ஹிட்லரின் வதைமுகாம்கள்

ஹிட்லரின் வதைமுகாம்கள், மருதன், கிழக்கு பதிப்பகம், பக். 232, விலை 200ரூ. ஒரு உயிரின் அடிப்படை அம்சம் இனம் என்பது ஹிட்லரின் நம்பிக்கை. வரலாறு என்பது இனங்களுக்கு இடையிலான போராட்டமே தவிர வேறில்லை. எந்த இனம் வலுவானதோ அது தழைத்து நிற்கும். வலு குறைந்தது அழிக்கப்படுகிறது அல்லது அழிக்கப்பட வேண்டும். மதம், அறம், தார்மீகம் போன்றவை தடைக்கற்கள். இவையெல்லாம் யூதர்களின் கண்டுபிடிப்புகள் என்பது ஹிட்லரின் கருத்து. மேன்மையான நிலையை அடைய வேண்டுமானால், பலவீனமான இனத்தை மட்டுமல்ல, அது உருவாக்கிய சிந்தனைகளையும் சேர்த்தே அழிக்க வேண்டும் […]

Read more

வண்டல் தஞ்சை வட்டார எழுத்துக்கள்

வண்டல் தஞ்சை வட்டார எழுத்துக்கள், இரா. காமராசு, சாகித்ய அகாடமி, பக். 240, விலை 115ரூ. மொழியின் ஆளுமையில், இன்று வட்டார மொழிகளின் ஆதிக்கம் மிகுந்து காணப்படுகிறது. புதினம், சிறுகதைகளின் நேர்முகப் பதிவே வட்டார மொழிகளை உயர்த்துகின்றன. தஞ்சை வட்டார எழுத்துக்களை வண்டல் என்ற எல்லைக்குள் வைத்து நிகழ்த்திய உரையரங்கின் தொகுப்பே இந்நூல் ஆகும். திறனாய்வாளர்கள் தஞ்சை வட்டார வழக்குகள் பற்றிய மதிப்பீட்டையும், படைப்பாளர்களின் குரலையும் இங்கு பதிவு செய்துள்ளனர். சுபாஷ் சந்திரபோஸ் படைப்புகள், பாவை சந்திரனின் நல்ல நிலம், சிந்துக் கவிஞர் வாய்மைநாதன் […]

Read more

நபிமார்கள் வரலாறு

நபிமார்கள் வரலாறு, அப்துற் – றஹீம், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், பக். 680, விலை 300ரூ. குர்ஆனில் கூறப்பட்டுள்ள இருபத்தி நான்கு நபிமார்களின் வரலாறுகளையும், திருத்தூதர்கள் செய்த இறை பணியையும், நல்வழிகளையும் குறிப்பிட்டு சிறப்பு சேர்க்கிறது இந்நூல். நன்றி: தினமலர், 25/6/2017.

Read more

நீலகேசி

நீலகேசி, கயல் பரதவன், சக்தி மலர் பப்ளிகேஷன்ஸ், பக் 312, விலை 190ரூ. நெஞ்சை அள்ளும் சரித்திர நாவல். பாண்டியர் உபசேனாதிபதி இளைய நம்பியும் யவனப் பெண் ஹீராவும் அறிமுகமாகும் முதல் இரண்டு அத்தியாயங்களிலேயே நாவல் சூடு பிடித்து விடுகிறது! சின்னச் சின்ன அத்தியாயங்களில் வேக, வேகமாக நகர்ந்து கதை முடியும்போது சிறந்த ஒரு சரித்திர நாவலைப் படித்து முடித்த திருப்தி ஏற்படுகிறது. சங்க காலம் தமிழகத்தின் பொற்காலம். அக்காலத்தில் சேர மண்ணை சீரும் சிறப்புமாக ஆண்டவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். அவன் காலத்தில் எரித்திரியக் […]

Read more

தமிழ்த்தென்றலின் சமூக நோக்கு

தமிழ்த்தென்றலின் சமூக நோக்கு, முனைவர் பத்மாவதி விவேகானந்தன், என் வெள்ளிமயில், விலை 145ரூ. தமிழ்த் தென்றல் என்ற உடனேயே நினைவிற்கு வருபவர் திரு.வி.கல்யாண சுந்தரனார். முதல் தலைப்பே நூலிற்கும் பெயராய் அமைந்துள்ளது. மொத்தம், ஏழு தலைப்புகளில் கட்டுரைகளாகவும், நூல் விமர்சனங்களாக, பதினாறு கட்டுரைகளும் விளக்கப்பெறுகின்றன. திரு.வி.க.,வின் சிந்தனைகள், அவரது வாழ்வில் நிகழ்ந்த புரட்சிகள் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. திரு.வி.க., எந்த ஒரு மொழியையும் வெறுப்பவர் அல்லர். அவரே, ஆங்கிலம், வடமொழி, பாலி முதலிய மொழிகளை அறிந்திருந்தார் (பக். 26). தாய் மொழிப்புலமை பெற்ற பின் […]

