விடுதலைப் போரில் தமிழ் முஸ்லிம்கள்

விடுதலைப் போரில் தமிழ் முஸ்லிம்கள், அ.மா.சாமி, கலாம் பதிப்பகம், விலை 250ரூ. இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ் முஸ்லிம்களின் பங்கு எத்தகையது என்பதை எடுத்துரைக்கும் நூல் இது. மொழி, இனம், நாடு, என்பதைத்தாண்டி தமிழ்நாட்டு முஸ்லிம்களின் மொழிப்பற்றுக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளை உள்ளடக்கியது. நன்றி: தினமணி, 13/1/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000026805.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

வெளிச்சத்தின் நிறம் கருப்பு

வெளிச்சத்தின் நிறம் கருப்பு, முகில், சிக்ஸ்த்சென்ஸ் பக்ளிகேஷன்ஸ், பக். 316, விலை 240ரூ. அறிவியலுக்குள்ளும், பகுத்தறிவுக்குள் அடங்காத மர்மங்கள், இவ்வுலகில் நிறைந்திருக்கின்றன. ஏன், எதற்கு, எப்படி என்ற மூன்று கேள்விகளுக்குள் அடங்காத, அந்த மர்மங்களின் கதகதப்பை உணர செய்கிறது இப்புத்தகம். ‘திக் திக்’ விரும்புகளுக்கு, நிச்சயம் இந்நு’ல் பிடிக்கும். நன்றி: தினமலர், 16/1/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000013922.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

கசடறக் கற்க கற்பிக்க…

கசடறக் கற்க கற்பிக்க…, முனைவர் மு.கனகலட்சுமி, சிவசக்தி பதிப்பகம், பக். 156, விலை 140ரூ. ஷெனாய் நகரிலுள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வரும் இந்நூலாசிரியர், இதற்கு முன் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பல அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றியவர். பி.ஹெ.டி வரை கல்வித் தகுதி பெற்றுள்ள இவர், ஆரம்பக் கல்வி மாணவர்கள் மிக எளிய முறையில் தமிழ் எழுத்துக்களை எழுதி, படிக்க புதிய முறைகளை ஆய்வு செய்து இந்நூலை உருவாக்கியுள்ளார். முதலில் குழந்தைகள் மொழி கற்பதில் எதிர்கொள்ளும் சிக்கல்களைக் கண்டறிந்து, […]

Read more

விளம்பர மாயாஜாலம்

விளம்பர மாயாஜாலம், சதீஷ் கிருஷ்ணமூர்த்தி, கிழக்கு பதிப்பகம், பக். 136, விலை 125ரூ. விளம்பரம் என்பது, கலையும், அறிவியலும் கலந்த ஒரு தொழில் நுட்பம். எத்தனை தரமான பொருளாக இருந்தாலும், அதை அழகான விளம்பரமாக உருவாக்க தெரியாவிட்டால் பிரயோஜனம் இல்லை என்கிறது, இந்நூல். நன்றி: தினமலர், 22/1/2018.

Read more

மெய்ப்பொய்கை

மெய்ப்பொய்கை, ருச்சிரா குப்தா, தமிழில் சத்தியப் பிரியன், கிழக்கு, விலை 300ரூ. இந்தியாவின் தலைசிறந்த எழுத்தாளரான பிரேம்சந்த், மன்ட்டோ, புதுமைப்பித்தன், அம்ருதா ப்ரீதம், இஸ்மத் சுக்தாய், கமலா தாஸ் எனப் பலருடைய சிறுகதைகள் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட பெண்களுடைய துயர்மிகு வாழ்வையும் இந்நூல் பதிவு செய்கிறது. நன்றி: தி இந்து, 7/1/2018.

Read more

கொம்மை

கொம்மை, பூமணி, டிஸ்கவரி புக் பேலஸ், விலை 555ரூ. கரிசல் வட்டார இலக்கிய ஆளுமைகளுள் மிக முக்கியமானவர், எழுத்தாளர் பூமணி. பிறகு, வெக்கை ஆகிய நாவல்களுக்குப் பின், அவர் எழுதிய, அஞ்ஞாடி நாவல், சாகித்ய அகாடமி விருது பெற்று, இலக்கிய உலகில் பெரும் கவனம் பெற்றது. இந்த ஆண்டு, அவருடைய, கொம்மை என்ற புதிய நாவல் வெளிவந்திருக்கிறது. படத்திற்கான அட்டை ஓவியமே, வாசகர்கள் இடையே நாவலுக்கான எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது. நன்றி: தினமலர், 20/1/2018

