தமிழக வரலாற்றுக் கோட்டைகள் பகுதி – 2

தமிழக வரலாற்றுக் கோட்டைகள் பகுதி – 2, சி.எஸ்.முருகேசன், சங்கர் பதிப்பகம், விலைரூ.350. சங்கப் பாடல் வரிகள் மற்றும் வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில் மிக விரிவாக கோட்டை ஆய்வுகள் மேற்கொண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அரிய தகவல்கள் வியக்க வைக்கின்றன. மன்னர்களுக்குள் ஏற்பட்ட பகைமை, பொறாமை, பணியாமை, மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை போன்றவற்றால் நடந்த போர்களுக்கெல்லாம் கோட்டைகளே தாக்குதல்களையும், தண்டனைகளையும் ஏற்று காலப்போக்கில் சிதிலமடைந்த விபரங்கள், வரலாற்றுச் சம்பவங்களின் குறிப்புகளோடு தரப்பட்டுள்ளன. அன்றைய நாடுகளின் அமைப்பு, வானளாவிய கோட்டைகளின் அமைப்பு, கட்டுமானச் சிறப்புகள், சிற்பக் கலைகள், […]

Read more

மேஜிக் ஆப் தி மைண்ட்

மேஜிக் ஆப் தி மைண்ட் ஆங்கிலம், ரவி வல்லூரி, ஏ.கே.எஸ்.பப்ளிஷிங் ஹவுஸ், விலைரூ.199 தன்னம்பிக்கை மற்றும் இறை நம்பிக்கை துணை கொண்டு மனதை பக்குவப்படுத்தும் வழிமுறைகளை, 50 அத்தியாயங்களில் எடுத்துரைக்கும் ஆங்கில நுால். தீபத்தால் நல்ல புத்தகங்களை படிக்கலாம்; எரிக்கவும் செய்யலாம். அது போல் மனம் வலிமையானது. இதை பயிற்சி அடிப்படையிலேயே செயல்படுகிறது. இதை உறுதிப்படுத்துகிறது. ஒவ்வோர் உயிரினமும் சுவாசிப்பதால் தான் உயிர் வாழ்கின்றன. சுவாசிப்பதை முறைப்படுத்துவதை பிரணாயாமம் உணர்த்துகிறது. உள்ளுறுப்புகளை சுத்தப்படுத்துவதற்காக, ‘கிரியா’ என்ற முறையை பயன்படுத்துகிறோம். இந்த செயல்கள் வாயிலாக உள்ளம், […]

Read more

கண்டதும்… கேட்டதும்…

கண்டதும்… கேட்டதும்…, விஜயலெட்சுமி மாசிலாமணி, விஜயா பதிப்பகம், விலைரூ.70. பல நாடுகளில் கண்டதையும், கேட்டதையும் அனுபவப்பூர்வமாக எழுதியுள்ளார். பெண்கள் படும் துயர் பற்றியும் அக்கறையுடன் பதிவு செய்துள்ளார். சம காலத்தில் பல நிலையில் உள்ளோர் பற்றிய விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. புரட்சிக் கருத்துக்களை பதிவு செய்துள்ள பயண நுால். சிறுகதைகள் போல் உரையாடல் மொழியில் எழுதப்பட்டுள்ளது. சுவாரசியம் மிக்க சம்பவங்களைக் கொண்டது. நன்றி: தினமலர்,14/3/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]

Read more

உலக சமயங்களும் சைவத்தின் மேன்மையும்

உலக சமயங்களும் சைவத்தின் மேன்மையும், மு. விவேகானந்தன், முன்றில் வெளியீடு, விலைரூ.400 உலகில் மதங்கள் தோன்றிய வரலாற்றை அறிந்து கொள்வதற்காகவும், சைவத்திற்கு உயர்வான சமயமில்லை என்பதை எடுத்துரைக்கவும் எழுதப்பட்டுள்ள நுால். சமயம் தோன்றிய வரலாறு, தொன்மை சமயங்கள், இந்திய வரலாற்றில் சமயங்கள், மக்கள் தொகை அடிப்படையில் சமயங்கள், சைவ சித்தாந்த சாத்திரங்கள், சமயங்கள் ஒப்பீடு, சைவத்தின் சிறப்பு என ஏழு இயல்களாகப் பகுத்து, அரிய தகவல்களை மிகுந்த முயற்சியோடு தேடி ஆராய்ந்து தொகுத்து எழுதியுள்ளார். தமிழகத்தில் சமயம் வளர்ந்த வரலாற்றையும், இந்திய அளவில் சமய […]

Read more

உப்புச் சுமை

உப்புச் சுமை, ஐ.கிருத்திகா, தேநீர் பதிப்பகம், விலைரூ.160. செருப்பு தைக்கும் தொழிலாளியின் வாழ்க்கையுடன் துவங்கும் இந்தச் சிறுகதைத் தொகுப்பு, விவசாயத் தொழில் செய்யும் ஏழைக் குடும்பத்துடன் நிறைவடைகிறது. செருப்பு தைக்கும் தொழிலாளி, தன் மகன் இதே தொழிலைச் செய்து சிரமப்படக் கூடாது என்று கவலைப்படுகிறான். விவசாயத் தொழில் செய்யும் வேலாயி, தன் மகன் வயலை விற்கப் போவதை நினைத்து உயிரை விடுகிறாள். தொழிலாளர் வாழ்க்கையை உற்றுப் பார்த்து, ஒவ்வொரு நிகழ்வையும் தன் எழுத்தில் நெசவு செய்திருக்கிறார் கிருத்திகா. உப்புச்சுமை என்ற கதை, உப்பு கரைவதைப்போல் […]

