நீ பாதி நான் பாதி

நீ பாதி நான் பாதி, பலரது கட்டுரைத் தொகுப்பு, அந்திமழை, பக். 128, விலை 110ரூ. இரு வேறு மனங்கள் இணைந்து மேற்கொள்ளும் இல்லறத்தில், மகிழ்ச்சியான மண வாழ்வின் தேடல்களிலேயே பலரது நாட்களும் நகர்கின்றன. கருத்தொருமிப்பு இல்லாமல் மேற்கொள்ளும் இல்லற வாழ்க்கை, கருத்து மாறுபாடுகளின் கன பரிமாணத்திற்கேற்ப துன்பத்தில் வீழ்ந்து விடுகிறது. குறைந்த சதவீதத்தினரே இதில் வெற்றி கண்டு, அன்பான இல்லற வாழ்க்கைக்கு முன்னுதாரணமாகத் திகழ்கின்றனர். ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து நேசித்து வாழும் சாமானியர்கள் பலரை, அன்றாட வாழ்வில் கண்டு வியப்பதுண்டு. தனி […]

Read more

நீ பாதி நான் பாதி மகிழ்ச்சியான மணவாழ்வின் ரகசியங்கள்

நீ பாதி நான் பாதி மகிழ்ச்சியான மணவாழ்வின் ரகசியங்கள், தொகுப்பு அந்திமழை ஆசிரியர் குழு, அந்திமழை, பக். 128, விலை 110ரூ. ‘அந்தி மழை’ மாத இதழில் ஆண்- பெண் உறவு, மண வாழ்க்கை தொடர்பாக வெளிவந்த கட்டுரைகள், நேர்காணல்கள், தகவல்கள், சமூக ஊடகங்களினால் ஏற்படும் ஆண்- பெண் உறவு பாதிப்புகள் மற்றும் நன்மைகள் பற்றி வந்த கருத்துகள் எல்லாம் நூல் வடிவில் தொகுக்கப்பட்டுள்ளன. கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு, நடிகர் சிவகுமார், சாலமன் பாப்பையா, சகாயம் ஐ.ஏ.எஸ்., டாக்டர் நாராயண ரெட்டி, கலாப்ரியா, எஸ்.ஏ.சந்திரசேகர் […]

Read more

அளவில் மிகச் சிறியவை அக்கறுப்பு மீன்கள்

அளவில் மிகச் சிறியவை அக்கறுப்பு மீன்கள், ஜீவன் பென்னி, மணல்வீடு வெளியீடு, விலை 90ரூ. உதிரி மனிதர்கள். ஜீவன் பென்னியின் இரண்டாவது கவிதைத் தொகுதி அளவில் மிகச் சிறியவை அக்கறுப்பு மீன்கள். அளவில் சிறியதும் பெரியதுமான இக்கவிதைகள் நகர வாழ்வின் உதிரி மனிதர்களைப் பற்றித்தான் அதிகம் பேசுகின்றன. நீள அகலங்களில் சிக்காது நகர வாழ்வின் கீழ் அடுக்குகளில் சுற்றித் திரியும் மனிதர்கள் தன் அழுக்குத் தோலுடன் நடமாடுகிறார்கள். உண்கிறார்கள். உணவகங்களில் கோப்பை கழுவுகிறார்கள். சீருடைக் காவலாளியாக சூரியனுக்குக் கீழே நிற்கறிர்கள். சமயங்களில் வெறுமனே இருக்கிறார்கள். […]

Read more

சதுர பிரபஞ்சம்

சதுர பிரபஞ்சம், கோ. வசந்தகுமாரன், டிஸ்கவரி புக் பேலஸ், விலை 200ரூ. கவி அனுபவம் ‘மின்மினிப் பூச்சிகளற்ற இரவை ஈடு செய்ய முடிவதில்லை நட்சத்திரங்களால்’ என்கிறது இத்தொகுப்பின் ஒரு கவிதை. அன்றாட வாழ்வின் சிறு சிறு சந்தோஷங்கள், துக்கங்கள், துக்க வீட்டில் அழும் காதலியைக் கண்டு கொள்ளும் காதல், எப்போதாவது பெய்யும் மழை மீதான கவிக்கோபம், குருட்டு பிச்சைக்காரியின் உடலைக் கொத்தும் கண்கள், குழந்தைகளின் குழந்தைத் தன்மை மீதான வாஞ்சை, சொற்களை செலவழித்துவிட்டனின் குரவளையை நெரிக்கும் மௌனம், தன்னிலை மீறும் வாழ்வின் யதார்த்தம் என […]

Read more

நாயகிகளின் நாயகன்

நாயகிகளின் நாயகன், சுரேஷ் பிரதீப், கிழக்கு பதிப்பகம், விலை 125ரூ. மாசிலன் என்ற தாத்தாவின் சாவுக்குச் செல்லும் பேரனின் மனநிலையை விவரிக்கும் கதையில் தொடங்கும் இத்தொகுப்பு ஊருக்கு அம்மாவுடன் செல்லும் பேரன் தாத்தா வெட்டிய குளத்தை ரசிக்கும் ஆலரசு குளம் என்ற சிறுகதையில் முடிவடைகிறது. இந்த இரண்டு ஊர்திரும்புதல்களுக்கு இடையே சுரேஷ் பிரதீப்பின் சிறுகதை உலகம் நம்மை நோக்கி விரிந்துகிடக்கிறது. தஞ்சைப் பகுதிக்கு உரிய வசைச்சொற்களும், உரையாடல்களும் நிறைந்த கதைகள். எல்லா கதைகளிலும் ஊரும் அங்கிருக்கும் உறவுகளின் ஏதோவொரு வகைப்பட்ட உணர்வுகளும்தான். அம்மாவிடம் இருந்து […]

