காலத்தை வெல்லும் திருமுறைகள்

காலத்தை வெல்லும் திருமுறைகள், (ஆன்மிகக் கட்டுரைகள்), கற்பகம் புத்தகாலயம், விலை 150ரூ. திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளுக்கு ஆதாரமாக, சாட்சியாக திருமுறைகள் விளங்குகின்றன என்பதை இந்த நூலின் ஆசிரியர் ராதா நடராஜன் எடுத்துரைக்கிறார். நன்றி: தினத்தந்தி, 15/3/2017.   —-   சித்தர்களின் சித்தமெல்லாம் சிவமயமே, கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், விலை 60ரூ. அகஸ்தியர், திருமூலர், போகர், பத்ரகிரியார் உள்ளிட்ட 11 சித்தர்கள் பற்றிய விவரங்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. அம்மணி அம்மாள் என்ற பெண் சித்தர் பற்றியும் […]

Read more

திரவுபதியின் கதை

திரவுபதியின் கதை, ஒரியா மூலம் பிரதிபாராய், ஆங்கிலத்தில் பிரதீப் பட்டாச்சார்யா, தமிழில் இரா. பாலச்சந்திரன், சாகித்திய அகாதெமி, விலை 275ரூ. மகாபாரதத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்று திர்வுபதி. விதி வசத்தால் ஐந்து பேரை கணவர்களாகப் பெற்ற திரவுபதி, பத்தினி என்று சிலரால் போற்றப்பட்டாலும் வேறு சிலரால் வேசி என்று இகழப்பட்டாள். இதன் மூலம் அவள் அடைந்த இன்னல்களை விவரமாகவும் உருக்கமாகவும் தந்து இருக்கிறார் ஆசிரியர். மகாபாரதக் கதையை அதிக அளவில் பயன்படுத்தி, அத்துடன் சில கற்பனை கதாபாத்திரங்களையும், சம்பவங்களையும் கோர்த்து அருமையான நாவல் போல […]

Read more

கதை சொல்லி கே.எஸ்.ஆர். குறிப்புகள்

கதை சொல்லி கே.எஸ்.ஆர். குறிப்புகள், கலைஞன் பதிப்பகம், விலை 150ரூ. தமிழக அரசியலில் கடந்த 44 ஆண்டுகளாக வெறும் அரசியல் பிரச்சினைகளுக்கு மட்டுமல்லாமல், பல்வேறு சமுதாய பிரச்சினைகளையும் கையில் எடுத்து போராடியவர், ஐகோர்ட்டு வக்கீல் கே.எஸ்.ராதாகிருஷ்ணன். மனித உரிமை பாதுகாவலர், சுற்றுச்சூழல் ஆர்வலர், எழுத்தாளர், இலங்கை தமிழர் பிரச்சினைக்காக தொடக்க முதலே போராடியவர். அவர் “கதை சொல்லி கே.எஸ்.ஆர்.குறிப்புகள்” என்ற நூலை எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள பல சிறப்புக்குரிய மாமனிதர்கள், பல்வேறு வரலாற்று சிறப்புகள், யதார்த்த உண்மைகள், எல்லாவற்றையும் 157 பக்கங்கள் கொண்ட இந்த […]

Read more

கவிதைச் சிறகுகள்

கவிதைச் சிறகுகள், வானதி பதிப்பகம், விலை 160ரூ. கவிதை நாற்றுகள், கவிதை கீற்றுகள், கவிதை சிறகுகள், இலக்கிய ஆளுமைகள் என்ற தலைப்பில் பேராசிரியர் மோகன் படைத்துள்ள திறனாய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு. கவிஞர்கள் செல்லகணபதி, ரெ.முத்துக் கணேசன், பெ. சிதம்பரநாதன், பாரதி வசந்தன், இளசை சுந்தரம், துணை வட்டாட்சியர் பே.ராஜேந்திரன், கம்பதாசன் போன்றோரின் கவிதைகளில் உள்ள நயங்களை எடுத்துச் சொல்கிறார். உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள், புதுக்கவிதையில் நிகழ்காலப் பதிவுகள் அருமை. கவிஞர்களை மட்டுமல்ல இலக்கிய ஆளுமைகள் பற்றியும் இந்த நூலில் அவர் அழகுற எடுத்துக் […]

Read more

ஜெ.ஜெ. தமிழகத்தின் இருப்புப் பெண்மணி

ஜெ.ஜெ. தமிழகத்தின் இருப்புப் பெண்மணி, வி கேன் புக்ஸ், விலை 90ரூ. மறைந்த முதல் – அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாகவும், அதே சமயம் மனதைத் தொடும்படியும் விவரிக்கும் நூல். ஜெயலலிதாவின் இளமைப்பருவம், திரைப்படத் துறையில் பெற்ற தொடர் வெற்றிகள், அரசியல் பிரவேசம், முதல் – அமைச்சர் பதவி, அண்மையில் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் மறைவு… இப்படி, ஜெயலலிதா வாழ்க்கை முழுவதையும் இந்த 108 பக்க நூலில் ஒரு நாவலுக்குள்ள விறுவிறுப்புடன் எழுதியுள்ளார், குகன். அ.தி.மு.க.வை சேர்ந்தவர்களுக்கும், ஜெயலலிதா மீது பற்று கொண்டவர்களுக்கும் இது […]

