புத்தம் சரணம் கச்சாமி

புத்தம் சரணம் கச்சாமி, ஈ.அன்பன், திரிபீடக தமிழாக்க நிறுவனம், விலை 150ரூ. புத்தரின் வரலாற்றையும், அவருடைய போதனைகளையும் விரிவாக விளக்கும் நூல். மன்னராக வாழ்ந்தவர், மக்களுக்குத் தொண்டு செய்வதற்காக துறவியான சம்பவம், உலகம் அதற்கு முன்போ பின்போ நடந்திராத ஒன்றாகும். எல்லாம் வல்ல கடவுள் ஒருவர் உண்டு என்று பவுத்தம் நம்புவதில்லை. அதாவது புத்தர், கடவுள் நம்பிக்கை அற்றவர். நாத்திகர். ஆனால் பல நாடுகளில் புத்தரையே கடவுளாக வணங்குகிறார்கள். புத்தர் பிறந்த இந்தியாவில் புத்த மதம் வளரவில்லை என்றாலும், கடல் கடந்த பல நாடுகளில் […]

Read more

வேர்

வேர், அ.மா. சாமி, நவமணி பதிப்பகம், விலை 240ரூ. குரும்பூர் குப்புசாமி, அமுதா கணேசன் முதலிய புனை பெயர்களில் பல நாவல்கள் எழுதியுள்ள அ.மா. சாமி, இப்போது தன் சொந்தப் பெயரில் எழுதியுள்ள புதிய நாவல் ‘‘வேர்”. லஞ்சத்தை மையமாக வைத்து இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. “லஞ்சம் எப்படித் தோன்றுகிறது? அதற்குக் காரணம் யார்?” என்று ஆராயும் ஆசிரியர், பல திடுக்கிடும் உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறார். லஞ்சத்தை ஒழிப்பதற்கான வழிகளையும் கூறுகிறார். துள்ளல் நடையில் நாவலை விறுவிறுப்பாக எழுதியுள்ளார் அ.மா. சாமி. நன்றி: […]

Read more

தெய்வங்கள் வணங்கிய தெய்வத் திருத்தலங்கள்

தெய்வங்கள் வணங்கிய தெய்வத் திருத்தலங்கள், தெள்ளாறு இ.மணி, சங்கர் பதிப்பகம், விலை 300ரூ. தமிழகத்தில் உள்ள கோவில்கள் ஒவ்வொன்றும் ஒரு வகையில் சிறப்பு பெற்றவை ஆகும். ஆலயங்களுக்கு தெய்வங்களே வந்து வழிபாடு நடத்தி இருக்கின்றன என்பது ஐதீகம். அவ்வாறு எந்த கோவிலில் எந்த தெய்வம் வழிபாடு நடத்தியது என்பதையும், அந்த கோவிலின் வரலாறு உள்பட வேறு பல சிறப்புகள், அந்த கோவில்கள் அமைந்துள்ள ஊர், அங்கே செல்வது எப்படி என்பது போன்ற ஆன்மிக வாசகர்களைக் கவரும் பல்வேறு அம்சங்கள் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. […]

Read more

மாவலி பதில்கள்

மாவலி பதில்கள், நக்கீரன் பதிப்பகம், விலை 125ரூ. ‘நக்கீரன்’ இதழில் வெளியான கேள்வி – பதில்களை தொகுத்து புத்தகமாக வெளியிட்டுள்ளனர். மாவலி என்ற பெயரில் கேள்விகளுக்கு பதில் அளித்தவர் கோவி. லெனின். ஒவ்வொரு கேள்விக்கும் அவர் அளித்த பதில் சுவையாகவும், சிந்தனையைத் தூண்டுவதாகவும் அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 15/2/2017.

Read more

சைவ சமையல் அசைவ உணவு வகைக

சைவ சமையல் அசைவ உணவு வகைகள், மெர்குரிசன் பப்ளிகேஷன்ஸ், விலை 50ரூ. குழம்பு  வகைகள், கூட்டு, பொரியல் என பல வகையான சைவ சமையல் செய்முறைகளை ராணி எஸ். மதுரவல்லி இந்த நூலில் விளக்கியுள்ளார். இது தவிர அசைவ வணவு வகைகள் குறித்து எஸ். விஜிலா சுவைபட எழுதியுள்ளார். இரண்டும் தனித்தனியே விலை 50ரூ. நன்றி: தினத்தந்தி, 15/2/2017.