Read more

புனைவுவெளி

புனைவுவெளி, நா. விச்வநாதன், பேசும் புதிய சக்தி வெளியீடு, விலை 150ரூ. படைப்புலகு தமிழ் இலக்கிய ஆளுமைகளை அவர்களின் எழுத்து வழியே அணுக முயற்சிக்கும் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். நகுலன், ப. சிங்காரம், லா.ச.ரா., எம்.வி.வெங்கட்ராம், தஞ்சை ப்ரகாஷ், ஜி. நாகராஜன் என எழுதிய காலத்தில் அதிகம் அறியப்படாத எழுத்தாளுமைகளின் மீது வாசக வெளிச்சம் பாய்ச்சும் முயற்சி இது. நகுலன் என்ற பெயர்க்காரணம், நகுலன் படைப்புகளின் அகவுலகப் பயணம், தத்துவ தரிசனம், சுயத்தை அழித்தல் பற்றிப் பேசும் நகுலனின் கவிதைகள் பற்றிய கட்டுரை தொகுப்பின் […]

Read more

சிந்தனை மலர்கள்

சிந்தனை மலர்கள், கவிஞர் தாரை வடிவேலன், நிவேதிதா பதிப்பகம், விலை 70ரூ. மரபில் திளைத்த தமிழ்ப்பற்று இது மரபுக்கவிதைகள் அடங்கிய தொகுப்பு. எல்லாப் பக்கங்களிலும் நிரம்பியிருப்பது ஆழமான தமிழ்ப்பற்றுதான் என்பதில் மிகையில்லை. உலகம் போற்றும் தமிழ், தமிழும் முதன்மை பெற வேண்டும். தமிழா தூங்கும் புலி என இராதே, நீரின்றித் தவிக்கும் தமிழகம், என அதிகமும் தமிழர் நலம் பேசும் மரபுக்கவிதைகள். சுற்றுச்சூழல் குறித்த மரபுக்கவிஞரின் அக்கறை கவனத்துக்குரியது. நன்றி: அந்திமழை, ஜுலை, 2017.

Read more

முகமறை

முகமறை, அகத்தியா, இனிய நந்தவனம், விலை 80ரூ. சாதாரணங்களின் பரவசம் ‘சமையலறைப் பாத்திரங்களையும் கழிவறைச் சாதனங்களையும் கழுவி முடித்த பின் அவளுக்குத் தரப்பட்டது தனித்தம்ளரில் தேநீர்.’ என்பது போன்ற புதுக்கவிதைகள் அடங்கிய நுல் இது. இது கவிஞரின் முதல் தொகுப்பு. அன்றாடங்களின் சாராம்சத்தை மெல்லிய உணர்ச்சிகளால் கவிதையாக்க முயன்றிருக்கிறார் கவிஞர். நன்றி: அந்திமழை, ஜுலை, 2017.

Read more

பொலிக பொலிக

பொலிக பொலிக, பா. ராகவன், கிழக்கு பதிப்பகம், விலை 325ரூ. நெகிழ்க, நெகிழ்க! ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு இது என்பதை ஒட்டி தினமலரில் 108 நாட்கள் தொடர்ந்து எழுதப்பட்ட தொடர், நூல் வடிவில் வெளியாகி உள்ளது. எந்த விஷயமாக இருந்தாலும் அதைத் தேனில் குழைத்து தருவதில் வல்லவர் பா.ராகவன். ராமானுஜர் குறித்த இந்த நூலும் அதற்கு எந்த விதத்திலும் குறையாமல் படுசுவாரசியமாக அமைந்துள்ளது. ராமானுஜர் பிறப்பதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்பாக ஆழ்வார்ப் பாசுரங்களைத் தொகுக்கிறார் நாதமுனி. அவரது கரங்களில் ராமானுஜரின் சிலை அதிசயமான முறையில் […]

Read more

விதானத்துச் சித்திரம்

விதானத்துச் சித்திரம், ரவி சுப்பிரமணியன், போதி வனம், விலை 100ரூ. அழகிய ஓவியம் ‘விதானத்துச் சித்திரம்’ – கவிஞர் ரவி சுப்பிரமணியனின் ஐந்தாவது கவிதைத் தொகுப்பு. தொகுப்பில் மொத்தம் 44 கவிதைகள் உள்ளன. பெரும்பாலான கவிதைகள் கற்பனையும் அழகான சொல் முறையும் கொண்ட கவிதைகள். அதனாலேயே நம் கவனம் ஈர்க்கின்றன. கோயிலும் கோயில் சார்ந்த வாழ்வும், அந்த வாழ்வு சார்ந்த கடந்தகால நினைவுகளும்தான் பாடுபொருள்கள். தொகுப்பில் ஆங்காங்கே சில அரசியல் பகடிக் கவிதைகளும் உண்டு (கேயாஸ் தியரி, மாண்புமிகு). பிரெய்லி விரல்களின் ஆரோகணத்தில் மறையும் […]

Read more
1 2 3 4 5 12