Read more

அறுபத்து நான்காவது நாயனார்

அறுபத்து நான்காவது நாயனார், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், விலை 18ரூ. கிருபானந்த வாரியார் சுவாமிகள், பக்தி சொற்பொழிவுகள் நிகழ்த்துவதில் ஈடு இணையற்றவர். உலகம் முழுவதும் ஆன்மிகத்தைப் பரப்பியவர். ஏற்கனவே உள்ள 64 நாயன்மார்களுடன் 64-வது நாயனராக வாரியார் சுவாமிகளை கருதவேண்டும் என்ற வலியுறுத்துகிறார் நூலாசிரியர் புலவர் க. தியாகசீலன். நன்றி: தினத்தந்தி, 1/3/2017.

Read more

சீனப் பெண்கள் சொல்லப்படாத கதை

சீனப் பெண்கள் சொல்லப்படாத கதை, சின்ரன், தமிழில் ஜி. விஜயபத்மா, எதிர் வெளியீடு, விலை 280ரூ. சீனாவில் வானொலி தொகுப்பாளினியாகப் பணியாற்றியவர், பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரம், ஓரினச் சேர்க்கை, காதல், ஏமாற்றம் என்று பல வரம்புகளில் பாதிக்கப்பட்ட சீனப் பெண்களைச் சந்தித்து அவர்களின் அந்தரங்க உணர்ச்சிகளைத் திரட்டிக் கொடுத்து இருக்கும் தகவல்கள், ஆச்சரியமிக்க அதிர்ச்சிகரமானவை. நன்றி: தினத்தந்தி, 15/3/2017.

Read more

தமிழ் கற்பித்தல்

தமிழ் கற்பித்தல், டாக்டர் பி. இரத்தின சபாபதி, சாந்தா பப்ளிகேஷன்ஸ், விலை 200ரூ. தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு வழிகாட்டும் கையேடு இது. நன்றி: தினத்தந்தி, 1/3/2017. —- புலி வாலைப் பிடித்தால், வெங்கட் பிரசாத், மணிமேகலைப்பிரசுரம், விலை 85ரூ. சென்னையில் ஒரு கல்லூரியில் பேராசிரியர் பணியில் சேர வரும் இரண்டு இளைஞர்கள் ஒரு ஆபத்தில் சிக்கிக்கொள்வது பற்றிய கதை. மர்மம் எதிர்பாராத திருப்பம், சாகசம், காதல்… இப்படி பல்சுவை கொண்ட நாவலை விறுவிறுப்பாக எழுதியுள்ளார் வெங்கட் பிரசாத். நன்றி: தினத்தந்தி, 1/3/2017.

Read more

வரலாறும் வகுப்புவாதமும்

வரலாறும் வகுப்புவாதமும், இஸ்லாமிய நிறுவனம், விலை 80ரூ. வரலாற்றில் பொய்யையும், வெறுப்பையும் நிரப்பி திரிக்கப்பட்ட செய்திகள் உலா வருகின்றன. அத்தகைய செய்திகளில் உள்ள உண்மை நிலையை இந்த நூலில் பேராசிரியர்கள் அருணன், தஸ்தகீர், டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முகம்மத் ஆகியோர் உரத்துக் கூறியுள்ளனர். அதில் பாபர் மசூதியின் வரலாறு, பிரிவினைக்குப் பின்னால் உள்ள உண்மையான தகவல்கள், அம்பேத்கரின் நிலைப்பாடு போன்ற பல்வேறு தலைப்புகளில் உண்மை நிலவரத்தை நிலை நிறுத்தியுள்ளனர். நன்றி: தினத்தந்தி, 1/3/2017.

Read more

நரகம்

நரகம், எதிர் வெளியீடு.தமிழில் இரா. செந்தில். உலகப்புகழ் பெற்ற நாவல் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டவர்கள், அமெரிக்க எழுத்தாளரான டான் பிரவுன் பற்றி நிச்சயம் அறிந்திருப்பார்கள். அவர்எ ழுதிய “டாவின்சி கோட்” என்ற நாவல் 70-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, 20 கோடிக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகி உள்ளன. சினிமாப் படமாகவும் வெளிவந்துள்ளது. அவர் சமீபத்தில் எழுதிய நாவல்தான் “நரகம்”. இதுவும் விற்பனையில் சாதனை படைத்து வருகிறது. வாழ்க்கையில் தான் சந்தித்த நபர்களை வைத்தே நாவல்களை சிறப்பாக எழுதுவதில் வல்லவர் டான் பிரவுன். “நரகம்” நாவலும் […]

Read more
1 74 75 76 77 78 223