ஜல்லிக்கட்டு (பாழ்படும் பாரம்பரியங்கள்)

ஜல்லிக்கட்டு (பாழ்படும் பாரம்பரியங்கள்), குன்றில் குமார், குறிஞ்சி வெளியீடு, பக். 176, விலை 165ரூ. தமிழர்களின் பாரம்பரியமாகக் கருதப்படுகிறது ஜல்லிக்கட்டு. சங்க காலம் முதல் வழி வழியாக ‘ஏர் தழுவல்’ என்னும் மாட்டை அடக்கும் போட்டி தமிழர்களின் அடையாளமாக இருக்கிறது. ஜல்லிக்கட்டு என்பது காளையோடு மல்யுத்தம் என்பதாகப் பலர் பார்க்கின்றனர். அது தவறு. மாறாக, காளையோடு ஓர் உற்சாக விளையாட்டு என்பதே நிஜம். உழவுத் தொழிலுக்கு அடிப்படை காளை மாடுகள். அத்தகைய காளைகளைப் போற்றி அவற்றோடு விளையாடி மகிழும் உன்னத் திருநாள் தான் ஜல்லிக்கட்டு. […]

Read more

அவன் தாள் வணங்கி… (அறுபத்து மூவர் வரலாறு)

அவன் தாள் வணங்கி… (அறுபத்து மூவர் வரலாறு), செ. சீனிவாசன், கற்பகம் புத்தகாலயம், பக். 206, விலை 150ரூ. பழைமை இலக்கியம் (புராணம்) புதுமைப் பொலிவு பெற்றுள்ளது. பெரிய புராணம் எனப் போற்றப்படும் திருத்தொண்டர் புராணத்தை, பலர், அறுபத்து மூவர் கதைகளாக உரைநடையில் எழுதியுள்ளனர். ஆனால், இந்நூலில், ஒவ்வொரு நாயன்மார் பற்றியும் சுருக்கமாக, உரைநடையில், 10 வரியளவில் ஒரு குறிப்பை முதலில் வைத்து, அவ்வடியார் வரலாற்றை விரிவாக உரைப்பா (புதுக்கவிதை) பாங்கில், சிறிய சொற்களால் சீரிய கருத்துகளைச் செதுக்கியுள்ளார். இவர் தொழில் முறைக் கவிஞர் […]

Read more

63 நாயன்மார்கள்

63 நாயன்மார்கள், ஆலயப் பிரியர் சிவ. சுந்தரம், சுந்தரா பதிப்பகம், பக். 496, விலை 300ரூ. சிவநெறி பரப்பிய, 63 நாயன்மார்களின் பணி மிகப் பெரிய சாதனை. சுந்தரமூர்த்தி நாயனார் சுருக்கமாக கூறியதை, சேக்கிழார் சுவாமிகள் ‘திருத்தொண்டர் புராணம்’ என்று விரிவாகச் சொன்னார். அக்காவியம் பின்னர் பெரியபுராணம் என வழங்குகிறது. அப்புராணச் செய்யுள்களுக்கு தமிழ்த் தென்றல் திரு.வி.க., கோவை சி.கே.சி., போன்றோர் விரிவுரை எழுதினர். அவற்றை எல்லாம் இக்கணினியுலகில் படிக்க வாய்ப்பில்லாதோர், மிக எளிய தமிழில் படிக்கத் தக்க முறையில் இந்நூல் வெளிவந்துள்ளது. சிவனடியார்களுக்குத் […]

Read more

தமிழ் பண்பாட்டு அடையாளங்கள்

தமிழ் பண்பாட்டு அடையாளங்கள், ந. முருகேச பாண்டியன், டிஸ்கவரி புக் பேலஸ், பக். 95, விலை 80ரூ. பண்பாட்டுத் தடயங்களே மொழியின், அது பேசும் இனத்தின் முன்னேற்றப் பதிவுகள். சம கால தமிழ் மண்ணின் அடையாளங்களை எட்டு தலைப்புகளில் ஆசிரியர் எடுத்து எழுதியுள்ளார். தன் வாழ்வியல் அனுபவங்களை சமூக சிந்தனைகள் கலந்து, கருத்தரங்க நோக்கிலும் இதழ்களிலும், எழுதியதன் தொகுப்பு இது. ஆசிரியரின் அனுபவ முதிர்ச்சி, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவாக இனிக்கிறது. வெகுசனப் பண்பாட்டில் மருந்து கடை விளம்பரங்கள், புத்தகமோ புத்தகம், பதிப்பக அரசியல் பின்புலம், தமிழ்ப் […]

Read more

ஜிப்ஸியின் துயர நடனம்

ஜிப்ஸியின் துயர நடனம், யமுனா ராஜேந்திரன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 325ரூ. சென்ற நூற்றாண்டின் மகத்தான மார்க்சிய கலை ஆளுமைகள் குறித்த ஒரு நினைவுகூரலாகவே யமுனா ராஜேந்திரனின் இந்நூல் உள்ளது. ஆளுமைகள், பண்பாட்டு வரலாறு, அரசியல், பயணக் கட்டுரைகள் என்னும் நான்கு பகுதிகளைக் கொண்டது இந்தப் புத்தகம். ஆளுமைகள் பகுதி யில் ரோஸா லக்ஸம் பர்க் பற்றிய கட்டுரை சிறப்பானது. போலந்திலிருந்து வந்த யூதப் பெண்மணி இவள். ஜெர்மானிய ஒடுக்குமுறையாளர்களின் கட்டளையின்படி படுகொலை செய்யப்பட்ட ஜெர்மானிய தொழிலாளர்களுக்காகப் போராடி ய வீரப் […]

