பூமியின் பாடல்கள்

பூமியின் பாடல்கள் (வட கிழக்கு இந்தியக் கதைகள்), கைலாஷ் சி. பரல், தமிழில் சுப்பிரபாரதி மணி, சாகித்ய அகாடமி, பக். 204, விலை 140ரூ. வடகிழக்கு மாநிலங்களின், 16 கதைகளை தமிழில் மொழிபெயர்த்து தொகுக்கப்பட்ட நூல் இது. பதிப்பாசிரியர்: கைலாஷ். சி.பரல் திரட்டிய, 15 எழுத்தாளர்களின் கதைகளை, தமிழாக்கம் செய்திருப்பவர் சுப்பிரபாரதி மணி. அசாம், மணிப்பூரி, மேகாலயா, மிசோரம், திரிபுரா, நாகாலாந்து பிரதேச, 16 கதைகளில், சில நெடுங்கதைகள், பல் வகையான மையப் பொருள்களில், அவரவருக்கே உரித்தான நடையில் படைத்தவற்றில், சில கருத்துமிக்க அழுத்தமான […]

Read more

கால்டுவெல்லின் தமிழ்க்கொடை

கால்டுவெல்லின் தமிழ்க்கொடை, இரா. காமராசு, சாகித்ய அகாடமி, பக். 240, விலை 180ரூ. கால்டுவெல் தொண்டு தமிழின் கல்வெட்டு திராவிட மொழி இயலின் தந்தை ராபர்ட் கால்டுவெல். 202 ஆண்டுகளுக்கு முன் அயர்லாந்தில் பிறந்து, கிறிஸ்தவ சமயப் பணியாளராக, 1938ல் சென்னை வந்தார். மூன்று ஆண்டுகளில் தமிழைக் கற்றுத் தேர்ந்தார். வின் சுலோ, போப், பவர், ஆண்டர்சன் முதலான தமிழ் அறிஞருடன் இணைந்தார். 400 மைல் தொலைவு திருநெல்வேலிக்கு, சென்னையில்இருந்து நடந்தே சென்றார். தமிழ் மக்களை நேரில் கண்டு, அவரது மொழி, கலை, பண்பாடுகளை […]

Read more

கம்பதாசன் படைப்பாளுமை

கம்பதாசன் படைப்பாளுமை, ஆர். சம்பத், சாகித்ய அகாடமி, பக். 224, விலை 335ரூ. கம்பனை காட்டும் கவிஞர். இவர் கம்பதாசர் அல்லர்; கம்பரே’ என்று, ரசிகமணி டி.கே.சி.,யால் புகழப் பெற்ற கம்பதாசன் தமிழின் பெருங்கவிஞர்; திரைப்படப் பாடலாசிரியர்; நாடக நடிகர்; திரைப்படக் கலைஞர்; சிறுகதையாளர்; நாவலாசிரியர்; இதழாசிரியர் போன்ற பன்முக ஆளுமையாளர். மகாகவி பாரதிக்குப் பின், தமிழகத்தில் தோன்றி, கவிதையை வளம் செய்த ஆற்றல் மிகுந்த சிறந்த கவிஞர்களுள், கம்பதாசன் குறிப்பிடத்தகுந்தவர். பாரதி மரபினைப் பின்பற்றிப் படைப்புகளைப் படைத்தாலும், தனக்கென்று ஓர் இலக்கிய மரபினை […]

Read more

ஆங்கிலத்தில் பாரதியார் பாடல்கள்

ஆங்கிலத்தில் பாரதியார் பாடல்கள், டாக்டர் சிற்பி பாலசுப்பிரமணியம், சாகித்ய அகாடமி, விலை 950ரூ. மகாகவி பாரதியாரின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடும் முயற்சியில் சாகித்ய அகாடமி ஈடுபட்டுள்ளது. இப்போது முதல் பாகம் வெளிவந்துள்ளது. பெரிய அளவில் 636 பக்கங்கள். பாரதியாரின் கவிதைகளை உலக மக்கள் படித்து ரசிக்க இந்நூல் உதவும். நன்றி: தினத்தந்தி, 31/8/2016.

Read more

தி கிப்ட்

தி கிப்ட், தமிழில் கு. அழகிரிசாமி, ஆங்கிலத்தில் பட்டு எம். பூபதி, சாகித்ய அகாடமி, பக். 176, விலை 130ரூ. கு.அழகிரிசாமி தமிழில் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர். ‘அன்பளிப்பு’ என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக சாகித்ய அகாடமியின் விருதினைப் பெற்றவர். அந்த தொகுப்பினை பட்டு எம்.பூபதி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். ‘ராஜா ஹேஸ் கம்’ கதையில், தன் குழந்தைகளை அரவணைத்துப் போற்றும் ஏழையான தாயம்மாள், தன் குழந்தைகள் வயதை ஒத்த அநாதைச் சிறுவனிடம் அன்பைப் பொழிகிறாள். ‘எங்கள் வீட்டுக்கு ராஜா வந்திருக்கிறார்’ என்று பணக்கார நண்பன் இராமசாமி பீற்றிக்கொள்ளும்போது, […]

