பாகவதப் பாரதம்

பாகவதப் பாரதம், டாக்டர் சிவ. விவேகானந்தன், காவ்யா பதிப்பகம், விலைரூ.600 பகவான் கண்ணனின் வரலாறு கூறுவது பாகவதம். கண்ணன், பாண்டவரை வழிநடத்தி சென்றது மகாபாரதம். இரண்டு மகா காவியங்களையும் இணைத்து, அம்மானை என்ற செய்யுள் யாப்பு வடிவில், 24 ஆயிரம் பாடல்களாக இயற்றப்பட்டுள்ள நுால். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீபல்பனாப புலவர், பனையோலைச் சுவடியில் வில்லுப் பாட்டு கலை வடிவத்தில் எழுதி உருவாக்கியிருந்தார். இதை தேடி கண்டுபிடித்து புத்தகமாக பதிப்பித்துள்ளார் சிவ.விவேகானந்தன். பாமரரும் படித்து மகிழும் வகையில், உரைநடைக் காப்பிய நுாலாக உள்ளது. முதலில் […]

Read more

திருக்குறள் கதைகள் – 1

திருக்குறள் கதைகள் – 1, பேராசிரியர் ஏ.சோதி, நன்மொழி பதிப்பகம், விலைரூ.140. சிறுவர் – சிறுமியருக்கு அறிவுரை கூறும் வகையில் படைக்கப்பட்டுள்ள படக்கதைகளின் தொகுப்பு நுால். இரண்டு புத்தகங்களாக உள்ளன. திருக்குறள்களின் முதலடியை தலைப்பாக கொண்டு படைக்கப்பட்டுள்ளன. கதையின் இறுதியில் முழு குறளும் தரப்பட்டுள்ளது. புரியும் வகையிலான மொழி நடை கவரும் வண்ணம் உள்ளன. வண்ணப் படங்களுடன், உரையாடல்கள் மென்மையாக அமைந்துள்ளன. குழந்தைகளின் படிப்பு ஆர்வத்தை துாண்டும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள நுால். உயர்ந்த தாளில் தரமாக அச்சிடப்பட்டுள்ளது. தமிழில் அறக்கருத்தைப் பரப்ப, முயன்று உருவாக்கப்பட்டுள்ளது. […]

Read more

சிடுகா மருத்துவம்

சிடுகா மருத்துவம், டாக்டர் ஒய்.ஆர்.மானக்சா, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலைரூ.250 சித்த மருத்துவத்தில் ஓரிரு மூலிகைகளைப் பயன்படுத்தி, நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் சிடுகா மருத்துவமுறைகள் எளிய நடையில் தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு நோயையும் தலைப்பாகத் தந்து, நோய்களுக்கு மருந்து உருவாக்கிப் பயன் கொள்ளும் செயல்முறைகளைத் தந்து, நோய்களுக்கான காரணங்களும், பல நோய்களுக்கு மூலிகை சார்ந்த எண்ணெய்களின் பயன்களும் விளக்கப்பட்டுள்ளன. பல்வேறு மருத்துவ முறைகளில் அன்றாட வாழ்வில் நுகரும் அரிய கனிகள், கீரைகள், கிழங்குகள் மற்றும் மூலிகைகளின் அளப்பரிய பங்கை அறிய முடிகிறது.மிகவும் பரவலாக மக்கள் பாதிக்கப்படும் […]

