நிலைத்து நிற்கும் வாழ்க்கைத் தத்துவங்கள்

நிலைத்து நிற்கும் வாழ்க்கைத் தத்துவங்கள், பாகம் 2, ஓஷோ, தமிழில் சிவதர்ஷினி, கண்ணதாசன் பதிப்பகம், விலை 300ரூ. இன்று உலகில் சில நியதிகள் என்றென்றும் நிலையாகவே இருக்கின்றன. உதாரணமாக, தண்ணீர் சூடாவதோ அல்லது பனிக்கட்டியாவதோ குறிப்பிட்ட டிகிரி என்றால் அது அதிலிருந்து மாறுவதே இல்லை. மாறும் உலகில் மாற்றம் இல்லாமல் நிலைத்திருக்க வேண்டுமானால், உள்ளும் புறமும் அறிந்திருக்க வேண்டும். புறத்தைக் கண்களால் பார்க்கும் நாம், அகத்தைப் பார்க்கக் கற்றால், முழுமையான மனிதராக வாழலாம். பிதகோரஸின் பின்புலத்தோடு, நமக்கு அதை விளக்கும் ஓஷோவின் முயற்சியே இந்த […]

Read more

காகிதம்

காகிதம், வெ.இறையன்பு, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிட், விலை 50ரூ. மனிதனின் கண்டுபிடிப்புகளுள் மகத்தான இடம் காகிதத்துக்கு உண்டு. அறிவுக் கடத்தியாக தகவல்களை காகிதம் சுமக்கத் தொடங்கிய பிறகுதான், அகிலத்தின் அறிவுக் கண் திறந்தது. உயர்வான காகிதத்தை உதாசீனமாகக் கசக்கிவிடாமல், அதன் அருமை பெருமையை உணரச் சொல்லும் அற்புதமான புத்தகம். காகிதத்தைக் கண்டுபிடித்தவர் ஒரு திருநங்கை என்பது போன்ற வித்தியாசமான தகவல்களும் நிறைய இருப்பது கூடுதல் சுவாரஸ்யம்! நன்றி: குமுதம், 14/11/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026622. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

தமிழ் உலா

தமிழ் உலா, பேராசிரியர் இரா.மோகன், வானதி பதிப்பகம், விலை 160ரூ. அருந்தமிழ் அன்று முதல் இன்றுவரை கவிதையாய் நடைபோட்டு வந்திருக்கும் நல்லிலக்கிய நூல்களில் இடம்பெற்ற தனிச்சிறப்பான வரிகளின் வர்ணனையாய் விளக்கக் கட்டுரைகள். செந்தமிழ்த் தேரில் செம்மாந்து உலாவரும் உவகை, பக்கங்களைப் புரட்டுகையில் மனதைப் பரவசப்படுத்துகிறது. அருந்தமிழ் விரும்பிகளுக்கு அற்புதமான விருந்து. நன்றி: குமுதம், 14/11/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027343.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

என்னத்தச் சொல்ல…,

என்னத்தச் சொல்ல…, செ.சரவணா, ஜெயலக்ஷ்மி எண்டர்பிரைஸஸ், விலை 110ரூ. கிராமப்புறங்களில் ஒவ்வொரு மனிதரையும் ஓர் அடையாளமோ அடைமொழியோ சொல்லித்தான் அழைப்பார்கள். அப்படிப்பட்ட மண்மணம் கமழும் சாதாரண மனிதர்கள் எட்டுப்பேரின் அடைமொழிக்கான காரணக் கதைகள். கற்பனை என்றாலும் நிஜம்போல் நகர்கிறது கதை. அதற்குப் பக்கபலம் சேர்க்கிறது நெல்லை தமிழ் நடை. நன்றி: குமுதம்,17/10/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

பாகன் திரும்பும் வரை

பாகன் திரும்பும் வரை, வலங்கைமான் நூர்துன், ஓவியா பதிப்பகம், விலை 80ரூ. வயற்காடு முதல் வான் மழைவரைதினம் நடக்கும் அவலங்களை மனம் தொட்டு உரசும் கவிதைகளாக வடித்திருக்கும் நூல். கைக்கு கனம் இல்லா புத்தகம், மனதை கனக்கச் செய்கிறது. நன்றி: குமுதம்,17/10/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

