உலக வரலாறு

உலக வரலாறு, ஐ. சண்முகநாதன், பூம்புகார் பதிப்பகம், விலை 750ரூ. உலகம் தோன்றியது முதல் இன்று வரை நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. உலகம், இந்தியா, தமிழ்நாடு என்ற தலைப்புகளில் நிகழ்ச்சிகள் தொகுக்கப்பட்டுள்ளன. உலகம் என்ற தலைப்பில் பூமி தொடங்கியது எப்படி என்பது தொடங்கி உலகில் நடந்த முக்கிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக முதல் உலகப்போர், இரண்டாம் உலகப் போர், சந்திரனில் மனிதன், கென்னடி சுட்டுக்கொலை, இலங்கையில் போர் முடிந்தது போன்ற அனைத்துச் செய்திகளும் இடம் பெற்றுள்ளன. இந்தியா […]

Read more

திராவிட இயக்கமும் தனித்தமிழ் இயக்கமும்

திராவிட இயக்கமும் தனித்தமிழ் இயக்கமும், முனைவர் ப. கமலக்கண்ணன், காவ்யா, விலை 150ரூ. திராவிட இயக்கம் சமூக நீதி, இட ஒதுக்கீடு, தமிழ்மொழி ஆகியவற்றின் மேம்பாட்டுக்காகப் பல்வேறு களப் போராட்டங்களை முன்னின்று நடத்தியது. திராவிட மொழியியலின் தந்தை என அழைக்கப்படும் கால்டுவெல் ‘தமிழ் மொழி தனித்து இயங்கும் வல்லமைமிக்கது’ என்று முதன் முதலாகக் கூறினார். தமிழில் பிற மொழிக் கலப்புக்கு எதிராக மறைமலையடிகள், திரு.வி.க. தேவநேயப் பாவாணர் போன்ற மூத்த தமிழறிஞர்கள் தனித்தமிழ் இயக்கத்தை முன்னெடுத்தனர். திராவிட இயக்கம் மற்றும் தனித்தமிழ் இயக்க வரலாற்றை […]

Read more

வேலூர் புரட்சி

வேலூர் புரட்சி, பேராசிரியர் ந. சஞ்சீவி, அலைகள் வெளியீட்டகம், விலை 60ரூ. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் இறுதி காலகட்டத்தில் மக்கள் எழுச்சியும், பல்வேறு போராட்டங்களும் வலுப்பெற்றன. கிழக்கிந்திய கம்பெனி ஆட்சிக்கு எதிராக இந்திய மக்கள் கிளர்ந்தெழ வேண்டும் என்ற செயலுக்கு வேலூர் புரட்சி அடித்தளமாக அமைந்தது. அத்தகைய வேலூர் புரட்சி குறித்து பேராசிரியர் ந. சஞ்சீவி ஓர் ஆய்வு நூலாக வழங்கியுள்ளார். வேலூரின் தொன்மையான வரலாற்றையும் அவர் எடுத்துரைக்கிறார். நன்றி: தினத்தந்தி, 15/3/2017.

Read more

வரலாற்று உண்மைகள் தமிழ்மண், தமிழர், தமிழ் வரலாறு,

வரலாற்று உண்மைகள் தமிழ்மண், தமிழர், தமிழ் வரலாறு, தமிழ் புகழேந்தி, பத்மா பதிப்பகம். இந்நூல் தமிழக அரசு, தமிழ் வளர்ச்சித் துறை நிதியுதவி பெற்று வெளியிடப் பெற்றதாகும். இந்நூல் மூன்று பகுதிகளாகப் பிரித்து அமைக்கப்பட்டு உள்ளது. முதல் பகுதி வரலாற்றுப் பகுதி, 37 தலைப்புகளில் அமைகிறது. நூலாசிரியரின் புதிய கண்டுபிடிப்புகள் அடங்கிய கட்டுரைகள் உடுக்குறிகள் இட்டுக் காட்டப்பட்டுள்ளன. சேரன் செங்குட்டுவன் படையெடுப்பால் ஏற்பட்ட அவமானத்தைப் போக்கவே களப்பிரர் என்ற இனத்தினர், தமிழகத்தின் மீது போர் தொடுத்து ஆட்சியைக் கைப்பற்றினர் (பக். 50). இதுபோன்று வருவன […]

Read more

இந்தியாவின் தோற்றமும் வரலாறும்

இந்தியாவின் தோற்றமும் வரலாறும், கே. வெங்கட்ராமன், கவிதா பப்ளிகேஷன், பக். 352, விலை 250ரூ. ‘இந்தியா பிறந்தது’ முதல் ‘இந்தியா சுதந்திரம் அடைந்தது’ ஈறாக, 16 தலைப்புகளில் கற்கால மனிதர்கள், சிந்து சமவெளி நாகரிகம், வேத காலம், புத்த, ஜைன மத காலம், கிறிஸ்துவுக்குப் பின் இந்தியா, அரேபிய படையெடுப்பு, விஜயநகரப் பேரரசு, முகலாயப் பேரரசு, ஆங்கிலேயர் வருகை, இந்திய சுதந்திரம், செண்பகராமன் வரலாறு இப்படியாக நூலாசிரியர் தனக்குத் தெரிந்த கருத்துக்களை எல்லாம் இந்நூலில் பதிவு செய்துள்ளார். ‘இயக்கர்கள்’ என்ற பழங்குடியினர், ‘யக் ஷர்கள்’ […]

