நேர நிர்வாகக் கலைக் களஞ்சியம்

நேர நிர்வாகக் கலைக் களஞ்சியம், லேனா தமிழ்வாணன், மணிமேகலை பிரசுரம். நேரத்தை எப்படிப் பயன்படுத்துவது? நேரத்தின் முக்கியத்துவம், நேரத்தைக் கட்டுப்பாட்டில் வைப்பது, எதிலெல்லாம் நேரத்தைமிச்சம் பிடிக்கக்கூடாது? என, நேரம் குறித்து பல செய்திகளைச் சுவைபட, தனக்கே உரிய எளிய நடையில், 94 சிறு தலைப்புகளில் எடுத்துரைத்துள்ளார், லேனா தமிழ்வாணன். முதல் தலைப்பில், நாம் நிர்வகிக்க வேண்டிய மூன்று அம்சங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார். அவை நேரம், பணம், வாழ்க்கைத் துணை. இம்மூன்றையும் நாம் நிர்வகிக்க அறிந்து கொள்ளாவிடில், அவை நம்மை நிர்வகித்துவிடும் என்று கூறி, நேரத்தை […]

Read more

செம்பியன் மாதேவி கலைக்கோவில்கள் தொகுதி 2 பாகம் 3,

செம்பியன் மாதேவி கலைக்கோவில்கள் தொகுதி 2 பாகம் 3,முனைவர் கோ.எழில் ஆதிரை, ரோகிணி பதிப்பகம், பக். 156, விலை 100ரூ. தமிழக வரலாற்றில் செம்பியன் மாதேவி செய்த அறப்பணிகளும், கலைத் தொண்டும் அளவிற்கரியன. இந்நூலாசிரியர் செம்பியன் மாதேவி எடுப்பித்த கோவில்களையும், செப்புத் திருமேனிக பற்றிய செய்திகளையும் முன்னரே பெருநூலாக எழுதியுள்ளார். இந்நூலில், செம்பியன் மாதேவி ஊரில் உள்ள கைலாசநாதர் கோவில் பற்றித் தனித்து ஆராய்ந்து உள்ளார். அங்கு அவர் அமைத்த சிற்பங்கள், கட்டடங்கள், கல்வெட்டுச் செய்திகள் முதலியவற்றோடு வரலாற்றுச் செய்தியையும் தக்க சான்றுகளோடு தந்து […]

Read more

தெரிந்த ஈரோடு தெரியாத செய்திகள்

தெரிந்த ஈரோடு தெரியாத செய்திகள், செ. இராசு, கொங்கு ஆய்வு மையம், பக். 136, விலை 130ரூ. இவ்வூருக்கு இவ்வளவு பெருமைகளா என்று வியக்க வைக்கும் செய்திகள் ஏராளம். குறிப்பாக, நம் தேசப்பிதா காந்தி, நான்கு முறை ஈரோடுக்கு வந்துள்ளார் என்ற செய்தி, நம்மில் பெரும்பாலானோருக்கு தெரியாத ஒன்று. இந்தியாவின் தொன்மையான பாலங்களில் காளிங்கராயன் வாய்க்காலும் ஒன்று உள்ளிட்ட தகவல்களைக் கூறுகிறது இந்நூல். நன்றி: தினமலர், 8/10/2017.

Read more

இரண்டு விரல்கள்

இரண்டு விரல்கள், ராம்பிரசாத், வாதினி வெளியீடு, பக். 80, விலை100ரூ. சீராளன் போன்ற எண்ணற்றோரால் கட்டமைக்கப்படும் உலகில், சாம் போன்றோர் பாதிக்கப்படுபவர்களாகவே இருக்கின்றனர். தகுதியுடைய வாழ்வனுபவம் சரியானவர்களிடத்தே போய் சேர வைக்க, ஒரு குற்றத்தால் தான் முடியும் என்பது இக்காலகட்டத்தின் நிர்ப்பந்தமாக இருப்பதை இந்த குறுநாவல் பேசுவதாக அமைந்துள்ளது. நன்றி: தினமலர், 8/10/2017.

Read more

மருதத்திணை

மருதத்திணை, மீனா சுந்தர், புதுப்புனல், பக். 100, விலை85ரூ. ஆண்டுதோறும் நடக்கிறது நதிநீர் கிரிக்கெட்; காவிரிப் பந்தை விரட்டி அடித்து எப்போதும் சதம் போடும் நடுவணரசு; மேன் ஆப் த மேட்ச் கருநாடகர்கள்; பீல்டு அவுட் ஆவதென்னவோ தமிழக விவசாயிகள்!’ என்ற கவிதை, இன்றைய தமிழக – கர்நாடக மாநில நதிநீர் பிரச்னையை தோலுரித்துக் காட்டுவதாக உள்ளது. நன்றி: தினமலர், 1/10/2017.

