முருகு சுந்தரம்

முருகு சுந்தரம், சேலம் கு. கணேசன், சாகித்ய அகாடமி, சென்னை, பக். 128, விலை 50ரூ. பாரதி பரம்பரையில், வந்த சிறந்த படைப்பாளர் முருகு சுந்தரம். பழமையில் பூத்து, புதுமையில் கனிந்த முருகு சுந்தரம், மரபில் துவங்கி, புதுக்கவிதையில் உயர்ந்து நின்றார்.புதிய உத்திகள், படிமங்களுடன் புதுக்கவிதையில் நாடகமாக ஈழப் பிரச்சினையை, எரி நட்சத்திரம் ஆக்கினார். அவர் எழுதிய அருவ ஓவியங்கள், கனிந்த பழம், பொம்மைக் காதல் முதலிய ஆறு புதுக்கவிதை நாடகங்களும், அவருக்கு பெருமை சேர்த்தன. மறத்தகை மகளிர், பாரும்போரும், பாவேந்தர் நினைவுகள், மலரும் […]

Read more

சுவாமி தயானந்த சரஸ்வதி

சுவாமி தயானந்த சரஸ்வதி, ஸ்ரீ விஷ்ணு பிரபாகர், டாக்டர் அகிலா சிவராமன், சாகித்ய அகாடமி, விலை 50ரூ. இந்திய இலக்கிய சிற்பிகள் வரிசையில், ஆரிய சமாஜத்தை நிறுவிய சுவாமி தயானந்த சரஸ்வதியை பற்றியது இந்த நூல். 1824ல் குஜராத்தில் பிறந்த அவர், வடமொழி கற்று தேர்ந்து, வடமாநிலங்கள் முழுவதும் பயணம் செய்து மக்களுக்கு அறவழியை போதித்தார். அதற்காக, அவர் தன் 48வது வயதில் இந்தி மொழியை கற்று மக்களிடம் அவர்களது மொழியில், எளிய நடையில் பேசியும், எழுதியும் வழிகாட்டினார். அனைவரும் இந்தி மொழியை தெரிந்துகொள்ள […]

Read more

திருலோக சீதாராம்

திருலோக சீதாராம், இராஜாமணி, சாகித்ய அகாடமி, பக். 104, விலை 50ரூ. திருலோக சீதாராம் எனும் சித்த சாகரம் திருலோக சீதாரம், எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். அவர் தாய்மொழி, தெலுங்கு, கடுமையான சுய உழைப்பால் கல்வியில் மேம்பாடு உற்றார். ஆங்கிலத்திலும் அபாரமான அறிவு உடையவராக திகழ்ந்தார். கணக்கெழுதுவதிலும் அவர் திறமை அடைந்தார். இதன் மூலமும், தன் வருமானத்தை அவர் பெருக்கிக் கொண்டார். கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் அவர், வறுமையில் அழுந்தியிருந்தார். ஆனால் தம்முடைய கடைசி. 13 ஆண்டுகள், அவர் வளமுற்று, வாகன […]

Read more

வாணிதாசன் கவிதைத் திரட்டு

வாணிதாசன் கவிதைத் திரட்டு, மகரந்தன், சாகித்ய அகாடமி, பக். 304, விலை 185ரூ. தமிழ்வேந்தர் வெளியிட்ட சின்ன காசோ? பாரதிக்கு ஒரு பாரதிதாசன். பாரதிதாசனுக்கோ பல தாசர்கள். அவர்களில் சூரியனாய் சுடர் விட்டுப் பிரகாசிப்பவர்  சுரதா. பவுர்ணமி நிலவாய் பவனி வருபவர் வாணிதாசன். விண் மீனை, வாணிதாசன் வர்ணிப்பதைப் பாருங்கள் தைத் திங்கள் குளம் பூத்த பூவோ? தமிழ் வேந்தர் வெளியிட்ட சின்ன காசோ? மைத்தடங்கண் மடமாதர் உதிர்த்துப் பின்னர் மாலைக்குத் தேர்ந்தெடுக்கும் முல்லைப் பூவோ? நாளைய தமிழகம் எப்படி இருக்க வேண்டும் என்று, […]

Read more

தந்தை கோரியோ

தந்தை கோரியோ, பிரெஞ்சு மூலம் ஒனோரெ தெ. பல்சாக், தமிழில் ச. மதனகல்யாணி, சாகித்ய அகாடமி, பக். 433, விலை 220ரூ. வெறுப்பெனும் பெருஞ்சரிவில் மனித இதயம் நிற்பது அருமை நெப்போலியன் கத்தியால் சாதித்ததை நான் இறகு முனையால் சாதிப்பேன் என்ற பிரெஞ்சு எழுத்தாளர் ஒனோரே தெ. பல்சாக், 150 ஆண்டுகளுக்கு முன் எழுதிய, லெ பேர் கோரியோ எனும் புதினத்தை, தந்தை கோரியோ எனும் பெயரில், எளிய நடையில் மிக நுணுக்கமாக மொழி பெயர்த்துள்ளார் பேராசிரியர் மதன கல்யாணி. மனைவியை இழந்தும், தன் […]