Read more

தமிழ் ஆளுமைகள் மரபும் நவீனமும்

தமிழ் ஆளுமைகள் மரபும் நவீனமும், இரா. காமராசு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 156, விலை 125ரூ. குருகுலக் கல்வி முறையின் கடைசி எச்சமாகவும், ஆசிரிய – மாணவ உறவின் உச்சமாகவும் விளங்கிய மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையில் தொடங்கி, பாரதி, பாரதிதாசன், விந்தன், கம்பதாசன், ஜெயகாந்தன், கா.மு. ஷெரீப், தி.க.சி. உள்ளிட்ட பதினைந்து அறிஞர்களின் தமிழ்ப்பணியை ஓரளவு விரிவாகவே பதிவு செய்திருக்கிறது இந்நூல். பெரும்புலவராக அறியப்பட்ட பின்னரும் கற்பதில் ஆர்வம் கொண்டிருந்த மீனாட்சிசுந்தரம் பிள்ளை, கீழ்வேளூர் சுப்பிரமணிய தேசிகரிடம் பாடம் கற்றதும், அப்போது […]

Read more

உணவு சரித்திரம்

உணவு சரித்திரம், முகில், சிக்ஸ்த்சென்ஸ், விலை 230ரூ. உணவு சம்பந்தமான விரிவான புத்தகம் இது. ஆனால் உணவு தயாரிப்பது எப்படி என்ற சமையல் புத்தகம் அல்ல. ஒவ்வொரு உணவின் ரிஷி மூலம் என்ன? அது எப்படி எங்கே கண்டுபிடிக்கப்பட்டு பிரபலம் ஆனது என்பது பற்றிய வியப்பான செய்திகளை ருசிகரமான முறையில் தந்து இருக்கிறார் ஆசிரியர். அல்வா, கொழுக்கட்டை, சாக்லேட், பலா போன்றவை பற்றிய அரிய தகவல்கள் வியக்க வைக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 8/6/2016.   —- பெண் வாழப்பிறந்தவள் அல்ல ஆளப்பிறந்தவள், அரிமா கே.மூர்த்தி, […]

Read more

மதுரை மாரியப்ப சுவாமிகள் வரலாறு

மதுரை மாரியப்ப சுவாமிகள் வரலாறு, ப. சோழநாடன், நிழல் வெளியீடு, விலை 150ரூ. இங்கிலீஷ் மெட்டில் மாரியப்ப சுவாமிகள்! தமிழிசை என்று வருகிறபோது என்ன காரணத்தாலோ பல அருமையான சாஹித்ய கர்த்தாக்களைப் பிரபலமானவர்கள் கண்டுகொள்வதே இல்லை. மதுரை சோமுவின் வெண்கல நாதத்தில் இழைந்து காற்றை கௌரவப்படுத்திய பல பாடல்கள் மதுரை மாரியப்ப சுவாமிகள் இயற்றியவை என்பது எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும்? ‘செந்திலாண்டவன் கீர்த்தனைகள்’ என்று ஒரு பாடல் தொகுப்பை 1926ஆம் ஆண்டிலேயே வெளியிட்டார் தீவிர முருக பக்தரான மதுரை மாரியப்ப சுவாமிகள். ‘தமிழிசை இயக்கம் […]

Read more

காஷ்மீர் இந்தியாவுக்கே!

காஷ்மீர் இந்தியாவுக்கே!, கேப்டன் எஸ்.பி. குட்டி, கிழக்கு பதிப்பகம், பக். 303, விலை 250ரூ. குமரி மாவட்டத்தைச் சேர்ந்த கேப்டன் எஸ்.பி. குட்டி எழுதிய புத்தகம். 1965ல் இந்தோ-பாக் போரில் பங்கேற்றவர். காஷ்மீரில் ராணுவ அதிகாரியாகப் பணியாற்றியவர். புத்தகத்தில் காஷ்மீர் முதல் போர், பாகிஸ்தான் ஊடுருவல், ஆக்கிரமிப்பு சதித்திட்டங்கள், ஐ.நா. விவாதங்கள், ஆர்டிகிள் 370 ஆகியன பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளன. காஷ்மீர் தொடர்பான இந்தியத் தரப்பு நியாயங்களையும், பாகிஸ்தானின் அத்துமீறல்களையும், இந்திய அரசியல்வாதிகளின் பிழைகளையும், பிரிட்டிஷாரின் தந்திரங்களையும் முழுமையாக விவரிக்கும் தமிழ்நூல் இது. ஒவ்வொரு […]

Read more

சிந்தனைச் சிற்பி ம. சிங்காரவேலரும் தந்தை பெரியாரும்

சிந்தனைச் சிற்பி ம. சிங்காரவேலரும் தந்தை பெரியாரும், முத்து. குணசேகரன், உலகத் தமிழாய்ச்சி நிறுவனம், விலை 105ரூ. 1923-ம் ஆண்டு மே 1-ந் தேதியை மே தினமாக முதன் முதலாகக் கொண்டாடியவர் சிந்தனைச் சிற்பி ம. சிங்காரவேலர். அது முதல்தான் “மே தினம்” கொண்டாடப்படுகிறது. பொது உடமை இயக்க முன்னோடி இவர். திராவிட இயக்கத்தின் முன்னோடி தந்தை பெரியார். பெரியாரும், சிங்காரவேலரும் 1932-ல் “சுயமரியாதை சமதர்ம இயக்கம்” என்ற பேரியக்கத்தை தொடங்கினர். அது பற்றி விரிவாகக் கூறும் சிறந்த நூல். நன்றி: தினத்தந்தி, 04/5/2016. […]

Read more
1 2 3 4