ரகுநாதம் கட்டுரை கவிதை நாடகம்,

ரகுநாதம் கட்டுரை கவிதை நாடகம், பேரா. சண்முக சுந்தரம், காவ்யா, பக். 1120, விலை 1100ரூ. படைப்பாற்றலும் விமர்சனக் கூர்மையும் ஒருங்கே பெற்றவர் தொ.மு.சி. ரகுநாதன். முதுபெரும் எழுத்தாளரான தொ.மு.சி. பொதுவுடமைக் கருத்துக்களை எந்த சமரசமும் செய்யாமல் விதைத்த புரட்சியாளர். புதுமைப்பித்தனை இனம் கண்டவர். கதை, கவிதை, கட்டுரை, நாடகம், மொழிபெயர்ப்பு என பரந்துபட்ட இலக்கிய ஆளுமையாக ஆட்சி செய்தவர். அந்த வகையில் அவரது 100 கட்டுரைகள், 2 நாடகங்கள், 56க்கும் மேற்பட்ட கவிதைகளை உள்ளடக்கிய பொக்கிஷமாக இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. நன்றி: குமுதம், 4/1/2017.

Read more

செல்ஃபி எடுத்துக்கொள்கிறது மரம்

செல்ஃபி எடுத்துக்கொள்கிறது மரம், என். லிங்குசாமி, டிஸ்கவரி புக் பேலஸ், விலை 110ரூ. நல்ல கவிதைகளின் பயண வழியில் காணக்கிடைக்கும் தரிசனங்கள் மனதை மகத்தான நிலைகளுக்கு இட்டுச் செல்லக்கூடியவை. “கவிதை எழுதுவது ஒரு கலை. அதை தேடிக் கண்டுபிடிப்பது அனுபவம்” என்பார்கள். அப்படிப்பட்ட அனுபவமான ‘ஹைக்கூ’ கவிதைகளை எழுதியிருக்கிறார் லிங்குசாமி. இரண்டு, மூன்று வார்த்தைகளிலேயே சுள்ளென்று தைக்கும் வீரியம். சாவகாசமான மனநிலையில் படிக்க அமர்ந்தாலும் தரதரவென நம்மை ஆழமான பின் நினைவுகளுக்கு இழுத்துப் போகிறது. ‘ என்னவொரு நுணுக்கம்’ என சில கணங்கள் யோசிக்கத் […]

Read more

நோய் தீர்க்கும் சிவாலயங்கள்

நோய் தீர்க்கும் சிவாலயங்கள், டாக்டர் ச. தமிழரசன், தினத்தந்தி பதிப்பகம், பக். 160, விலை 150ரூ. சிவபெருமான் வீற்றிருக்கும் திருத்தலங்களில் நோய் தீர்க்கும் தலங்களாகக் கருதப்படும் ஆலயங்களுக்கு நேரில் சென்று தெய்வீகச் செய்திகளைச் சேகரித்து அதை விளக்கமாக ஆசிரியர் எடுத்துரைக்கிறார்.மேலும் அந்த நோய்கள் குறித்த மருத்துவக் கருத்துகளையும் கூறுகிறார். இந்த நூலில் பிணிகளைக் குணமாக்கும் வைத்தீஸ்வரன், தோல் நோய் தீர்த்த திருத்துருத்தி, சனி பகவானின் வாத நோய் போக்கிய திருவாதவூர், வலிப்பு நோய் விரட்டிய திருவாசி, சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர், புற்று நோயைக் […]

