ஆன்மிக இலங்கைத் திருப்பயணம்

ஆன்மிக இலங்கைத் திருப்பயணம், “கயிலை மாமணி” மருத்துவர் நா. மோகன்தாஸ், இமாலயா பதிப்பகம், விலை 90ரூ. பயண நூல்களில் இது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில், பல இந்துக்கோவில்கள் உள்ளன. அங்கு யாத்திரை சென்ற “கயிலை மாமணி” மருத்துவர் நா. மோகன்தாஸ், தமது அனுபவங்களை இந்த நூலில் விவரித்துள்ளார். குறிப்பாக, யாழ்ப்பாணம், திரிகோணமலை வரலாறுகளையும், கதிர்காமம் கந்தன் திருக்கோவில், நயினார் தீவு, நாகபூசணி அம்மன் திருக்கோவில், நகுலேஸ்வரம் சிவன் திருக்கோவில் போன்ற திருக்கோவில்கள் பற்றி அவர் கூறுகின்ற தகவல்களைப் படிக்கும்போது மெய்சிலிர்க்கிறது. […]

Read more

என் கதை

என் கதை, சார்லி சாப்ளின், தமிழில் யூமா வாசுகி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 190ரூ. ஊமைப்பட காலத்திலேயே உலகப் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின். மறைந்த பிரதமர் நேரு, ஹிட்லர், சார்லி சாப்ளின் ஆகியோர் ஒரே ஆண்டில் (1889) பிறந்தவர்கள். அமெரிக்கத் திரைப்படக் கல்லூரி 1999-ம் ஆண்டில் நடத்திய கணக்கெடுப்பில், “உலகத் திரைப்பட வரலாற்றில் மிகச் சிறந்த பத்து நடிகர்களில் சார்லி சாப்ளினும் ஒருவர்” என்று தீர்மானிக்கப்பட்டது. “திரைப்படத் துறையில் தோன்றிய உண்மையான மாமேதை சாப்ளின்” என்று பேரறிஞர் […]

Read more

மின்னல் பூக்கள்,

மின்னல் பூக்கள், எஸ். ஆழிவண்ணன், வெண்பா யாழினி பதிப்பகம், விலை 180ரூ. மரபு கவிதைகளின் தொகுப்பு. சமூக அக்கறையுடன் எழுதப்பட்டு உள்ளது. வேண்டாம் வரதட்சணை, ஒன்றே குலம், சாலியிலே சங்கடங்கள், நலனைக் கெடுக்கின்ற நாகரிகங்கள், ஓ காதலர்காள் உள்ளிட்ட ஏராளமான கவிதைகள் சிந்தனையை தூண்டுகின்றன. எதுகை மோனையை நயமாக பயன்படுத்தி கவிதைகளுக்கு மெருகேற்றி இருக்கிறார் நூலாசிரியர்.‘ நன்றி: தினத்தந்தி, 21/12/2016.   —-   கல்லைக்குறிச்சி கோட்ட நடுகற்கள் வரலாறு, சித்திரைச் செல்வி பதிப்பகம். கள்ளக்குறிச்சி என்று அழைக்கப்படும் கல்லைக்குறிச்சி கோட்டத்தில் உள்ள கல்வராயன் […]

Read more

எனது அமெரிக்கப் பயணம்

எனது அமெரிக்கப் பயணம், பேரா. கே. ஜெகதீசன், விஜயா பதிப்பகம், பக். 152, விலை 80ரூ. அமெரிக்கா போய் வருவது இன்று பெரிய விஷயமே இல்லை. ஆனால் அந்த அனுபவங்களை சுவைபடச் சொல்லி, படிப்போரை சொல்லப்படும் இடத்திற்கே அழைத்துச் சென்று அனுபவிக்க வைக்கும் கலை சிலருக்கு மட்டுமே வாய்க்கும். அது பேரா. கே.ஜெ.வுக்கு கைகூடியிருக்கிறது. அமெரிக்கா செல்லாதவர்களுக்கு வியப்பு. அமெரிக்கா சென்றவர்களுக்கு புது அனுபவம். நன்றி: குமுதம், 28/12/2016.   —-   அகிலமே என் அப்பாதான், மணிமேகலைப் பிரசுரம், விலை 80ரூ. இன்றைய […]

Read more

பின்னலில் அவிழ்ந்த முடிச்சுகள்

பின்னலில் அவிழ்ந்த முடிச்சுகள், சுபி. முருகன், வாசகன் பதிப்பகம், பக். 96, விலை 65ரூ. கவிஞர் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வுகள், சந்திப்புகள், ஒன்றையொன்று பின்னி கவிதை வரிகளாக உருவெடுத்து கவிதைத் தொகுப்பாக மலர்ந்துள்ளது. ‘எனக்குள்ளே பின்னிக் கொண்டிருந்த முடிச்சுகளை அவிழ்க்கையில், என்னையே பின்னிக் கொண்டன… கனவு முடிச்சுகள்! இப்படிப் பல கவிதை. நன்றி: குமுதம், 28/12/2016.   —-   பாரதியார் பெருமை, முல்லை பதிப்பகம், விலை 60ரூ. பாரதியாரின் வாழ்க்கை வரலாறும், பாரதியார் பற்றி பல பிரமுகர்கள் எழுதிய கட்டுரைகளும் கொண்ட அரிய […]

