சனிபகவானின் பெருமை

சனிபகவானின் பெருமை, ராபர்ட் ஈ.ஸ்வோபோடா, தமிழில்  கீதா ஆனந்த், கண்ணதாசன் பதிப்பகம், பக்.272, விலை ரூ.170. சனி துன்பங்களைத் தரக் கூடியவர் என்று கருதப்படுகிறார். சனி தரும் துன்பத்தைக் குறைக்க என்ன செய்யலாம் என்று பலர் சோதிடர்களை நாடுகின்றனர். சனி மனிதர்களைப் பாதிப்பதைப் போலவே, மனிதர்களின் நடவடிக்கைகள் சனியின் செயல்களைப் பாதிக்கின்றன என்ற அடிப்படையில்தான் சோதிடர்கள் மனிதர்களுக்குப் பரிகாரங்களைக் கூறுகின்றனர். இந்த நூல் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய கிரகங்களைப் பற்றிய விரிவான அறிமுகத்தைத் தருகிறது. விக்கிரமாதித்தனை ஏழரை […]

Read more

சிந்தனைகளே நம்மை செதுக்குகின்றன

சிந்தனைகளே நம்மை செதுக்குகின்றன, த. இராமலிங்கம், கண்ணதாசன் பதிப்பகம், பக். 180, விலை 130ரூ. வாழ்க்கையை ஆடம்பரத்தாலும் இலவசங்களாலும் தொலைத்துவிட்ட பலருக்கு, அவர்களின் வாழ்வை முன்னேற்றும் விதமாக மனிதர்களின் சிந்தனைகளைச் செதுக்கித் தரும் நூல். படிப்பவர்களின் வாழ்வு முன்னேற்றம் காணும் என்பது உறுதி. நன்றி: குமுதம், 22/3/2017.

Read more

சிவபெருமானுடன் ஒரு திருநடனம்

சிவபெருமானுடன் ஒரு திருநடனம், சத்குரு சிவாய சுப்பிரமுனிய சுவாமி, தமிழில் கொரட்டூர் கே.என். ஸ்ரீநிவாஸ், கண்ணதாசன் பதிப்பகம், விலை 425ரூ. இந்து மதம் தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் பல்வேறுவித வினாக்களுக்கு விடை அளிக்கும் வகையில் சின்னச் சின்ன தலைப்புகளில் ஏராளமான விவரங்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. பிரபஞ்ச தோற்றம், கோவில்களின் அமைப்பு, சிவனின் திருநடன தத்துவம், இறைவழிபாடு, துறவு வாழ்ககை, திருவிழாக்கள், சடங்குகள் எனப் பல தகவல்கள் இதில் உள்ளன. ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் வேதங்கள், ஆகமங்கள், திருமந்திரம் ஆகியவற்றில் இருந்து மேற்கோள் காட்டி இருப்பது […]

Read more

தோல்வியை ருசியுங்கள் வெற்றியை ரசியுங்கள்

தோல்வியை ருசியுங்கள் வெற்றியை ரசியுங்கள், ‘ஆச்சி’ ஏ.டி. பத்மசிங் ஐசக், கண்ணதாசன் பதிப்பகம், பக்.320, சலுகை விலை 100ரூ. தொழில் மேதை ‘ஆச்சி’ ஏ.டி. பத்மசிங் ஐசக் தோல்விகளை எதிர்த்துப் போராடி தான் கண்ட வெற்றிகளை தன் வாழ்க்கை வரலாறு எழுதுவதுபோல, வருங்கால இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இந்நூலைப் படைத்துள்ளார். ஒவ்வொரு அத்தியாயத்திலும் தன் அனுபவங்களை வெற்றிக்கான சூத்திரமாகத் தந்துள்ளார். தான் பிறந்து வளர்ந்த சூழல் பள்ளிப்படிப்பு, கல்லூரிக்குப்பின் பார்த்த வேலை, மாதச் சம்பளத்தை உதறிவிட்டு, புதிய தொழில் தொடங்கியது. அவரது மனைவியின் ஒத்துழைப்பு, குடும்பத்தார் […]

Read more

இன்றைய பிள்ளைகளுக்கான வளர்ப்பு முறைகள்

இன்றைய பிள்ளைகளுக்கான வளர்ப்பு முறைகள், நளினி சந்திரசேகரன், கண்ணதாசன் பதிப்பகம், பக். 82, விலை 50ரூ. இன்றைய குழந்தைகள் மற்றும் பதின் பருவத்தினரைக் கையாளும் வழிகளை, எளிய நடையில் விளக்குகிறது. குழந்தைகள் வளர்ப்பதை, பெற்றோரும் ஒரு சவாலாகவே பார்க்க ஆரம்பித்துவிட்டனர். இப்புத்தகம் பிள்ளை வளர்ப்பு யுக்திகள் மட்டுமல்லாமல், தம்பதிகளுக்குள் ஒற்றுமை, பெண்களின் மன அழுத்தம் போக்கும் வழிகள் இவற்றையும் கூறுகிறது. நன்றி: தினமலர், 13/1/2017.

