360 டிகிரி காதல் கதைகள்

360 டிகிரி காதல் கதைகள், ஜி.மீனாட்சி, வானதி பதிப்பகம், விலை: ரூ.150. எந்தக் காலத்திய காதல் என்றாலும், அந்தக் காதல் தொடர்பாக எழுதப்படும் கதைகள் அனைத்தும் ரசிக்கக் கூடியதாக இருக்கும் என்னும்போது, மனதையும் நிச்சயம் கவரும் என்பதை இந்த தற்காலக் காதலர்கள் பற்றிய கதைகள் அனைவர் நூல் நிரூபித்து இருக்கிறது. டீன் ஏஜ் காதலை விவரிக்கும் 5 கதைகள் இந்த நூலில் இடம்பெற்று இருக்கின்றன. ஒவ்வொரு கதையும் வெவ்வேறு கதைக்களன்களில் கட்டமைக்கப்பட்டு இருப்ப தால், 5 கதைகளையும் மனம் லயித்துப் படிக்க முடிகிறது. வெவ்வேறு […]

Read more

பதிபசு பாசப் பனுவல் மூலமும் உரையும்

பதிபசு பாசப் பனுவல் மூலமும் உரையும், மறைஞானசம்பந்தர், உரையாசிரியர் மறைஞானதேசிகர், டாக்டர் உ. வே. சாமிநாதையர் நூல் நிலையம், பக். 150, விலை ரூ. 135. சைவ நெறியில் சமயக் குரவர் நால்வர் இருப்பதுபோலவே சந்தானக் குரவர் நால்வர் உளர். அவர்கள் மெய்கண்டார், அருணந்தி சிவம், மறைஞானசம்பந்தர், உமாபதி சிவம் ஆகியோர். இவர்களுள் அருணந்தி சிவத்தின் மாணாக்கரான மறைஞானசம்பந்தர் எழுதியது இந்நூல். சைவ சித்தாந்தத்தின் நுண்கருத்துகளை விளக்கும் இந்நூலுக்கு காண்டிகை உரை வரைந்திருப்பவர் மறைஞானதேசிகர். ஒவ்வொரு பாடலும் திருக்குறள் போல ஏழு சீர்களோடு ஒன்றேமுக்கால் […]

Read more

தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் பாமாலை

தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் பாமாலை, வெளியீடு: உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், விலை:ரூ.40. நவதிருப்பதிகளில் ஒன்றான தென்திருப்பேரையில் உள்ள தெய்வமான மகர நெடுங்குழைக்காதர் மீது நம்மாழ்வார் பாடிய 100 பாடல்களும், அவற்றின் பொருளை உணர்ந்துகொள்ளுமாறு தமிழ்த்தாத்தா உ.வே.சாமி நாதையர் எழுதிய குறிப்புரையும் இதில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 17/4/22. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818  

Read more

கரிசல்காட்டு ஜமீன்தார்கள்

கரிசல்காட்டு ஜமீன்தார்கள், முத்தாலங்குறிச்சி காமராசு. காவ்யா. விலை: ரூ.270. கரிசல்காடு பரந்த பூமி என்றாலும், அதில் உள்ள இளையரசனேந்தல், குருவிகுளம் ஆகிய இரண்டு ஜமீன்கள் பற்றிய முழுமையான தகவல்களை இந்த நூல் தாங்கி இருக்கிறது. கட்டபொம்மனை தூக்கிலி டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், பிரித்தாளும் சூழ்ச்சியாக இளையரசனேந்தல் ஜமீனை ஆங்கிகலேயர்கள் இரண்டாகப் பிரித்தார்கள் என்றும், இப்போதும் அங்கே வெளிநாட்டு குளிர்பானங்கள் காணப்படுவது இல்லை என்றும் இந்த நூலில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. குருவிகுளம் ஜமீனின் அரண்மனை இப்போது தீப்பெட்டி கம்பெனியாக உள்ளது என்பதும் இதில் பதிவு செய்யப்பட்டு […]

Read more

சித்தர்களின் மனிதச் சார்பியல் கொள்கை

சித்தர்களின் மனிதச் சார்பியல் கொள்கை, குருதேவ் முத்துக்கொத்தள மாரியப்ப செல்வராஜ், நர்மதா பதிப்பகம், பக். 378, விலை ரூ.300. இன்றைய நவீன அறிவியலின் அடிப்படைக் கோட்பாடாக அமைந்தது, ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கோட்பாடு. ஆற்றலின் மதிப்பை அளவிட உதவும் இயற்பியல் கொள்கையான பொது சார்பியல் கோட்பாடு, பொருளின் நிறையையும் ஒளிவேகத்தின் இருமடங்கையும் பெருக்கினால் கிடைப்பதே ஆற்றலின் மதிப்பு என்று அளவிடுகிறது. இதை சுருக்கமாக E = mc2 என்ற சூத்திரமாக எழுதுவது வழக்கம். இது ஒரு வடிவியல் கணிதச் சமன்பாடாகும். அண்டத் தோற்றத்தை […]

