மங்களம் – சிகரம்

மங்களம் – சிகரம், ச.செந்தில் நாதன், சந்தியா பதிப்பகம், சென்னை 83, பக். 208, விலை 140ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-014-0.html சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குறைஞராக பணிபுரியும் நூலாசிரியரின் முதல் நாவல் இது. கணவன் மீது ஜீவனாம்ச வழக்குத் தொடுப்பதற்காக வரும் மங்களத்தின் கதைதான் இந்நாவல். ஆசிரியரே சொல்வது போல, இதில் வரும் பாத்திரங்கள், சம்பவங்கள் அனைத்தும் அவர் வழக்குரைஞர் தொழிலில் சந்தித்த பாத்திரங்கள், சம்பவங்கள்தாம் என்பதில் ஐயமில்லை. இந்த நாவல் மங்களம் என்ற பெண்ணின் அவலமிக்க வாவைச் […]

Read more

தென்னாட்டுச் செல்வங்கள்

தென்னாட்டுச் செல்வங்கள் (இரண்டு தொகுதிகள்), இறையருள் ஓவியம் சில்பி, விகடன் பிரசுரம், ரூ 650. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-806-3.html இறை அருள் பெற்ற ஓவிய மேதை சில்பி ஆனந்தவிகடன் வார இதழில் தென்னாட்டுச் செல்வங்கள் என்னும் தலைப்பில் எழுதிய ஓவியக் கட்டுரைகள் இரண்டு தொகுதிகளாக நூல் வடிவம் பெற்றுள்ளன. நீ நிறைய ஸ்தலங்களை வரையப் போகிறாய். அவை நீ வரைந்ததாலேயே ஆழ்வார், நாயன்மார், பாசுரங்கள் புகழ்பெற்றதுபோல், சில்பி வரைந்த ஸ்தலங்கள் என்று புகழ் பெறும் என்று காஞ்சி மகாஸ்வாமிகள் […]

Read more

அகமும் புறமும்

அகமும் புறமும், கீதா, புதிய தலைமுறை வெளியீடு, விலை ரூ. 80. சொந்தத்தில் ஒரு வீடு என்பது பலருக்கும் கடைசிவரை நிறைவேறாத ஒரு கனவாகவே நின்றுவிடுகிறது. முறையான திட்டமிடல் இருந்தால் ஒரு நல்ல வீட்டை உருவாக்கிவிடமுடியும் என்னும் நம்பிக்கையைத் தருகிறது ‘ அகமும் புறமும்’ என்னும் இந்த நூல்! மிரட்டுகிற மின்சார வெட்டைக்கூடச் சமாளிக்கும் விதமான மாற்று வழிகளையும் விளக்குகிறார் ஆசிரியர். வீடு என்பதன் அடிப்படைத் தேவையே நல்ல வெளிச்சமும் காற்றும்தானே? வங்கிக் கடன்கள் காப்பீட்டு வசதிகள் எல்லாவற்றையும் விளக்குவது போலவே வீட்டைச் சுற்றிலும் […]

Read more

கனவு மெய்ப்பட வேண்டும்

கனவு மெய்ப்பட வேண்டும், தமிழருவி மணியன், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 600002, பக்கங்கள் 192, விலை 85ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-834-1.html தேசிய, இலக்கிய படைப்பாளி தமிழருவி மணியன். எழுத்திலும், பேச்சிலும் வெற்றிக் கொடி நாட்டிய இவர் மகாகவி பாரதியாரின் கவிதைகளிலும், கட்டுரைகளிலும், வாழ்விலும் புதைந்து கிடக்கும் புதுமைகளை, இந்த நூலில் வெளிப்படுத்துகிறார். தன்னைப் பற்றியே நினைத்து வாழ்ந்த சராசரி மனிதர்களுக்கு நடுவே மண்ணைப் பற்றியே சிந்தித்து செயற்பட்ட மகாகவியைக் காட்டுகிறார் மணியன். பாரதியைப் புதிய […]

Read more

தேவதாசியும் மகானும்

தேவதாசியும் மகானும், வெங்கடகிருஷ்ணன் ஸ்ரீராம், தமிழில் பத்மா நாராயணன், காலச்சுவடு பதிப்பகம், விலை ரூ 175. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-814-3.html தேவதாசிகள் என்று ஒரு குலம் உருவாக்கப்பட்டு, சென்ற நூற்றாண்டின் முன் பாதியிலேயே ஒழிக்கப்பட்டும் விட்டது. சங்கீத உலகில் அரும்பாடுபட்டுத் தமக்கென்று தனியிடம் அமைத்துக் கொண்ட பெங்களூரு நாகரத்தினம்மா அந்த சமூகப் பிரிவைச் சேர்ந்தவர். நெஞ்சை உலுக்கி நிமிர வைக்கும் அவருடைய வாழ்க்கை வரலாறை ‘தேவதாசியும் மகானும்’ என்ற தலைப்பில் வி. ஸ்ரீராம் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டதை […]