Read more

தில்லை என்னும் திருத்தலம்

தில்லை என்னும் திருத்தலம், முனைவர் சந்திரிகா சுப்ரமண்யன், கண்ணதாசன் பதிப்பகம், முனைவர் சந்திரிகா சுப்ரமண்யன் எழுதிய இந்த இரு நூல்களில் முதலாவது முற்றிலும் ஆங்கிலமாகும். எம்பெருமான் நடம்புரிந்த பெருமைகளை பல்வேறு பெரும் மகான்கள் பாடியும், எழுதியும் வைத்திருக்கின்றனர். திருச்சிற்றம்பலம் என்னும் தில்லை அத்வைத நெறிக்கு ஆதாரமான இடம். சைவநெறியைக் காட்டும் கலங்கரை விளக்கம். புராணங்கள், நாயன்மார்கள் பாடல்கள் உட்பட பல, சிவனை வழிபட்டால், சிந்தை தெளிய வழி உண்டு என்கின்றன. ஆகவே, மங்கலத்தை நமக்கு தருபவன் சிவன் என்ற கோட்பாடுகளை ஆசிரியர் இதில் விளக்குகிறார். […]

Read more

சிவபெருமானுடன் ஒரு திருநடனம்

சிவபெருமானுடன் ஒரு திருநடனம், (ஆன்மீக உலகை வழிநடத்தும் இந்துமதம்), சத்குரு சிவாய் சுப்பிரமுனியசுவாமி, தமிழில் கொரட்டூர் கே.என். ஸ்ரீனிவாசஸ், கண்ணதாசன் பதிப்பகம், பக். 648, விலை 425ரூ. இறைவனான நடராசப் பெருமான், ஐந்தெழுத்தில் (நமசிவாய) நடனமாடியே ஐந்தொழில்களையும் நடத்துகிறார் என்பது சைவ சித்தாந்தம் கூறும் உண்மை. உலகத் தோற்றத்திற்கு அவரது திருநடனமே மூலகாரணம். “ஞானியரும்,யோகியரும், முனிவரும் கடவுளை விவரிக்க இறைவனின் நடனத்தினையே தெரிவு செய்து கூறியதில் சிறந்த காரணங்கள் உள்ளன. நாம் இருக்கும் இருப்பின் அடிப்படையே, சலனம்தான் – அதாவது மூவ்மென்ட் . இந்த […]

Read more

நான் ப்ரம்மம் (முதல் பகுதி)

நான் ப்ரம்மம் (முதல் பகுதி), மராத்தி ஒலிப்பதிவுகள், ஸ்ரீ நிசர்கதத்த மஹராஜ், ஆங்கிலத்தில் மோரிஸ் பிரைட்டன், தமிழில் சி. அர்த்தநாரீஸ்வரன், கண்ணதாசன் பதிப்பகம், பக். 408, விலை 250ரூ. இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவின் மிகப் பெரும் ஞானிகளில் ஒருவராகக் கருதப்பட்டவர் ஸ்ரீ நிசர்கத்த மஹராஜ். மஹாராஷ்டிராவில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த இவருக்கு மாருதி என்பதே இயற்பெயர். திருமணம் செய்து கொண்டு (ஒரு மகன், மூன்று மகள்கள்) சிறு வியாபாரம் செய்வதன் மூலம் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தவருக்கு, ஸ்ரீசித்தராமேஷ்வர் மஹராஜ் என்ற ஆன்மிக குரு […]

Read more

குழந்தைகளின் மனநலம்

குழந்தைகளின் மனநலம், A. வினோத்குமார், கண்ணதாசன் பதிப்பகம், பக். 245, விலை 160ரூ. குழந்தைகள் கருவில் உருவாவதிலிருந்து அவர்களின் வளர்ச்சி நிலை, வளர்ப்பு நிலை, பெற்றோரின் கடமை, சுற்றுச்சூழல், குழந்தைகளிடம் காணப்படும் பயம், ஆண் – பெண் பாகுபாடு, குழந்தைகள் படிப்பு என்று குழந்தைகளின் உலகிற்குள் சென்று அவர்களைப் புரிந்துகொள்ள உதவும் நூல். நன்றி: குமுதம், 28/9/2016.

Read more

குழந்தைகள் மன நலம்

குழந்தைகள் மன நலம், கண்ணதாசன் பதிப்பகம், விலை 160ரூ. இன்றைய குழந்தைகள் மிகச் சிறந்த அறிவாற்றலைக் கொண்டிருக்கிறார்கள். அதை எவ்வாறு உணர்வது, எப்படி அவர்களது மனநலத்தைப் பாதுகாப்பது? எப்படி சரியான வழியில் சரியான திசையில் கொண்டு செல்வது என்ற வழிகாட்டலுக்குத் தகுதி படைத்த நூலாக படைத்திருக்கிறார் மருத்துவ உளவியலாளர் ஏ. வினோத்குமார். நன்றி: தினத்தந்தி, 28/9/2016.   —-   தமிழே என்னுயிரே, சு. திருநாவுக்கரசு, தேன்பழனி பதிப்பகம், விலை 150ரூ. காலத்திற்கு ஏற்ற வகையில் 76 வெவ்வேறு தலைப்புகளில் தொகுக்கப்பட்டு உள்ள மரபுக் […]

Read more
1 3 4 5 6 7 15