இருந்திடல் வேண்டும். புதினத்தைப் படைப்பதற்காகத் தேர்ந்து எடுத்துக்கொள்ளும் காலத்தில் நிலவிய சமூகச் சூழ்நிலை, கலாச்சாரச் செழிப்பு, பழக்க வழக்கங்கள் இவை பற்றிய செய்திகள் தெரிந்திருக்க வேண்டும. இவை அனைத்தோடு, வீரம், காதல், போர்க்களத்தந்திரங்கள் இவற்றைப் […]

Read more

காவிரி நாடன் காதலி

காவிரி நாடன் காதலி, கன்னரதேவன், முதற்சங்கு பதிப்பகம், நாகர்கோவில், விலை 300ரூ. இந்த சரித்திர நாவலை எழுதி முடிக்க எனக்கு 35 ஆண்டுகள் பிடித்தன என்கிறார் நூலாசிரியர் தமிழுலகன். ஆதித்த சோழர் வரலாற்றையும், கன்னரதேவன் வரலாற்றையும் அடிப்படையாக வைத்து இந்த நாவல் புனையப்பட்டுள்ளது. ஏராளமான கதாபாத்திரங்கள். எனினும் கதையை குழப்பம் இன்றி விறுவிறுப்பாக எழுதியுள்ளார். தமிழ் உணர்வைத் தூண்டும் நாவல். நன்றி: தினத்தந்தி, 23/9/2015.   —- கற்றபின் நிற்க, கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர், தமிழ்மணி புத்தகப்பண்ணை, விலை 200ரூ. நம் மொழியில் இல்லாத நற்சிந்தனைகள் […]

Read more

திரௌபதி

திரௌபதி, யார்லகட்ட லக்ஷ்மிபிரசாத், தமிழில் இளம்பாரதி, சாகித்ய அகாதெமி, பக். 368, விலை 200ரூ. பாரதத்தின் மாபெரும் இதிகாசமான மகாபாரதம் வெறும் கதையல்ல. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த மண்ணில் வாழ்ந்த மக்களின் சமூக வாழ்வையும், அப்போது நிலவிய அதிகாரப் போட்டியையும் வெளிப்படுத்தும் ஆவணம். மகாபாரதம், காலந்தோறும் புதிய வடிவில் மீள்பார்வைக்கும் மறுவாசிப்புக்கும் உட்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் வெளியாகியுள்ள புதினமே இந்நூல். நூலாசிரியர் யார்லகட்ட லக்ஷ்மிப்ரசாத் மகாபாரக் கதையின் மைய நாயகியான திரௌபதியை ஆதார விசையாகக் கொண்டு இந்தப் புதினத்தை எழுதியிருக்கிறார். திரௌபதியின் […]

Read more

பொன் வேய்ந்த பெருமாள்

பொன் வேய்ந்த பெருமாள், பூம்புகார் பதிப்பகம், சென்னை, விலை 275ரூ. சடையவர்மர் சுந்தரபாண்டியர், மூன்றாம் ராகவேந்திர சோழர், விசயகண்ட  கோபாலன் ஆகிய சரித்திர நாயகர்களைச் சுற்றிப் பின்னப்பட்ட வரலாற்றுப் புதினம் பொன்வேய்ந்த பெருமாள். சரித்திரக் கதைகளுக்கு அடிப்படைத்தேவை கம்பீரமான நடை. கோவி. மணிசேகரன் இயற்கையாகவே கம்பீர நடையை கைவரப்பெற்றவர். காட்சிகளை வர்ணிப்பதிலும், அசகாய சூரர். அவருடைய இந்த முத்திரைகள், இந்த நாவலிலும் அழுத்தமாகப் பதிந்துள்ளன. இதைப் படிக்கும் எல்லோருமே, நல்லதொரு சரித்திர நாவலைப் படித்தோம் என்ற மன நிறைவைப் பெறுவார்கள். நன்றி: தினத்தந்தி, 27/5/2015. […]

