கர்ணனின் வாழ்க்கை சாபமா? வரமா?

கர்ணனின் வாழ்க்கை சாபமா? வரமா?, செ. சரவணன், ஜெயலட்சுமி எண்டர்பிரைசஸ், விலை 100ரூ. பாண்டவர்களுக்கு அண்ணாகப் பிறந்தும், தேரோட்டியின் மகனாக வாழ்ந்தவன் கர்ணன். துரியோதனன் தயவால் வாழவேண்டிய நிலையில் இருந்தவன். எனினும் “தர்மம் செய்வதில் கர்ணனுக்கு நிகர் கர்ணனே” என்று புகழ் பெற்றான். அவன் வாழ்க்கையை அலசி ஆராய்கிறது இந்த நூல். படிப்பதற்கு சுவையான புத்தகம். நன்றி: தினத்தந்தி, 26/4/2017.

Read more

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் (படக்கதை), ஓவியர் ப. தங்கம், தங்கப்பதுமை பதிப்பகம், விலை 200ரூ. “கல்கி”யின் “பொன்னியின் செல்வன்” சரித்திர நாவல் மீது தீராக் காதல் கொண்டவர் ஓவியர் ப. தங்கம். அந்த காவியத்தை சித்திரக் கதையாக வடிவமைத்து, புத்தகங்களாக வெளியிட்டு வருகிறார். இப்போது இரண்டாவது புத்தகம் வெளிவந்துள்ளது. பொன்னியின் செல்வனில் வரும் கதாபாத்திரங்களை ஓவியர் மணியம் எப்படி உருவாக்கி உயிரோவியங்களாக நடமாட விட்டாரோ, அதே பாணியில் ஓவியர் தங்கமும் தன் முழுத்திறமையையும் பயன்படுத்தி இந்த படக்கதையை உருவாக்கியுள்ளார். படங்களும், வசனங்களும் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன. […]

Read more

வெல்வதற்கே வாழ்க்கை

வெல்வதற்கே வாழ்க்கை, கவிஞர் கவிதாசன், குமரன் பதிப்பகம், விலை 80ரூ. ‘எண்ணம் போல வாழ்வு’ என்பார்கள். வாழ்க்கையை வண்ணமயமாக்குவது எண்ணங்களே. அதன் அடிப்படையில் தன்னம்பிக்கை கட்டுரைகளை இந்த நூலில் கவிஞர் கவிதாசன் எழுதியுள்ளார். ‘தோற்றுப் போவது அவமானம் இல்லை. தோல்வியில் அவமானம் இல்லை. தோல்வியில் இருந்து கற்றுக்கொள்வதுதான் அனுபவம்’, ‘செவிகளில் தேன் தடவும் சொற்களை விட, இதயத்திற்கு இதம் சேர்க்கும் செயல்களே சிறந்தவை’ என்பன போன்ற கருத்துகளை நூல் முழுக்கக் காணலாம். நன்றி: தினத்தந்தி, 12/7/2017,

Read more

வீடுகளிலும் பள்ளிகளிலும் 5-எஸ்

வீடுகளிலும் பள்ளிகளிலும் 5-எஸ், வேதா டி.ஸ்ரீதரன், வேத ப்ரகாசனம், விலை 500ரூ. 5 -எஸ் என்பது ஒரு சிஸ்டம், பொருட்களை முறையாக வைப்பதுதான் அந்த சிஸ்டம். ஜப்பானிய வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் முதலிய அனைத்து இடங்களிலும் இந்த முறை அமலில் உள்ளது. அதை இங்கும் அமல்படுத்த வேண்டும் என்ற ஆவலில் வேதா டி.ஸ்ரீதரன் இந்த நூலை எளிய மொழி நடையில் எழுதியுள்ளார். பாராட்டக்கூடிய பயனுள்ள முயற்சி. நன்றி: தினத்தந்தி, 26/4/2017.

Read more

வீரம் விளைந்தது

வீரம் விளைந்தது, தமிழில் ஆதி வள்ளியப்பன், புக்ஸ் பார் சில்ரன், விலை 50ரூ. உலகமெங்கும் சாதாரண மக்களின் உரிமைகளுக்காகப் போராடுவோருக்கு உத்வேகம் அளிக்கும் உன்னதப் படைப்பு, ‘வீரம் விளைந்தது’. இந்த ரஷிய நாவல், உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. நாடகமாகவும், திரைப்படமாகவும் வடிவம் பெற்றிருக்கிறது. அதைத்தான் அழகு தமிழில் மறுஆக்கம் செய்திருக்கிறார் ஆசிரியர் ஆதி வள்ளியப்பன். இந்நாவலின் நாயகனான பாவெல் கர்ச்சாகின், சகாப்தம் படைத்தவன். நூலை எழுதிய ஆசிரியர் நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்கியின் வாழ்க்கையும் பணிகளுமே நாயகனுடையதாகக் கூறப்பட்டுள்ளன. அதனால் நாயகனின் புரட்சிப் பயணத்தில் நாமும் […]