Read more

கவிஞர் பாலா

கவிஞர் பாலா, சாகித்ய அகாடமி, விலை 50ரூ. இந்திய இலக்கியச் சிற்பிகள் என்ற தலைப்பில், எழுத்தாளர்கள், கவிஞர்கள், இலக்கியவாதிகளின் வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக சாகித்ய அகாடமி வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் கவிஞர் பாலா பற்றிய புத்தகம் இப்போது வெளிவந்துள்ளது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்துறை தலைவராகப் பணிபுரிந்தவர் கவிஞர் பாலா. இந்தியாவின் இலக்கியச் சிறப்பு பற்றி வெளிநாடுகளில் சொற்பொழிவுகள் நிகழ்த்தியவர். “புதுக்கவிதை – ஒரு புதுப்பார்வை” உள்பட பல நூல்கள் எழுதி உள்ளார். நன்றி: தினத்தந்தி, 4/1/2017.

Read more

தமிழ் கற்பித்தல் முறைகள் – 1

தமிழ் கற்பித்தல் முறைகள் – 1, சாந்தா பப்ளிஷர்ஸ், விலை 250ரூ. 2015-16 கல்வி ஆண்டில் இருந்து பி.எட். படிப்பு இரண்டு ஆண்டுகளாக மாற்றப்பட்டது. புதிய பாடத்திட்டத்தின் படி முதல் ஆண்டின் கற்பித்தல் பாடங்களுள்ளு ஒன்று ‘தமிழ் கற்பித்தல் முறைகள்- 1’ ஆகும். இது தொடர்பாக பல புதிய கருத்துகளை டாக்டர் பி.ரத்தினசபாபதி, டாக்டர் கு. விஜயா ஆகியோர் இந்த நூலில் முழுமையாக விளக்கியுள்ளனர். நன்றி: தினத்தந்தி, 4/1/2017.   —-   சீனா, ஒரு முடிவுறாத போர், அலைகள் வெளியீடு, விலை 150ரூ. […]

Read more

நோய்களின் தாக்கமும் தடுப்பு முறைகளும்

நோய்களின் தாக்கமும் தடுப்பு முறைகளும், டாக்டர் பெ. போத்தி, மணிவாசகர் பதிப்பகம், பக். 128,விலை 60ரூ. மனிதனுக்க வரக்கூடிய மாரடைப்பு, மூளை அடைப்பு, நீரிழிவு, சிறுநீரக நோய்கள், கல்லீரல் நோய்கள் உள்ளிட்ட பல நோய்களை உணவு, உடற்பயிற்சி, பழக்கவழக்கங்கள் மூலம் எவ்வாறு நோய்வரும் முன் தடுக்க முடியும் என்பதை எடுத்துக்கூறுகிறார் நூலாசிரியர். நோய்த் தடுப்புக்கான வழிகாட்டி நூல் இது. நன்றி: குமுதம், 4/1/2017.   —-   உள்ளம் உலகம், சேகர் பதிப்பகம், விலை 125ரூ. “உருவகக் கடல் கவியரசு” என்று புகழ் பெற்ற […]

Read more

அசுரக் கலைஞன் எம்.ஆர்.ராதா

அசுரக் கலைஞன் எம்.ஆர்.ராதா, ஆர்.சி.சம்பத்,கவிதா பப்ளிகேஷன், விலை 100ரூ. திராவிட இயக்க முன்னோடிக் கலைஞன், புரையோடிப்போன மூட நம்பிக்கைகளைச் சாடி, அறிவுக்கண் திறக்கச் செய்த கலையுலக ஆசான்/ நடிகனைப்போல சமூகப் புரட்சியாளன், புரட்சியாளனைப் போன்ற தலைசிறந்த நடிகன், இத்துனைக்கும் மேலே, திரைப்படங்களால் வில்லனாக மக்களிடையே சித்தரிக்கப்பட்ட அவர், தனி மனித வாழ்க்கையில் எப்படி ஒரு உன்னத மனிதனாக இருந்தார் என்கிற ரகசியத்தையும் இந்த நூல் மூலம் அறிய வைக்கிறார் நூலாசிரியர் ஆர்.சி.சம்பத். நன்றி: தினத்தந்தி, 28/12/2016.

Read more

தெய்வத்தின் அருள்

தெய்வத்தின் அருள், தொகுப்பாசிரியர் கார்த்திகேயன், தங்கத் தாமரை பதிப்பகம், விலை 60ரூ, காஞ்சி பரமாச்சாரியார் சந்திரசேகேந்திர சரஸ்வதி சுவாமிகள் பற்றிய பக்தர்களின் பரவச அனுபவங்களை எழுத்தாளர் கார்த்திகேயன் தொகுத்து வழங்கியுள்ளார். 1 முதல் 10 தொகுதிகள். ஒவ்வொன்றும் விலை 60ரூ. நன்றி: தினத்தந்தி, 28/12/2016.   —- புலவர் த. கோவேந்தனின் மொழிபெயர்ப்பு கவிதைகள், கொற்றவை வெளியீடு, விலை 400ரூ. கவிஞர், கட்டுரையாளர், திறனாய்வாளர் என்று பன்முகம் கொண்டவர், த.கோவேந்தன், அவர் வெளிநாட்டுக் கவிஞர்களின் கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். அந்தக் கவிதைகளின் தொகுப்பே இந்த […]

Read more
1 77 78 79 80 81 223