வேலூர் மாவட்ட வரலாறு

வேலூர் மாவட்ட வரலாறு, வேலூர் மா. குணசேகரன், மணிமேகலைப் பிரசுரம், விலை 100ரூ. இந்நூல் வேலூரின் வரலாற்றைக் கூறம், நல்லதோர் தகவல்களஞ்சியம். வேலூரின் பெருமைகளையும், சிறப்புகளையும் பல கோணங்களில் விவரித்து படிப்போர் மனதைக் கவரும் வகையில் தொகுத்தளித்துள்ளார் நூலாசிரியர் வேலூர் மா. குணசேகரன். இது இணையத்திலும், விக்கிபாடியா போன்ற இணையத் தகவல் களஞ்சியங்களில் இடம் பெறவேண்டும். நன்றி: தினத்தந்தி, 04/5/2016.   —- சுற்றுலாச் செல்ல 12 ஜோதிர் லிங்கங்கள், டாக்டர் கே. என். சரஸ்வதி, கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், விலை 50ரூ. சிவத்தலங்கள் பலவற்றுள் […]

Read more

பயங்கரவாதமும் காந்தி சகாப்தமும்

பயங்கரவாதமும் காந்தி சகாப்தமும், ம.பொ.சிவஞானம், சந்தியா பதிப்பகம், பக். 160, விலை 130ரூ. அந்நிய ஏகாதிப்த்தியத்திடமிருந்து இந்தியா விடுதலை பெற்றது ஒரு மகத்தான வரலாறு. சுதேசமன்னர்களின் எதிர்ப்புப் போராட்டம், பிரிட்டிஷ் ராணுவத்திலிருந்த இந்திய வீரர்களின் கலகம், காங்கிரஸ் மகாசபையின் தோற்றம் ஆகியவற்றை தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் விழிப்புணர்வின் உடனடி வெளிப்பாடாக, நாட்டின் பல இடங்களில் ஆயுதம் ஏந்திய போராட்டங்கள் தலைதூக்கின. பகத்சிங், வாஞ்சிநாதன் போன்றோர் இதற்கு உதாரணங்கள். ஆனால் அவை முளையிலேயே கொடூரமாக நசுக்கப்ட்டன. இந்த நேரத்தில்தான் அகிம்சையை ஆயுதமாகக் கொண்ட காந்தியின் இந்திய […]

Read more

டாக்டர் ஜே.சி. குமரப்பாவின் கருத்துக்களஞ்சியம்

டாக்டர் ஜே.சி. குமரப்பாவின் கருத்துக்களஞ்சியம், டாக்டர் மா.பா. குருசாமி, சர்வோதய இலக்கியப் பண்ணை, விலை 300ரூ. அகில இந்திய கதர் மற்றும் கிராமத் தொழில் நிறுவனத்தை மகாத்மா காந்தியடிகள் நிறுவி அதற்குசெயலாளராக டாக்டர் ஜே.சி. குமரப்பாவை நியமித்தார். தமிழகத்தில் பிறந்த இவர், நாட்டுக்காக உழைத்த அறிஞர்களில் ஒருவர். காந்திய பொருளியலுக்கு உருவமும், உள்ளடக்கமும் கொடுத்தவர். அவருக்கு ‘கிராமக் கைத்தொழிலின் டாக்டர்’ என்று காந்தியடிகளே பட்டம் அளித்தார். உலகம் முழுவதும் புவி வெப்பமடைதலைக் குறைத்து பருவ நிலை மாற்றத்தை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்ற […]

Read more

லால்பகதூர் சாஸ்திரி

லால்பகதூர் சாஸ்திரி, அனில் சாஸ்திரி – பவான் சாஸ்திரி, தமிழில் பொன். சின்னத்தம்பி முருகேசன், புத்தக உலகம், விலை 245ரூ. சமுதாயத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து நாட்டின் பிரதமராக உயர்ந்த லால் பகதூர் சாஸ்திரியின் வரலாறு. அவரது குழந்தைப் பருவ நிகழ்வுகளையும், தனி மனித வாழ்வு, பொது வாழ்வில் நடந்த சம்பவங்களையும் இந்த நூலில் அனில் சாஸ்திரி – பவான் சாஸ்திரி ஆகியோர் சுவைபட தொகுத்து வழங்கியுள்ளனர். இந்த நூலைத் தமிழில் பொன். சின்னத்தம்பி முருகேசன் மொழிபெயர்த்துள்ளார். கடுமையான உழைப்பு, அறிவுத் திறத்தால் சாஸ்திரி […]

Read more

இந்தியச் சிற்பி ஜவாஹர்லால் நேரு

இந்தியச் சிற்பி ஜவாஹர்லால் நேரு, ஜி. பாலன், வானதி பதிப்பகம், முதல் பாகம் விலை 270ரூ, இரண்டாம் பாகம் விலை 230ரூ. “மனிதருள் மாணிக்கம்”, “நவ இந்தியாவின் சிற்பி” என்றெல்லாம் புகழ்பெற்ற பண்டித ஜவஹர்லால் நேரு பற்றிய அபூர்வமான புத்தகம். வரலாற்று நூல்களையும், வாழ்க்கை வரலாறுகளையும் எழுதுவதில் புகழ்பெற்ற முனைவர் ஜி.பாலன் இதை எழுதியுள்ளார். செல்வம் மிகுந்த குடும்பத்தில் பிறந்தாலும், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு 1041 நாட்கள் சிறையில் கழித்தார், நேரு. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பதவி ஏற்று, இந்தியாவை பொருளாதாரத்தில் முன்னேறச் […]

Read more

வாழ்வியல் பண்பாட்டுத் தாளிகைகள்

வாழ்வியல் பண்பாட்டுத் தாளிகைகள், ச. வனிதா, காவ்யா, பக். 288, விலை 300ரூ. பழந்தமிழர் இலக்கிய வரலாற்றில், பலமுறை பதிவு செய்யப்பட்ட கருத்துகள் ஆயினும், புதுப்பொலிவோடும், இன்றைய நோக்கோடும், நயத்தோடும், இந்த நூலில் கிராமங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழரின் உழவும், உணவு முறைகளும், விருந்தோம்பல் பண்பாடும், பசு நேசம், சித்தர் மருத்துவம், விவசாயத்தின் ஏர், கலப்பை, சால், மண்வெட்டி, குதிர், பத்தாயம், எலி பிடிக்கும் கிட்டி ஆகியவையும் விரிவாக்கம் பெறுகின்றன. தமிழரின் பண்பாட்டை வெளிப்படுத்தும் ஆடைகளும், அதன் வண்ணங்களும் விளக்கப்பட்டு உள்ளன. காந்தி மதுரை […]

Read more
1 2 3 4