கிள்ளை மொழி

கிள்ளை மொழி, தாமரை பப்ளிகேஷன்ஸ், விலை 95ரூ. கவிஞர் பெ. பெரியார் மன்னன் எழுதிய 79 குழந்தைப் பாடல்களின் தொகுப்பு. அணில், கரும்பு, முயல் போன்ற தலைப்புகளில் குழந்தைகளின் மனதைக் கொள்ளை கொள்ளும் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. ‘எங்க வீட்டு மீன் தொட்டி வந்து பாருங்கோ! கண்ணாடிப் பெட்டிக்குள்ளே கடலைப் பாருங்கோ” , “ஒற்றுமையாய் வாழ்வதுவே ஒருமைப்பாடு! உலகத்திற்கே எடுத்துக்காட்டாய் திகழ்ந்திடும் நாடு” என்பன போன்ற இனிய பாடல்கள். நன்றி: தினத்தந்தி, 24/5/2017.

Read more

ஆன்மிக முத்துக்கள்(அறுநூறு)

ஆன்மிக முத்துக்கள்(அறுநூறு), ஆரூர் ஆர்.சுப்பிரமணியன், சஞ்சீவியார் பதிப்பகம், விலை 180ரூ. இந்து மதம் குறித்த ஆன்மிகம் தொடர்பாக அறுநூறு கேள்விகளுக்கு இந்த நூலில் ஆரூர் ஆர்.சுப்பிரமணியன் பதில்களைத் தருகிறார். ஆன்மிகம் சம்பந்தமாக ஒவ்வொருவருக்கும் எழக்கூடிய சந்தேகங்களை அவர் தீர்த்து வைக்கிறார். இந்துக்களின் பூஜை முறைகள், பண்டிகை முறைகள், நல்ல புண்ணிய திதிகள், கோவில்களின் கட்டமைப்பு, புராண, வரலாற்றுப் பின்னணிகள் என எல்லாக் கேள்விகளுக்கும் சிறப்பான விளக்கமான பதில்கள், நம்மை வியக்க வைக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 24/5/2017.

Read more

பெரிய புராணம் எளிய நடையில்

பெரிய புராணம் எளிய நடையில், பேராசிரியர் புலவர் அ.கி. அழகர்சாமி, கற்பகம் புத்தகாலயம், விலை 230ரூ. சிவனடியார்களின் வரலாற்றைக் கூறுவது பெரிய புராணம். சேக்கிழார், காவிய வடிவில் இந்தப் பெருநூலைப் பாடித் தந்தார். அதை எளிய உரைநடையில் தரும் முயற்சி நீண்ட காலமாகவே தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவ்வாறு உரைநடையில் பெரியபுராணத்தை வழங்கும் நூல்களில் குறிப்பிடத்தக்கது இந்நூல். எல்லோரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இலக்கியச் சுவையுடன் இதை எழுதியுள்ள பேராசிரியர் புலவர் அ.கி. அழகர்சாமி பாராட்டுக்கு உரியவர். நன்றி: தினத்தந்தி, 24/5/2017.

Read more

தேயிலைப் பூக்கள்

தேயிலைப் பூக்கள், சி. பன்னீர்செல்வம், அகரம், விலை 175ரூ. கண்ணீராலும், வறுமையாலும், அவலங்களாலும், இயற்கை அல்லாத மரணங்களாலும் நிரம்பிய வாழ்க்கை இலங்கை மலையகத் தமிழர்களின் வாழ்க்கையாகும். அவர்களது வாழ்க்கையை எழுத்தாளர் சி. பன்னீர்செல்வம் புதுக்கவிதையில் காவியமாகப் படைத்துள்ளார். மலையக மக்கள் சிந்திய செந்நீரும், கண்ணீரும் நம் நெஞ்சில் சோக அலைகளை எழுப்புகிறது. நன்றி: தினத்தந்தி, 31/5/2017.

Read more

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா, டாக்டர் எஸ். சுப்புலட்சுமி, மகம் பதிப்பகம், விலை 60ரூ. மகாகவி பாரதியாரின் பாடல் வரிகளை தலைப்பாக வைத்து டாக்டர் எஸ். சுப்புலட்சுமி எழுதிய சிறுகதைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. இவர், கவிஞர் சுப்பு ஆறுமுகத்தின் மகளாவார். கதைகளில் கருத்தும், கவித்துவமும் நிறைந்துள்ளன. நன்றி: தினத்தந்தி, 31/5/2017.

