சிரிப்பாய் சிரிக்கும் தீபாவளி

சிரிப்பாய் சிரிக்கும் தீபாவளி, அகிலா கார்த்திகேயன், தென்றல் நிலையம், ரூ 60 /- கதை எழுதுவது, அதுவும் நகைச்சுவையாக எழுதுவது வெகு சிலருக்கே கைவந்த கலை. அந்த வரிசையில் நிச்சியம் இடம்பெறுகிறவர் அகிலா கார்த்திகேயன். ‘அடிக்கிற பச்சையில் மேட்சிங் பிளவுஸ், காடி பச்சையில் கைப்பை, ஜோடி பச்சை காலனிகள் இன்று ஒரு பச்சைத் தமிழச்சியாய் அவளை நோக்குங்கால்…’ முதலில் ‘அரிவாள்’ என்றுதான் அந்த வன்முறைப் படத்துக்குப் பெயர் வைத்திருந்தனர். இவர் பலமாக எதிர்க்கவே ‘அவள் அறிவாள்’ என்று பெயரை மட்டும் மாற்றி… – இப்படியாக […]

Read more

தமிழ் சினிமாவின் மயக்கம்

தமிழ் சினிமாவின் மயக்கம், கௌதம சித்தார்த்தன், குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம், நெடுஞ்சாலை, சென்னை 10, விலை 125ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-810-4.html தமிழ் சினிமாவின் கடந்த பத்தாண்டுகள், பல்வேறு புதிய மாற்றங்களின் பெரும்களமாக இருந்திருக்கிறது. ஒருபுறம் தமிழ் சினிமாவின் மொழியையே மாற்றியமைத்த புது இயக்குனர்களின் வருகை, இன்னொருபுறம் பிரம்மாண்டமான வர்த்தக சினிமாவின் பெரும் பாய்ச்சல். நுட்பமான கலாசாரப் பின்புலம் உள்ள படங்களுடன், பெரிய ஹீரோக்களின் படங்கள் போட்டி போட நேர்ந்தன. கௌதம சித்தார்த்தனின் இந்தக் கட்டுரைகள் தமிழ் […]

Read more

பாண்டியர் காலச் செப்பேடுகள்

பாண்டியர் காலச் செப்பேடுகள், டாக்டர் மு. ராஜேந்திரன் அகநி வெளியீடு, விலை 300ரூ. To buy this book online: https://www.nhm.in/shop/100-00-0000-811-3.html கி.பி. 1214க்குரிய செப்பேடு ஒன்று திரிபுவனம் கோயிலில் இருப்பதாக, அங்கே அறங்காவலராக இருந்த பெண்மணி ஒருவர் கோயம்புத்தூர் கே.வி. சுப்ரமணிய அய்யர் என்ற செப்பேட்டு ஆய்வாளருக்குத் தெரிவித்தார். உரியவர்களின் அனுமதி பெற்று, தொல்பொருள் ஆய்வுத் துறை மூலம் ஒன்பது ஆண்டுகள் போராடி அதை 1939இல் படியெடுத்துத் தந்தார்களாம். இப்படியே ஒவ்வொரு செப்பேட்டுத் தொகுதியையும் ஆய்வாளர்கள் தேடித் தேடிப் படியெடுத்திருக்கிறார்கள். செப்பேட்டில் தானம் […]

Read more

ஸ்ரீ சேஷாத்ரி மகான் வரலாறும் பக்தர்களின் நேரடி அனுபவங்களும்

ஸ்ரீ சேஷாத்ரி மகான் வரலாறும் பக்தர்களின் நேரடி அனுபவங்களும்,சேஷ. அனு. வெண்ணிலா, மேகதூதன் பதிப்பகம், சென்னை 5, விலை 240ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-808-7.html மகான்களின் சரிதங்களை, இதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கப்போகிறது’ என்று மனம் சலனப்படாமல் ஆழ்ந்து படிக்க வேண்டும். திருவண்ணாமலையில் சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்து சித்தியடைந்த மகான் ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளின் வரலாறும் அத்தகையதுதான். வாழ்க்கை வரலாறு மட்டுமின்றி சுவாமிகளோடு பழகும் பேறு பெற்ற பலரின் ஆன்மிக அனுபவங்களையும் தொகுத்து வெளியிட்டிருக்கிறார் இந்த நூலை […]

Read more

நல்லறம் வளர்த்த வள்ளல் பச்சையப்பர்

நல்லறம் வளர்த்த வள்ளல் பச்சையப்பர், எஸ். பரதன், பக் 174, திருமதி மருதேவி பரதன் அறக்கட்டளை, 2980, Z பிளாக், அண்ணாநகர், சென்னை 40, விலை 150ரூ. ஒருவர் தனது வாழ்நாள் முழுவதும் நல்லறம் வளர்ப்பதையே நோக்கமாகக் கொண்டு செயலாற்ற முடியும் என்பதற்கு வள்ளல் பச்சையப்பரின் வாழ்வே ஓர் உதாரணம்… அதுவும் நாற்பதே ஆண்டுகள் (1754-1794) இவ்வுலகில் வாழ்ந்த ஒருவர், இத்தனை அறச்செயல்கள் ஆற்றியிருப்பது வியக்கத்தக்கது. குறிப்பாக, கல்விக்கும் ஆன்மிகத்துக்கும் அவர் வழங்கியுள்ள கொடைகள் சமூகப் பயன்பாடு மிக்கதும், காலத்துக்கும் அவர் புகழை நிலைநிறுத்துவதுமாகும். […]

