மரம் சுமக்கும் யானைகளின் பிளிறல்

மரம் சுமக்கும் யானைகளின் பிளிறல், லதிலைபிரபா, ஓவியா பதிப்பகம், விலை 100ரூ. சமுதாய அவலம், மழை இன்றி வறளும் மண், காடு வீடானதால் விலங்குகள் எழுப்பும் அபாய அலறல் என்று அத்தனையும் சின்னச் சின்ன கவிதைகளாக கண்முன் நிறுத்தும் புத்தகம். வாழ்ந்த வாழ்க்கை, வாழ்கிற சூழலை யதார்த்தமான வார்த்தைகளாய் படிக்கப்படிக்க மனதில் கனம் கூடுகிறது. நன்றி: குமுதம், 16/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

ஞாயிற்றுக்கிழமை தோறும் தோன்றும் மனிதன்

ஞாயிற்றுக்கிழமை தோறும் தோன்றும் மனிதன், அழசிய சிங்கர், விருட்சம் வெளியீடு, விலை 150ரூ. கதையாகத் தனியே ஒன்றும் இல்லாமல், நாவலாசிரியரே கதையில் உலாவி, தன் பார்வையிலேயே எல்லா நிகழ்வுகளையும் விவரிப்பதான, வித்தியாச நடையில் எழுதப்பட்டிருக்கும் நாவல். தொடங்கும் இடம் முடியும் இடம் என்று எதுவுமே இல்லாததால், எங்கேயும் தொடங்கிப் படிக்கலாம். இடம் பெற்றுள்ளவை அனைத்தும் உண்மைச் சம்பவங்களே. பாத்திரங்களாக வருவோர் எல்லோரும் நிஜ மனிதர்களே. இருந்தாலும் யாருக்குமே உறுத்தல் வராதபடி நகர்கின்றன நிகழ்வுகள். ஆங்கில நாவல்களைப் போல தன் முனைவு நடையில் எழுதப்பட்டிருக்கும் அற்புதமான […]

Read more

தவிட்டுக் குருவியும் தங்கராசு மாமாவும்

தவிட்டுக் குருவியும் தங்கராசு மாமாவும், மு.முருகேஷ், அகநி வெளியீடு, விலை 100ரூ. குழந்தைகளுக்குக் கதை சொல்வது என்பது ஒரு கலை. அதற்கு சிறுவர்களின் உலகத்தில் நுழைந்தாக வேண்டும். அந்த வித்தை அறிந்து குழந்தைகளோடு குழந்தையாக இருந்து எழுதப்பட்ட சின்னச் சின்ன கதைகள். கதையோடு ஒழுக்கமும் நுணுக்கமாய் போதிக்கப்பட்டிருப்பது சிறப்பு. நன்றி: குமுதம், 16/1/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027676.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

மனசுக்குள் மாயவலை

மனசுக்குள் மாயவலை, மேஜர்தாசன், அமராவதி, விலை 90ரூ. ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இல்லாத வித்தியாசமான கோணங்களில் இருபத்தேழு சிறுகதைகள். வாழ்வில் நாம் அன்றாடம் பார்க்கிற, கேட்கிற, சந்திக்கிற சம்பவங்களே கதைக்களமாகவும் யதார்த்தமே கதைகளின் கருவாகவும் இருப்பது, படிப்பதற்கான சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது. நன்றி: குமுதம், 21/11/18 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818  

Read more

சட்டப் பேரவையில் அருட்செல்வர்

சட்டப் பேரவையில் அருட்செல்வர், கே.ஜீவபாரதி, அன்னம்,ண விலை 200ரூ. தெய்வபக்தியும் தேசபக்தியும் நிறைந்தவராக விளங்கியவர் அருட்செல்வர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம். தொடர்ந்து மூன்றுமுறை சட்டப் பேரவை உறுப்பினராக இருந்தவர். பொருளாதாரம், கல்வி, நதிநீர் இணைப்பு, வேளாண்மை, மின்சாரம் என பல்வேறு துறைகளும் நலிவு நீங்கி வளமை பெறவும், மக்களின் வாழ்வாதாரம் பெருகவும் வழிசெய்யும் வகையில் சட்டமன்றத்தில் அவர் ஆற்றிய உரைகளின் தொகுப்பு. நன்றி: குமுதம், 21/11/18. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027614.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]