Read more

உடலும் உணவும்

உடலும் உணவும், டாக்டர் எஸ். அமுதகுமார், தினத்தந்தி பதிப்பகம், பக். 400, விலை 250ரூ. தினத்தந்தி நாளிதழில் ஞாயிறுதோறும் வெளிவரும் குடும்ப மலரில் டாக்டர் எஸ்.அமுதகுமார் 100 வாரங்கள் எழுதிய ‘உடலும் உணவும்’ என்ற மருத்துவக் கட்டுரையின் தொகுப்பே இந்த நூல். நமது முன்னோர்களின் வாழ்க்கை முறை இயற்கையோடு இணைந்திருந்தது. அதனால் அவர்கள் நீண்ட நாள் வாழ்ந்தார்கள். அந்த வகையில் நாம் உண்ணும் உணவுகளில் எது சிறந்தது; உடல் நலம் பேண எவ்வளவு தண்ணீர் தேவை; கோதுமை உணவு, அரிசி உணவு இவற்றில் எது […]

Read more

வ.ரா. கதைக்களஞ்சியம்

வ.ரா. கதைக்களஞ்சியம், தொகுப்பாசிரியர் முனைவர் சு. சண்முகசுந்தரம், காவ்யா வெளியீடு, விலை 850ரூ. “அக்கிரகாரத்து அதிசய மனிதர்” என்று பேரறிஞர் அண்ணாவால் புகழப்பட்டவர் “வ.ரா.” (வ. ராமசாமி), 1889-ல் தஞ்சை மாவட்டத்தில் பிறந்தவர். 1919?ல் மகாத்மா காந்தியும், மகாகவி பாரதியும் சந்தித்தபோது உடன் இருந்தவர். 1920 -ல் “சுதந்திரன்” என்ற சொந்த இதழை நடத்தியபோது, “கல்கி”யின் முதல் நாவலான “விமலா”வை தமது பத்திரிகையில் வெளியிட்டவர். 1933-ல் டி.எஸ். சொக்கலிங்கம், கு. சீனிவாசன் ஆகியோருடன் சேர்ந்து இவர் தொடங்கிய “மணிக்கொடி” இலக்கிய இதழ், புதுமைப்பித்தன் போன்றவர்களை […]

Read more

பால்வெளி (பேரண்டர் கவிதைகள்),

பால்வெளி (பேரண்டர் கவிதைகள்), கவிஞர் சி. ராமலிங்கம், மேன்மை வெளியீடு, பக். 192, விலை 150ரூ. மக்கள் மொழியில் மக்கள் பிரச்னையை முதன் முதலில் தமிழ்க் கவிதையில் பேசியவர் என்ற சிறப்பு பாரதிக்கே உண்டு. எதிலும் நடந்த வழியே நடந்து செல்லாமல் புதிய வழியில் செல்வோரைத்தான் வரலாறு பதிவு செய்யும், அந்த வகையில் தமிழ்க் கவிதையில் முதன் முதலில் அறிவியல் கருத்துக்களைப் பேசிய சிறப்பு இந்த நூலாசிரியர் கவிஞர் சி. ராமலிங்கத்தையே சேரும். பேரண்டம் குறித்த செய்திகளை இன்றைய செய்யுள் வடிவமான புதுக்கவிதையாகச் சொல்ல […]

Read more

கூட்டுறவு இயக்க முன்னோடிகள் வாழ்வும் தொண்டும்

கூட்டுறவு இயக்க முன்னோடிகள் வாழ்வும் தொண்டும், முனைவர் க. சிவாஜி, அலைகள், பக். 344, விலை 260ரூ. மனித உழைப்பின் கூட்டுச் சக்தியால் பொருட்கள், உணவு தானியங்கள் போன்ற அனைத்துப் பொருட்களும், உற்பத்தி செய்யப்படுகின்றன என்பது, பொதுவாக பலராலும் அறியப்பட்ட ஒன்றுதான்; என்றாலும், அந்தக் கூட்டுச் சக்தியை ஒன்று திரட்டி அதைச் செயலுக்குக் கொண்டு வந்தனர். அதாவது, முன்னோடிகளைப் பற்றிப் பலருக்கும் தெரியாது. அப்படிப்பட்ட முன்னோடிகளில் ஒன்பது பேரது வாழ்க்கை வரலாற்றையும், அவர்கள் ஆற்றிய பொதுத் தொண்டுகளையும் மிக விரிவாக எழுதியுள்ளார் ஆசிரியர். எல்.பி.சுவாமிக்கண்ணு […]