Read more

சரஸ்வதி – ஒரு நதியின் மறைவு

சரஸ்வதி – ஒரு நதியின் மறைவு, மிஷல் தனினோ, தமிழாக்கம்-வை. கிருஷ்ணமூர்த்தி, கிழக்கு பதிப்பகம், சென்னை 14, விலை 300ரூ To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-635-3.html வெள்ளைக்காரர்கள் எழுதி வைத்த இந்திய வரலாற்று நூல்கள் என்று ஒரு குரல் அழுது புலம்புவது உண்டு. கிண்டல் பண்ணுவதும் உண்டு. கிழக்கு இந்தியக் கம்பெனியிலும் பின்னால் நிறுவப்பட்ட ஆங்கிலேய அரசாங்கங்களிலும் நிர்வாகப் பொறுப்பிலிருந்த ஜேம்ஸ் டாட், கன்னிங்ஹாம், மேஜர் கால்வின் போன்ற பெருமக்கள் தங்களின் ஓய்வு நேரங்களைப் பயன்படுத்தி அர்ப்பணிப்பு உணர்வோடு […]

Read more

நானா போனதும் தானா வந்ததும்

நானா போனதும் தானா வந்ததும், பாக்கியம் ராமசாமி, வானதி பதிப்பகம், விலை ரூ. 100. ‘சிரிப்பு மருந்து, தினமும் இரண்டுவேளைகள்’ என்னும் குறிப்போடு முப்பத்தெட்டுவிதமான ‘வைத்தியங்கள்!’  போதாக்குறைக்கு தொழில்முறை டாக்டர் ஒருவரே (டாக்டர் என். சுந்தர்) அணிந்துரை தந்திருக்கிறார். ‘சிரிப்பு வைத்திய நிபுணர்’ பாக்கியம் ராமசாமியின் ‘நானா போனதும், தானா வந்ததும்! ’ நூலுக்குத்தான்!  ‘ பாக்கியம் ராமசாமியிடம் உம்மணா மூஞ்சிகூடத் தோற்றுப் போய்விடுவான்’ என்று கல்கி. ராஜேந்திரன் முன்னுரைப்பதை ‘கிராப்பைக் கலைக்க இருநூரு ரூபாயா?’ கட்டுரை ஒன்றே  நிரூபித்து விடுகிறது. ‘தாத்தா’ தம்முடைய […]

Read more

உயிரே உயிரே

உயிரே உயிரே, மாலன், புதிய தலைமுறை வெளியீடு, விலை 160ரூ,‘ ஒன்றுமட்டும் சொல்வேன், ஜென்னி உன்னைத் திருமணம் செய்துகொள்வதன் மூலம் மகத்தான தியாகத்தைச் செய்கிறாள். இதை நீ மறந்து விடுவாயானால் வாழ்வில் உனக்குப் பல சங்கடங்கள் உண்டாகும். உன் மனதை நீயே சோதனை செய்து பார்- இப்படி மகன் காரல் மார்க்சுக்கு ஒரு கடிதம் எழுதினார். அவருடை யதந்தை, அப்பாவிடம் பெரிதும் மரியாதையும் மதிப்பும் வைத்திருந்த மார்க்ஸ், அறுபத்தைந்து வயதில் மரணமடையும்வரை தம் சட்டைப்பையில் எப்போதும் வைத்திருந்தது அவருடைய படத்தைத்தான். கஸ்தூரிபாவின் கடைசி நிமிடங்கள் […]

Read more

இலக்கியக் காதலில் இலக்கணச் சுருதி

இலக்கியக் காதலில் இலக்கணச் சுருதி, ஜெயம் கொண்டான், ஸ்ரீ கள்ளழகர் பதிப்பகம், 41, காமராசர் சாலை, அசோக் நகர், சென்னை 83, விலை 60ரூ. தம்முடைய பள்ளிப் பருவ காலத்தில் தோன்றிய சினேகித சினேகிதங்கள் நட்பின் இலக்கணச் சுருதிக, அவர்களிடம் இருந்து கண்டதையும், கேட்டதையும், பார்த்ததையும், கற்றதையும் இந்நூலில் அழகாக மீட்டியுள்ளார் கவிஞர் ஜெயம் கொண்டான். கவிதையே மௌனமாக இருந்து என்னைப் பேச வைத்தாய்… நான் பேச ஆரம்பித்ததும் நீ மௌனமாகிவிட்டாய். இதுபோன்ற எளிய யதார்த்த புனைவு இந்தக் கவிதை நூல்.   —- […]

Read more

ஸ்ரீவைஷ்ணவம்

ஸ்ரீவைஷ்ணவம், வேணு சீனுவாசன், கிழக்கு பதிப்பகம், விலை ரூ 200. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-425-0.html திருமண் காப்பிடுவதற்கு விரல்களை மட்டும்தான் பயன்படுத்த வேண்டுமாம். அதிலும்கூட நடுவிரலையும் நகத்தையும் பயன்படுத்தக் கூடாதாம். ஸ்ரீ சூர்ணத்தைச் சுமங்கலிப் பெண்கள், கன்னிப் பெண்கள், கைம்பெண்கள் ஆகியோரும் தரித்துக் கொள்ள வேண்டும். கன்னிப் பெண்கள் பூசணி விதை வடிவிலும், சுமங்கலிப் பெண்கள் மூங்கில் இலையைப் போலவும், கைம்பெண்கள் எள்ளின் வடிவத்திலும் ஸ்ரீ சூர்ணம் தரிக்க வேண்டுமாம். கருவுற்ற பெண்ணுக்கு சீமந்தம் என்று ஒரு சடங்கு […]

Read more
1 8 9 10 11 12