Read more

தொ.ப.வும் நானும்

தொ.ப.வும் நானும், முனைவர் கு.ஞானசம்பந்தன், ஏ.எம்.புக் ஹவுஸ், விலைரூ.80. சமீபத்தில் மறைந்த பிரபல பேராசிரியர் தொ.பரமசிவனுடன் பழகிய நாட்களை நினைவுகூர்ந்து எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால். மொத்தம், 10 தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளது. முதலில் சந்தித்ததில் இருந்து, பழக்க வழக்கங்கள், நற்பண்புகள், வழிகாட்டல்கள், அதன் மூலம் கற்றவை, குடும்ப சந்திப்புகள் என, பலவித நினைவுகளை எளிமையாக எழுதியுள்ளார். மிகவும் நுட்பமாக பதிவாகியுள்ளன. சுவாரசியம் தருகிறது. இலக்கிய சுவையுடன் திகழ்கிறது. இரு பிரபலங்களிடையேயான சந்திப்பு, உரையாடல்கள் படிப்பினை தரும் வகையில் உள்ளது. அரிய அனுபவப் பதிவு நுால். […]

Read more

ஜீவா

ஜீவா, தி.வெ.ரா., அருணா பதிப்பகம், விலைரூ.200. பிரபல கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவானந்தத்தின் வாழ்க்கையை மேடையில் நடிப்பதற்கு ஏற்ற வகையில் காட்சிப்படுத்தி எழுதப்பட்டுள்ள நாடக நுால். அவர் மறைந்தபோது, தலைவர்கள் வழங்கிய இரங்கல் செய்தியுடன் முதல் காட்சி துவங்குகிறது. ஐம்பதாம் காட்சியில் ஜீவாவின் மகள் குமுதாவின் அரவணைப்பில் உயிர் பிரிவது போல் காட்சியாக்கப்பட்டுள்ளது. இடையில் 48 காட்சிகளிலும், அவரது வாழ்க்கை வரலாறு பின்னோக்கு உத்தியில் அமைக்கப்பட்டுள்ளது. நாடக பாத்திரங்கள், உண்மை மாந்தர்கள் என்ற காரணத்தால், உரையாடலில் அந்த காலத்தில் பேசிய மொழிநடையை அப்படியே வழங்கியுள்ளார். ஜீவா […]

Read more

தமிழகப் பாளையங்களின் வரலாறு

தமிழகப் பாளையங்களின் வரலாறு, மு. கோபி சரபோஜி, கிழக்கு பதிப்பகம், விலைரூ.150. பாளையம் – பாலாமு என்ற தெலுங்கு சொல்லுக்கு, ராணுவ முகாம் என்று பெயர். அதை நிர்வாகம் செய்ய நியமிக்கப்பட்டவர்கள் பாளையக்காரர்கள். தென்தமிழகத்தில் குறிப்பாக, விசய நகரப் பேரரசு காலத்தில் பாளையங்கள் உருவாகின. சிற்றரசர்களாகவே வலம் வந்தனர். ஊர் பரிபாலனம் முக்கிய கடமையாக இருந்துள்ளது. விசயநகர அரசர்கள், நாயக்கர்கள், நவாப்புகள், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உடன்பட்டும் மாறுபட்டும் நிலைநிறுத்திக்கொண்டனர். வரிப்பணம் செலுத்துவதும், வரி செலுத்தாமையும் நடந்துள்ளது. பாஞ்சாலங் குறிச்சியை ஆண்ட கட்டபொம்மன், ஆங்கிலேயருக்கு […]

Read more

பிளிறல்

பிளிறல், சுப்ரபாரதி மணியன், கனவு, விலைரூ.100. எட்டு சிறுகதை தொகுப்பு இந்நுால். சில கதைகள், மாத இதழ்களில் வெளிவந்துள்ளன. குறுங்கதைகளும் இடம் பெற்றுள்ளன. பிரச்னைகள், பெண்களின் இயல்பான பண்புகள்,வெறுப்பு, வன்மம், சமகால பிரதிபலிப்பு, விளிம்புநிலை மக்களின் வாழ்க்கை தரம் போன்றவற்றை, உளவியல் பார்வையோடு கதைகளில் விவரிக்கிறார் நுால் ஆசிரியர். ‘யானைகளை விரட்ட, தாரைத் தப்பட்டைக்காரர்களை கூப்பிட போயினர்; யாரும் அகப்படவில்லை; பெரிய பெரிய பட்டாசு வெடித்தனர். திருமணம் செய்தோம், விவாகரத்து பெற்றோம்; மீண்டும் ஒரு திருமண நாளில் சந்தித்தபோது, விவாகரத்து வலி தெரிந்தது’ போன்ற […]

