நோய் தீர்க்கும் சிவாலயங்கள்

நோய் தீர்க்கும் சிவாலயங்கள், டாக்டர் ச. தமிழரசன், தினத்தந்தி பதிப்பகம், பக். 160, விலை 150ரூ. சிவபெருமான் வீற்றிருக்கும் திருத்தலங்களில் நோய் தீர்க்கும் தலங்களாகக் கருதப்படும் ஆலயங்களுக்கு நேரில் சென்று தெய்வீகச் செய்திகளைச் சேகரித்து அதை விளக்கமாக ஆசிரியர் எடுத்துரைக்கிறார்.மேலும் அந்த நோய்கள் குறித்த மருத்துவக் கருத்துகளையும் கூறுகிறார். இந்த நூலில் பிணிகளைக் குணமாக்கும் வைத்தீஸ்வரன், தோல் நோய் தீர்த்த திருத்துருத்தி, சனி பகவானின் வாத நோய் போக்கிய திருவாதவூர், வலிப்பு நோய் விரட்டிய திருவாசி, சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர், புற்று நோயைக் […]

Read more

உடலும் உணவும்

உடலும் உணவும், டாக்டர் எஸ். அமுதகுமார், தினத்தந்தி பதிப்பகம், பக். 400, விலை 250ரூ. தினத்தந்தி நாளிதழில் ஞாயிறுதோறும் வெளிவரும் குடும்ப மலரில் டாக்டர் எஸ்.அமுதகுமார் 100 வாரங்கள் எழுதிய ‘உடலும் உணவும்’ என்ற மருத்துவக் கட்டுரையின் தொகுப்பே இந்த நூல். நமது முன்னோர்களின் வாழ்க்கை முறை இயற்கையோடு இணைந்திருந்தது. அதனால் அவர்கள் நீண்ட நாள் வாழ்ந்தார்கள். அந்த வகையில் நாம் உண்ணும் உணவுகளில் எது சிறந்தது; உடல் நலம் பேண எவ்வளவு தண்ணீர் தேவை; கோதுமை உணவு, அரிசி உணவு இவற்றில் எது […]

Read more

வ.ரா. கதைக்களஞ்சியம்

வ.ரா. கதைக்களஞ்சியம், தொகுப்பாசிரியர் முனைவர் சு. சண்முகசுந்தரம், காவ்யா வெளியீடு, விலை 850ரூ. “அக்கிரகாரத்து அதிசய மனிதர்” என்று பேரறிஞர் அண்ணாவால் புகழப்பட்டவர் “வ.ரா.” (வ. ராமசாமி), 1889-ல் தஞ்சை மாவட்டத்தில் பிறந்தவர். 1919?ல் மகாத்மா காந்தியும், மகாகவி பாரதியும் சந்தித்தபோது உடன் இருந்தவர். 1920 -ல் “சுதந்திரன்” என்ற சொந்த இதழை நடத்தியபோது, “கல்கி”யின் முதல் நாவலான “விமலா”வை தமது பத்திரிகையில் வெளியிட்டவர். 1933-ல் டி.எஸ். சொக்கலிங்கம், கு. சீனிவாசன் ஆகியோருடன் சேர்ந்து இவர் தொடங்கிய “மணிக்கொடி” இலக்கிய இதழ், புதுமைப்பித்தன் போன்றவர்களை […]

Read more

சொட்டாங்கல்

சொட்டாங்கல், எஸ். அர்ஷியா, எதிர் வெளியீடு, விலை 220ரூ. மதுரைமக்களின் வாழ்க்கை முறையை பற்றி ஆழமாகவும், கூர்மையாகவும் பேசியுள்ளது. ‘கொட்டாங்கல்’ நூல். இது மதுரையில் நடக்கும் கதையாக இருந்தாலும், தமிழக மக்கள் அனைவரையும் பாதிக்கும் கதையாகவும் உள்ளது. நன்றி: தினமலர், 17/1/2017.   —-   உங்கள் தேகமும் யோகமும், கவியோகி வேதம், கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், விலை 100ரூ. யோகா பற்றிய நல்ல நூல். யோகாவினால் பொங்கி வரும் ஆழ்மன சக்தி, சபலத்தை ஒழித்தலும் அமைதியாகச் செயல்படுதலும், பொறுமையும் நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையும் […]

Read more

சிகரம் தொட்ட சாதனையாளர்கள்

சிகரம் தொட்ட சாதனையாளர்கள், புதுகை மு.தருமராசன் , புதுகைத் தென்றல், விலை 90ரூ. முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன், எழுத்தாளர் வல்லிக்கண்ணன், டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் உள்பட 13 சாதனையாளர்கள் பற்றி புதுகை மு.தருமராசன் எழுதிய புத்தகம். “நயனுறு நடைச்சித்திரம்” – சிகரம் தொட்ட சாதனையாளர்கள். இனிய நடையில் ரத்தினச் சுருக்கமாக எழுதப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 21/12/2016.   —-   நெடுஞ்சாலை வாழ்க்கை, விகடன் பிரசுரம், விலை 175ரூ. நெடுஞ்சாலைகளில் கனரக வாகனங்களை ஓட்டிச் செல்லும் டிரைவர்களைப் பற்றிய கட்டுரைகள். நெடுஞ்சாலைப் பயணங்களில் லாரி டிரைவர்கள் […]