பணம் மற்றும் பலன் தரும் மரங்கள்

பணம் மற்றும் பலன் தரும் மரங்கள், கா.த. பார்த்திபன், இரா.ஜுட் சுதாகர், பா.பழனிகுமரன், நா.கிருஷ்ணகுமார், கண்ணதாசன் பதிப்பகம், விலை 280ரூ. வனம் வளர்ந்தால் மனிதர்களின் வளம் பெருகும், வாழ்க்கை செழிக்கும் என்பது இயற்கையின் நியதி. ஆனால், வனங்கள் அழிந்து வசிப்பிடங்களாக மாறிவரும் இந்தக் காலகட்டத்தில், மரங்களின் அவசியத்தைச் சொல்லி, செழிப்பாக மரங்களை வளர்த்துப் பணமும் பலனும் பெற எளிய முறையில் வழிகாட்டும் நூல். நன்றி: குமுதம்,17/10/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027231.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

அன்புள்ள மாணவனே

அன்புள்ள மாணவனே, வெ. இறையன்பு, விஜயா பதிப்பகம், விலை135ரூ. சோதனைகளைக் கடந்து சாதனைகளைச் செய்ய விரும்பும் மாணவர்களுக்கு மகத்தான வழிகாட்டல். அறிவுரைகளாக இல்லாமல் அறவுரைகளாகவும், கடிந்து சொல்லாமல் கடிதங்களாகவும் எழுதியிருக்கும் விதம் அற்புதம். அனுபவத்தைப் பாடமாகத் தந்திருப்பதைப் படிக்கும் மாணவர் யாராயினும் ஏதேனும் ஒருவகையிலாவது சாதனை படைப்பார் என்பது நிச்சயம். நன்றி: குமுதம்,17/10/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026633.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

ஏழாம் நம்பர் வீடு

  ஏழாம் நம்பர் வீடு (தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்), சுப்ரஜா, வாதினி, விலை 499ரூ. யதார்த்த வாழ்வில் நாம் அன்றாடம் பார்க்கும் சாதாரண மனிதர்களின் வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டும் நாற்பத்திரண்டு கதைகளின் தொகுப்பு. ஒவ்வொரு கதையும் சின்னச் சின்னதாக சட்டென்று நகர்ந்தாலும் அது ஏற்படுத்தும் தாக்கம் அவ்வளவு சீக்கிரம் மனதைவிட்டு நகராது என்பது நிஜம்! நன்றி: குமுதம்,17/10/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027247.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818 […]

Read more

பாணனைத் தொடரும் வெயில்

பாணனைத் தொடரும் வெயில், ச.அருண், வாலி பதிப்பகம், விலை 80ரூ. வறுமை நிழலாய்த் தொடர வாழ்க்கைப் பாதையை அந்த இருளில் தேடும் பாணர்களின் நிலையை கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் கவிதைகள். கண் முன் காட்சியாய் நகர்ந்தாலும் உணரமுடியாத நிஜத்தை கவிதையாய் வாசிக்கிறபோது நெஞ்சம் நெகிழ்வது நிச்சயம். நன்றி: குமுதம், 3/10/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027223.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசனின் பன்முகம்

பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசனின் பன்முகம், பேராசிரியர் இரா.மோகன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், விலை 100ரூ. சொல்வேந்தராகப் பலரும் அறிந்த பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன் அவர்களின் பல்வேறு நிலையான ஆளுமைத் தன்மைகளை உள்ளங்கை நெல்லிக்கனியென விளக்கும் வகையில், அவரது படைப்புகளில் இருந்து பொருத்தமானவற்றைச் சேர்த்துக் கோத்து உருவாக்கப்பட்டிருக்கும் நூல். நன்றி: குமுதம், 3/10/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more
1 3 4 5 6 7 57