Read more

ஜெயலலிதா வாழ்க்கைக் குறிப்புகள்

ஜெயலலிதா வாழ்க்கைக் குறிப்புகள், கி.சுப்பிரமணி, முல்லை பதிப்பகம், விலைரூ.160. ஜெயலலிதா பிறந்தது முதல், மறைந்தது வரை வாழ்க்கை நிகழ்வுகளைச் சொல்லும் புத்தகம்.மைசூரில் தாய்வழி தாத்தாக்களின் இல்ல பெயர்களில் ஒன்று ஜெய விலாஸ்; மற்றொன்று லலிதா விலாஸ். இவற்றின் முன்னொட்டுகளே, ஜெயலலிதா என அமைந்ததாக ஒரு சுவையான தகவலும் உள்ளது.வெண்ணிற ஆடை அவர் நடித்த படம். அதற்கு தணிக்கை துறை, ‘ஏ’ சான்றிதழ் வழங்கியிருந்தது. ஜெயலலிதாவுக்கு, 18 வயது நிறையாததால் அந்த படத்தை திரையரங்கம் சென்று பார்க்க முடியவில்லை என்ற தகவலும் உள்ளது. அ.தி.மு.க., தொண்டர்களால், […]

Read more

திருக்குறள் புத்துரை

திருக்குறள் புத்துரை, புலவர் சுப்பு.லட்சுமணன், மணிவாசகர் பதிப்பகம், விலைரூ.150. திருக்குறளுக்கு விளக்கவுரை வழங்கியுள்ள நுால். பிற உரைகளைப் போலவே குறள்களின் கீழே உரைகளைத் தந்திருப்பதோடு, சிலவற்றில் இலக்கணக் குறிப்பும், அதிகாரத் தலைப்புகளுக்கு சிறு விளக்கமும் தந்திருப்பது சிறப்பு. வழமையான விளக்கங்களாக இருப்பினும் எளிய நடையில் அமைந்திருக்கின்றன. குறள்கள் பலவற்றில் மாறுபட்ட கருத்துகள் மற்றும் பொருள்கள் பிற உரைகளிலிருந்து முற்றிலும் மாறுபடுகின்றன. தாரணமாக, எண்குணத்தான் என்பதற்கு ‘எண்ணத்தக்க குணத்தவன்’ என்றும், வாலறிவன் என்பதற்கு ‘மெய்யறிவு கொண்டவன்’ என்றும், பிறவாழி என்பதை, ‘பிற பொருளின்பம்’ என்றும், இறைவனடி […]

Read more

ஸ்ரீ சேஷாத்ரி ஆயிரம்

ஸ்ரீ சேஷாத்ரி ஆயிரம், பா.சு.ரமணன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்,  விலைரூ.290. பற்றில்லாத நிலை என்பது தன்னை மறத்தல். உடம்பை, உணவை மறந்து போதல். தெய்வக்குழந்தையாக பிறந்து வளர்ந்த ஸ்ரீசேஷாத்ரியும் அந்த நிலையை இளம்வயதிலேயே அடைந்தார். பதின்ம வயதில் தந்தை, தாத்தாவை இழந்து பின்னர் தாயை இழந்த நிலையில், தாய் சொன்ன அருணாச்சலம் என்ற வார்த்தையை மட்டும் பற்றுக்கோடாக கொண்டார். உணவை மறந்த உடல் நலிந்தாலும் அருணாச்சல மந்திரத்தால் உள்ளம் உறுதியடைந்தார். அப்படியே ஊருக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். சேஷாத்ரி கதையை படிக்க […]

Read more
1 26 27 28 29 30 240