Read more

பகவத் கீதை

பகவத் கீதை, புலவர் கோ. அருளாளன், ஸ்ரீபாலகங்கை பப்ளிகேஷன்ஸ், விலை 90ரூ. மகாபாரதத்தில் முக்கியமான பகுதி பகவத்கீதை. போர்க்களத்தில், “உறவினர்களை கொன்று குவிப்பதா?” என்று சோர்வு அடையும் அர்ச்சுனனுக்கு கண்ணன் செய்யும் உபதேசமே பகவத்கீதை. இதில், மனிதர்களின் கடமை, நீதி – அநீதி பற்றிய விளக்கம், மனித குலம் அறிய வேண்டிய உண்மைகள் யாவும் அடங்கியுள்ளன. பகவத் கீதையை எல்லோரும் எளிதில் புரிந்துகொள்ளும் வண்ணம், எளிய – இனிய நடையில் எழுதியுள்ளார், புலவர் கோ. அருளாளன். நன்றி: தினத்தந்தி, 4/1/2017.

Read more

நினைவலைகளில் பாவேந்தர்

நினைவலைகளில் பாவேந்தர், கவிஞர் பொன்னடியார், வசந்தா பதிப்பகம், விலை 220ரூ. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பற்றி பல நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் தனிச்சிறப்பு வாய்ந்தது இந்த நூல். காரணம், இதை எழுதியவர் பாரதிதாசனின் பிரதான மாணவரும் புரட்சிக்கவிஞரின் இறுதிக்காலம் வரை அவரது நிழலாக இருந்தவருமான பொன்னடியார். பாரதிதாசனின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகளை, உள்ளத்தைத் தொடுகிற விதத்தில் விவரித்துள்ளார். “பண்டியன் பரிசு” என்ற திரைப்படத்தைத் தயாரிப்பதற்கு பாவேந்தர் எடுத்துக்கொண்ட முயற்சிகள், அப்போது நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சிகள் ஆகியவை இந்நூலில் ஆதாரபூர்வமாக விளக்கப்பட்டுள்ளன. 1962-ம் ஆண்டில், […]

Read more

உலகத் தலைவர் பெரியார்

உலகத் தலைவர் பெரியார், கி. வீரமணி, திராவிடர் கழக வெளியீடு, விலை 250ரூ. மறைந்த தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை திராவிட கழகத்தலைவர் கி. வீரமணி புத்தகங்களாக எழுதி வருகிறார். ஏற்கனவே மூன்று பாகங்கள் வெளிவந்துவிட்டன. இப்போது நான்காம் பாகம் வெளிவந்துள்ளது. இதில், 1952ம் ஆண்டு நடந்த முதல் பொதுத்தேர்தல் பற்றிய முக்கிய விவரங்கள் இடம் பெற்றுள்ளன. தமிழ்நாடும், ஆந்திராவும் இணைந்த “சென்னை மாகாணம்” அப்போது இருந்தது. மொத்தம் 371 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 152 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. எதிர்க்கட்சிகள் “ஐக்கிய […]

Read more

வீழ்வதற்கல்ல வாழ்க்கை

வீழ்வதற்கல்ல வாழ்க்கை, லேனா தமிழ்வாணன், மணிமேகலைப் பிரசுரம், விலை 100ரூ. எழுத்தாளரும் பத்திரிகையாளருமான லேனா தமிழ்வாணன் எழுதிய வாழ்வு முன்னேற்றக் கட்டுரைகளின் தொகுப்பு. காலை முதல் இரவு வரை நாம் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளையும் அவற்றுக்கான தீர்வுகளையும் எளிமையான முறையில், இனிய நடையில் சொல்கிறார். தாயைப்போல நன்னடத்தையைக் கற்றுக் கொடுக்கிறார்.தந்தையைப்போல வழிகாட்டுகிறார். ஆசிரியர்களைப்போல ஆலோசனை சொல்கிறார். ‘நமக்குள் ஒளிந்திருக்கும் ஆற்றல்கள் அபாரமானவை. அவற்றை வெளிப்படுத்த சந்தர்ப்பங்கள் வாய்க்கும்போது நழுவ விடக்கூடாது.” “நெல்லை விதைத்துவிட்டு பாராதிருந்தால் அதில் புல் மண்டியிட வாய்ப்பு இருக்கிறது.” “வாழ்வில் தனிப்பயணம் […]

Read more

ரகுநாதம்

ரகுநாதம், தொகுப்பாசிரியர் காவ்யா சண்முக சுந்தரம், காவ்யா, விலை 1100ரூ. எழுத்தாளர், கவிஞர், கதாசிரியர், கவிஞர், பத்திரிகை ஆசிரியர், விமர்சகர், மேடைப் பேச்சாளர் என்னும் பன்முகம் கொண்டவர் தொ.மு.சி.ரகுநாதன். அவரது கட்டுரை, கவிதை, நாடகங்களை ‘ரகுநாதம்’ என்ற பெயரில் காவ்யா சண்முக சுந்தரம் நூலாகத் தொகுத்துள்ளார். இதில் 100 கட்டுரைகளும், 2 நாடகங்களும், 56 கவிதைகளும் இடம் பெற்றுள்ளன. இவரது எழுத்துகளில் நாட்டுப்பற்று, விதவை மறுமணம், சாதி மறுப்பு, விடுதலை உணர்வு ஆகியவைகளை வெளிப்படுத்தியுள்ளார். ‘ரகுநாதனின் தமிழ் நடை அழகியது. இனியது. ஜீவன் நிறைந்தது. […]

Read more
1 76 77 78 79 80 223