Read more

கருணை மிகுந்தவள் ஸ்ரீ காளி மாதா

கருணை மிகுந்தவள் ஸ்ரீ காளி மாதா, வேணு சீனிவாசன், அழகு பதிப்பகம், பக். 256, விலை 225ரூ. இந்நூல் சார்ந்த மார்க்கத்தின் செய்திகளுள் சில, பலவற்றை எளிய நடையில் எடுத்துரைக்கும் நூலாகும். இறைவியின் நாம ரூப பேதங்களில் காளிகாதேவி என்பதும் ஒன்று. இந்நூலாசிரியர் தேவிபாகவதம், புராணங்கள், தல வரலாறுகள் போன்றவற்றை திரட்டி கற்று இந்நூலை படைத்துள்ளார். மொத்தம், 47 தலைப்புகளில் வழங்கியுள்ள இவரின் அரிய முயற்சி பாராட்டுக்குரியது. அனுக்ரகத் தாயான அவள் வடிவம் கோர வடிவம்; உபாசகர்களுக்கு வரம் கோர உரிய ஆனந்த சொரூபம். […]

Read more

மக்கள் தொடர்புக் கலை

மக்கள் தொடர்புக் கலை, எஸ்.பி. எழிலழகன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக். 204, விலை 160ரூ. மக்களின் எண்ணங்களை அரசுக்கும், அரசின் எண்ணங்களை மக்களுக்கும் தெரிவிப்பது ஊடகம் என்று என்.டபிள்யூ. பி. கிரேவ் தெரிவித்துள்ள கருத்தை மையமாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளது மக்கள் தொடர்புக் கலை என்னும் இந்நூல். மக்கள் தொடர்பு பற்றிய அறிமுகத்தை விரிவாக விளக்கும் வகையில் இந்த நூலை எளிய மொழிநடையில் படைத்துத் தந்துள்ளார் எஸ்.பி. எழிலழகன். மொத்தம், 22 தலைப்புகளில் அமைந்துள்ள இந்த நூலில், மக்கள் தொடர்புக் […]

Read more

சுதந்திரச் சுடர்கள்

சுதந்திரச் சுடர்கள், த.ஸ்டாலின் குணசேகரன், விகடன் பிரசுரம், பக். 424, விலை 270ரூ. விடுதலைப் போராட்டத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் பல கோணங்களில் படம் பிடித்துக் காட்டி, சின்னச் சின்ன விஷயமாக இருந்தாலும் நெஞ்சின் அடியாழத்தில் பதிய வைக்க வேண்டும் என்னும் ஸ்டாலின் குணசேகரின் இந்நூலில் அவரது பதிவுகள் புதுப்புதுச் செய்திகளை உள்ளடக்கமாய் கொண்டுள்ளது. தாகூர், காந்தியடிகளை, ‘மகாத்மா’ என்று (1921) அழைப்பதற்கு முன்பாகவே, 1912ல், மகாத்மா என்று அழைத்த பெருமை தமிழ்நாட்டுக்கு வந்து விட்டது (பக். 29).விடுதலைப் போரின் முதல் முழக்கமே தமிழகத்தில் தான் […]

Read more

சிவனுக்குகந்த மலர்கள்

சிவனுக்குகந்த மலர்கள், கு. சேது சுப்ரமணியன், செங்கைப் பதிப்பகம், பக். 184, வி9லை 120ரூ. திருமூலர் திருமந்திரத்தில் ‘புண்ணியம் செய்வார்க்கு பூவுண்டு நீருண்டு, அண்ணல் அது கண்டு அருள்புரியா நிற்கும்…’ என்று பாடியுள்ளார். பூவினால் செய்யும் பூசையால் வரும் புண்ணியங்களையும், பூவின் புகழ் வாசத்தையும் இந்த நூலில் மிக சிறப்பாக நுகரலாம். தருமை குரு முதல்வர் குரு ஞானசம்பந்தர் ஞானகுரு கமலை ஞானப்பிரகாசர் புட்பவிதி நூலும், ஸ்ரீ சிதம்பரநாத முனிவரின் நடராச சதகமும் நூலும், பாண்டி அரவிந்த அன்னையின் மலர்களின் தெய்வீக விளக்கமும் கொண்டு […]

Read more

துவந்துவ யுத்தம்

துவந்துவ யுத்தம், தி.குலசேகர், தாமரை பிரதர்ஸ் லிமிடெட், பக்.96, விலை 20ரூ. பயணத்தின் போது வாசிப்பதற்கென்றே எழுதும் எழுத்தாளர்கள் நம்மிடையே இருக்கின்றனர். முன்பெல்லாம் இவர்களின் எண்ணிக்கை அதிகம். குழந்தைகளுக்கான காமிக்ஸ், கார்ட்டூன் படக்கதைகள் முதல், அனைத்து தரப்பினரும் வாசிக்கும் கிரைம் நாவல்கள் என ரயில், பஸ் நிலையங்களில் முன்பெல்லாம் நிறைய புத்தகங்கள் கிடைக்கும். இப்போது அது குறைகிறது என்ற குறையை சரி செய்ய வந்துள்ளது, ‘துவந்துவ யுத்தம்’ புத்தகம். தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தில் பணிபுரிந்து, பின் திரைத்துறையில் நுழைந்த தி.குலசேகர் விறுவிறு நடையில் இதை […]

Read more
1 114 115 116 117 118 240