Read more

அருணாசலக் கவிராயர் முதல் ஆலந்தூர் மோகனரங்கன் வரை

அருணாசலக் கவிராயர் முதல் ஆலந்தூர் மோகனரங்கன் வரை, சு.முத்தையா, வசந்தா பதிப்பகம், பக்.112, விலை 70ரூ. தமிழ் இலக்கியத்தில் சுவை, பக்தி இலக்கியத்தில் மனிதநேயத்தை, ‘கண்ணன் பாட்டு’ மூலம் கூறிய ஆசிரியர், சிறுகதையின் யதார்த்தவாதம், ஈழத் தமிழ்ச் சிறுகதைகளில் ஏகாதிபத்திய எதிர்ப்பு, மு.வ.,வின் தேங்காய்த் துண்டுகள், சிற்பியின் தமிழ்ப் பணி உள்ளிட்டவற்றின் சிறப்புகளை இந்நூலில் வழங்கிஇருக்கிறார். நன்றி: தினமலர், 1/10/2017.

Read more

மாணவர்களுக்கான தன்னம்பிக்கைக் கதைகள்

மாணவர்களுக்கான தன்னம்பிக்கைக் கதைகள், தீபம் எஸ். திருமலை, செந்தூரான் பதிப்பகம், பக். 200, விலை 90ரூ. தெனாலிராமன் குறும்பு, மிருகக்காட்சி சாலை கலாட்டா, ஞானம் வெளியே இல்லை, இறைவனுக்கு உதவிய இரண்யன், பொறுப்பான மருமகள், பெண்மணியால் நாட்டை ஆள முடியுமா? உங்களுக்கே தருகிறேன், தருமம் செய், இது என்ன கணக்கு கதைகள், படிக்கும் சிறுவர்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டுவதாக அமைந்துள்ளது. நன்றி: தினமலர், 1/10/2017.

Read more

எச் 2 ஓ

எச் 2 ஓ, ஜோதி மகாதேவன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெ, பக். 68, விலை 50ரூ. ‘எச் 2 ஓ’ – இந்த தலைப்பு ஏற்படுத்திய ஆர்வத்தில் புத்தகத்தை திறந்து முதல் வரி வாசித்தால், ‘ஓசோன் பரவிய கிழக்கு கடற்கரை சாலை காற்று…’ என, ஆரம்பிக்கிறது நாவல். மிக நேர்த்தியான எழுத்து நடையால், சினிமா பார்ப்பது போல் கதைக்களம் காட்சிகளாய் விரிகிறது. சென்னையில் வேலை பார்க்கும் மிடில் கிளாஸ் இளைஞனுக்கும், ஹை கிளாஸ் அப்பார்டமென்ட்டில் வாழும், ஒரு பேரழகிக்கும் இடையேயான சுவாரசிய […]

Read more

அறிந்த பழமொழிகளும் அறியாத விளக்கங்களும்

அறிந்த பழமொழிகளும் அறியாத விளக்கங்களும், முனைவர் விஜயலட்சுமி ராமசாமி, வனிதா பதிப்பகம், பக். 168, விலை 120ரூ. நம் முன்னோர் தம் பட்டறிவால் கண்டுணர்ந்த பழமொழிகள் எனலாம். சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் திறன் கொண்ட பழமொழிகள் ஆழ்ந்த பொருள் கொண்டவை. ஒரு சமூகத்தின் நாகரிகம், பண்பாடு, பட்டறிவு ஆகியன மிகச் சுருக்கமாகப் பேச்சு நடையில் வெளிப்பட்ட ஒரு சொற்றொடரே பழமொழி. இவ்வாறு விளங்கும் பல்லாயிரக்கணக்கான பழமொழிகளும், 75 பழமொழிகளை மட்டும் தேர்ந்தெடுத்து, அவற்றிற்கு மக்கள் இதுவரை அறிந்து கொள்ளாத நிலையிலான விளக்கங்களை நுணுகி […]

Read more

ஸ்ரீமத் பாகவதம்

ஸ்ரீமத் பாகவதம், ஆர்.சுப்பிரமணியம், சஞ்சய் புக்ஸ், விலை100ரூ. திருமால் அவதாரத்தில் கிருஷ்ணர் முக்கிய பங்கு வகிக்கிறார். கிருஷ்ணரின் பெருமைகளை வர்ணிக்கும் புராணம் ஸ்ரீமத் பாகவதம். இந்நூலில், கண்ணனின் பல நாமங்களை குறிப்பிடும் ஆசிரியர், விஷ்ணு சகஸ்ரநாமத்திலிருந்து மேற்கோள்களையும், பகவத் கீதையிலிருந்து சில ஸ்லோகங்களையும் எடுத்துக்காட்டாக விளக்கியிருக்கிறார். நன்றி: தினமலர், 15/10/2017

Read more
1 108 109 110 111 112 240