ஆடி காத்து

ஆடி காத்து, ரா. லட்சுமணன், விலை 100ரூ. மனதைத் தொடும் சிறுகதைகள் கொண்ட புத்தகம். நூலாசிரியர் ரா.லட்சுமணன் பாராட்டுக்குரியவர். இந்த நூல் 2014-2015-ம் ஆண்டுக்கான சிறந்த படைப்பாக தமிழக அரசின் ஆதி திராவிடர் நலத்துறை கலைப்பண்பாட்டுத் துறையால் தேர்வு செய்யப்பட்டு பரிசு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி: தினத்தந்தி, 19/4/2017.

Read more

திருக்குறளை ஏன் இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்?

திருக்குறளை ஏன் இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்?, பதிப்பாசிரியர்கள் டாக்டர் ந.வேலுசாமி, டாக்டர் மோசசு மைக்கேல் பாரடே, ‘யுஎம்ஐ’ யூனிக் வெளியீடு, விலை 150ரூ. திருக்குறளை இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தமிழறிஞர்களும், பேராசிரியர்களும் எழுதிய கட்டுரைகள் இந்த நூலில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 19/4/2017.

Read more

பழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்,

பழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள், முனைவர் க. மங்கையர்க்கரசி, லாவண்யா பதிப்பகம், விலை 140ரூ. பழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் கருத்துகள் இடம் பெற்றுள்ளன என்பதை முனைவர் க. மங்கையர்க்கரசி இந்த நூலில் ஆய்வுக் கண்ணோட்டத்தில் அலசி இருக்கிறார். மருத்துவயியல், கருவியல், மரபியல், இயற்பியல், அணுவியல், கணிதவியல், வானியல் என்பன போன்ற 12 தலைப்புகளில் தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்ற அறிவியல் சிந்தனைகள் தொகுக்கப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 19/4/2017.

Read more

கல்லூரி காணாதவர்களிடம் கற்க வேண்டியவை

கல்லூரி காணாதவர்களிடம் கற்க வேண்டியவை, சஞ்சீவியார் பதிப்பகம், விலை 110ரூ. கல்லூரி படிப்பு முடித்தவர்களே சாதிக்க முடியும் என்பதல்ல. கல்லூரி காணாதவர்களும் நம் நாட்டில் சாதித்துள்ளனர். அந்த வகையில் கல்லுரிக்குச் செல்லாமல், தனது அனுபவப் படிப்பு காரணமாக சாதனை புரிந்த வள்ளலார், ஈ.வே.ரா. பெரியார், கல்கி கிருஷ்ணமூர்த்தி, பெருந்தலைவர் காமராஜர், கிருபானந்த வாரியார், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., கவியரசர் கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஆகிய 9 பேரை தேர்ந்தெடுத்து இந்த நூலில் என்ஜினீயர் க.அருச்சுனன் எழுதியுள்ளார். இந்த 9 பேர் வாழ்வில் […]

Read more

தமிழக ஜோக்ஸ் பிரபலங்கள்

தமிழக ஜோக்ஸ் பிரபலங்கள், தொகுப்பு திருமயம் பெ. பாண்டியன், வைகை ஆறுமுகம், பாண்டியன் வைகை பதிப்பகம், விலை 140ரூ. ஜோக்ஸ் எழுதுவதில் புகழ் பெற்றவர்கள் பற்றிய விவரங்களும், துணுக்குகளும் கொண்ட புத்தகம். நன்றி: தினத்தந்தி, 19/4/2017.

Read more

புகழ்பெற்ற விக்கிரமாதித்தன் கதைகள்

புகழ்பெற்ற விக்கிரமாதித்தன் கதைகள், பட்டத்தி மைந்தன், வசந்தா பிரசுரம், விலை 240ரூ. காலத்தால் அழியாத கதைகளில் விக்கிரமாதித்தன் கதைகளும் ஒன்று. சிறுவர் முதல் வயோதிகர் வரை அனைவரும் ஆர்வத்துடன் படிக்கும் 55க்கும் மேற்பட்ட விக்கிரமாதித்தன் கதைகள் விறு விறுப்பாக தொகுத்துத் தரப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 19/4/2017.

Read more

வெற்றிக்கு வழிகாட்டும் திருமந்திரம்,

வெற்றிக்கு வழிகாட்டும் திருமந்திரம், வேணுசீனிவாசன், அழகு பதிப்பகம், விலை 145ரூ. திருமந்திர பாடல்களில் சிலவற்றுக்கு எளிய விளக்கமும், நடைமுறை உதாரணங்கள் அடங்கிய கட்டுரைகள் இடம் பெற்ற நூல். குறிப்பாக அன்பும் சிவனும், யான் பெற்ற இன்பம், ஒன்றே குலம் ஒருவனே தேவன், இனிய இல்லறம் போன்ற தலைப்புகளில் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 19/4/2017.

Read more

அவ்வையார் அருளிய அறநெறி அமுதம் – 2

அவ்வையார் அருளிய அறநெறி அமுதம் – 2, கொன்றைவேந்தன், இல. பழனியப்பன், கங்கை புத்தக நிலையம், விலை 110ரூ. அவ்வையார் எழுதிய கொன்றை வேந்தன் நம் வாழ்வுக்கு தேவையான நன்னெறிகளை எடுத்துக் கூறுகிறது. அதன் கருத்துகளை எளிய மொழி நடையில் அனைவரும் புரியும் வகையில் இல.பழனியப்பன் அழகுற எடுத்துக் கூறியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 19/4/2017.

Read more

தமிழ் இலக்கிய வரலாறு தொல்காப்பியம்

தமிழ் இலக்கிய வரலாறு தொல்காப்பியம், வித்துவான் க.வெள்ளை வாரணனார், பூம்புகார் பதிப்பகம், விலை 290ரூ. ‘தமிழ் நூல்களில் மிகப்பழமையானது ‘தொல்காப்பியம்’. உலகின் மிகப் பழமையான நூல்களில் ஒன்று என்றும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். தொல்காப்பியத்தின் சிறப்புகளை இந்த நூல் விளக்குகிறது. நன்றி: தினத்தந்தி, 19/4/2017.

Read more

உங்கள் குழந்தைக்கு சிந்திக்கக் கற்றுக்கொடுங்கள்

உங்கள் குழந்தைக்கு சிந்திக்கக் கற்றுக்கொடுங்கள், பி.சி.கணேசன்,நர்மதா பதிப்பகம், விலை 70ரூ. நம் குழந்தைகள் வாழ்க்கையில் வெற்றி பெற இளமையிலேயே நல்ல பழக்கங்களைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை இந்த நூலில் ஆசிரியர் பி.சி.கணேசன் எடுத்துரைக்கிறார். குழந்தைகளைச் சிந்திக்க வைப்பதற்கு பல்வேறு வழிகள், பல்வேறு கோணங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 19/4/2017.

Read more
1 66 67 68 69 70 223