தலித் இலக்கியம் ஒரு பார்வை

தலித் இலக்கியம் ஒரு பார்வை, முனைவர் பத்மாவதி விவேகானந்தன், ராஜம் வெளியீடு, பக். 224, விலை 140ரூ. தலித்தியமும், பெண்ணியமும் சமத்துவத்திற்கான தத்துவங்களாகும். காலம் காலமாக அடங்கிக் கிடந்தவர்கள் இன்று வெடித்துப் போராட்ட களத்தையும், எழுத்து ஆயுதத்தையும் பயன்படுத்தி அடிமைச் சிறையில் இருந்து வெளிவரத் துடிக்கின்றனர். கடந்த, 20 ஆண்டுகளாக, முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தலித் படைப்பாளிகள், கவிதை, சிறுகதை, நாவல், தன் வரலாறு, திறனாய்வு, தத்துவம் என, அனைத்துத் துறைகளிலும் அறிவாற்றல் மிக்கப் படைப்புகளைத் தந்து சாதனை புரிந்து வருகின்றனர். உறங்கிக் […]

Read more

ஊர்சுற்றிப் புராணம்

ஊர்சுற்றிப் புராணம்,  ராகுல் சாங்கிருத்யாயன், தமிழில்: ஏ.ஜி.எத்திராஜுலு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்.158, விலை ரூ.130. முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் முதற்பதிப்பைக் கண்ட இந்நூல், அதன் சிறப்பு காரணமாக இப்போது ஆறாம் பதிப்பைக் கண்டுள்ளது. மனிதனின் அடிப்படை இயல்பே ஊர் சுற்றுவதுதான். இயற்கையான புராதன மனிதன் மிகவும் ஊர்சுற்றியாகத்தான் இருந்திருக்கிறான். புத்தர், மகாவீரர், சுவாமி தயானந்தர் உட்பட பலரும் ஊர்சுற்றிகளாகத்தான் இருந்திருக்கிறார்கள். ஊர்சுற்றும் மனப்பான்மை மனிதனுக்கு இல்லாமலிருந்தால், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உருவாகியிருக்காது. பல்வேறு கலாசாரம், அறிவியல் கண்டுபிடிப்புகள் எல்லாம் […]

Read more

அங்கீகாரமற்ற வீட்டுமனைகள்

அங்கீகாரமற்ற வீட்டுமனைகள், அ.பாலகிருஷ்ணன், ராஜாத்தி பதிப்பகம், விலை 80ரூ. விவசாய நிலங்களை வீட்டுமனைகளாக மாற்றுவது எப்படி?, அதிகாரமற்ற வீட்டு மனையை வாங்கவோ, விற்கவோ முடியுமா? அங்கீகாரமற்ற வீட்டுமனை எங்கே எப்படி விண்ணப்பம் செய்வது? இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை அளிக்கும் நூல். நன்றி: தினத்தந்தி, 3/1/2018.

Read more

பெண் – சமூகம் – சமத்துவம்

பெண் -சமூகம் – சமத்துவம், முனைவர் பத்மாவதி விவேகானந்தன், வள்ளி சுந்தர் பதிப்பகம், பக். 136, விலை 90ரூ. சென்னை தரமணியில் இருக்கும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், சமூகவியல் கலை பண்பாட்டுத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றியவர் பத்மாவதி விவேகானந்தன். கவிஞர், சிறுகதை எழுத்தாளர், திறனாய்வாளர் என பன்முகத் திறமை வாய்ந்தவர். பெண்ணுரிமைப் போராட்டத்திற்கான மிக முக்கியமான அம்சம், அடிமைத்தனத்தில் ஊறிக் கிடக்கும் அவளை அந்த அடிமைத் தனத்தை உணரும்படி செய்வது தான். தன்னை அறிந்து கொண்டு விட்டால், பின் எல்லாம் தானாகவே நடந்துவிடும். அதற்கான […]

Read more

அறிய வேண்டிய அப்பாஜியின் அற்புதக் கதைகள்

அறிய வேண்டிய அப்பாஜியின் அற்புதக் கதைகள், சிவரஞ்சனா, அருணா பதிப்பகம். கதைகள், மனிதனின் மனத்தையும் அறிவையும் செம்மை படுத்துகிறது; மகிழ்ச்சியை அளிக்கிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை கதைகளை விரும்பிப் படிப்பர். நகைச்சுவைக்காக மட்டுமல்லாமல், நல்ல அறிவுரையையும் கூறுகிறது. அறிய வேண்டிய அப்பாஜியின் அற்புதக்கதைகள் என்ற இந்த நூல். 21- தலைப்புகளைக் கொண்டுள்ளது. நல்ல சிந்தனை ஆற்றலை வளர்க்கிறது. கதையில் கிருஷ்ணதேவராயர் என்ற மன்னர், அப்பாஜி என்ற அமைச்சர், ராணி, கிருஷ்ணதேவராயரின் மைத்துனர் முதலியோர் முக்கிய பங்கு வகிக்கின்றனர். சிபாரிசு இருக்கிறது என்பதாலேயே தகுதி […]

Read more

மனதோடு மழைச்சாரல்

மனதோடு மழைச்சாரல், மன்னை ஜீவிதா அரசி, காகிதம் பதிப்பகம், விலை 150ரூ. மன்னை ஜீவிதா அரசி எழுதிய கவிதைகள் கொண்ட தொகுப்பு. பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றும் ஜீவிதா அரசி, சமூகத்தில் காணப்படும் அநீதிகளை சாடும்போது, அவர் எழுத்துக்களில் தீப்பொறி பறக்கிறது. உணர்ச்சிமயமான கவிதைகளை எழுதியுள்ள ஜீவிதா அரசி பாராட்டுக்கு உரியவர். நன்றி: தினத்தந்தி, 11/10/2017.