Read more

அ. ஞானசம்பந்தன்

அ. ஞானசம்பந்தன், நிர்மலா மோகன், சாகித்ய அகாடமி, பக். 128, விலை 50ரூ. ‘புதிய புதிய அல்லல்களில் சிக்கித் தவிக்கும் தமிழ்ச் சமுதாயம், பெரிய புராணத்தைக் கற்பதன் மூலம் மீண்டும் தலை நிமிர்ந்து வாழ முற்படுமென்று நம்புகிறேன்.’(பக். 72) என்று கூறும், ‘ஆழ்ந்து அகன்ற நுண்ணியரான’ அ.க. ஞானசம்பந்தன், 35 ஆய்வு நூல்களையும், மூன்று மொழிபெயர்ப்பு நூல்களையும், ஆறு பதிப்பு நூல்களையும் வெளியிட்டு, அன்னைத் தமிழுக்கு அரணாகவும், அணியாகவும் விளங்கி 85வது அகவையில் காலமானார். நாவலர் சோமசுந்தர பாரதியாரால் இலக்கியத் துறைக்கு வந்த அ.ச..வின் […]

Read more

இந்திய இலக்கியச் சிற்பிகள் ராஜாஜி

இந்திய இலக்கியச் சிற்பிகள் ராஜாஜி, ஆர்.வெங்கடேஷ், சாகித்ய அகாடமி, பக். 128, விலை 50ரூ. தாம்புக் கயிறும் ராஜாஜியும் ராஜாஜியோடு இலக்கியப் பயணத்தில் உடனிருந்தவர், மீ.ப.சோமு. ராஜாஜி அவ்வப்போது மீ.ப.சோமுவின் வீட்டிற்குப் போவது உண்டு. மாடியில் வீடு. உயரமான சுழல் படிகள்.கைப்பிடி இருக்காது. ராஜாஜி ஏறி வருவதற்கு வசதியாக ஒரு தாம்புக் கயிற்றைத் தொங்கவிட்டிருப்பார்கள். தள்ளாத வயதில், தாம்புக் கயிற்றை பிடித்துக்கொண்டு ஏறி,மாடிக்கு வருவார் ராஜாஜி. காரணம், இலக்கிய நட்பு . . . ராஜாஜி ஒரு தீர்க்கதரிசி என்று மதிப்பிடுகிறார்கள் அவருடைய அபிமானிகள். இல்லை,அவர் ஒரு […]

Read more

மனோதிடம்

மனோதிடம், பன்னாலால் படேல், தமிழில் ந. சுப்பிரமணியன், சாகித்ய அகாடமி, பக். 608, விலை 375ரூ. குஜராத்தில், மிகச்சிறந்த எழுத்தாளராக மதிக்கப்பெறும் பன்னாலால் எழுதிய ‘மாலேல ஜீவ்’ என்னும் இந்த நாவல் ஞான பீட விருதுபெற்றது. குஜராத்தில் 1900ல் நிகழ்ந்த கடுமையான பஞ்சம்தான் நாவலின் பின்புலம். கதாநாயகன் காலு, கதைத் தலைவி ராஜு இடையிலான காதல், நாவலின் மையம். அவர்களின் திருமணம் தடைபட்டதை வைத்து கதை பின்னப்பட்டுள்ளது. அவர்களின் திருமணத்தைத் தடுக்க முனைந்து அதில் வெற்றி காண்கிறது ஒரு குடும்பம். காலுவின் கிராமத்தில் கடும் […]

Read more

அரண்மனை

அரண்மனை, தமிழில் இறையடியான், சாகித்ய அகாடமி, விலை 455ரூ. கன்னட எழுத்தாளர் கும்.வீரபத்ரப்பா எழுதிய படைப்புகளில் மிகச் சிறந்த நாவல். இது கன்னட நாவல் உலகின் போக்கையே மாற்றி அமைத்தது என்றால் மிகையாகாது. 19ம் நூற்றாண்டின் காலனித்துவ காலகட்டத்தை வித்தியாசமான நோக்கில் படம் பிடித்துள்ள நாவல் இது. இதில் அரசு விசுவாசம், கும்பினி சர்க்காரின் ஆளுமை, மக்கள் நம்பிக்கையின் எதிரெதிர்ப் போக்குகள் ஆகியன மிக அழகிய முறையில் சித்தரிக்கப்பட்டுள்ளன. புதுமையான முறையில் மண்ணின் வாசனையை தன்னகத்தே கொண்டுள்ள இந்த நாவலை, இறையடியான் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். […]

Read more

கம்பதாசன்

கம்பதாசன், சிற்பி. பாலசுப்பிரமணியன், சாகித்ய அகாடமி, பக். 144, விலை 50ரூ. கண்கள் குளமாகும் கம்பதாசனின் வாழ்க்கை! உணர்வின் கூர்மையும், கலை வடிக்கும் கனித்திறனும் கொண்டிருந்த கம்பதாசன், சிறுகதை, நாடகம், திரைப்பாடல்கள், கவிதை, குறுங்காவியம் என, பன்முகம் கொண்ட படைப்பாளி. புதுக்கவிதையின் கூறுகளும், வியக்கத்தக்க கற்பனைகளும் புதிய புதிய உவமைகள், உருவங்கள், ஆழ்ந்த சிந்தனைகளுமாக விளங்கிய ஓர் ஆளுமைதான் கம்பதாசன். புரசைவாக்கம், குயப்பேட்டை நகராட்சிப் பள்ளியில், எட்டாம் வகுப்பைத் தாண்டாத, ‘அப்பாவு’ எனும் இயற்பெயர் கொண்ட கம்பதாசன், பெற்றோருக்கு தெரியாமல் நாடக தொழிலில் ஈடுபட்டு, […]

Read more
1 2 3 4 5