கடைசிக்கோடு

கடைசிக்கோடு, இந்தியாவின் வரைபடம் பிறந்த கதை, ரமணன், கவிதா வெளியீடு, விலை 80ரூ To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-187-6.html பொறாமைப்படவைக்கும் ஒரு புத்தகம் நில அளவைத்துறை என்கிறார்கள் இன்றைக்கு சங்கிலிப் பிடித்து நூறு நூறு அடியாக இந்தத் தேசம் முழுவதையும் அளந்து வரைபடமாகத் தயாரித்தவர்கள் அந்த சர்வே துறையில் பிள்ளையார் சுழியிட்ட இரண்டு வெள்ளைக்கார அதிகாரிகள். 1802ஆம் ஆண்டில் சென்னை நகரத்து மெரினா கடற்கரையில் கேப்டன் வில்லியம் லாம்ப்டன் என்பவர் முதல் அளவைக் கோட்டை வரைந்து தொடங்கிய இந்தப் […]

Read more

முதல் விடுதலைப்போர் 1800-1801

முதல் விடுதலைப்போர் 1800-1801, டாக்டர் கே. ராஜய்யன், ஜெகமதி கல்வி அறக்கட்டளை வெளியீடு, விலை 500ரூ. வெள்ளையர்களே போற்றிய விடுதலை வீரர்கள் அன்னியர் ஆதிக்கத்தை எதிர்த்து இந்தியர்கள் நடத்திய முதல் போராட்டம் எது? 1857இல் நடைபெற்ற சிப்பாய்க் கலகம் என்று வழங்கப்படும் போராட்டத்தையே அப்படி அங்கீகரித்திருக்கிறார்கள். ஆனால் அதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரே ஆங்கிலேயரை எதிரத்துப் போராடி 1799இல் தூக்கிலிடப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் கூட்டத்தார், அடுத்த இரண்டு ஆண்டுகளில், 1801இல் துடிக்கத் துடிக்கப் படுகொலை செய்யப்பட்ட 543க்கும் மேற்பட்ட மருதுபாண்டியர் அணியினர் என்று தமிழ்நாட்டு […]

Read more

பஞ்சதந்திரம்

பஞ்சதந்திரம், சமஸ்கிருத மூலம்-விஷ்ணுசர்மன், தமிழில்-அன்னபூர்ணா ஈஸ்வரன், சதுரம் பதிப்பகம், விலை 300ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-158-7.html காஷ்மீரத்து பஞ்சதந்திரம் பள்ளிக்கூடப் பாடல்களில் அனேகமாக எல்லோரும் விரும்பிப் படித்திருக்கக்கூடியது பஞ்சதந்திரக் கதைகள் மட்டுமாகத்தான் இருக்கும். அதுவும் மனிதர்களை விடவும் புத்திசாலித்தனமாகப் பேசக் கூடிய நரி, காகம், பாம்பு, சிங்கம், புலி போன்றவற்றின் சாமர்த்தியம், அசட்டுத்தனம், தந்திரங்கள் எல்லாம் சிறுபிள்ளைகளாக இருந்தபோதும் சரி, வளர்ந்து பெரியவர்களான இன்றைக்கும் சரி சுவையோ சுவைதான். விஷ்ணுசர்மன் என்னும் அறிஞர் சமஸ்கிருத மொழியில் எழுதியதை மிக […]

Read more

மனிதன் தேவர் நரகர்

மனிதன் தேவர் நரகர், பிரபஞ்சன், புதிய தலைமுறை வெளியீடு, விலை 180ரூ. இன்றைக்கு யார் யாரை எல்லாமே பூனை நடையைப் பார்த்துவிட்டு உலக அழகி என்று மகுடம் சூட்டுகிறார்கள். தமிழ்த்திரை உலகில் நிஜமாகவே அப்படி ஒருவர் இருந்தார். உணவு, நீர் இரண்டும் அருந்தாமல் மூன்று இரவுகளும் மூன்று பகல்களும் பசியும் தாகமும் இன்றி ராஜகுமாரியை ஒரு ரசிகர் பார்த்துக்கொண்டிருக்கலாம். அத்தனை பெரிய பிரபஞ்ச அழகி அவர்…‘ என்று எழுதுகிறார் பிரபஞ்சன். பி.யு. சின்னப்பா நடித்த கிருஷ்ணபக்தி டிவிடியைப் பார்த்துவிட்டே இந்த விமர்சனம். அந்த சின்னப்பாவுக்கு […]

Read more

சிரிப்பாய் சிரிக்கும் தீபாவளி

சிரிப்பாய் சிரிக்கும் தீபாவளி, அகிலா கார்த்திகேயன், தென்றல் நிலையம், விலை 60ரூ. கதை எழுதுவது அதுவும் நகைச்சுவையாக எழுதுவது வெகு சிலருக்கே கைவந்த கலை, அந்த வரிசையில் நிச்சயம் இடம்பெறுகிறவர் அகிலா கார்த்திகேயன். அடிக்கிற பச்சையில் மேட்சிங் பிளவுஸ், காடி பச்சையில் கைப்பை, ஜோடி பச்சைக் காலணிகள் என்று ஒரு பச்சைத் தமிழச்சியாய் அவளை நோக்குங்கால்… முதலில் அரிவாள் என்றுதான் அந்த வன்முறைப் படத்துக்குப் பெயர் வைத்திருந்தனர். இவர் பலமாக எதிர்க்கவே அவள் அறிவாள் என்று பெயரை மட்டும் மாற்றி… இப்படியாக இருபத்தைந்து கதைகளைத் […]