Read more

திரைக்கதை- கருவும் உருவும்

திரைக்கதை- கருவும் உருவும், சுரேஷ்வரன், பாரதி புத்தகாலயம், விலைரூ.150 சினிமாவின் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் இடத்தில் திரைக்கதை உள்ளது. ஒரு வலுவான கதையை, திரைக்கதை தான் சுவாரசியப்படுத்தும். இதை விவரிக்கிறது இந்த நுால். குறும்படம், முழுநீள சினிமா இரண்டிற்கும் திரைக்கதை எப்படி எழுத வேண்டும்; தயாரிப்பாளர், நாயகன், நாயகி ஆகியோரிடம் கதை சொல்லும் முறை குறித்து அறிய முடிகிறது. கதை தேர்வு, சொல்லும் நுணுக்கம், காட்சி விவரிப்பு, மெருகேற்றல் உள்ளிட்ட 31 தலைப்புகளில், நுால் ஆசிரியர் விளக்குகிறார். சினிமாவில் முதல் காட்சி என்பது, கதையின் […]

Read more

கரோனாவை வெற்றி கொள்வோம்

கரோனாவை வெற்றி கொள்வோம், டாக்டர் கு. கணேசன், தமிழ் திசை,விலைரூ.200.   ‘தினமலர்’ உட்பட இதழ்களில் கொரோனா குறித்தும், விழிப்புணர்வு ஏற்பட வேண்டியதன் அவசியம் குறித்தும், தடுப்பூசியின் தேவை பற்றியும் எழுதி குவித்தவர் டாக்டர் கணேசன். இவரது கைவண்ணத்தில், 51 கட்டுரைகளின் தொகுப்பு நுால். கொடிய தொற்றின் அத்தனை அம்சங்களையும் எளிய தமிழில் அலசியுள்ளார். கொரோனா குறித்த சந்தேகங்களுக்கு பதில் இந்த நுாலில் இருப்பது ஆச்சரியம். ஒரு பதிலையும் விட்டு வைக்காமல் முழுமையாக எழுதியிருக்கிறார். நோய் பற்றி முழுமையாக எழுதப்பட்டிருப்பதால், இது மருத்துவ நுால் […]

Read more

நீர்–நேற்று, இன்று, நாளை?

நீர்–நேற்று, இன்று, நாளை?, ப.திருமலை, மண் மக்கள் மனிதம், விலைரூ.160. இன்றைய உலகின் அவசரத்தேவையும், சிக்கனமாக நாம் பயன்படுத்த வேண்டியதும் நீர் அன்றி வேறில்லை. நீரின்றி அமையாது உலகு. அது எப்படி என்று விளக்க இந்த நூலின் 21 கட்டுரைகள் போதும். மூத்த பத்திரிகையாளரான திருமலை நம் நாட்டின் ‘நீர் அரசியல்’ பற்றி, கேரளா, கர்நாடகாவிடம் நமக்கு நடக்கும் தண்ணீர் போர் பற்றி அருமையாக மூன்று கட்டுரைகளில் விளக்கி இருக்கிறார். கண்மாய்கள், ஆறுகளை காக்கும் அற்புத வழிகள், குடிநீரின் தேவை, நீர் மாசு என […]

Read more

சமயங்கள் நான்கு

சமயங்கள் நான்கு, முனைவர் நல்லுார் சரவணன், சைவ சித்தாந்தப் பெருமன்றம், விலைரூ.120. மனித வாழ்வை முழுமையாக்குவதே, சமயம் என்ற, நெறியை விளக்கி எழுதப்பட்டுள்ள நுால். தத்துவ விளக்கங்களை மிக எளிமையாக உரைக்கிறது. ஐந்து தலைப்புகளில் உள்ளது. முதல் அத்தியாயம், சமயம் பற்றி தெளிவாக விளக்குகிறது. துணைத் தலைப்புகளில் கருத்துகள் தொகுக்கப்பட்டுள்ளன. ஆய்வுப்பூர்வமாக அணுகி, கருத்துகளை புரிந்து கொள்ள துணை புரிகிறது. தொடர்ந்து, காணாபதியம் என்ற சமயம் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. கணபதி வழிபாட்டின் தொன்மை, சிறப்புக்கூறுகள் பற்றி முழுமையாக சொல்கிறது. இது போல், சவுரம், கவுமாரம், […]

Read more

வியாசர் அறம்

வியாசர் அறம், நல்லி குப்புசாமி செட்டியார், பிரெய்ன் பேங்க், விலைரூ.200. வியாசர் மகாபாரதம் சார்ந்த, 60 கதைகளைத் தொகுத்து, புதிய பார்வையில் முன்வைக்கும் நுால். கதை முகப்பில் சுருக்கமான முன்னோட்டம் கொடுத்து, நீதி நெறியைத் விளக்குவதோடு, மையக் கருத்துக்குப் பொருத்தமான ஒரு குறளும் உரையுடன் தரப்பட்டுள்ளது. கதைகளில் வரும் சாபங்கள், விமோசனங்கள், சூழ்ச்சிகள், துரோகங்கள், தந்திரங்களுக்கிடையில் இழையோடும் அறக்கருத்துகள், எளிய நடையில் தரப்பட்டுள்ளன. பழங்கதைகளாயினும், அவற்றினுாடே காணப்படும் நிர்வாக மேலாண்மை, அரசியல் நெறிகள், அறச் சீற்றங்கள் இன்றும் பொருந்துவது நோக்கத்தக்கது. வாழ்வில் சிலருக்கே, மதியும், […]

Read more
1 24 25 26 27 28 240