என்னுடைய பாரதம் மஹான்; என்னுடைய ராஜீவ் மஹான்

என்னுடைய பாரதம் மஹான்; என்னுடைய ராஜீவ் மஹான், சித்தார்த் மெடிகேர் வெளியீடு, விலை 210ரூ. ராஜீவ் காந்தி பற்றிய புத்தகம் முன்னாள் பிரதமரும், இந்திரா காந்தியின் மூத்த மகனுமான ராஜீவ் காந்தியின் வாழ்க்கையையும், அவர் படுகொலை செய்யப்பட்ட பின்னணியையும் விளக்கும் புத்தகம் “என்னுடைய பாரதம் மஹான்; என்னுடைய ராஜீவ் மஹான்.” இந்த நூலை டாக்டர் ஷரத் ராம்தேவ் சிக்ஜி இந்தியில் எழுத, இராமலட்சுமி தமிழில் மொழி பெயர்த்துள்ளார். மொழி பெயர்ப்பு சிறப்பாக உள்ளது. புத்தகத்தின் தலைப்புதான் புரியும்படி இல்லை. நன்றி: தினத்தந்தி, 29/3/2017.

Read more

சருகுகள்

சருகுகள், போசு, டினோ, பெர்லின், வைகறை பதிப்பகம், பக். 128, விலை 65ரூ. வீழ்ந்த பிறகும் நிலத்தின் ஈரப்பதத்தைத் தக்க வைக்கவும் தன்னை உருவாக்கிய மரத்திற்கே உரமாகவும் உருமாறும் சருகுகளின் பங்கு அதிகம். இதை அடிநாதமாகக் கொண்டு 18 சமூகப் பிரச்னைகளை இந்நூலில் நாடகவடிவில் அலசியிருக்கிறார்கள் மூன்று இளைஞர்கள். விழிப்பூட்டும் சிந்தனை நாடகங்கள். நன்றி: குமுதம், 22/2/2017.

Read more

சருகுகள்

சருகுகள், போசு, டினோ, பெர்லின், வைகறை பதிப்பகம், பக். 128, விலை 65ரூ. வீழ்ந்த பிறகும் நிலத்தின் ஈரப்பதத்தைத் தக்க வைக்கவும் தன்னை உருவாக்கிய மரத்திற்கே உரமாகவும் உருமாறும் சருகுகளின் பங்கு அதிகம். இதை அடிநாதமாகக் கொண்டு 18 சமூகப் பிரச்னைகளை இந்நூலில் நாடகவடிவில் அலசியிருக்கிறார்கள் மூன்று இளைஞர்கள். விழிப்பூட்டும் சிந்தனை நாடகங்கள். நன்றி: குமுதம், 22/2/2017.

Read more

வேடிக்கைப் பார்க்கிறான் மனிதன்

வேடிக்கைப் பார்க்கிறான் மனிதன், கோ. ராஜசேகர், வாசகன் பதிப்பகம், பக். 64, விலை 50ரூ. எரியும் அடுப்பாக அவள் வயிறும் அணைந்த நெருப்பாக அவள் கல்வியும் – என்று பெண் கல்வியின் நிலையை இதைவிட ஆணி அடித்த மாதிரி சொல்ல முடியாது. இப்படி நிறைய கவிதைகள் நிறைந்த நூல். இளம் கவிஞர்களுக்குப் பிடிக்கும். நன்றி: குமுதம், 22/2/2017.

Read more

நந்தவனங்கள் பேசுகின்றன

நந்தவனங்கள் பேசுகின்றன, மரியதெரசா, தென்றல் நிலையம், பக். 112, விலை 50ரூ. கல்வி, சாதி, முதியோர் இல்லம், குடிப்பழக்கம், உழைப்பு, நகம், கூந்தல், நா, வாழை, குழந்தை போன்ற தலைப்புகளில் ஒவ்வொன்றிலும் 100-ம், 50-ம் ஆக ஹைகூ வடிவில் கவிதைகள் படைத்துள்ளார். படிக்கப் படிக்க நற்பயன் நல்கும் கவிதைகள். நன்றி: குமுதம், 22/2/2017.

Read more

சிறிய தூண்டில் பெரிய மீன்

சிறிய தூண்டில் பெரிய மீன், மூ.இராசாராம், பழனியப்பா பிரதர்ஸ்,  பக்.174, விலை ரூ.155. சிறு சிறு முயற்சிகள் மூலம் பெரிய வெற்றிகளை எப்படிப் பெறுவது என்பதற்கான வழிமுறைகளைக் கூறும் நூல். நம்மிடம் அளவாக இருக்கும் சக்தியைப் பயன்படுத்தி அதிகமான பலன் பெறலாம் என்பதை சில முக்கிய மேற்கோள்கள் மூலம் சுவைபடக் கூறியுள்ளார். குறிப்பாக ரூ.1-க்கு விற்கப்படுகிறது என்ற பிரபல செய்தித்தாளின் விளம்பர உத்தி, இந்த  டிசைன்&#39 சேலைகள் இன்னும் மூன்று மட்டுமே எஞ்சியுள்ளன' என்ற ஜவுளிக் கடைக்காரரின் விளம்பரத் தந்திரம் போன்றவை வாடிக்கையாளர்கள் என்ற பெரிய […]