Read more

போதியின் நிழல்

போதியின் நிழல், அசோகன் நாகமுத்து, அந்திமழை, விலை 180ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-815-6.html 2500 ஆண்டுகளுக்கு முன்னால் தனி ஒரு மனிதராக, சீனாவிலிருந்து இந்தியா வந்து திரும்பியவர் யுவான் சுவாங். இவ்ர இந்தியா வந்தது, அத்தேடல் காரணமாகவும், பௌத்த தரிசனத்துக்காகவும், பௌத்தம் ஒரு மதமாக இந்தியாவை விட்டு விலகி இருக்கலாம். ஆனால் சமூகத்தின் அகமனதில் புத்தர் கண்மூடி தியானத்தில் அமர்ந்திருக்கிறார் என்று முன்னுரையில் எழுதுகிறார் ஆசிரியர் அசோகன் நாகமுத்து. இந்தியா முழுவதும் பரவியிருந்த  பௌத்தத்தின் எச்சமே இப்போது நம்மிடையே […]

Read more

பஞ்சதந்திரம்

பஞ்சதந்திரம், சம்ஸ்கிருத மூலம்-விஷ்ணுசர்மன், தமிழில்-அன்னபூர்ணா ஈஸ்வரன், சதுரம் பதிப்பகம், விலை 300ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-158-7.html பள்ளிக்கூடப் பாடங்களில் அனேகமாக எல்லோரும் விரும்பிப் படித்திருக்கக்கூடியது பஞ்சதந்திரக் கதைகள் மட்டுமாகத்தான் இருக்கும். அதுவும் மனிதர்களை விடவும் புத்திசாலித்தனமாகப் பேசக் கூடிய நரி, காகம், பாம்பு, சிங்கம், புலி போன்றவற்றின் சாமர்த்தியம், அசட்டுத்தனம், தந்திரங்கள் எல்லாம் சிறுபிள்ளைகளாக இருந்த போதும் சரி, வளர்ந்து பெரியவர்களான இன்றைக்கும் சரி சுவையோ சுவைதான். விஷ்ணுசர்மன் என்னும் அறிஞர் சம்ஸ்கிருத மொழியில் எழுதியதை மிக எளிமையான […]

Read more

பொன்னியின் செல்வன் – ஆடியோ

பொன்னியின் செல்வன் ஆடியோவில். கல்கியின் பொன்னியின் செல்வன் ஆடியோ சிடி (5 பாகங்கள்) இப்போது டயல் ஃபார் புக்ஸில் கிடைக்கிறது. ஃபோன் மூலம் ஆர்டர் செய்யலாம். ஃபோன் – 94459 01234 ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/ponniyin_selvan_audio.html    

Read more

ஆழ்மனதின் அற்புத சக்திகள்

ஆழ்மனதின் அற்புத சக்திகள், என். கணேசன், பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடெட், 7/1, 3வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 83. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-009-2.html ஒவ்வொரு மனிதருக்குள்ளும் மகத்தான ஆழ்மனசக்தி உண்டு. முறையான பயிற்சிகளின் மூலம் அத்தகைய சக்தி கைவரப்பெற்று பல அற்புதங்களை நிகழ்த்தியவர்களைச் சித்தர்கள், மகான்கள் என்று அழைக்கிறோம். வெளிநாடுகளிலும் இத்தகையவர்கள் உண்டு. இவர்கள் புரியும் அற்புதங்கள் சில சமயம் அறிவுக்குப் பொருத்தமாகத் தோன்றாது. ஆனால் அவை உண்மை. அறிவியலில் எல்லா வினாக்களுக்கும் விடையில்லை என்றார் […]

Read more

மௌனியின் கதைகள்

மௌனியின் கதைகள், தொகுப்பாசிரியர்-கி.அ.சச்சிதானந்தம், சாகித்ய அகாடமி, குணா பில்டிங்ஸ், 443, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, விலை 110ரூ. உலகத் தரத்துக்கு தமிழில் சிறுகதைகள் எழுதியவர் மௌனி. 1907ல் பிறந்து 1985ல் மறைந்த அவர் எழுதியவை 24 சிறுகதைகள்தான். ஆயினும் அவை சிகரம் தொட்டவை. அதனால்தான் சிறுகதை மன்னர் புதுமைபித்தன் தமிழ் சிறுகதை உலகின் திருமூலர் என்ற மௌனியைப் பாராட்டி இருக்கிறார்.அவருடைய மிகச்சிறந்த 13 கதைகளை தேர்ந்தெடுத்து சாகித்ய அகாடமி வெளியிட்டு உள்ளது. இக்கதைகள், எல்லோருக்கும் எளிதில் புரிந்து விடாது. நிதானமாகவும், பொறுமையாகவும், […]

Read more
1 6 7 8 9 10 12