Read more

ஏவுகணை தந்தை அப்துல் கலாம்

ஏவுகணை தந்தை அப்துல் கலாம், தொகுப்பு  சிவரஞ்சன், மெர்குரிசன் பப்ளிகேஷன்ஸ், விலை 90ரூ. கடந்த சில ஆண்டுகளில் யாரைப் பற்றிய புத்தகம் இந்தியாவில் அதிக அளவில் வந்துள்ளது என்று கேட்டால் தயக்கமின்றி கூறலாம் “அப்துல்கலாம் அவர்களைப் பற்றிய புத்தகங்கள்தான்” என்று. புத்தக ஆசிரியர்கள் அவரவர் கோணத்தில் அப்துல் கலாம் சிறப்புகளைக்கண்டு மகிழ்ந்து எழுத்தில் வடிக்கிறார்கள். சிவரஞ்சன் தொகுத்துள்ள இந்த நூல், சிறப்பாக அமைந்துள்ளது. அப்துல் கலாம் வரலாறு, அவருடைய சாதனைகள், அவர் எழுதிய புத்தகங்கள், அவருக்குப் பிடித்தமான புத்தகங்கள்… இப்படி அப்துல் கலாம் பற்றி […]

Read more

நினைவில் நிலைத்தவர்கள்

நினைவில் நிலைத்தவர்கள், வாசகன் பதிப்பகம், விலை 100ரூ. எழுத்தாளர்கள் பொன்னீலன், மெர்வின், கவிஞர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன், நாட்டுப்புற இசைக்கலைஞர் புஷ்பவனம் குப்புசாமி உள்பட 29 பிரமுகர்களின் சிறப்பை விவரிக்கிறார் நூலாசிரியரும், பத்திரிகையாளருமான அகநம்பி. நன்றி: தினத்தந்தி, 15/2/2017.   —-   மாவலி பதில்கள், நக்கீரன் பதிப்பகம், விலை 125ரூ. ‘நக்கீரன்’ இதழில் வெளியான கேள்வி – பதில்களை தொகுத்து புத்தகமாக வெளியிட்டுள்ளனர். மாவலி என்ற பெயரில் கேள்விகளுக்கு பதில் அளித்தவர் கோவி. லெனின். ஒவ்வொரு கேள்விக்கும் அவர் அளித்த பதில் சுவையாகவும், சிந்தனையைத் […]

Read more

ராமாமிர்தம்

ராமாமிர்தம், லா.ச.ரா. நாவல்கள், காவ்யா, பக். 720, விலை 700ரூ. தமிழ் இலக்கிய முன்னோடிகளில் முக்கியமான ஒருவர் லா.ச.ராமாமிர்தம். நம்மை உணர்ச்சிமயமாக்கி, ஒரு மாய உலகுக்கு அழைத்துச் செல்லும் ஆற்றல் அவர் எழுத்துக்களுக்கு உண்டு. அவருடைய படைப்புகளை தொகுத்து, “ராமாமிர்தம்” என்ற தலைப்பில் பெருநூல்களாக வெளியிடுகிறது, “ராமாமிர்தம் 1” என்ற நூல் இப்போது வெளிவந்துள்ளது. இதில் “புத்ர”, “அபிதா”, கல்சிரிக்கிறது”, “கேரளத்தில் எங்கோ”, “கழுகு”, “பிராயச்சித்தம்” ஆகிய 6 நாவல்கள் அடங்கியுள்ளன. ராமாமிர்தத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இது வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் அன்னைக்கு அணிவிக்கப்பட்ட […]

Read more

வரலாறு படைத்த பெண்கள்

.வரலாறு படைத்த பெண்கள், இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், விலை 90ரூ. இஸ்லாம் மார்க்கம் பெண்களுக்கு சகல உரிமைகளையும் வழங்கியுள்ளது. அவர்களுக்கு இஸ்லாம் வழங்கிய உரிமைகள் மற்றும் உயரிய தகுதி குறித்தும் இந்த நூலில் எழுத்தாளரும் மார்க்க அறிஞருமான மவுலவி நூஷ்மஷ்ழரி அழகிய முறையில் எழுதியுள்ளார். கொடுஞ்கோலன் பிர் அவ்னின் மனைவி மற்றும் இம்ரானின் மகள் மர்யம் ஆகியோரை திருக்குர்ஆன் முன்மாதிரி பெண்களாக கூறுகிறது. அவர்கள் குறித்தும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்து போர்க்களத்திலும், அரசியல் களத்திலும் பல அரிய சாதனைகள் புரிந் […]

Read more

பண மதிப்பு நீக்கம்

பண மதிப்பு நீக்கம், ஷ்யாம் சேகர், தேவராஜ் பெரியதம்பி, கிழக்கு பதிப்பகம், விலை 75ரூ. 500ரூபாய், 1000ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை, கடந்த நவம்பர் 8-ந் தேதி அன்று தொலைக்காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். பண மதிப்பு நீக்கத்துக்கு அவசியம் ஏற்பட்டது ஏன்? இந்த அறிவிப்பால் இதுவரை சாதித்தது என்ன? என்ற கேள்விகளை எழுப்பி அதற்கான விடை காண முயற்சிக்கிறது இந்த நூல். நன்றி: தினத்தந்தி, 15/2/2017.   —-   சைவ சமையல் அசைவ உணவு வகைகள், மெர்குரிசன் […]

Read more
1 72 73 74 75 76 223