சுவடுகள் நெய்த பாதை

சுவடுகள் நெய்த பாதை(கவிதைகள்), பா. கிருஷ்ணன், தகிதா பதிப்பகம், விலை 60ரூ. காட்சியை ஜெயித்த கவிதைகள் To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-209-1.html பத்திரிகையாளரான பா. கிருஷ்ணன் சிறந்த கவிஞரும்கூட. அவரின் கவிதை ஆற்றலை நிரூபிக்க வந்திருக்கும் கவிதை நூல்தான் சுவடுகள் நெய்த பாதை. இந்தத் தொகுப்பை கவிதையாகவே நெய்வதற்குக் காரணமாய் புகைப்படங்களே அமைந்துள்ளது. ஒரு படத்துக்கு ஒரு கவிதை என அமைந்துள்ள இத்தொகுப்பில் எதற்கு எது ஆதாரம் எனக் கண்டுபிடிக்க முடியாதபடி திகைக்க வைக்கிறது. கண்ணுக்கும் கருத்துக்கும் இதமான பயணத்தைத் […]

Read more

காற்றின் குரல்

காற்றின் குரல், திருப்பூர் கிருஷ்ணன், திருப்பூர் குமரன் பதிப்பகம், சென்னை 92, பக். 264, விலை 250ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-216-7.html தெய்வீக இலக்கியமான இராமாயணத்தை நினைத்த நேரத்தில், நினைத்தபடி அனுபவித்து மகிழலாம். ஒவ்வொரு சிறு நிகழ்வையும் மையப்படுத்தி எத்தனையோ சிறுகதைகளைப் பலரும் எழுதியிருக்கிறார்கள். அந்த வகையில் தேர்ந்த இலக்கியவாதியுமான திருப்பூர் கிருஷ்ணன் தமக்கே கைவந்த எளிய நடையில் பல காட்சிகளைக் கண் முன்னால் கொண்டுவந்து நிறுத்துகிறார். சரயூ நதியில் கலந்து மறைய முடிவெடுத்த ஸ்ரீ ராமன் முன்னால், […]

Read more

தனிநாயக அடிகளாரின் படைப்புகள்

தனிநாயக அடிகளாரின் படைப்புகள், தொகுப்பு-தவத்திரு தனிநாயக அடிகளார் நூற்றாண்டு விழாக்குழு, பூம்புகார் பதிப்பகம், விலை 200ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-143-6.html இலங்கை, யாழ்ப்பாணத்துக்கு அருகில் பிறந்த தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டை ஒட்டி அவருடைய படைப்புகளின் அரிய தொகுப்பு ஒன்றை வெளியிட்டு மொழிக்கும் பண்பாட்டுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார்கள். அடிகளார் ஒன்றே உலகம் என்னுந் தலைப்பில் தாம் பயணம்போய் வந்த 21 நாடுகளைப்பற்றி எழுதியுள்ள கட்டுரைகளை இன்றைய தலைமுறையினர் அவசியம் படித்துப் பயன்பெற வேண்டும். பொழுதுபோக்காக ஊர் சுற்றிப் பார்ப்பதைவிட ஆவணப்பதிவாக […]

Read more

அடை மழை

அடை மழை, ராமலக்ஷ்மி, அகநாழிகை பதிப்பகம், மதுராந்தகம், விலை 100ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-197-4.html எழுத்தாளர் ராமலக்ஷ்மி பன்முகத் திறன் கொண்டவர் என்பதைத் தமது முதல் சிறுகதைத் தொகுப்பிலேயே அடையாளப்படுத்தியிருக்கிறார். அழகியலோடு இவர் எடுத்த புகைப்படமே இவரது முதல் சிறுகதைத் தொகுப்பான அடைமழை புத்தகத்தின் அட்டைப் படமாகி அலங்கரிக்கின்றது. அடை மழையில் 13 சிறுகதைகள் நனைந்திருக்கின்றன. மேல்தட்டு, கீழ்தட்டு உழைக்கும் மக்கள் தங்கள் வாழ்க்கையில் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்னைகளை, சவால்களை மிக மிக யதார்த்தமாய், எளிய நடையில் கிராமிய […]

Read more

பேசும் ஓவியம்

பேசும் ஓவியம், ஜி. மீனாட்சி, வானதி பதிப்பகம், சென்னை, விலை 80ரூ. கூடவே பயணிக்கும் கதை கதைகளுக்கு அபார சக்தி இருக்கிறது. கதைகளே வாசிப்பிற்கான தூண்டுதல். குழந்தைப் பருவத்தில் கதைகள் கேட்டு வளரும் குழந்தைகள் வளரும் பருவத்தில் புத்தகங்களை வாசிக்கத் தொடங்கிவிடுவார்கள். அதை நாம் நம் வீட்டிலிருந்து தொடங்க வேண்டும். அதற்கான சிறு முயற்சி இது எனலாம். குழந்தைகளுக்கான இலக்கியங்கள், புத்தகங்கள் பல ஆங்கிலத்தில் வெளிவருகின்ற இச்சூழலில், தமிழில் வெளிவந்திருக்கும் பேசும் ஓவியம் வீட்டிலும், பள்ளி நூலகங்களிலும் இருக்க வேண்டிய ஒரு புத்தகம். குழந்தை […]