Read more

திருவிளையாடற் புராணம் (மதுரைக் காண்டம் மூலமும் உரையும்)

திருவிளையாடற் புராணம் (மதுரைக் காண்டம் மூலமும் உரையும்), உரையாசிரியர்: முனைவர் பழ.முத்தப்பன, சகுந்தலை நிலையம், பக்.688, விலை ரூ.1200. வரலாற்றுச் சிறப்புமிக்க எல்லாக் கோயில்களுக்குமே அந்தக் கோயில்களைப் பற்றிய தலபுராணம் எழுதப்பட்டிருக்கும். அவ்வாறு தலபுராணம் பாடியவர்களுள் பரஞ்சோதி முனிவரும், பெரும்பற்றப்புலியூர் நம்பியும் குறிப்பிடத்தக்கவர்கள். மதுரை மாநகரில் சிவபெருமான் தம் பக்தர்களின் பொருட்டு நிகழ்த்திய 64 திருவிளையாடல்களைச் செய்யுள் வடிவில் பரஞ்சோதியார் தொகுத்தளித்ததே திருவிளையாடற் புராணமாயிற்று. இப்பெயரில் இரு நூல்கள் உள்ளன. ஒன்று பரஞ்சோதியார் பாடியது, மற்றொன்று பெரும்பற்றப்புலியூர் நம்பி பாடியது. பெரும்பற்றப்புலியூர் நம்பி பாடிய […]

Read more

பலன் தரும் பரிகாரத் தலங்கள்

பலன் தரும் பரிகாரத் தலங்கள், அறந்தாங்கி சங்கர், அறந்தாங்கி சங்கர் பதிப்பகம், பக். 76, விலை 150ரூ. தலையெழுத்தை மாற்றி, வாழ்வை வளமாக்கும் திருப்பட்டூர் ஈசன், புற்றுநோயை நீக்கும் அன்னை பாகம் பிரியாள், கண்ணொளி வழங்கம் கண்ணாயிர நாதர் திருக்காரவாசல், குழந்தை வரம் அருளும் குன்றக்குடி முருகன், சகல காரிய சித்தி அருளும் ஸ்ரீரங்கம் பேசும் ஆஞ்சநேயர் உள்ளிட்ட தலங்களின் சிறப்புகளைக் கூறுகிறது இந்நூல். நன்றி: தினமலர்,10/9/2017.

Read more

பறவையியல்

பறவையியல், வ.கோகுலா, சி. காந்தி, ஜாசிம் பப்ளிகேஷன், பக். 200, விலை 300ரூ. செல்லப்பிள்ளைகளாய் வளர்த்தும், செல்லும் இடங்களிலெல்லாம் ரசித்தும் மக்கள் பரவசப்படும் பறவைகளின் பரிணாம வளர்ச்சிகளையும், கோட்பாடுகளையும் அவற்றின் உடலியக்கத்தில் உள்ள அற்புதமான அறிவியல் அருமைகளையும் உள்ளடக்கிய நூல் இது. பண்டைய காலம்தொட்டு தூதாக, அமைதியின் அடையாளமாக, இலக்கிய அங்கமாக, விளையாட்டுப் பொருளாக, பந்தயம் நடத்த, ஆரூடம் பார்க்க, புராணப்புனைவுகளில் இறை வாகனங்களாக, மூதாதையரின் நினைவூட்டிகளாக வாழ்ந்து, இன்றும் நாகரிக அடையாளமாகவும், தேசிய சின்னமாகவும் விளங்கும் பறவையினத்தின் வரலாறு பயில பயில வியப்பைத்தரும். […]

Read more

சிவாஜிகணேசன் பிள்ளைத்தமிழ் அந்தாதி

சிவாஜிகணேசன் பிள்ளைத்தமிழ் அந்தாதி, கவிக்கோலம் கிருஷ்ணமூர்த்தி, செம்மொழிக்கழகம், விலை 70ரூ. முதல் படத்திலேயே (“பராசக்தி”) புகழின் சிகரத்துக்குச் சென்றவர் சிவாஜிகணேசன். “வீரபாண்டிய கட்டபொம்மன்” படத்தில், கட்டபொம்மனாகவே வாழ்ந்து காட்டியவர். அந்த நடிப்பு அவருக்கு ஆசியா – ஆப்பிரிக்கா நாடுகளின் தலைசிறந்த நடிகர் என்ற விருதைப் பெற்றுத் தந்தது. கலைத்தாயின் தலைமகன் என்று அவனைவராலும் போற்றப்ட்ட சிவாஜிகணேசனைப் பற்றி, உணர்ச்சி மயமான பாடல்களை எழுதியுள்ளார், கவிக்கோலம் கிருஷ்ணமூர்த்தி. நல்ல தமிழில், அதே சமயம் எல்லோரும் புரிந்து ரசிக்கும் விதத்தில் கவிதைகள் அமைந்துள்ளன. நன்றி: தினத்தந்தி, 16/8/2017.

Read more
1 15 16 17 18 19 23