உன் மீதமர்ந்த பறவை

உன் மீதமர்ந்த பறவை, பழநிபாரதி, குமரன் பதிப்பகம், சென்னை, பக். 80, விலை 80ரூ. வாழ்வில் ஒருமுறையாவது ஒரு கவிதையாவது ஒரு மனிதன் எழுதிவிட வேண்டும். அப்போதுதான் அசலான மனிதனாக அவன் அவனை உணரும் தருணம் வரும் என்பார் கவிஞர் கந்தர்வன். அவர் சொன்ன அந்த அபூர்வ கணங்களை, உன் மீதமர்ந்த பறவை என்ற தமது கவிதைத் தொகுப்பில் காட்சியாகவும் சாட்சியாகவும் மாற்றியுள்ளார் கவிஞர் பழநிபாரதி. முன்னுரை என்பது ஒரு கோபுரத்தின் நுழைவாயிலைப் போன்றது. அது வசீகரிக்க வேண்டும். பிரம்மாண்டத்தின் ஒரு துளி ருசியை […]

Read more

பறவைகளும் சிறகுகளும்

பறவைகளும் சிறகுகளும், பாஸ்கர் சக்தி, கயன் கவின் புக்ஸ், சென்னை, பக். 152, விலை 110ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-865-9.html பெண்கள் பறவைகளாக… தேடல் சிறகுகளாக… நீ உன் சொந்த விஷயத்தை எழுதலாம். ஆனால் உன் எழுத்து அதை ஒரு பொது அனுபவமாக மாற்ற வேண்டும்.  இல்லாவிடில் அது வெறும் சுயபுராணமாகிவிடும் என்ற எழுத்தாளர் சுப்ரமண்ய ராஜுவின் வார்த்தைகளுக்கு ஏற்ப பாஸ்கர்சக்தியின் அனுபவம் பொது அனுபவமாக மாறும் மந்திரம்தான் இக்கட்டுரைகளின் சிறப்பும். இயல்பான வாழ்க்கையைப் பதிவு செய்யும் கட்டுரைகள் […]

Read more

உழைப்பின் நிறம் கருப்பு

உழைப்பின் நிறம் கருப்பு, ஆரிசன், தளிர் பதிப்பகம், சாத்தூர், பக். 112, விலை 100ரூ. அருகில் வரும் வானம் நுட்பமான மன உணர்வுகளைச் செறிவாக மொழியில் சிற்சில சொற்களில் எழிலுறச் சித்தரித்தல் ஹைக்கூ கவிதையின் சிறப்பு. அவ்வகையில் ஆரிசன் எழுதியுள்ள உழைப்பின் நிறம் கருப்பு எனும் ஹைக்கூ கவிதைத் தொகுப்பு வித்தியாசமான பின்புலத்தில் எழுதப்பட்டுள்ளது. உலகமயமாதல், இயற்கையை நேசித்தல், உழைப்பின் மேன்மை ஆகிய தளங்களில் கவிஞரின் பார்வை சிறகடித்துப் பறப்பதைக் காணலாம். தவிர தினந்தோறும் அலுக்காமல் சலிக்காமல் உழைக்கும் அந்த வர்க்கத்துக்காக ஆரிசன் குரல் […]

Read more

சாதனையின் மறுபெயர் சர்.சி.பி.

சாதனையின் மறுபெயர் சர்.சி.பி., ச. இராசமாணிக்கம், சந்தியா பதிப்பகம், சென்னை, விலை 165ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-210-3.html ஒரு மனிதனின் உயர்வு என்பது அவருடைய தாயார் அவரை வளர்க்கும் விதத்தில் இருக்கிறது என்பார்கள். இது சர்.சி.பி. என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட சட்ட மேதை, திருவாங்கூர் திவானாக இருந்து, பல பிரச்னைகளையும் எதிர்கொண்ட சி.பி. ராமசாமி அய்யருக்குப் பொருந்துகிற மாதிரி வெகு சிலருக்கே பொருந்தும். சி.பி. அவர்களின் கொடையுள்ளம் அவருடைய தாயார் ரங்கம்மாள் தந்த சீதனம். இருபத்து மூன்று வயது […]

Read more

பிக்சல்

பிக்சல், டிஜிட்டல் ஒளிப்பதிவு நூல், சி.ஜெ.ராஜ்குமார், டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை, பக். 176, விலை 230ரூ.   To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-210-6.html சிறந்த பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய ராஜ்குமாரின் நூல் இது. தமிழில் தொழில்நுட்ப நூல்கள் குறைவு. அதிலும் சினிமா தொழில்நுட்ப நூல்கள் அரிது. அந்த இடைவெளியை நிரப்ப வந்துள்ளது இந்நூல். ஃபிலிம் மேக்கிங்கில் தொழில்நுட்ப புரட்சி ஏற்பட்டதனால் பல புதிய இளைஞர்கள் பிரகாசிக்க முடிகிறது. இந்நூல் அப்படி வெளிவரும் புதிய கேமிராமேன்களுக்கும் விஸ்வபகாம் மாணவர்களுக்கும் […]