Read more

பன்முக நோக்கில் சிலப்பதிகாரம்

பன்முக நோக்கில் சிலப்பதிகாரம், பேராசிரியர் இரா.மோகன், பேராசிரியர் நிர்மலா மோகன், வானதி பதிப்பகம், விலை 120ரூ. நெஞ்சை அள்ளும் காப்பியமான சிலப்பதிகாரத்தின் பல்வேறு பகுதிகளைச் சுட்டி, அவற்றுள் பொதிந்திருக்கும் சொற்சுவை, பொருட்சுவை, கவிதை நயம், காப்பியத்திறன் என அனைத்தையும் எளிய தமிழில், இனிய நடையில் பதம் பிரித்து, இதமாய்த் தந்திருக்கும் புத்தகம். படிக்கப் படிக்க சிலம்பின் சிறப்பு மனதுக்குள் மகுடமாய் உயர்கிறது. நன்றி: குமுதம், 21/11/18. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027591.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

அய்யா வைகுண்டரின் சாதனையும் ஆங்கிலேயரின் வேதனையும்

அய்யா வைகுண்டரின் சாதனையும் ஆங்கிலேயரின் வேதனையும், கேப்டன் எஸ்.பி.குட்டி, அறிவுசால்சால் ஆன்மீகக் கல்விக் கழகம், விலை 100ரூ. பிரிட்டிஷார் காலத்தில், ஆட்சியாளர்கள் ஆதரவோடு இந்துக்களிடையே சமுதாயப் பகைமையை ஏற்படுத்தி, மதமாற்றத்தை எளிதாக்கிக் கொண்டிருந்தார்கள், கிறிஸ்தவர்கள். அந்தக் கொடுமையை முறியடித்து இந்துக்களிடையே ஒற்றுமையை நிலைநாட்டி அன்னியர் சூழ்ச்சியைத் தடுத்த அவதார புருஷர் அய்யா வைகுண்டரின் பெருமையைச் சொல்லும் நூல். வரலாற்று சம்பவங்களை தகுந்த ஆதாரக் குறிப்புகளுடன் தந்திருப்பது சிறப்பு. நன்றி: குமுதம், 21/11/18. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

மகாத்மா 200

மகாத்மா 200, முனைவர் இளசை சுந்தரம், விஜயா பதிப்பகம், விலை 145ரூ. மகாத்மா காந்தியைப் பற்றி பொதுவாகச் சில விஷயங்களே தெரிந்தவர்களுக்கு, அவரது எளிமை, அன்பு, அஹிம்சை, ஒழுக்கம், நேர்மை, சகிப்புத்தன்மை, எதையும் சரியாகச் செய்யும் குணம் என்று காந்தியின் எல்லா நற்குணங்களையும் சித்திரித்துக் காட்டுவது போன்ற சின்னச் சின்ன சம்பவங்கள் இருநூறு. படிக்கப் படிக்க காந்திஜி மீது மதிப்பு கூடுகிறது. நன்றி: குமுதம், 21/11/18. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027224.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

ஒருத்தி இன்னொருத்தி

ஒருத்தி இன்னொருத்தி, சுப்ரஜா, வாதினி பதிப்பகம், விலை 599ரூ. அறுசுவைபோல ஆறு வித்தியாசமான நாவல்களின் ஒருங்கிணைப்பு. அன்றாடம் சந்திக்கும் நபர்களே கதையின் கதாநாயகர்களாக இருப்பதும், அடுத்த வீட்டு விஷயத்தைப் படம்பிடித்துக் காட்டுவது போன்ற எழுத்து நடையும் நாவலை சுவாரஸ்யமாக நகர்த்துகின்றன. படித்து முடித்ததும் நாவலாகத் தோன்றாமல் கண் எதிரே கண்டவையான பிரமை ஏற்படுத்துவது நிச்சயம். நன்றி: குமுதம், 14/11/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027344.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]

Read more

யார் அந்த மிஸ்டர் X

யார் அந்த மிஸ்டர் X, முத்து காமிக்ஸ், பிரகாஷ் பப்ளிஷர்ஸ், விலை 75ரூ. காமிக்ஸ் உலகின் கதாநாயகர்களுள் ஒருவரான கர்னல் க்ளிப்டன் ஆக்ஷன் பள்ஸ் காமெடி மன்னர். தன் டிடெக்டிவ் மைண்டால் டிஃபரண்டாக திட்டம் தீட்டி, கொள்ளை கும்பல் ஒன்றைப் பிடிக்கும் கதைதான் யார் அந்த மிஸ்டர் எக்ஸ், கர்னலின் சீரியஸ் ஆன வீரதீர சாகஸம், சிரியஸ் ஆனாலும் வெற்றி அவர் பக்கமே திரும்புவதும், திருடர்கள் போர்வைக்குள் ஒளிந்திருப்பவர்கள் யார் என்ற உண்மை தெரியவரும் க்ளைமேக்ஸும் உம்மணா மூஞ்சிகளையும் சிரிக்க வைக்கும். நெடுங்கதையோடு குட்டிக்குட்டியாய் […]

Read more
1 2 3 4 5 6 57