Read more

கழகத்தின் கதை (அ.தி.மு.க. தொடக்கம் முதல் இன்று வரை)

கழகத்தின் கதை (அ.தி.மு.க. தொடக்கம் முதல் இன்று வரை), மருததுவர் இராமதாஸ், புதிய அரசியல் பதிப்பகம், பக். 288. ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற உன்னத நோக்குடன் தொடங்கிய அ.தி.மு.க., இன்று ஊழல் சுனாமியாக மாறியிருக்கிறது என்பதைக் காட்டும் நூல். இதை பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் எழுதி யிருக்கிறார். அவருடைய கருத்தில் அ.தி.மு.க.,வைப் பொறுத்தவரை ஜெயலலிதாவும், சசிகலாவும் மட்டுமே கெட்டவர்கள் அக்கட்சியின் தொண்டர்கள் அனைவரும் நல்லவர்கள் என்ற பார்வையுடன் எழுதப்பட்டிருக்கிறது. தி.மு.க., – அ.தி.மு.க., ஆகிய இரு கட்சி களையும் ஆதரித்த பா.ம.க., நிறுவனர் […]

Read more

நேர நிர்வாகமும் சுய முன்னேற்றமும்

நேர நிர்வாகமும் சுய முன்னேற்றமும், ஏ.எஸ். ஆப்ரகாம், நர்மதா பதிப்பகம். நேரத்தை சேமித்து வைக்க என்று எந்த வங்கியும் கிடையாது. ஆனால், நைசாக நழுவிக் கொண்டே கழியும் நேரத்தை புத்திசாலித்தனமாக பயன்படுத்தலாமே… எனக்கு நேரமே இல்லை, என்ன செய்யட்டும் என்று புலம்புவர்கள் இருக்கின்றனர். நேரத்தை முறையாக பயன்படுத்த அதை ஒழுங்கு செய்வது அவசியம் என்பதை எல்லாருமே தலையை ஆட்டி ஒப்புக் கொள்வர். ஆனால், நேரம் இல்லை என்று புலம்புவர்கள் அதை ஓழுங்கு செய்து கொள்ளவில்லை என்று தான் அர்த்தம். வரும் சின்ன சின்ன அத்தியாயங்களில் நம் […]

Read more

புதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பும் ஆய்வும்

புதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பும் ஆய்வும், பேராசிரியர் முனைவர் ரா. நாராயணன், அலைகள் வெளியீட்டகம், பக். 184, விலை 140ரூ. பக்றுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்து குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள’’ என்ற பழைய பாடல், பக்றுளி ஆறும், பல மலைகளும் கடலால் சூழப்பட்டு அழிந்து போயின. பல இலக்கண, இலக்கிய நூல்களும் அழிந்தன என்று வரலாறு கூறுகிறது. தமிழ், ஆங்கிலம் என்ற இரண்டு மொழிகளின் துணையோடு’ 58 – துணை நூல்களின் மேற்கொள்களுடன், புதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும் என்ற நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இலக்கிய உளப்பகுப்பாய்வு, […]

Read more

நீலகேசி

நீலகேசி, கயல் பரதவன், சக்தி மலர் பப்ளிகேஷன்ஸ், பக் 312, விலை 190ரூ. நெஞ்சை அள்ளும் சரித்திர நாவல். பாண்டியர் உபசேனாதிபதி இளைய நம்பியும் யவனப் பெண் ஹீராவும் அறிமுகமாகும் முதல் இரண்டு அத்தியாயங்களிலேயே நாவல் சூடு பிடித்து விடுகிறது! சின்னச் சின்ன அத்தியாயங்களில் வேக, வேகமாக நகர்ந்து கதை முடியும்போது சிறந்த ஒரு சரித்திர நாவலைப் படித்து முடித்த திருப்தி ஏற்படுகிறது. சங்க காலம் தமிழகத்தின் பொற்காலம். அக்காலத்தில் சேர மண்ணை சீரும் சிறப்புமாக ஆண்டவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். அவன் காலத்தில் எரித்திரியக் […]

Read more

தமிழ்த்தென்றலின் சமூக நோக்கு

தமிழ்த்தென்றலின் சமூக நோக்கு, முனைவர் பத்மாவதி விவேகானந்தன், என் வெள்ளிமயில், விலை 145ரூ. தமிழ்த் தென்றல் என்ற உடனேயே நினைவிற்கு வருபவர் திரு.வி.கல்யாண சுந்தரனார். முதல் தலைப்பே நூலிற்கும் பெயராய் அமைந்துள்ளது. மொத்தம், ஏழு தலைப்புகளில் கட்டுரைகளாகவும், நூல் விமர்சனங்களாக, பதினாறு கட்டுரைகளும் விளக்கப்பெறுகின்றன. திரு.வி.க.,வின் சிந்தனைகள், அவரது வாழ்வில் நிகழ்ந்த புரட்சிகள் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. திரு.வி.க., எந்த ஒரு மொழியையும் வெறுப்பவர் அல்லர். அவரே, ஆங்கிலம், வடமொழி, பாலி முதலிய மொழிகளை அறிந்திருந்தார் (பக். 26). தாய் மொழிப்புலமை பெற்ற பின் […]

Read more
1 113 114 115 116 117 240