Read more

ஹாரிபாட்டரும் ரசவாதக்கல்லும்

ஹாரிபாட்டரும் ரசவாதக்கல்லும், ஜே.கே. ரௌலிங், தமிழில் பி.எஸ்.வி. குமாரசாமி, மஞ்சுள் பப்ளிஷிங், நியூ டெல்லி, விலை 299ரூ. இங்கிலாந்தில் பிறந்த ஜே.கே. ரௌலிங்குக்கு அடுத்த ஆண்டுதான் ஐம்பது வயது நிறைவடைகிறது. அதற்குள் இவரது சொத்து மதிப்பு இங்கிலாந்து ராணியின் சொத்து மதிப்பைவிடவும் அதிகமாகிவிட்டது என்கிறார்கள். கணவன், மூன்று குழந்தைகளோடு எடின்பர்க் நகரில் வசிக்கும் ரௌலிங் சம்பாதித்த சொத்து அவ்வளவும் எழுதிச் சம்பாதித்தது என்பதை நம்மவர்கள் நம்புவது சிரமமோ சிரமம். 1997ஆம் ஆண்டில் வெளியான ஹாரி பாட்டர் அண்ட் பிலாஸபர்ஸ் ஸ்டோன் என்ற முதல் தொகுப்பு […]

Read more

இரண்டு வரி காவியம்

இரண்டு வரி காவியம், திருக்குறள் தெளிவுரை, பட்டுக்கோட்டை பிரபாகர், ரம்யா பிரியா கிரியேஷன்ஸ் வெளியீடு, விலை 150ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-228-4.html நறுக்கென்று ஒரு திருக்குறள் உரை திருக்குறளுக்குப் பரிமேலழகர் போன்ற ஜாம்பவான்கள் முதல், சென்ற நூற்றாண்டின் டாக்டர் மு.வ. வழி ஆயிரக்கணக்கில் உரை எழுதியிருக்கிறார்கள். இப்போது கதாசிரியர், நாவலாசிரியர் பட்டுக்கோட்டை பிரபாகர் நடைமுறைத் தமிழில் சரளமாக எழுதியுள்ள உரை விளக்கம் முற்றிலும் வித்தியாசமானது. ஒவ்வொரு அதிகாரத்தின் கடைசியிலும் நறுக்கென்று இரண்டே சொற்களில் மையக் கருத்தைச் சொல்லியுள்ள பாங்கு […]

Read more

ஜென்னல்

ஜென்னல், சத்குரு, எழுத்தாக்கம் சுபா, தங்கத் தாமரை பதிப்பகம், சென்னை, விலை 125ரூ. ஸெங்காய் என்னும் ஜென் குருவிடம் குடும்பத்தோடு போய் ஆசி வேண்டினான் ஓர் அரசன். உன் தந்தை இறப்பார், நீ இறப்பாய், உன் மகன் இறப்பான், உன் பேரக்குழந்தை இறக்கும் என்று ஆசி வழங்கினாராம் அந்த ஞானி. மனம் நொந்துபோன அரசன் நல்ல வார்த்தையாகச் சொல்லக் கூடாதா? என்று கேட்டபோது, இதை விடச் சிறந்த ஆசிர்வாதம் வேறு என்ன இருக்க முடியும்? என்று வேறு அவர் கேட்டாராம். இந்த ஜென் கதையை […]

Read more

இசையின் சித்திரங்கள்

இசையின் சித்திரங்கள், எம்.எஸ். சுப்புலட்சுமி, எழுத்து லக்ஷ்மி தேவ்நாத், ஹெரிடேஜ் பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை, விலை 72ரூ. சித்திரமடலில் இசையரசி காமிக்ஸ் என்று வழங்கப்படுகிற வண்ணம் சித்திர மடலாக இசையரசி எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் வாழ்க்கை வரலாற்றைத் தந்திருக்கிறார்கள் ஹெரிடேஜ் வெளியீட்டகத்தார். லக்ஷ்மி தேவ்நாத் எழுதி, ஓவியர் அரஸ் கைவண்ணத்தில் வெளியாகியுள்ள இச்சிறு நூலில் குழந்தை சுப்புலக்ஷ்மி குஞ்சாவிலிருந்து, உச்ச நிலையை எட்டி அமரத்துவம் பெறுகிறவரை, ஒரு குறும்படம் பார்ப்பது போன்ற அனுபவத்தோடு படித்தும் பார்த்தும் மகிழலாம். அடிக்குறிப்பு விவரங்களில் அரியக்குடி போன்றவர்களின் காலமும் […]

Read more

வைரமணிக் கதைகள்

வைரமணிக் கதைகள், வையவன், தாரிணி பதிப்பகம், சென்னை, விலை 450ரூ. அற்புதமான சிறுகதைகளைத் தருகிறவர் வையவன். பல்வேறு காலகட்டங்களில் எழுதியுள்ள எண்பது சிறுகதைகளை வைரமணிக் கதைகள் என்ற மகுடமிட்டு ஒரே தொகுதியாக வெளியிட்டிருக்கிறார். ஒவ்வொன்றிலும் இயல்பாக இழையோடுகிறது அப்பழுக்கற்ற மனிதம். இந்தக் கதைதான் சிறந்தது என்று குறிப்பிட்டு ஒன்றைச் சொல்லமுடியாத சங்கடத்தை நியாயமான விமர்சகனுக்கு ஏற்படுத்துகிற தொகுப்பு இது. பெரும்பாலான கதைகளில் கிராமப்புற அழகுகளை மிகைப்படுத்தலில்லாமல் சொல்லியிருக்கும் ஆற்றல் வையவன் போன்ற வெகு சிலருக்கே கைவரக்கூடிய ஒன்று. மார்க்ஸ் ஆகப் பெயர் மாற்றம் பெற்ற […]

Read more
1 4 5 6 7 8 12