Read more

அம்ருதா

அம்ருதா, திவாகர், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, பக். 448, விலை 335ரூ. கங்கை கொண்ட ராஜேந்திர சோழ சக்கரவர்த்தியின் மகளான அம்மங்கையின் வயிற்றில் பிறந்தவர் அபயன். தெலுங்கு ராஜாவான அபயன் சோழ தேசத்து ஆட்சியை எப்படிப் பிடித்தார், பரந்து விரிந்த சோழ தேசத்தை எப்படி ஆட்சி செய்தார் என்பதே கதைக்களம். சோழர்கள் காலத்தில் உறவுகளுக்குள் நெருக்கம் ஏற்படவும், நிலையான ஆட்சிக்கும் பயன்பட்டு வந்த திருமணம், எப்படி சோழர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக மாற்றியது, பெண்கள் அரசியலில் எவ்வாறெல்லாம் பகடைக் காய்களாகப் பயன்படுத்தப்பட்டனர் என்பதை விளக்கும் […]

Read more

பெண்ணுக்குத்தான் எத்தனை மனம்

பெண்ணுக்குத்தான் எத்தனை மனம்(சமூக நாவல்), தஞ்சை செல்வன், திருவரசு புத்தக நிலையம், சென்னை, விலை 150ரூ. ஒரு முழுமையான திரைப்படத்திற்கு தேவைப்படும் குடும்ப நிகழ்வுகள், காதல், வீரம், தியாகம், சோகம், அரசியல் செல்வாக்கும், பணபலமும் நிறைந்த ஆதிக்க சக்தி, இறுதியாக சுப நிகழ்வுகள் என்று அத்தனை அம்சங்களும் நிறைந்துள்ள ஒரு சமூக நாவல். கதாநாயகி பூவரசி ஒரு டாக்டர். தன்னையும், உடன்பிறப்புகளையும் தவிக்க விட்டுவிட்டு பெற்றோர் மறைந்து விடுவதால் அவர்களை ஆளாக்க தன்னை தியாகம் செய்கிறாள். அவளை தன் வலையில் சிக்க வைக்க முயற்சிக்கிறான் […]

Read more

வெல்லுங்கள் இந்த வழிச் செல்லுங்கள்

வெல்லுங்கள் இந்த வழிச் செல்லுங்கள், மனிதவள மேம்பாடுட நிபுணர் மல்லியம் வெ. ராமன், புத்தகச் சோலை, மயிலாடுதுறை, விலை 80ரூ. வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று துடிப்பவர்கள் படிக்க வேண்டிய நூல் இது. மனிதவள மேம்பாட்டு நிபுணரான மல்லியம் வெ. ராமன் வெற்றியின் ரகசியத்தை எளிய தமிழில் சுவைபட எழுதியுள்ளார். வெற்றியடைய வேண்டுமானால் முதலில் தேவை வெற்றி மனப்பான்மை. நிதானமாக, பொறுமையாக, அதே சமயம் விடாப்பிடியாகத் தொடர்ந்து லட்சியத்தை நோக்கி நடந்தால், ஒருநாள் வெற்றி சாத்தியமாகும் என்கிறார் ஆசிரியர். இது இவருடைய முதல் நூல் […]

Read more

மணிக்கொடி

மணிக்கொடி, சேது அலமி பிரசுரம், சென்னை, விலை 500ரூ. கல்கியின் பொன்விழாப் போட்யில் முதல் பரிசு பெற்ற நாவல் இது. வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது எனும் உயரிய கருத்துக்கு முழு வடிவம் கொடுத்து உருவான நாவல். நாடு தழுவிய மாபெரும் பிரச்சினைகளுக்கு காந்தியடிகளின் அகிம்சை வழிதான் சிறந்தது என்பதை எடுத்துக்காட்டுவதற்காகவும், நாட்டை அந்நிய ஆதிக்கத்திலிருந்து மீட்க நம் முன்னோர்கள் எப்படியெல்லாம் பாடுபட்டதோடு தியாகங்களும் செய்தார்கள் என்பதைச் சொல்லுவதற்காகவும் இந்த வரலாற்று புதினத்தை படைத்திருக்கிறார் நேதிர்லதா கிரிஜா. இப்புதினம், விடுதலைக்காக நம் முன்னோர்கள் பட்ட வடுக்களின் […]

Read more
1 2 3 4 5 6