பிரபஞ்ச இரகசியங்கள்

பிரபஞ்ச இரகசியங்கள், குன்றில் குமார், குறிஞ்சி வெளியீடு, பக். 208, விலை 200ரூ. அண்டசராசரங்கள் என்று கூறப்படும் சூரியன், சந்திரன், பூமி, கோள்கள், நட்சத்திரங்கள், விண்வெளிக்கற்கள், ஆகாயம், கேலக்ஸி… என்று இயற்கையின் ஒட்டுமொத்த தொகுப்பான பிரபஞ்சத்தை அறிய விரும்பும் வாசகர்களுக்கு இந்நூல் பெரிதும் உதவும். பிரம்மாண்டமான இப்பூமியே இப்பிரபஞ்சத்தில் ஒரு அணு அளவிலான புள்ளிதான். ஒன்றுமே இல்லாத இந்த வெட்ட வெளியில் சுமார் 1370கோடி ஆண்டுகளுக்கு முன் ஒரு சிறிய அணுத்துகளின் பெரு வெடிப்பு (பிக்-பேங்) மூலம்தான், கற்பனைக்கு எட்டாத இப்பிரபஞ்சம் தோன்றியதாகக் கூறப்படுகிறது. […]

Read more

பல்துறையில் சுவையான குட்டிக் கதைகள்

பல்துறையில் சுவையான குட்டிக் கதைகள், இராஜகோபாலன், மணிமேகலைப் பிரசுரம், பக். 256, விலை 135ரூ. பிரபல தனியார் கம்பெனிகளில் உயர் பதவியில் பணியாற்றி ஓய்வு பெற்ற இந்நூலாசிரியரின் பொழுதுபோக்கு, புத்தகம் படிப்பதும், சேகரிப்பதும்தான். பல நூல்களைப் படித்து அறிய வேண்டிய கதை வடிவிலான பல்வேறு செய்திகளை இந்த ஒரு நூலில் பதிவு செய்துள்ளார். இந்நூலில் உள்ள எந்தவொரு குட்டிக்கதையும் இவரது கற்பனையில் உதித்ததல்ல. எல்லாமே உலக அளவில் தோன்றிய பல மகான்கள், மேதைகள், பெரியோர்கள், ஆன்மீகச் சொற்பொழிவாளர்கள், சூஃபிகள், அறிஞர்கள், சிந்தனையாளர்கள், அரசியல் தலைவர்கள், […]

Read more

மகாத்மாவின் வாழ்வில் மணியான நிகழ்ச்சிகள்

மகாத்மாவின் வாழ்வில் மணியான நிகழ்ச்சிகள், வடுவூர் சிவ. முரளி, மீனாட்சி பிரசுரம், பக். 200, விலை 150ரூ. இந்நூலாசிரியர் பல்வேறு இதழ்களில் சிறுகதைகள் மற்றும் கவிதைகள் எழுதி வருபவர். இவரது ‘குறளமுதக் கதைகள்’ என்ற நூலை ஆய்வு செய்த ஒருவர், எம்.ஃ.பில். பட்டமும் பெற்றுள்ளார். இந்நூலில் காந்திஜியின் வாழ்க்கையில் நடந்த சுவையான நிகழ்ச்சிகளை அவரது ‘சத்திய சோதனை’ உள்பட பல நூல்களில் இருந்து திரட்டி தொகுத்துள்ளார். இந்நூலைப் படிக்கும்போது சிறுவயதில் காந்திஜி செய்த சேட்டைகள், குற்றங்கள், குறைகளையெல்லாம் படிக்கும் நமக்கு, இவரா பிறகு உலகம் […]

Read more

உணவே மருந்து

உணவே மருந்து, சீத்தலைச் சாத்தன், ஒப்பில்லாள் பதிப்பகம், பக். 172, விலை 125ரூ. இந்நூலாசிரியர் வங்கி மேலாளராக இருந்து ஓய்வுபெற்றவர். இவர் சித்த வைத்தியராக இல்லாவிட்டாலும், சித்த மருத்துவம் குறித்த பழைய ஓலைச் சுவடிகளைத் தேடிப் பிடித்து, அவற்றிலிருந்து – அதுவும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் உள்ள மருத்துவ விஷயங்களைத் தொகுத்து, எளிய தமிழ்நடையில் இந்நூலில் எழுதியுள்ளார். குறிப்பாக, நாம் உட்கொள்ளும் உணவுப் பொருட்களில் உள்ள மருத்துவக் குணங்களை அறிந்துகொண்டு, அவற்றை நம் உடல்நிலைக்கும், சுகாதாரத்திற்கும் ஏற்ப முறையாக எடுத்துக் கொண்டால் […]

Read more

இயற்கை விவசாயமும் பெண்களின் பங்கும்

இயற்கை விவசாயமும் பெண்களின் பங்கும், காந்தலட்சுமி சந்திர மௌலி, செங்கைப் பதிப்பகம், பக். 248, விலை 150ரூ. இந்நூலாசிரியர், உலக சுகாதார மையத்தில் பெரிய பொறுப்பிலிருந்த தன் தந்தையுடன் பல நாடுகளைச் சிறு வயதிலேயே சுற்றி வந்தவர். விவசாயம் குறித்த ஆர்வத்தால், அது குறித்த பல்வேறு தகவல்களைத் திரட்டியவர். விவசாய நாடாகிய நம் நாட்டில், வர வர விவசாயத் தொழில் சுருங்கி, மற்ற தொழில்கள் பெருகி வருகின்றன. இருக்கும் விவசாயமும்கூட இயற்கை விவசாயமாக இல்லாமல், ரசாயனப் பொருள்களைக் கொண்டு செயற்கை விவசாயமே நடைபெறுகிறது. இதனால் […]