Read more

வரலாற்று உண்மைகள் தமிழ்மண், தமிழர், தமிழ் வரலாறு,

வரலாற்று உண்மைகள் தமிழ்மண், தமிழர், தமிழ் வரலாறு, தமிழ் புகழேந்தி, பத்மா பதிப்பகம். இந்நூல் தமிழக அரசு, தமிழ் வளர்ச்சித் துறை நிதியுதவி பெற்று வெளியிடப் பெற்றதாகும். இந்நூல் மூன்று பகுதிகளாகப் பிரித்து அமைக்கப்பட்டு உள்ளது. முதல் பகுதி வரலாற்றுப் பகுதி, 37 தலைப்புகளில் அமைகிறது. நூலாசிரியரின் புதிய கண்டுபிடிப்புகள் அடங்கிய கட்டுரைகள் உடுக்குறிகள் இட்டுக் காட்டப்பட்டுள்ளன. சேரன் செங்குட்டுவன் படையெடுப்பால் ஏற்பட்ட அவமானத்தைப் போக்கவே களப்பிரர் என்ற இனத்தினர், தமிழகத்தின் மீது போர் தொடுத்து ஆட்சியைக் கைப்பற்றினர் (பக். 50). இதுபோன்று வருவன […]

Read more

இந்தியாவின் தோற்றமும் வரலாறும்

இந்தியாவின் தோற்றமும் வரலாறும், கே. வெங்கட்ராமன், கவிதா பப்ளிகேஷன், பக். 352, விலை 250ரூ. ‘இந்தியா பிறந்தது’ முதல் ‘இந்தியா சுதந்திரம் அடைந்தது’ ஈறாக, 16 தலைப்புகளில் கற்கால மனிதர்கள், சிந்து சமவெளி நாகரிகம், வேத காலம், புத்த, ஜைன மத காலம், கிறிஸ்துவுக்குப் பின் இந்தியா, அரேபிய படையெடுப்பு, விஜயநகரப் பேரரசு, முகலாயப் பேரரசு, ஆங்கிலேயர் வருகை, இந்திய சுதந்திரம், செண்பகராமன் வரலாறு இப்படியாக நூலாசிரியர் தனக்குத் தெரிந்த கருத்துக்களை எல்லாம் இந்நூலில் பதிவு செய்துள்ளார். ‘இயக்கர்கள்’ என்ற பழங்குடியினர், ‘யக் ஷர்கள்’ […]

Read more

ஸ்ரீமத் இராமாயணத்தில் நங்கையர்

ஸ்ரீமத் இராமாயணத்தில் நங்கையர், தொகுப்பாசிரியர் ஜெ. சுவாமிநாதன், பக். 221, விலை 70ரூ. பெண்களுக்கு காலங்காலமாக அளிக்கப்படும் முக்கியத்துவத்தை, ஆசிரியர் இந்த நூலில் விளக்குகிறார்.‘தாய்மை’ என்பது பண்பையும், பாசத்தையும், ஒழுக்கத்தையும் தருவது என்ற விளக்கமும் உள்ளது. ராமபிரான் கானகம் சென்ற பின்னால், புயலுக்கு பின், அமைதியானவர் கைகேயி  என்றும், அவர் செய்த ஏற்க முடியாத செயலாக, மாங்கல்யத்தை கழற்றி எறிந்ததை புராணக் கருத்துக்களில் ஆசிரியர் விளக்குகிறார். அதே போல ராமாயணத்தில் திருப்புமுனைப் பாத்திரமாக, ‘கூனி’ வர்ணிக்கப்படுகிறார். இளமையிலே விதவையான சூர்ப்பனகை, ‘எதிர்நிலைப்பாத்திரம்’ என்று விளக்கி, […]

Read more
1 422 423 424 425 426 841