இன்றைய பிள்ளைகளுக்கான வளர்ப்பு முறைகள்

இன்றைய பிள்ளைகளுக்கான வளர்ப்பு முறைகள், உளவியல் நிபுணர் நளினி சந்திரசேகரன், கண்ணதாசன் பதிப்பகம், விலை 50ரூ. குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும், எப்படி வளர்த்தால் அவர்களுடைய எதிர்காலம் சிறப்பானதாக இருக்கும் என்று இந்த நூலில் விளக்கியுள்ளார், உளவியல் நிபுணர் நளினி சந்திரசேகரன். நன்றி: தினத்தந்தி, 6/12/2017.

Read more

உங்கள் வருங்காலத்தைச் செதுக்குங்கள்

உங்கள் வருங்காலத்தைச் செதுக்குங்கள், அப்துல்கலாம், தமிழில் சிவதர்ஷினி, கண்ணதாசன் பதிப்பகம், பக். 240, விலை 150ரூ. “பெரும் இடையூறுகளைக் கடந்து என்னால் சாதிக்க முடிந்திருக்கிறது என்றால், அதுபோலவே யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம். இதுதான் இந்தப் புத்தகத்தின் வாயிலாக நான் சொல்ல விரும்பும் செய்தியாகும்” என்கிறார் நூலாசிரியர் அப்துல் கலாம். இந்திய இளைஞர்களின் மனதிலுள்ள நுட்பமான பிரச்னைகளை கேள்வி – பதில் வடிவில் அலசி ஆராயும் நூல். நன்றி: குமுதம்

Read more

ஒளிந்திருப்பது ஒன்றல்ல

ஒளிந்திருப்பது ஒன்றல்ல, ஓஷோ, கண்ணதாசன் பதிப்பகம், விலை 150ரூ. இன்றைய அவசர உலகில் உடலும் மனமும் நலமாக இருக்க, விழிப்பு உணர்வுடன் வாழ எளிய முறையில் உங்கள் மனநிலைக்குப் பொருத்தமான தியானத்தை விளையாட்டாகவே தேர்வு செய்வது எப்படி? சூட்சுமத்தை சொல்லித் தந்திருக்கிறார் ஓஷோ. தியானத்தைக் கைக்கொள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு யுக்தி. அதைத் தெரிந்து கொள்ள வழிகாட்டும் நூல். நன்றி: குமுதம், 2/8/2017

Read more

ரிப்லெக்ஸாலஜி: தொடு சிகிச்சை மருத்துவம்

ரிப்லெக்ஸாலஜி: தொடு சிகிச்சை மருத்துவம், பெரில் கிரேன், கண்மணிசுப்பு, கண்ணதாசன் பதிப்பகம், பக்.128, விலை 80ரூ. நோய்கள் ஒரே நாளில் வந்துவிடுவதில்லை. நோய்கள் வந்து முற்றிடும் வரை பலர் அதற்கு முக்கியத்துவம் தந்துவிடுவதில்லை. இன்றைய அறிவியல் யுகத்திலும், உலகளாவிய பலவற்றை அறிந்தவர்களாகக் காட்டிக்கொள்பவர்களில் பலர் தங்கள் உடல் உறுப்புகளையோ, அவற்றின் இயக்கத்தையோ, பலவீனத்தையோ அறியாதவர்களாகவே இருக்கின்றனர். மருத்துவத்தின் மீதான அச்சமும் செலவினங்களும் அச்சம் தருவதாகவும் அமைகின்றன. ஆனால், கி.மு., காலத்திலேயே நம்மவர்கள் உடல் தகுதியில் நாட்டமுள்ளவர்களாக இருந்து, ஒவ்வொரு உறுப்புக்கும் உகந்த மூலிகை மருத்துவத்தில் வல்லுனர்களாக […]

Read more

ஓஷோ உயர் வேதம்

ஓஷோ உயர் வேதம், ஓஷோ, கே.என்.ஸ்ரீனிவாஸ், கண்ணதாசன் பதிப்பகம், பக். 560, விலை 360ரூ. வாழ்க்கையை அதன்வழி ஏற்றுக் கொண்டு ஞானம் எய்துவது எப்படி என்பதே உயர்வேதம் எனும் இந்நூலின் இலக்கு. துன்பங்கள் எத்தனை நேர்ந்தாலும் அவற்றை நினைவில் கொள்ளாமல் எப்படி வெல்வது என்பதை ஆணித்தரமாய் அஞ்ஞானிகளுக்கு விரித்துக் காட்டுவதே இந்நூலின் நோக்கம். இன்றைய சமுதாயம் எதிர் கொண்டுள்ள அரசியல் பிரச்னைகளுக்கும், வெகு அவசரமான சமூக பிரச்னைகளுக்கும் விடை தேடும் தனி நபர்களின் தாகத்தை தணிக்க கூடியதாய் விளங்குகிறது. வாழ்க்கை முறைகள் பற்றியும், தியானங்கள் […]

Read more

தம்மபதம் – புத்தரின் வழி

தம்மபதம் – புத்தரின் வழி, கண்ணதாசன் பதிப்பகம், விலை 280ரூ. ஆன்மிக சொற்பொழிவுகள் நிகழ்த்துவதில் உலகப்புகழ் பெற்றவர் ஓஷோ. புத்தரைப் பற்றியும், புத்த மதத்தின் சிறப்புகள் பற்றியும் அவர் நிகழ்த்திய சொற்பொழிவுகள் கொண்டது இந்த நூல். ஓஷோ ஆங்கிலத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகளை, உணர்ச்சிமயமான தமிழில் மொழிபெயர்த்திருப்பவர் பேராசிரியர் டாக்டர் என். ரமணி. சிந்தனைக்கு விருந்தாகும் நூல். நன்றி: தினத்தந்தி, 9/8/2017.