Read more

அகத்தியர் நாடி சுவடிப்படி கன்னி ராசியின் பலா பலன்கள்

அகத்தியர் நாடி சுவடிப்படி கன்னி ராசியின் பலா பலன்கள், ஏ.பிரகஸ்பதி, நர்மதா பதிப்பகம், விலைரூ.90 அகஸ்தியர் வெளியிட்ட நுட்பங்களை ஆராய்ந்து கன்னி ராசிக்காரர்களுக்குப் பொருந்தும் வகையில் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 20 தலைப்புகளில் கன்னி ராசியில் அடங்கிய மூன்று நட்சத்திரப் பலன்களுக்கும் விளக்கம் உள்ளது. கன்னி ராசியும் அதன் சிறப்பு அம்சமும், நட்சத்திரப் பலன், கன்னி ராசியில் பிறந்த பெண்களின் பலன், கிரகங்களின் பொதுவான நட்பு, பகை, உறவு, நிலைகளின் விபரம், கன்னி லக்னமும், பிறந்த மாதப் பலன்களும் போன்ற தலைப்புகள், நாடி ஜோதிடக் […]

Read more

மகாபாரதத்தில் வரமும் சாபமும்

மகாபாரதத்தில் வரமும் சாபமும், இ.எஸ்.லலிதாமதி, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.230. நுாற்றுக்கணக்கான கிளைக்கதைகளைக் கொண்டது மகாபாரதம். அந்த கதையில் வரும் பாத்திரங்கள் ஏதாவது ஒரு காரணத்துக்காக வரம் கொடுப்பதும், சாபம் பெறுவதுமாக அமைந்துள்ளது. அது பற்றி விரிவாக உரைக்கும் நுால். மகாபாரதத்தில் கிருஷ்ணர், காந்தாரியிடம் சாபம் பெற்று பிறவி பயனை முடிக்கிறார். பண்டு, அர்ஜுனன், யயாதி, பரீட்சித், ஜனமே ஐயன், அசுவத்தாமன் என, சாபம் பெற்ற கதாபாத்திரங்களாகவே உள்ளன. குந்தி, காந்தாரி, சஞ்சயன், கிருஷ்ணர், துருபதன் போன்ற பாத்திரங்கள் வரம் பெற்றவை. […]

Read more

ஜீவன் லீலா

ஜீவன் லீலா, குஜராத்தியில் – காகா காலேல்கர், தமிழில் – பி.எம்.கிருஷ்ணசாமி, பக்.480, விலை ரூ.385. குஜராத்தியில் “லோகமாதா’ எனும் பெயரில் வெளியான நூலின் தமிழாக்கமே “ஜீவன் லீலா’. இந்தியா முழுவதும் குறுக்கும் நெடுக்குமாக காணப்படும் அருவி, ஆறு, ஏரி இவற்றோடு சேர்ந்த கடல், கடல்-ஆறு சங்கமம், கடற்கரை குறித்து 70 தலைப்புகளில் நூலாசிரியர் இந்நூலில் விவரித்துள்ளார். ஒவ்வொரு தலைப்பிலும் தனது பயண அனுபவங்களோடு அதன் பின்புலமாக உள்ள புராண – இதிகாச குறிப்புகள், வரலாறு, அங்கு வாழும் மக்கள், பறவைகள், விலங்குகள் உள்ளிட்ட […]

Read more

அந்தக் காலப் பக்கங்கள் – பாகம் 2

அந்தக் காலப் பக்கங்கள் – பாகம் 2, அரவிந்த் சுவாமிநாதன், தடம் பதிப்பகம், விலைரூ.160. ஆனந்த போதினியும், ஆரணி குப்புசாமி முதலியாரும் என்ற முதல் கட்டுரையைப் படித்ததும் பத்திரிகை, துப்பறியும் நாவல் துறையில் ஆர்வம் உள்ளவர்களையும் இழுத்துப் பிடிக்கிறது. ஆய்வு நடையில் வெளிப்படுத்தாமல் வெகுஜன நடையில் வெளிப்படுத்துகிறது. அந்தக் காலத்தில் தமிழ் எழுத்துகள் எப்படி இருந்தன என்பதை அறிந்துகொள்ளும் வகையில் படமாகவும் தந்துள்ளார். அந்தக் கால தீபாவளிப் படங்கள் என்னும் கட்டுரையில், ஆர்யமாலா, மீரா, வித்யாபதி, ருக்மாங்கதன், கஞ்சன், கன்னிகா, ராஜா விக்கிரமா போன்ற […]

Read more

மகிழ்ச்சிச் சிறகுகள்

மகிழ்ச்சிச் சிறகுகள், முனைவர் இளசை சுந்தரம், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.270 ‘தினமலர்’ நாளிதழில் வெளியான ‘என் பார்வை’ என்ற பல்துறை சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பே இந்நுால். அண்மையில் மறைந்த எழுத்தாளர் இளசை சுந்தரத்தின் கடைசி நுால். முன்னுரையிலேயே ‘நம்மால் முடியும்’ என்ற நம்பிக்கை விதைக்கிறார். காலம் எனும் சிற்பி நம்மை செதுக்கிக் கொண்டிருக்கிறான். அதில் நாம் சிற்பமா… இல்லை சிதறி விழும் கற்களா? சிற்பமாக வேண்டுமானால் சாதனை செய்ய வேண்டும். பூமியை படுக்கையாக்குவதும், பாதையாக்குவதும் நம் கையில் தான் உள்ளது. […]

Read more
1 5 6 7 8 9 841