Read more

தொல்குடி வேளிர் வேந்தர்

தொல்குடி வேளிர் வேந்தர், பூங்குன்றன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 200ரூ. பழந்தமிழக வரலாற்றின் தொடக்கம், அதன் பின் உருவான தொல்குடிகள், நகரம் அமைப்பு, அரசு உருவாக்கம், வேந்தர்களின் வளர்ச்சி, வணிகப் பெருக்கம் போன்ற பல விவரங்களை ஆராய்ந்து இலக்கிய ஆதாரங்களுடன் விளக்கி இருப்பது தொல்பொருள் ஆர்வலர்களுக்கு வழிகாட்டி போல அமைந்து இருக்கிறது. நன்றி: தினத்தந்தி, 29/3/2017.   —-   ஞானத்தேடல், தென்றல் பதிப்பகம், விலை 75ரூ. ஆன்மிகக் கட்டுரைகள் கொண்ட புத்தகம். நூலாசிரியர் முனைவர் சி.ஆர். மஞ்சுளா, இக்கட்டுரைகளை இலக்கியத் […]

Read more

சேது காப்பியம்

சேது காப்பியம், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், கவியரசன் பதிப்பகம், விலை 600ரூ. பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் தன் வாழ்க்கை அனுபவங்களை பிரதிபலிக்கும் வகையில், “சேது காப்பியம்” (கவிதை வடிவில்) எழுதி வருகிறார். இப்போது 8-வது பகுதி வெளிவந்துள்ளது. இலங்கையில் உள்நாட்டுப்போர் வெடிப்பதற்கு முன்பே, தமிழ்ஈழ விடுதலையை வலியுறுத்தி அமெரிக்காவில் மாபெரும் மாநாடு நடத்திய டாக்டர் பஞ்சாட்சரம் பற்றி இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரை “மா.கோ.ரா” என்றே குறிப்பிடுகிறார், பெருங்கவிக்கோ. ஒரு இடத்திலாவது எம்.ஜி.ஆர். என்று அடைப்புக்குறிக்குள் குறிப்பிட்டால் பொதுமக்கள் புரிந்துகொள்ள உதவுமே. நன்றி: தினத்தந்தி, 29/3/2017.‘

Read more

வ.ரா. கதைக் களஞ்சியம்

வ.ரா. கதைக் களஞ்சியம், தொகுப்பாசிரியர் சு.சண்முகசுந்தரம், காவ்யா, பக்.864, விலை ரூ.850. சிறந்த எழுத்தாளரான வ.ரா. எழுதிய கட்டுரைகள் புகழ் பெற்ற அளவுக்கு, அவருடைய படைப்பிலக்கியங்கள் அறியப்படவில்லை. அவற்றைத் தேடிப் பிடித்துத் தொகுத்து நூலாக்கியிருக்கிறார்கள். தமிழில் வட்டார நாவல் என்ற ஒரு பிரிவு அறிமுகமாவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே (அன்றைய ஒன்றிணைந்த) தஞ்சை மாவட்ட மக்களின் பேச்சு மொழியையும் வாழ்க்கை முறையையும் தனது நாவல்களில் பதிவு செய்திருக்கிறார் வ.ரா. குறிப்பாக, ‘சுந்தரி 39 ’ நாவலில் இடம் பெறும் பூமரத்தாங்குடி, உளுத்தங்காடு ஆகிய இரு ஊர்களும் […]

Read more

தொல்குடி வேளிர் வேந்தர்

தொல்குடி வேளிர் வேந்தர் (பண்டைய தமிழகத்தில் அரசு உருவாக்கம் பற்றிய ஆய்வு), ர. பூங்குன்றன்,  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக்.252, விலை ரூ.200. ‘தமிழகத் தொல்லியல் ஆய்வுகள் தொடக்க நிலையிலேயே உள்ளன. தமிழக அகழாய்வுகள் குறைந்த அளவிலேயே நடைபெற்றுள்ளதால்தான் பண்டைய தமிழ்ச் சமூகம் தொடர்பான முழுமையான வரலாற்றுத் தரவுகள், விவரங்கள் நமக்குக் கிடைக்கவில்லை39‘ என்பன போன்ற பல குற்றச்சாட்டுகளை முன் வைக்கும் நூலாசிரியர், தம் மனக்குமுறல்களை இந்நூலின் மூலம் தீர்த்துக் கொண்டிருக்கிறார் – வெளிப்படுத்தியுள்ளார் என்று கூறலாம். அந்த வகையில், […]

Read more
1 404 405 406 407 408 841