Read more

மறைமலைஅடிகள் வரலாறு

மறைமலைஅடிகள் வரலாறு, மறை. திருநாவுக்கரசு, மறைமலை அடிகள் பதிப்பகம், பக். 784, விலை 600ரூ. தனித் தமிழ்ப் போராளி, சீர்திருத்த சைவத்தை நிலைநாட்டிய உழைப்பாளி மறைமலை அடிகளாரின் நீண்ட வரலாற்று நூல். ஆழ்ந்த சைவப் பற்று, வடமொழி ஆற்றல், ஆங்கிலப் புலமை பெற்ற மறைமலை அடிகளார் 1876 முதல் 1950 வரை 74 ஆண்டுகள், தமிழையும், சைவத்தையும் எவ்வாறெல்லாம் முன்னெடுத்துச் சென்றார் என்பதை அவரது மகனார் மறை. திருநாவுக்கரசு இந்த நூலில் சுவைபட எழுதியுள்ளார். இவரது மகனார் மறை. தி. தாயுமானவன், 54 ஆண்டுகளுக்குப் […]

Read more

ஸ்ரீ ரமண மகரிஷி

ஸ்ரீ ரமண மகரிஷி, பாலகுமாரன், விகடன் பிரசுரம், சென்னை 2, விலை 160ரூ.   To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-512-0.html பாலகுமாரனின் கவித்துவ நடையில் வெளிவந்துள்ள இந்த நூலைப் படிக்கும்போது, இன்னும் சிலர் மீது பொறாமை உண்டாகிறது. வேங்கடராமனிடம் இரண்டரை அணாதான் இருக்கிறது என்று தெரிந்தபோது, சாப்பாட்டுக்கான விலை இரண்டு அணாவைப் பெற்றக் கொள்ளாமல் வேண்டாம், அந்த இரண்டனாவை நீயே வைத்துக்கொள் என்று சொன்ன புண்யாத்மாவான விழுப்புரம் ஹோட்டல்காரர்… கீழுர்க் கோவிலில், தம்முடைய பங்கான பட்டை சாதத்தை, அந்தச் சிறுவனுக்குத் […]

Read more

வீரப்பன் பிடியில் பதினான்கு நாட்கள்

வீரப்பன் பிடியில் பதினான்கு நாட்கள், கிருபாகர், சேனானி, கன்னடத்திலிருந்து தமிழில்-பா. வண்ணன், காலச்சுவடு பதிப்பகம், விலை ரூ.175. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-195-7.html பீடி, சிகரெட்டெல்லாம் ஆரோக்கியத்துக்கு நல்லதில்லை. அநத்ப் பழக்கத்தையெல்லாம் விடறதுக்கு இது நல்ல நேரம் என்றாள் அவன். அவனுடைய உபதேசத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நீ ஒரு வேலை செய். தினம் ஒரு வேளை சாப்பாட்டை வேணும்னாலும் நிறுத்து. கவலை இல்லை. ஆனால் பீடி மட்டும் கண்டிப்பா வேணும் என்று வற்புறுத்தினேன். இந்த உரையாடல் நடந்த […]

Read more

பூ மலரும் காலம்

பூ மலரும் காலம், ஜி. மீனாட்சி, பாவை பிரிண்டர்ஸ் (பி) லிட், விலை 85ரூ. இலக்கிய வெளியில் பெண் எழுத்தாளர்கள் குறைந்துவிட்ட நிலையில் ஜி. மீனாட்சி போன்ற சிலரின் சிறுகதைகள் புதிய தெம்பூட்டுகின்றன. இவரின் பூ மலரும் காலம் என்னும் தொகுப்பில் 11 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. இச்சிறுகதைக் குறித்து, எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன் கருத்து- எழுத்தை ஆத்மார்த்தமாக நேசிக்கும் ஓர் எழுத்தாளரின் தொகுதி என்பதை இதிலுள்ள படைப்புகள் புலப்படுத்துகின்றன. வணிக நோக்கில்லாமல் தனி மனிதனையும், சமுதாயத்தையும் மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு இவரின் […]

Read more

டால்ஸ்டாய் சிறுகதைகள்

டால்ஸ்டாய் சிறுகதைகள், டால்ஸ்டாய், ஆப்பிள் பள்ளிக் இன்டர்நேஷ்னல், (பி) லிட், 130, நெல்சன் மாணிக்கம் ரோடு, சென்னை 94, பக். 144, விலை 90ரூ. உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இலக்கிய நெஞ்சங்களில் பெரும் தாக்கத்தை உருவாக்கி, புதிய அதிர்வை, புதிய கோணத்திலில் கதைக்களம் உருவாக்கக் காரணமானவர் ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய். அவரின் வானவில்லை ஒத்த ஏழுவிதமான புதிய கதைகளைத் தொகுத்து வந்துள்ளது இந்நூல். நகைச்சுவையையும் வாழ்வியலையும் சேர்த்துக் கட்டியுள்ள இக்கதைகள் வாசிப்பவருக்கு ருசி கூட்டி வாழ்வில் தேடலைத் தூண்டி வரம் அளிக்க […]

Read more
1 5 6 7 8 9 12