Read more

பெண்களுக்கு

பெண்களுக்கு, தொகுப்பு பொம்மை சாரதி, ஸ்ரீமாருதி பதிப்பகம், சென்னை 14, விலை 90ரூ. பெண்கள் கருவுறுதல், பேறுகாலம், பிறக்கப் போகும் குந்தையின் பாலினம் இவற்றைப் பற்றியெல்லாம் நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் புத்தகங்கள் வெளிவந்துள்ளன. வெளியாகிக் கொண்டும் இருக்கின்றன. வித்தியாசமான முறையில் இந்த நூலை எழுதியிருக்கிறார் பத்திரிகையாளர் ‘பொம்மை’ சாரதி. வாழ்க்கை நெறி பற்றிய ஆன்றோர்களின் அறிவுரைகள் உட்பட அவசியமான பல தகவல்களையும் தொகுத்துத் தந்திருக்கிறார். சுகாதார, மருத்துவக் குறிப்புகள், உடற்பயிற்சி முறைகள், சட்டப் பிரச்னைகள் – எல்லாவற்றுக்கும் நூலாசிரியர் இடமளித்திருக்கிறார். ‘பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட அனைவரும் எங்கும் […]

Read more

உடையும் இந்தியா – கல்கி – ஃபாலோ அப் விமர்சனம்

கல்கியில் ரமணன் எழுதி 16-12-12 தேதியிட்ட இதழில் வெளிவந்த விமர்சனத்தை வாசிக்க இங்கே  க்ளிக் செய்யவும். இதற்கு எதிர்வினையாக கல்கி இதழில் வந்த விமர்சனம் கீழே. ஆதாரக் குறிப்புகள் 1486 (பாலோ-அப்: விமர்சனம்) ராஜீவ் மல்ஹோத்ராவும் அரவிந்தன் நீலகண்டனும் எழுதிய ‘உடையும் இந்தியா?’ பற்றி கல்கியில் விமர்சனம் செய்த ரமணன், அண்ணாதுரை சிஐஏ ஏஜெண்ட், ஈவெரா வன்முறையைத் தூண்டினார், மற்றும் ஹிட்லர் யூதர்களை இனப் படுகொலை செய்ததை வரவேற்றார் என்று அவதூறு செய்திருப்பதாகவும், திராவிட இனம் என்ற எதுவுமே இல்லை என்று ஆதாரமில்லாமல் வாதிட்டு […]

Read more

வலது காலை எடுத்துவைத்து வா…

வலது காலை எடுத்துவைத்து வா… ‘பொம்மை’ சாரதி, அஸ்வினி புக் கம்பெனி, விலை ரூ. 65 பல பேர் நல்ல கதைகளை எழுதியிருந்தால் உரிய வெளிச்சம் கிடைக்காமலேயே போய்விடுகிறது. ‘மங்கை’, ‘சுமங்கலி’ இதழ்களில் ஆசிரியராக இருந்த ‘பொம்மை’ சாரதியின் இந்தச் சிறுகதைத் தொகுப்பு இந்தக் கருத்தை உறுதிப்படுத்துகிறது. முக்கியமாக 1951-ஆம் ஆண்டில் அப்போது பிரபலமாக இருந்த ‘காவேரி’ மாத இதழில் வெளியான ‘முதல் பிச்சை’ என்னும் தலைப்பிலான சிறுகதையைச் சொல்லவேண்டும். அறுபது ஆண்டுகளுக்குப் பிறகும் சிரஞ்சீவியாகத் தோற்றமளிக்கிறது. ‘தமிழின் முதல்தரமான சிறுகதைகளுள் இது ஒன்று’ என்று […]

Read more

உடையும் இந்தியா

உடையும் இந்தியா, ராஜீவ் மல்ஹோத்ரா, அரவிந்தன் நீலகண்டன், கிழக்கு பதிப்பகம், சென்னை. விலை ரூ. 425 To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-310-9.html மனித உரிமைகள், சமூக மேம்பாடு, தலைமைப்பண்புப் பயிற்சி, மனித உரிமைகள் மேம்பாட்டுப் பயிற்சிகள், கல்வி என்ற போர்வைகளில் வெளிநாடுகளிலிருந்து அந்நிய நிதி உதவிகள் அனுப்பப்பட்டு அவை இந்திய அடையாளத்தை வெறுக்கும் இளைஞர் சமுதாயத்தை உருவாக்க, இந்தியாவைப் பிளவுபடுத்த நடக்கும் முயற்சிகளை வெளிச்சமிட்டுக் காட்டவேண்டும் என்ற எண்ணத்தில், இந்தப் புத்தகம் எழுதப்பட்டிருக்கிறதாம். இந்திய ஒருமைப்பாட்டின் அச்சுறுத்தலுக்கு அடிப்படையாக மூன்று ஆழமான […]

Read more

ஸ்ரீ சேஷாத்ரி மகான் வரலாறும் பக்தர்களின் நேரடி அனுபவங்களும்

ஸ்ரீ சேஷாத்ரி மகான் வரலாறும் பக்தர்களின் நேரடி அனுபவங்களும், சேஷ. அனு. வெண்ணிலா, மேகதூதன் பதிப்பகம், சென்னை – 5, விலை 240 ரூ. மகான்களின் சரிதங்களை, ‘இதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கப் போகிறது’ என்று மனம் சலனப்படாமல் ஆழ்ந்து படிக்கவேண்டும். திருவண்ணாமலையில் சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்து சித்தியடைந்த மகான் ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளின் வரலாறும் அத்தகையதுதான். வாழ்க்கை வரலாறு மட்டுமின்றி சுவாமிகளோடு பழகும் பேறு பெற்ற பலரின் ஆன்மிக அனுபவங்களையும் தொகுத்து வெளியிட்டிருக்கிறார் இந்த நூலை எழுதியுள்ள சேஷ. அனு. வெண்ணிலா. […]

Read more
1 9 10 11 12