Read more

முதல் தலைமுறை மனிதர்கள்

முதல் தலைமுறை மனிதர்கள், சேயன் இப்ராஹீம், நிலவொளி பதிப்பகம், விலை 200ரூ. முதல் தலைமுறை மனிதர்களிடமிருந்து இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ள, ஏராளமான தகவல்களைத் தேடி அலைந்து சேகரித்து இந்நூலில் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். தமிழகத்தின் தவிர்க்க இயலாத சக்திகளாகத் திகழ்ந்த 30 இஸ்லாமிய ஆளுமைகளின் வரலாறு இந்நூலில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக விடுதலைப் போராட்டம், அரசியல், கல்வி, சமூக சேவை, சமுதாயச் சேவை… என்று பல தளங்களில் இந்த முதல் தலைமுறையினரின் பங்களிப்புகளுடன், அவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த சுவையான தகவல்களும் தொகுக்கப்பட்டுள்ளன. தவிர, அன்றைய தமிழக […]

Read more

மகாபாரதக் கதைகள்

மகாபாரதக் கதைகள், ஆர். கல்யாண மல்லி, அழகு பதிப்பகம், பக். 200, விலை 165ரூ. மனித வாழ்க்கையில் தோன்றும் பல்வேறு பிரச்னைகளையும் எப்படி எதிர்கொண்டு வாழ வேண்டும் என்ற வழிமுறைகளைக் கூறுபவைதான் ராமாயணம், மஹாபாரதம் போன்ற இதிகாசங்கள். குறிப்பாக பெண்ணாசையும், மண்ணாசையும் இல்லாத மனிதர்களைக் காண்பது அரிது. அவை முறையற்றதாக இருந்தால், என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை, பல்வேறு கதாபாத்திரங்களைக் கொண்டு விளக்கி, மனித வாழ்க்கைக்குரிய அறத்தைப் போதிப்பதால், இவை இன்றும் போற்றப்படுகின்றன. மஹாபாரதம் முடிந்த சமயத்தில்தான் கலியுகம் பிறந்ததாகக் கூறப்படுகிறது. பாண்டவர்கள், கௌரவர்கள், […]

Read more

தமிழ்வாணனின் தன்னிகரில்லா பதில்கள்

தமிழ்வாணனின் தன்னிகரில்லா பதில்கள், தமிழ்வாணன், மணிமேகலைப் பிரசுரம், பக். 512, விலை 320ரூ. இந்நூலாசிரியர் 1950-80-களில் தனது ‘கல்கண்டு’ பத்திரிகையில், சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஏற்ற செய்திகளை வெளியிட்டு, பத்திரிகை உலகின் பாராட்டைப் பெற்றவர். ஜோதிடம், நாடகம், திரைப்படம், சித்தமருந்து, பல்பொடி தயாரிப்பு… என்று பல துறைகளிலும் இறங்கி, சுமார் 500 நூல்களை எழுதி சாதனை புரிந்தவர். தமிழ் பத்திரிகை உலகில் கேள்வி – பதில் பகுதியை ‘கல்கண்டு’ பத்திரிகையில் அறிமுகம் செய்து, வாசகர்களில் பலவகையான கேள்விகளுக்கும் சுவையான பதில்களை அளித்தவர். […]

Read more

ஜெய்ஸ்ரீராம்

ஜெய்ஸ்ரீராம், மஞ்சுளா ரமேஷ், ஸ்ரீபப்ளிகேஷன்ஸ், பக். 664, விலை 600ரூ. ஞான ஆலயம், சினேகிதி ஆகிய மாத இதழ்களின் ஆசிரியரான இவர், குங்குமம், தினமலர், சாவி, மங்கையர் மலர் போன்ற பத்திரிகைகளிலும் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர். தவிர, இயல், இசை, நாடக மன்றம், திரைப்படத் தணிக்கைக் குழ, திரைப்படத் தேர்வுக்குழு, தொலைக்காட்சியின் தேர்வுக்குழு போன்ற அரசு சார்பான குழக்களிலும் செயலாற்றியதோடு, யோகக்கலையைப் பயின்று பலருக்கு யோகா பயிற்சிகளையும் கற்றுத் தருகிறார். இவர் இதற்கு முன் பாரத கண்டம் (பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், நேபாளம், திபேத், பங்களாதேஷ், […]

Read more

உங்களுக்கான 24 போர் விதிகள்

உங்களுக்கான 24 போர் விதிகள், செ. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்., சுரா பதிப்பகம், பக். 208, விலை 150ரூ. 1987 ஆம் ஆண்டு இந்திய காவல் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்நூலாசிரியர், தமிழக காவல்துறையின் உயர் பொறுப்புகள் பலவற்றிலும், நேர்மையாகவும், திறம்படவும் பணியாற்றி முதலமைச்சர் விருது, பிரதமர் விருது என்று பல விருதுகளையும் பெற்று வருபவர். தவிர, தமிழக இளைஞர்களுக்கு u.p.s.c.பதவிகளுக்கான போட்டித்தேர்வை எதிர்கொள்ள, இலவசப் பயிற்சி அளிப்பவர். இந்நூலில்இளைய தலைமுறையினரின் தன்னார்வத்தைக் கிளரச் செய்து, அவர்களின் வாழ்க்கைப் போர்க்களத்தில் எதிர்த்து நிற்கும் தடைகளை வெற்றி […]

Read more
1 3 4 5 6 7 21