Read more

உன்னால் கடக்க முடியும்

உன்னால் கடக்க முடியும், ஓஷோ, தமிழில் வானமாமலை, கண்ணதாசன் பதிப்பகம், விலை 200ரூ. எங்கும் மணலே நிறைந்திருக்கும் பாலைவனத்தில் செல்லும் பாதை எது? அதன் எல்லை எங்கே இருக்கிறது? அந்தப் பாதையில் சென்ற அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே அறிவர். வாழ்க்கையும் அந்த மணல் பாதைபோல்தான். அதில் நாம் செல்லும் பாதைக்கு வழிகாட்டி, செல்ல வேண்டிய எல்லைக்கு அழைத்துச் செல்கிறார் ஓஷோ. வழிகாட்டியை முழுமையாக நம்பினால்தான் பயணத்தை முழுமையாக ரசிக்க முடியும் என்கிறார். வாழ்வின் மறுபுறம் மறைந்துள்ள மகிழ்ச்சியைக் காண்பதற்கான சூஃபி தத்துவம் எளிய முறையில் […]

Read more

சிந்தனைகளே நம்மை செதுக்குகின்றன

சிந்தனைகளே நம்மை செதுக்குகின்றன, வழக்கறிஞர் த. ராமலிங்கம், கண்ணதாசன் பதிப்பகம், பக். 180, விலை 130ரூ. சிந்தனையில் தெளிவும், சிந்தனையில் ஆழமும் மானுட வளர்ச்சிக்கெல்லாம் மூல ஆதாரம்; தெளிவான சிந்தனையில் தான் ஆழமான சிந்தனைகள் தோன்றுகின்றன. உயர்ந்த சிந்தனைகளே நம்மை உயரத்துக்குக் கொண்டு செல்கின்றன. யாரும் சிந்திக்காத கோணத்தில் சிந்தித்த நியூட்டன், காந்தியடிகள், அம்பேத்கர், ஈ.வெ.ரா., காமராஜர் போன்றோர் வரலாறு படைத்துள்ளனர். நம் சிந்தனைகளையே உளியாகக் கொண்டு நம்மை செதுக்கும்போது, நம்மிடம் உள்ள தேவையற்றவை கழிந்து போகின்றன. உள்ளே மறைந்து கிடக்கும் நம் திறமைகள் […]

Read more

நிலைத்து நிற்கும் வாழ்க்கைத் தத்துவங்கள்

நிலைத்து நிற்கும் வாழ்க்கைத் தத்துவங்கள், பாகம் ஒன்று, ஓஷோ, தமிழில் சிவதர்ஷிணி, கண்ணதாசன் பதிப்பகம், பக். 356, விலை 210ரூ. உலகில் உள்ள எந்த ஒரு பல்கலைக்கழகமும் கிரேக்க அறிஞர் பிதாகோரஸ் பற்றிக் கவலைப்பட்டதே இல்லை. அதற்கான எளிய காரணம், வழக்கமான வகையைச் சேர்ந்த கல்வியாளராக அவர் இருக்கவில்லை. அவர் நிஜமான தேடல் கொண்டிருந்தார். தன் வாழ்நாள் முழுவதையும் பயணத்திலேயே கழித்தார். ஞானத்தின் ஒளிக்கீற்று எங்காவது ஒரு மனிதரிடம் சற்றே தென்பட்டாலும் அங்கு சென்று அவரிடம் கொஞ்சம் தெரிந்து கொள்ள முடியும் என்று எண்ணினார். […]

Read more

அறியாமையிலிருந்து களங்கமின்மைக்கு

அறியாமையிலிருந்து களங்கமின்மைக்கு, ஓஷோ, தமிழில் சுவாமி சியாமானந்த், கண்ணதாசன் பதிப்பகம், பக். 336, விலை 200ரூ. அமெரிக்காவில் ஓஷோ தனது சீடர்களுடன் இருந்த வாழ்க்கை, அரசியல்வாதிகளை நடுங்க வைத்த அவரது உரை, மக்களை மாற்றிய அவரது சிந்தனைகள், அவரை எதிர்த்த அரசியல்வாதிகளுக்கு தனது சொற்பொழிவுகளில் பதில் அடி கொடுத்து, அதற்கான கேள்விகள், பதில்கள் என்று ஓஷோவிற்கே உரிய கடுமையான அதே சமயம் நகைச்சுவையான பேச்சினை உள்ளடக்கியது இந்நூல். நன்றி: குமுதம், 24/5/2017.

Read more
1 2 3 4 5 6 15