Read more

ஜெயகாந்தனின் இருபதாம் நூற்றாண்டு இலக்கிய சாசனங்கள்

ஜெயகாந்தனின் இருபதாம் நூற்றாண்டு இலக்கிய சாசனங்கள், சேதுபதி, மீனாட்சி புத்தக நிலையம், விலை 300ரூ. தமிழ் இலக்கிய உலகில் தனிப் பாதை அமைத்து அதில் உலா வந்தவர் எழுத்தாளர் ஜெயகாந்தன். அவரது படைப்புகளும், பேச்சும், சிந்தனையும் தனித்துவம் மிக்கவை. இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய சாகசனங்களாக விளங்கும் ஜெயகாந்தனின் சிறுகதைகள், நாவல்கள், குறுநாவல்கள், கட்டுரைகள், பேட்டிகள் என அனைத்தும் பெருந்தொகுதிகளாக வெளியிடப்பட்டன. அந்த விழாக்களில் பங்கேற்ற வாசகர்களின் உள்ளத்தின் இலக்கியப் பதிவாக இந்த நூலை பேராசிரியர் முனைவர் சொ.சேதுபதி தொகுத்து வழங்கியுள்ளார். அனைத்து விழாக்களிலும் பங்கேற்று […]

Read more

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், குகன், வானவில் புத்தகாலயம், விலை 140ரூ. மகாத்மா காந்தியின் அகிம்சை கொள்கையை ஆரம்பத்தில் ஆதரித்த நேதாஜி, பிறகு “வெள்ளையருக்கு எதிராக ஆயுதம் ஏந்தினால்தான் சுதந்திரம் கிடைக்கும்” என்று முடிவுக்கு வருகிறார். “நீ போக்கும் பாதை சரி இல்லை” என்று காந்தி எச்சரிக்கிறார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு, பட்டாபி சீத்தாராமையாவை நிறுத்துகிறார், காந்தி. யாரும் எதிர்பாராத வகையில் பட்டாபியை எதிர்த்து நேதாஜி போட்டியிடுகிறார். வெற்றியும் பெறுகிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த காந்தி, “பட்டாபியின் தோல்வி, என் தோல்வி” என்று கூறுகிறார். […]

Read more

ஞான ஒளி பரப்பும் யோகசூத்திரம்

ஞான ஒளி பரப்பும் யோகசூத்திரம், ஜெகாதா, காளீஸ்வரி பதிப்பகம், விலை 90ரூ. ஞான ஒளியை நமக்கு கற்றுத்தரும் யோக சூத்திரத்தினை எளிமையாக அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் தொகுக்கப்பட்ட நூல். திருமந்திரமும் யோக நெறியும், திருமூலர் கூறும் பிற யோகங்கள், ஆராக்கியம் தரும் ஆசனங்களும் தெளிவாக பயனுள்ள வகையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. நன்றி: தினத்தந்தி, 31/5/2017.

Read more

பாரதி பத்துப்பாட்டும் பாரதிதாசன் பதிற்றுப்பத்தும்

பாரதி பத்துப்பாட்டும் பாரதிதாசன் பதிற்றுப்பத்தும்,சந்தனத் தென்றல் பதிப்பகம், விலை 100ரூ. பாரதியாரால் பாடப்பட்ட தமிழ்த்தாய், பராசக்தி, பாஞ்சாலி, கண்ணன், குயில், புதுமைப்பெண், பாப்பா ஆகிய ஒவ்வொருவரும் பாரதியைப் பற்றி பாடுவதாக அமைந்த பாடல். இதற்கு முத்தாய்ப்பாகப் பாரதியும் தன்னைப் பற்றி பாடுவதாகப் பாடலை கலைமாமணி கே.பி. அறிவானந்தம் நிறைவு செய்துள்ளார். பாரதியைப் பத்துப்பேர் பாடியதால் ‘பாரதி பத்துப்பாட்டு’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் பாவேந்தர் பாரதிதாசனின் நூல்களான பாண்டியன் பரிசு, குடும்ப விளக்கு, அழகின் சிரிப்பு, குறிஞ்சித்திட்டு போன்ற 10 தலைப்புகளில் ஒவ்வொன்றைப் பற்றியும் […]

Read more

இந்திய மொழிகளின் எழுத்துச் சீர்திருத்தம்

இந்திய மொழிகளின் எழுத்துச் சீர்திருத்தம், ராம்சபாபதி, அன்னராம் பதிப்பகம், விலை 150ரூ. தமிழ் மொழிக்கு சில எழுத்துச் சீர்த்திருத்தங்களை பெரியார் ஈ.வெ.ரா. அறிமுகம் செய்தார். முதல் – அமைச்சர் எம்.ஜி.ஆர். இருந்தபோது அதை அமல்படுத்தினார். இந்தியாவில் உள்ள எல்லா மொழிகளுக்கும் எழுத்து சீர்திருத்தம் கொண்டு வரலாம் என்று இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் ராம்சபாபதி கூறுகிறார். ஆலோசிக்க வேண்டிய விஷயம். நன்றி: தினத்தந்தி, 31/5/2017.

Read more
1 65 66 67 68 69 223