பரதாயணம்

பரதாயணம், சொ.அருணா, கபிலன் பதிப்பகம், விலை 200ரூ. மானுட இதிகாசமாகிய ராமாயணத்தின் ஒவ்வொரு பாத்திரமும், காவியத் தலைமையேற்கும் கம்பீரமான பாத்திரங்கள். ராமனையும் விஞ்சும் பாத்திரமாகக் கண்டு, கம்பனே தன் கதைப் பாத்திரங்களைக் கொண்டு பாராட்டும் பாத்திரம், பரதன். கம்பநதி அடிநாதமாக, அதன் மீது எழுந்தோடும் தெளிந்த நீரோடையாக பரதாயணம் ஓடுகிறது. நன்றி: தினமலர்17/9/2017

Read more

கோமணம்

கோமணம், சுப்ரபாரதி மணியன், முன்னேற்றப் பதிப்பகம், பக். 112, விலை 80ரூ. பூசாரி ஜெகந்நாதன் தலைமையில் நாலு தீர்த்த கலசத்தையும் ஐந்து நாள் நடையில் காலை ஒருவர், மாலை ஒருவர் என தலையில் சுமந்து கோமணாண்டி முருகனை தரிசிக்க பாதயாத்திரை செல்லும் ஒரு குழுவினரின் அனுபவங்களை மிக இயல்பாக விவரித்திருக்கிறார் நூலாசிரியர். பாதயாத்திரை அனுபவம் எப்படி இருக்கும் என்பதை அனுபவப்பூர்வமாக உணர, ராவணன் என்ற புனைப்பெயர் பூண்ட மணி என்னும் நாஸ்திகரும் இந்த குழுவை நைசாகத் தொடர்கிறார்! குழுவினரின் கடவுள் சார்ந்த நம்பிக்கைகள், தொன்மக் […]

Read more

மாணவர்களுக்கான தமிழ்

மாணவர்களுக்கான தமிழ், என்.சொக்கன், கிழக்கு பதிப்பகம், விலை 200ரூ ‘காபி’க்கு தமிழில் என்ன பொருள்; முதலாளி, தொழிலாளி, உழைப்பாளி ஆகியவற்றில் வரும், ‘ஆளி’ எதைக் குறிக்கிறது; நள்ளிரவு என்ற சொல்லில், ‘நள்’ என்பது என்ன? உள்ளிட்ட பல சொற்களுக்கு இலக்கணம் கூறுகிறது இந்நூல். நன்றி: தினமலர்,16/7/2017.

Read more

பொதுமக்களும் சட்டங்களும்

பொதுமக்களும் சட்டங்களும், க.ராஜாராம், முல்லை பதிப்பகம், பக். 304, விலை 150ரூ. சட்டசபை அதிகாரங்கள், தனிப்பட்ட சட்டங்கள், சொத்துக்கள் பற்றிய சட்டம், ஒப்பந்தங்களுக்கான சட்டம், கிரிமினல் சட்டம், அவதுாறு சட்டம், சாட்சியங்களுக்கான சட்டம், சிவில், கிரிமினல் நடைமுறைச் சட்டம் என, ஒன்பது பகுதிகளைக் கொண்ட இந்நூல் ஆங்கிலத்தில் ஜி.சி.வெங்கடசுப்பாராவ் எழுதியதின் தமிழாக்கம். கடந்த, 65 ஆண்டு களில் அரசியல் அமைப்புச் சட்டம் முதல், அனைத்து வகைச் சட்டங்களும் பெரும் மாற்றங்களைப் பெற்றுள்ளன. நடைமுறைச் சட்டங்கள், ஒப்பந்தச் சட்டங்கள், சொத்துரிமைச் சட்டங்கள், மாற்றக்கூடிய உண்டியல் சட்டங்கள் […]

Read more

சொல்லில் நிரம்பும் குளம்

சொல்லில் நிரம்பும் குளம், எஸ்ஸார்சி, சொல்லங்காடி, பக்.144 , விலை ரூ.130. நூலாசிரியரின் எட்டாவது சிறுகதைத் தொகுப்பு. இதில் 18 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. பொங்கலுக்குப் படைக்க வாங்கிய கரும்பு வீணாகிறதே என்று அதைக் கடித்துச் சுவைத்து, பல் டாக்டருக்கு ரூ.12 ஆயிரம் அழும் சர்க்கரை வியாதிக்காரனின் கதை ‘சின்னத்தனம் 39’. ஓர் எழுத்தாளர், வட இந்தியக் கவிஞரின் புகழுரைக்கு மயங்கி அவருடைய 100 கவிதைகளை மொழிபெயர்த்து, அதனை தனது கைக் காசைச் செலவழித்து புத்தகமாக வெளியிட வேண்டிய நிர்பந்தத்திலும் சிக்கி அவதிப்படும் கதை […]

