பழி வாங்கும் பாவை

பழி வாங்கும் பாவை, மேக்ஸி லயன் காமிக்ஸ், பிரகாஷ் பப்ளிஷர்ஸ், விலை 150ரூ. நிறவெறியின் உச்சத்தில இருக்கும் அமெரிக்க ராணுவத்தின் கர்னல் அர்லிங்டன், அப்பாவி செவ்விந்திய கிராம மக்களை யுத்த தர்மத்தை மீறிக் கொன்று தீர்க்கிறார். நியாயத்தின் பக்கமே எப்போதும் நிற்கும் டெக்ஸ் வில்லர், செவ்விந்தியர்களுக்குத் துணையாக இருந்து, அமெரிக்க ராணுவக் கோட்டையைத் தகர்க்க வழி சொல்கிறார். செவ்விந்தியத் தலைவன் ப்ளாக் புல்லின் மனைவியோ கர்னலைப் பழிவாங்கத் துடிக்கிறாள். திகல், திருப்பம், திட்டமிடல் என்று மிரட்டலாக வண்ணச் சித்திரங்களுடன் கண்முன் காட்சியாக நகர்கிறது கதை. […]

Read more

நமக்குள் சில கேள்விகள்

நமக்குள் சில கேள்விகள், வெ. இறையன்பு, தினத்தந்தி பதிப்பகம், பக். 224, விலை 160ரூ. அறிவு உள்ள யாவரும் கேள்விகள் கேட்கலாம். ஆனால் எத்தகைய கேள்வி கேட்கிறோம் என்பதுதான் ஒவ்வொருவரையும் தனிப்படுத்திக் காட்டுகிறது. பயனுள்ள பதிலுக்கான கேள்வியைக் கேட்பவரது அறிவு முதிர்ச்சி அடைகிறது. அத்தகைய நூற்றுக்கணக்கான கேள்விகளை தமக்குத் தாமே கேட்டு, அதற்கான விடைகளையும் தாமே தேடியும் சிந்தித்தும் தொகுத்திருக்கிறார் இறையன்பு. வாசிக்க வாசிக்க நமக்குள் எழும் பல கேள்வி முடிச்சுகள் சிக்கல் பிரிந்து அவிழ்கிறது. அதன் விளைவாக அறிவில் மலர்ச்சி முகிழ்கிறது. பல […]

Read more

தமிழர்கள் நாம் அடிமைகளா?

தமிழர்கள் நாம் அடிமைகளா?, வேத.யோகநாதன், அனைத்துலகத் தமிழ் மாமன்றம், விலை 150ரூ. அயல்மொழி மேல் மையல் கொண்டு அன்னைத் தமிழ் மறந்தோம். வீரமும் பண்பாடும் தொலைத்து வீணரைப் பின்பற்றுகின்றோம். இப்படியெல்லாம் இருக்க, தமிழன் என்ன அடிமையா? இனத்தின் பண்புகாத்து நிற்க, இழந்திட்ட வீரம் மீட்க கவி நடையில் நம் பெருமை சொல்லும் நூல். எண்ணற்ற கவிஞர்களின் எண்ண வெளிப்பாட்டின் தொகுப்பு. நன்றி: குமுதம். இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – […]

Read more

தியாக தீபங்கள்

தியாக தீபங்கள், கேப்டன் எஸ்.பி.குட்டி, உதவி ஜதீன், அறிவுசல் ஆன்மீகக் கல்விக் கழகம், விலை 80ரூ. சுதந்திரப் போரில் மறைக்கப்பட்ட வரலாறு இந்திய சுதந்திரத்துக்காக தங்கள் இன்னுயிரையே தியாகம் செய்த வீரர்களின் வரலாறு. புறம்பேசித் திரிந்தவர்களால் புதைக்கப்பட்ட விஷயங்களைத் தேடி எடுத்துத் தந்திருக்கிறார் ஆசிரியர். அந்நியர்க்குத் துணை நின்று உள்குத்து நடத்திய சிலரது குள்ளநரித்தனம், நேதாஜியின் வீரத்தையும் வீணாக்கிய வீணர்களின் செயல்கள் என்று மறைக்கப்பட்ட வரலாற்றைப் படிக்கப் படிக்க மனது கொதிக்கிறது. மறக்கடிக்கப்பட்ட வீரர்களின் மாண்பை நினைத்து, மனதார சல்யூட் அடிக்கத் தோன்றுகிறது. நன்றி: […]

Read more

தமிழ் விருந்து

தமிழ் விருந்து, பேராசிரியர் இரா.மோகன், வானதி பதிப்பகம், விலை 200ரூ. அறுசுவை விருந்து உண்டிருக்கலாம். அருந்தமிழ் விருந்து உண்டதுண்டா? அத்தகைய ஆனந்த அனுபவத்தை அளிக்கும் அற்புதமான தொகுப்பு நூல். சங்கத் தமிழ் முதல் இன்றைய ஹைகூ வரை பலப்பல கவிஞர்களின் கற்பனையில் ஊற்றெடுத்த உவகைத் தமிழின் உயர்வுகளை உணர்வுகளை உதாரணங்களுடன் சொல்லியிருக்கும் விதம் அருமை. நன்றி: குமுதம். இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000029544.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – […]