Read more

இல்லத்தரசி கையில் உலகம்

இல்லத்தரசி கையில் உலகம், மல்லிகா பலராமன், மணிமேகலைப் பிரசுரம், விலை 110ரூ. ஒரு இல்லத்தரசி எப்படி இருக்க வேண்டும் என்று இலக்கணம் வகுக்கும் நூல். பெண்கள் படிக்க வேண்டிய புத்தகம். திருமணத்தில் மணமக்களுக்கு பரிசளிக்கத் தகுந்த புத்தகம். நன்றி: தினத்தந்தி, 3/5/2017.   —-   மூலிகைகளின் பெயர்கள் பற்றிய அகராதி, டாக்டர் ஜே. ராஜகோபால், கஸ்தூரி பப்ளிகேஷன்ஸ், விலை 1200ரூ. மூலிகைகளுக்கு மொழிவாரியாகப் பல பெயர்கள் உள்ளன. இதனால் ஏற்படும் குழப்பங்களைப் போக்க, மூலிகைகளில் தாவர இனப்பெயர், ஆங்கிலப் பெயர், தமிழ்ப்பெயர், மலையாளப் […]

Read more

உடல் வளர்த்தேனே உயிர் வளர்த்தேனே

உடல் வளர்த்தேனே உயிர் வளர்த்தேனே, மலர்ச்சி பப்ளிகேஷன்ஸ், விலை 250ரூ. “உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேன்” என்பது திருமூலர் வாக்கு. இந்தப் புத்தகத்தில், நோய்கள் வராமல் தடுக்கவும், அப்படி நோய் வந்தால் என்ன சிகிச்சை பெறலாம் என்ற ஆலோசனைகளும் உள்ளன. குறிப்பாக சர்க்கரை நோய் பற்றிய முக்கியமான தகவல்களும், சர்க்கரை நோய் வந்தவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளும் விரிவாக இடம் பெற்றுள்ளன. மற்றும் சிறுநீரகக் கல் வராமல் எப்படி தடுக்கலாம், பித்த வெடிப்புக்கான சிகிச்சை முறைகள் எவை, சளித்தொல்லைக்குத் தீர்வு என்ன, அழகிய முகம் […]

Read more

பாலி முதல் மியான்மார் வரை

பாலி முதல் மியான்மார் வரை, மாத்தளை சோமு, தமிழ்க் குரல் பதிப்பகம், விலை 180ரூ. எழுத்தாளர் மாத்தளை சோமு, இந்தோனேஷியாவின் பாலி தீவு முதல் மியான்மார் வரை உள்ள நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து தனது அனுபவங்களை சிறப்பான முறையில் பயண நூலாக தந்து இருக்கிறார். அந்த நாடுகளில் புலம் பெயர்ந்த தமிழின் தொன்மங்களையும் தமிழர்களையும் நேரில் கண்டு அவை பற்றிய வியக்கத்தக்க செய்திகளை பிரமிப்பூட்டும் வகையில் தந்து இருக்கிறார். இஸ்லாமிய நாடான இந்தோனேஷியா, உலகில் முதன் முதலாக கட்டப்பட்ட இந்து கோவிலை கொண்ட நாடு […]

Read more

மருத்துவப் பூங்கா

மருத்துவப் பூங்கா, டாக்டர் கமலி ஸ்ரீபால், தினத்தந்தி பதிப்பகம், விலை 180ரூ. மாலைமலர் நாளிதழில் டாக்டர் கமலி ஸ்ரீபால் எழுதிய மருத்துவக் கட்டுரைகளின் தொகுப்பு. மனிதனுக்கு உணவு, உடை, உறைவிடம் ஆகியவை அடிப்படை தேவையாகும். அதைப்போலவே ஆரோக்கியமும் அவசியத் தேவை. அதன் அடிப்படையில் நமது நலவாழ்வுக்குத் தேவையான அனைத்து மருத்துவச் செய்திகளையும் இந்த நூலில் டாக்டர் ஸ்ரீபால் அனைவருக்கும் புரியும்படி எளிய முறையில் எடுத்துக் கூறுகிறார். இருதயத்தைப் பாதுகாக்கும் வழிமுறைகள், தலைவலி, வாய்புண், நெஞ்சு எரிச்சல் ஆகியவற்றை தவிர்க்கும் வழிமுறைகள், சிறுநீரகக் கல், கால் […]

Read more

ஆன்மிகம் அறிவோம்

ஆன்மிகம் அறிவோம், முனைவர் இளசை சுந்தரம், புகழ் பதிப்பகம், பக். 176, விலை 140ரூ. பூஜை, சடங்குகளை செய்யும் போது அதற்கான காரண, காரியங்களை அறிந்து செய்தால், வழிபாட்டில் ஈடுபாடு அதிகமாகும்; பக்தி பரவசம் பெருகும் என்கிறது இந்நூல். நன்றி: தினமலர், 21/5/2017.   —-   காலத்தை வென்ற ஜோதிட சித்தர்கள், கவிதா, விலை 200ரூ. ஜோதிடக் கலையின் மூலவர்கள் சித்தர்கள். சித்தர்கள் விவரித்துள்ள பஞ்சபட்சி சாஸ்திரம், ஆரூடம், கைரேகை சாஸ்திரம், வான சாஸ்திரம் போன்ற சோதிடக் கலையைப் பற்றிய முழு விளக்கங்களை […]

Read more
1 68 69 70 71 72 223