Read more

குழந்தைகளின் நூறு மொழிகள்

குழந்தைகளின் நூறு மொழிகள், ச. மாடசாமி, புக்ஸ் ஃபார் சில்ரன், விலை 80ரூ. ‘வகுப்பறையும் அறிவொளியும்தான் இந்தக் கண்களுக்கு வெளிச்சத்தைத் தந்தன’ என்று சொல்லும் பேராசிரியர் ச.மாடசாமி, மொழி, பண்பாடு, கல்வி சார்ந்து எழுதிய 14 கட்டுரைகளின் தொகுப்பு. எதையும் மேம்போக்காக அணுகாமல், கூர்ந்து கவனித்து எழுதும் கட்டுரையாளரின் நுட்பமான பார்வைக்கு இந்நூலின் கட்டுரைகளே சாட்சி. ஆழமான விஷயங்கள் கொண்ட கட்டுரைகள்கூடச் சட்டென முடிந்துவிடுகின்றன. வகுப்பறைக்குள்ளிருக்கும் அதிகாரம் பற்றிப் பேசும் கட்டுரையும், அகங்காரத் தமிழ் எனும் மொழியின் சமூகத் தேவை குறித்த அக்கறையுடன் கூடிய […]

Read more

கவிக்கோ அப்துல்ரகுமான் கவிதைக் கனியால் உண்ணப்பட்டவர்

கவிக்கோ அப்துல்ரகுமான் கவிதைக் கனியால் உண்ணப்பட்டவர், க. பஞ்சாங்கம், அன்னம் வெளியீடு, விலை 120 தமிழ்க் கவிதைத் தடத்தில் பன்மொழி ஆளுமையோடு விளங்கிய அப்துல் ரகுமானின் பவள விழாவையொட்டி, நூலாசிரியர் எடுத்த சற்றே நீண்ட நேர்காணலும் (64 பக்கங்கள்), 4 கட்டுரைகளும் இதில் உள்ளன. கவிதை குறித்த அப்துல் ரகுமானின் விரிந்த பார்வையும், புதியன வரவேற்கும் அவரது எண்ணமும் கவிதை குறித்த அவரது பதில்களில் தீர்க்கமாக வெளிப்பட்டுள்ளன. ஒரு பித்தனைப் போல் தனது கவிதைகளால் கேள்வியெழுப்பிய கவிஞர், ‘இன்னும் எனக்கு இந்த வாழ்க்கை புரியவில்லை’ […]

Read more

எங்கிருந்து தொடங்குவது?

எங்கிருந்து தொடங்குவது?, அ.வெண்ணிலா, அகநி வெளியீடு, பக்.144, விலை ரூ.100. குடும்ப வாழ்வில் கணவன் – மனைவிக்கு இடையிலான உறவில் ஏற்படும் பல்வேறு முரண்பாடுகள், அவற்றிற்கான காரணங்கள் இந்நூலில் ஆராயப்பட்டிருக்கின்றன. அன்பும், காதலும் குடும்ப வாழ்க்கைக்கு அடிப்படையாக இருக்க வேண்டும். ஆனால் எத்தனை கணவன் – மனைவிக்கிடையே அது அடிப்படையாக இருக்கிறது? என்ற கேள்வி எழுகிறது. குடும்பத்தில் ஆணின் ஆதிக்கம் தலைதூக்கி இருப்பது, பெண் வீட்டு வேலைக்காரியாக உழைத்து உழைத்து மாய்ந்து போவது, பெண்ணின் கருத்துகள், உணர்வுகள் மதிக்கப்படாதது, இந்த ஆணாதிக்க குடும்ப அமைப்பைக் காட்டிக் […]

Read more

ஃபுக்குஷிமா ஒரு பேரழிவின் கதை

ஃபுக்குஷிமா ஒரு பேரழிவின் கதை, மிக்காயேல் ஃபெரியே, தடாகம் வெளியீடு, விலை 200ரூ. தமிழில் சு.ஆர். வெங்கட சுப்புராய நாயக்கர் நிலநடுக்கம், சுனாமி ஃபுக்குஷிமா அணு உலை விபத்து என மூன்று விபத்துகளை 2011-ம் ஆண்டில் ஜப்பான் சந்தித்தபோது அங்கு விளைந்த பாதிப்பகளை நேரில் அனுபவித்த சாட்சியான ஆசிரியர் தன் அனுபவங்களையும் அங்கு திரட்டிய தரவுகளையும் இந்தப் புத்தகத்தில் முற்றிலும் புதிய முறையில் பகிர்ந்துகொண்டிருக்கிறார். நன்றி: தி இந்து, 6/1/2018.

Read more
1 14 15 16 17 18 23