Read more

ஆலயம் கடந்த ஆன்மிகம்

ஆலயம் கடந்த ஆன்மிகம், ஜாநி சிவம், ஜனனி நூல் நிலையம், விலை 200ரூ. கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்ற கேள்விகளுக்கே அவசியம் இல்லாமல், இல்லை என்பதுதான் கடவுளே என்ற ஆன்மிக உச்சத்தை எளிய விளக்கங்களுடன் சொல்லும் நூல். பார்க்கும் இடமெல்லாம் பகவானையே பார்க்கும் வகையில் பக்குவப்படுத்தும் முயற்சி. அதை முழுமையாகச் செய்திருக்கிறார் நூலாசிரியர். நன்றி: குமுதம். இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

தேன்துளிகள்

தேன்துளிகள், ச.நடராஜன், தில்லை பதிப்பகம், விலை 120ரூ. ஔவை, கம்பன், உ.வே.சா., திரு.வி.க. என்று அன்னைத் தமிழுக்கு அழகு சேர்த்த எண்ணற்றோரின் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்களின் தொகுப்பு. பருகத் திகட்டாத தமிழ்த் தேன் துளிகளாக ஒவ்வொரு பக்கமும் புரட்டப் புரட்ட இனிக்கிறது. முழுமையாகத் தமிழ் மனதை நிறைக்கிறது. நன்றி: குமுதம். இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

கண்மணி சோபியா

கண்மணி சோபியா, கவிஞர் புவியரசு, நந்தினி பதிப்பகம், விலை 150ரூ. ஒவ்வொரு விநாடியும் உலகின் ஏதோ ஒரு மூலையில் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி பாதிக்கப்பட்ட இளைஞி சோபியாவின் கதையாக எளிய நடையில் நகரும் நாவல். சோபியா யார் எனத் தெரியும் இடத்தில் அறிவியல் புதினமாக புதுமலர்ச்சி பெறுகிறது. கதை என்பதைவிட பாதிக்கப்பட்ட, படுகின்ற பெண்களின் போர்க்குரலாகவே ஒலிக்கிறது. படித்து முடித்ததும் இரக்கமும், ஈனர்கள் மேல் சினமும் ஒரு சேரத் தோன்றுவது நிதர்சனம். நன்றி: குமுதம், 7/8/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் […]

Read more

நடுகல்

நடுகல், தீபச்செல்வன், டிஸ்கவரி புக் பேலஸ், விலை 180ரூ. இலங்கை ராணுவத்தின் அடக்குமுறைக்கும், அச்சுறுத்தலுக்கும் இடையேயான ஈழத்தமிழர்களின் ஈரமான வாழ்வு, இனம் காக்கப் போராடிய மாவீரர்களின் வலிமை, வலி என்று அத்தனையையும் கண்முன் கொண்டுவந்து நிறுத்தும் கதைக்களம். கதையின் நாயகனாக தீபச்செல்வன் தானே பயணித்திருப்பதை வரிக்குவரி உணரமுடிகிறது. சிங்கள ராணுவத்தின் சித்ரவதைகள், தோட்டாவிலும் குண்டுகளிலும் சிக்குண்டு வாழ்விடம் சின்னாபின்னமான நிலையிலும் உறவுகளின் ஒற்றைப் புகைப்படமாவது கிட்டாதா என்று தேடும் முள்ளிவாய்க்கால் மக்களின் ஏக்கம், இன்றாவது நிஜமாக விடியாதா என்ற எதிர்பார்ப்பு. போரற்ற மாற்றுப் போராட்டத்தின் […]

Read more

நிழலும் நிஜமும்

நிழலும் நிஜமும், ஜம்போ காமிக்ஸ், பிரகாஷ் பப்ளிஷர்ஸ், விலை 200ரூ. சம்மரில் காமிக்ஸ் பிரியர்களைக் கூலாக்க வந்திருக்கும் ஜேம்ஸ்பாண்ட் 007 காமிக்ஸ். உளவாளிப் பெண் ஒருத்தியின் முகமூடி கலைந்துபோக, அவளைக் காப்பாற்ற வருகிறார் ஜே.பி. 007, அவரது வருகையும் தெரிந்துவிட, இரு நாட்டு உளவாளிகளுக்கு இடையே நடக்கும் உரசல்கள். இதற்கிடையே நாட்டில் ஆங்காங்கே நடக்கும் குண்டு வெடிப்புகளுக்குக் காரணம் யார் என்று கண்டுபிடிக்க, பாண்ட் செய்யும் உளவுப் பணிகள், பரபர சண்டைகள் என்று அதிரடியாக நகர்கிறது கதை. கிளைமாக்ஸில் வில்லன் யார் என்பது ரகசியம். […]

Read more
1 2 3 4 57