Read more

தெரிந்தெடுத்த சுரதா கவிதைகள்

தெரிந்தெடுத்த சுரதா கவிதைகள், தொகுப்பாளர்-மறைமலை இலக்குவனார், சாகித்ய அகாடமி, சென்னை, விலை 140ரூ. கவிஞர், இதழாசிரியர், சினிமா வசனகர்த்தா, திரைப்பட பாடலாசிரியர், கட்டுரையாளர், சொற்பொழிவாளர், கவியரங்கத் தலைவர் என்று பன்முக ஆற்றல் பெற்றவர் சுரதா. அவர் பாடல்களில் உவமைகள் அதிகம் இருப்பதால் உவமைக் கவிஞர் என்று அழைக்கப்பட்டார். கவிஞர் சுரதாவின் தெரிந்தெடுத்த கதைகளை சாகித்ய அகாடமி தொகுத்து வெளியிட்டுள்ளது. இவர் மிகக் குறைவான சினிமா பாடல்களையே எழுதி இருக்கிறார் என்ற போதிலும் அவை கருத்தாழமும், பலமை வீச்சும் நிறைந்தவை. அமுதும் தேனும் எதற்கு நீ […]

Read more

போராளிகள்

போராளிகள், மு. செந்திலதிபன், விகடன் பிரசுரம், பக். 152, விலை 90ரூ. சமுதாய நலனுக்காக, தம்மை அர்ப்பணித்து கொள்பவர்களையே, போராளிகள் என்றழைக்கிறோம். ஒடுக்கப்பட்டோரின் விடுதலை, பெண்ணுரிமை, கல்வி உரிமை என, சமுதாயத்திற்காக, போராடுபவர்கள் வெகுசிலரே. அந்த வகையில் இந்த நூலில் ஒன்பது போராளிகளின் சமகால வரலாறுகள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. அடக்குமுறை ஆட்சியாளர்களை எதிர்த்து, காந்திய வழியில் போராடி, தங்கள் மக்களுக்காக உரிமைகளைப் பெற்ற மியான்மரின் ஆங் சான் சூச்சி. மணிப்பூரில் உண்ணாநிலை அறப்போரில், ஏறக்குறைய 13 ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் ஐரோம் ஷர்மிளா போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். […]

Read more

அவளது பாதை

அவளது பாதை, சாகித்ய அகாடமி, குணா பில்டிங்ஸ், 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, விலை 110ரூ. பெண்களின் அவலநிலையை கூறும் நூல். தெலுங்கு இலக்கிய உலகில் புகழ் பெற்ற பெண் எழுத்தாளர் அப்பூரி சாயாதேவி தெலுங்கில் எழுதிய இந்த நூலை ஆசிரியர் கொ.மா.கோதண்டம் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். இதில் 28 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. ஒரு பெண் சமுதாயத்தால் எவ்வாறெல்லாம் புறக்கணிக்கப்படுகிறாள். ஒதுக்கி வைக்கப்படுகிறாள் என்பதை உணர்ச்சி பொங்க எழுதியுள்ளார். இக்கதைகளை படிக்கும்போது பெண்களுக்கு இவ்வளவு பிரச்சினைகளா? என்று வியக்க வைக்கிறது. இதில் […]

Read more

செவ்விலக்கியச் சிந்தனைப் புதையல்

செவ்விலக்கியச் சிந்தனைப் புதையல், முனைவர் மு. இளங்கோவன், வயல்வெளிப் பதிப்பகம். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இளம் அறிஞர் விருது பெற்றவர் இந்நூலாசிரியர். சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், திருக்குறள் தொடர்பான, 20 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். இணையம் வழியாக தமிழ் பரப்பும் முனைப்பு மிக்கவர். ஆய்வு நெறிகளில் ஆர்வமும், ஊக்மம் கொண்டவர் என்பதை இக்கட்டுரைகள் உறுதி செய்கின்றன. பல்வேறு நாடுகளில் நடைபெற்ற ஆய்வுக் கருத்தரங்குகளில், கட்டுரைகள் படைத்தவராதலின் நூலின் தரம் உயர்ந்துள்ளது. தமிழர்களின் பண்டைக்காலத்து ஆவணமாகப் பட்டினப்பாலை விளங்குவதை விரித்தெழுதியுள்ளார். ஈழத்து அறிஞர்கள் ஆற்றிய […]

Read more

துக்காராம்

துக்காராம், பாலசந்திர நெமதே, தமிழாக்கம்-ஆர்.கே.நாகு, சாகித்ய அகாடமி, டில்லி, விற்பனை-குணா பில்டிங்ஸ், 443, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை 600018, பக். 136, விலை 50ரூ. மராத்தி இலக்கிய படைப்பாளர்கள் சமய சீர்திருத்தமும், சமுதாயச் சீர்திருத்தமும் ஏற்பட நூல்கள் பல எழுதினர் என்பர். இந்நூல், துக்காராமின் காலச்சூழல், அவர் வாழ்க்கை வரலாறு, கவிஞர் திருத்தொண்டர் என்ற நிலையில் வாழ்ந்த துக்காராம் என்று பல தலைப்புகளில் விளங்குகிறது. துக்காராமின் மராத்தி பாடல்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. படிப்போருக்கு மிகவும் உதவும் என்பதில் ஐயமில்லை. நூலின் இறுதியில் […]

Read more
1 2 3 4 5