Read more

ஊக்குவித்தல் என்னும் மந்திரசாவி

ஊக்குவித்தல் என்னும் மந்திரசாவி, சி.எஸ்.தேவ்நாத், நர்மதா பதிப்பகம், விலை 80ரூ. ஊக்குவிப்பதன் மூலம் ஒருவரிடம் இயல்பாக உள்ள சக்தியைத் துாண்ட முடியும்; அதிகரிக்க முடியும். அவரிடம் உள்ள மிகச் சிறந்தவற்றை வெளிக் கொண்டுவர முடியும். நிறைய படைப்பாளிகள் அப்படித்தான் உருவாக்கப்படுகின்றனர். சாதனைகள் அப்படித்தான் நிகழ்த்தப்படுகின்றன. சமயங்களில் ஊக்குவிப்பு வெளியிலும் கிடைக்கும்; வீட்டிலும் கிடைக்கும். உண்மையில் உங்களுக்கு உள்ளிருந்தும் அதை நீங்கள் பெற முடியும். ஊக்குவிப்பு செய்கிற வேலைகளில் முதன்மையானது, ‘நம்மால் முடியும்’ என்ற உணர்வை ஒருவருக்குள் ஊட்டுவதும் ‘அத்தனை உயர்வுகளுக்கும் நாம் தகுதியானவர்தாம்’ என்ற […]

Read more

உருகும் பூமி உறையும் உயிர்கள்

உருகும் பூமி உறையும் உயிர்கள், நவீன அலெக்ஸாண்டர், அந்தாழை வெளியீடு, விலை 120ரூ. மனித குரங்கின் முன்னிரண்டு கால்களை நடப்பதிலிருந்து விடுவித்து கைகளாக்கிய நாளில் இருந்து தான், இந்த பூமிக்கு எண்ணற்ற நன்மை, தீமைகள் நடக்கத் துவங்கிவிட்டன. லட்சக்கணக்கான ஆண்டுகளாக எத்தனையோ உயிரினங்களை வளர்த்து, பொதுவுடைமையைப் பார்த்துப் பழகிய பூமிக்கு, தான் உருவாக்கும் மனித இனம் தன்னையே கூறுபோட்டு ஆட்டிப்படைக்கும் என்று நினைக்கவே இல்லை போலும். மனித இனம் உருவாவதற்கு முன்னால், ஐந்து மகா பேரழிவுகளைச் சந்தித்த பூமி முற்றிலுமாக அழிந்துவிடவில்லை. இப்போது, ஆறாவதாக […]

Read more

ஒற்று

ஒற்று, அண்டோ கால்பட், வாசகன் பதிப்பகம், பக்.112, விலை 80ரூ. இந்தச் சின்னஞ்சிறு நாவல் நம்மை உருவாக்கிவிடுகிறது; உலுக்கி விடுகிறது. அம்மாவிடம் மகன் வைத்துள்ள உயர்ந்த அன்பைச் சொல்லும் உன்னதப் படைப்பு இது! ‘அம்மாவுக்கு இப்ப கேன்சர் ரொம்ப அட்வான்ஸ்டு ஸ்டேஜ்ல இருக்கு… அதிகபட்சம் இன்னும் மூணு மாசம் தான். குணப்படுத்துற கட்டத்தை அவங்க தாண்டிட்டாங்க’ என்கிறார் டாக்டர். தாயின் மரணத் தேதியை முன்கூட்டியே அறிந்து, வாழ்வதை விட ஒரு மகனுக்கு வேறு என்ன கொடுமை வாழ்வில் நேர்ந்துவிடும் என்று மகன் அழுகிறான். அம்மாவுக்கு […]

Read more

ஜி.எஸ்.டி. கொள்கையா? கொள்ளையா?

ஜி.எஸ்.டி. கொள்கையா? கொள்ளையா?, ஆதனூர் சோழன், நக்கீரன் பதிப்பகம், பக். 80, விலை 60ரூ. ஜி.எஸ்.டி. மூல காரணம் யார்? கார்ப்பரேட்டுகளின் பினாமி அரசு, பெருமுதலாளியின் எடுபிடியா மோடி? எல்லா பிரச்னைகளுக்கும் ஜி.எஸ்.டி. மருந்தா? வேலையின்மையை அதிகரிக்கும் மோ(ச)டித் திட்டங்கள், ஜி.எஸ்.டி.யும் மருந்து தட்டுப்பாடும், வரி விகிதங்கள் ஆகியவற்றை படங்களுடன் விவரிக்கிறது இந்நூல். நன்றி: தினமலர், 10/9/2017.

Read more

நதி வெள்ளத்தின் துளி

நதி வெள்ளத்தின் துளி, குழல்வேந்தன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 90ரூ. ஒரு கவிஞரோடு ஒரு வாசகன் பழகுதல். அந்த கவிஞன் எழுதிய கவிதைகளை அலைபேசி வழியே வாசிக்கக் கேட்டு இன்புறுதல். கவிஞரை நேரில் சந்திக்க வாசகன் ஆவல். படைப்புப் பாலம் இணைத்த இருவருக்குமான உறவுப் பாலம், கவிஞரின் மரணத்தால் தகர்ந்து போதலை, ‘தொலை குரல் தோழமை’ கதையால் உணர முடிகிறது. நன்றி: தினமலர்..

Read more
1 110 111 112 113 114 240